Monday, May 08, 2006

திட்றாங்க... திட்றாங்க...

கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்கேயோ கேட்ட கானங்கள்ல ஒரு பாட்டு இதுங்ண்ணா. எதுக்கெடுத்தாலும் திட்றாங்கன்னு விடலைப்பசங்க ஜாலியா பாடி ஆடுற காட்சி சமீபத்தில் சில பதிவுகளையும், பின்னூட்டங்களையும் படிக்கும் போது ஞாபகம் வந்து தொலைச்சிது பாஸு.

மேட்டரு வேற ஒண்ணுமில்ல. கருணாநிதி ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்துனதால பலரால ஹிந்தி படிக்க முடியாமப் பூடிச்சாம். அதுனால வேலை பாக்குற இடத்துல கூட மரியாதை இல்லியாம். அதுக்கு மறுவிமர்சனம் இன்னமும் பலே ஜோர். அதாவது கலைஞர் பண்ணியது ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டமாம். அதுனால தமிழ்நாட்டுல ஹிந்தி படிக்கத் தடை என்னிக்குமே இருந்ததில்ல. ஹிந்தி படிக்கிறவுங்கள கலைஞர் கைதா பண்ணுனார் (அட நௌக்காமக்கா இது வேற வேணுமா?)... அப்பிடி இப்பிடின்னு...

இப்ப நான் கேக்குறதெல்லாம் இதுதான். கலைஞர் ஹிந்தி எதிர்ப்போ, அல்லது ஹிந்தி திணிப்பு எதிர்ப்போ பண்ணாம இருந்தாருன்னு வெச்சிக்குவோம். இப்போ இதைப் பத்தி கொறை சொல்லும் மக்கள்ஸ் அல்லாரும் ஹிந்தி பண்டிட்டாகி, மத்திய அமைச்சர்களா ஆகியிருப்பாங்களா? இதெல்லாம் கொஞ்சம் ஓவராயில்ல? அய்யா நானும் அரசுப் பள்ளியிலதான்யா படிச்சேன். அப்பவே ஆப்ஷனல் சப்ஜெக்டா ஹிந்தியையோ ஏன் சமஸ்கிருதத்தையோ இன்னும் ஏன் ·பிரஞ்ச்சையோ எடுத்துப் படிச்சாங்கய்யா. நாங்க கூட ஹிந்தி பரீட்சைக்கு ஏன் பிரதீபா, மஹிமா'ன்னு பொம்பளைப் பேரா வைச்சிருக்காய்ங்கன்னு கலாய்ச்சதுண்டு.

அதுசரி பள்ளிக்காலத்துல, கல்லூரிக்காலத்துலதான் கலைஞர் உங்க ஹிந்தி படிப்புல மண்ணை அள்ளிப் போட்டாரு. வேலைக்குப் போன இடத்துல கத்துக்க என்ன கேடு? பொஸ்தகக் கடையில பாலாஜி பப்ளிகேஷன்ஸ்னு தேடுங்க. முப்பது நாளுல என்ன பாஷை வேணுமோ கத்துக்கலாம். அருகிலேயே அந்த பாஷை தெரிஞ்ச நண்பர் ஒருத்தர் இருந்தா போதுங்கணா இன்னமும் வசதி. எந்த பாஷையையும் ஈஸியா கத்துக்கலாம். தேவை ஒரு ஈடுபாடு. அம்புட்டுதேன். எத்தனையோ அதிகம் படிக்காத கூலி வேலை செய்யும் தமிழர்கள் கூட அந்தந்த இடத்திலிருக்கும் பாஷைகளை ஈஸியாகப் பேசுவதை நேரில் பார்த்திருக்கின்றேன். குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபாதை மசாலா தோசைக்கடைகளுக்குப் போனால் அங்கே பணிபுரியும் தமிழர்கள் அசால்ட்டாக ஹிந்தி/குஜராத்தி பேசுகின்றனர். ஏன் மிடில் ஈஸ்ட் கதையும் அவ்வாறே. அப்படியிருக்க படித்த மக்கள்ஸ் புலம்புவது சத்தியமா ரொம்பவே ஓவருங்க.

இராமேஸ்வரம் வரும் வட-இந்திய சுற்றுலாப் பயணிகளிடத்தில் ஓரிரு ஹிந்தி வார்த்தைகள் மட்டும் கற்றுக் கொண்டிருந்த நான், கொஞ்சம் கொஞ்சமா வடநாட்டில் வேலையில இருந்தப்போதான் தடங்கலின்றி பேசக் கற்றுக் கொண்டேன்.

'நம்ம எல்லாத்துக்கும் இங்லீஷ் தெரியுமில்ல. அப்புறம் ஏண்டா ஹிந்தியைக் கொல்றே?' அப்பிடின்னு சக ஹிந்தி நண்பர்கள் என் கால்ல வுழுந்தாலும், சற்றும் மனம் தளராத குசும்பன் 'ஹலோ உன்னோட தாய்மொழியில நான் இவ்வளவு பேசறேனே... எங்கே என்னோட தாய்மொழியில நீ ஏதாவது பேசு பாக்கலாம்'ன்னு கூலா டபாய்ச்சுட்டு போய்க்கினே இருப்பேன். என்ன ஹிந்தி கத்துக்கிறதுக்காக குப்பைத் திரைப்படங்களையெல்லாம் பார்க்க நேர்ந்தது. அட பரவாவில்லப்பா கோவிந்தா, அஜய் தேவ்கன், கபூர் காந்தான் (பரிவாரம், கூட்டம்) எல்லாம் அறிமுகமானது இன்னிக்கு பதிவு போட்டு பொழுது ஓட்ட வசதியா இருக்குல்ல...?

சும்மா அவனால நான் கெட்டேன்; இதை அழிக்கணும்; அதை ஒழிக்கணும்'ன்னு முற்போக்கு பிலிமு காட்டாம உருப்படியா ஆகவேண்டிய காரியத்தைப் பார்ப்போம். நாமும் உருப்படுவோம். அடுத்த சந்ததிக்கும் ஒரு நல்ல வழியைக் காட்டுவோம்.

அத வுட்டுப்போட்டு உணவுப் பஞ்சம் காலத்துல மொரார்ஜி தேசாய் சொன்ன தீர்வைச் செயல்படுத்தியதால் நாங்கள் இன்னமும் ***** (பூர்த்தி செய்து கொள்ளவும் ;-)'ன்னு ஜல்லி அடிச்சா ஆளை வுட்டுடுங்க பாஸு. உங்களைக் குணப்படுத்த சூரணமேயில்ல.

3 comments:

Boston Bala said...

---பிரதீபா, மஹிமா'ன்னு பொம்பளைப் பேரா ---

ரம்பா பிரபா, ப்ரவீணா என்று மற்ற பரீட்சைகள் பூல் கயா?!

---அருகிலேயே அந்த பாஷை தெரிஞ்ச நண்பர் ஒருத்தர் இருந்தா போதுங்கணா இன்னமும் வசதி----

தாவணிக் கனவுகளில் 'மேரி ப்யாரி... தில் கீ ராணி...' என்று பாடுவாரே ;-) அந்த மாதிரி தோஸ்த் எல்லாருக்கும் எதிர் வீட்டில் அமையுமா?

---இதை அழிக்கணும்; அதை ஒழிக்கணும்---

முதலில் இந்த மாதிரி சேரியமாய் பதிவு போடும் குசும்பனை ஒழிக்கணும் :P

மாயவரத்தான்... said...

கருணாநிதி மஞ்சள் துண்டு போடுகிறார்.

தமிழ்குடிதாங்கி தார் அடிக்கிறார், மரம் வெட்டுகிறார்.

திருமா விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறார், மேலும் அவர் ஒரு தலித்.

வாசன் அவர்கள் நமது சமூகத்தில் பிறந்தவர் இல்லை மேலும் அவர் மூப்பனாரால் அறிமுகப்படுத்தப் பட்ட வாரிசு.

கம்யூனிஸ்ட் கட்சிகள் சரியில்லை., அவை உண்டியல் குலுக்குவதற்குத்தான் ஒத்துவரும்.

காங்கிரசில் சோனியாதான் முதலாக இருக்கிறார். அவர் ஆட்டுவிக்கிறார். பிரதமர் ஆடுகிறார். சோனியா இத்தாலியர். அவர் படிப்புச் சான்றிதழே பொய் என்று எங்கள் சுப்பிரமணிய சாமி அவர்கள் ஆதாரம் காட்டினார்.

ராம்விலாஸ் பாஸ்வான் தலித்து கட்சி

லள்ளுபிரசாத் யாதவ் நம் ஜாதி இல்லை.

சரத் பவார் அரச வம்சத்தைச் சேர்ந்தவர். நமது இனமில்லை.

பாஜக மிக நல்ல கட்சி.

பால்தாக்கரேயை எனக்கு பிடிக்கும்.

RSS ல் நான் சின்ன வயதில் இருந்து உறுப்பினர்.

பஜ்ரங்தள் என் பாட்டனார் கட்சி.

விஸ்வ ஹிந்து பரிஷத்தில் என் அப்பா இருக்கிறார்.

இராமகோபாலன் என்றால் எனக்கு உயிர்.

சோ அவர்களின் அனைத்து கூட்டத்துக்கும் தவறாமல் செல்வேன்.

வாரம்தோறும் துக்ளக் படிப்பேன்.

நாள்தோறும் தினமலர் படிப்பேன். அவர்கள் குடிதாங்கியை கிண்டல் செய்வதை ரசிப்பேன்.

அனுதினமும் ஜேஜே டிவி பார்ப்பேன். சன்டிவி பாக்க மாட்டேன். ஓசியில் கிடைத்தாலும் குங்குமம் படிக்க மாட்டேன்.

ஜெயை ஆதரிப்பதால் எனக்கு ரஸ்னி பிடிக்கும்.

Anonymous said...

Ek Gaon mein...ek kishaan raghu thaatha..