Tuesday, May 23, 2006

நண்பர்/நலம்விரும்பிகளுக்கும்

*** புதிய திருத்தம் ***

இது உங்களுக்குத் தேவையாவென்று தொலைபேசியும், மின்னஞ்சல்களிலும் பல நண்பர்கள் இடித்துரைத்தார்கள். இளவஞ்சியின் பதிவுகளுக்கு போட்டியாக நீங்களும் இறங்கினால் அவருக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று வினவியிருந்தார்கள். உங்கள் கேள்விகளில் இருக்கும் நியாயம் எனக்குப் புரிகின்றது. தொடுத்தது முதலில் இளவஞ்சியேயானாலும், நான் எனது பதிவுகளை எடுப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி போடுகின்றேன். இனிமேலாவது அவதூறுகளை அங்கதம் என்று பதிவுகள் வராமலிருக்குமென்று நம்புகின்றேன். நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் எனது நன்றி. சாக்கடைச் சண்டைக்காக குசும்பனை வழமையாய் வாசிப்பரிடத்தும், நண்பர்களிடத்தும் மன்னிப்புக் கோருகின்றேன். பொறுத்துக் கொண்டதற்கு நன்றி !!!

*** திருத்தம் முடிவு ***

30 comments:

ramachandranusha(உஷா) said...

nanRi

Boston Bala said...

இப்பொழுதெல்லாம் ஹாலிவுட் படங்கள் பார்ப்பதில்லையா... ரொம்ப நாளாச்சே குசும்பு செஞ்சு :P

PKS said...

குசும்பன்,

பலமுறை தனிப்பட்டமுறையில் சொன்னதுதான். திருப்பிப் பொதுவில் சொல்கிறேன். "நியாயமான காரணங்களுக்காகக் கூட அநியாயமான ஆயுதங்களைக் கையில் எடுக்கக் கூடாது. எதிராளி எடுத்தாலும் எடுக்கக் கூடாது." (பி.கே.எஸ். பப்ளிக்கில் பிலிம் காட்டுகிறார் என்ற குற்றச்சாட்டை எழுப்புகிறவர்கள் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் எல்லாக் காலங்களிலும் இருப்பார்கள். ஆனாலும், "எல்லாருக்கும் நல்ல நண்பர்" உட்பட நம்முடைய நண்பர்கள் நான் இப்படிச் சொல்லி வருவதை அறிவார்கள்.) இந்த நிலைப்பாடு - குறுகிய காலத்தில் பயன் அளிக்காததாகவும், ஏன் அடிவாங்கித் தருவதாகவும்கூட இருக்கலாம். ஆனால், நீண்ட காலத்தில் - உண்மைகள் வெளிவந்து - அநியாயமான ஆயுதங்களை எடுக்காதவரைக் காப்பாற்றும். நீங்கள் இப்போது நீக்கியுள்ள இரண்டு பதிவுகளிலுமே எனக்கு ஒப்புதல் இல்லை என்பதையும் உங்களுக்குத் தனிப்பட்டுத் தெரிவித்திருந்ததை அறிவீர்கள்.

மற்றபடிக்கு - இளவஞ்சி என்பவர் யாரென்று எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்கிற ஆர்வமும் இனி இல்லை. அவரைப் பற்றி எங்கும் நான் விமர்சித்தோ நாகரீகமாக நையாண்டி செய்தோகூட எழுதியதில்லை. இனி எழுதப் போகும் எண்ணமும் இல்லை. என்னைப் பற்றி எழுதுவதற்கு அவருக்கு இருந்த நிர்ப்பந்தங்களையும் நெருக்குதல்களையும் தேவைகளையும் புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி எழுதியதால், அவர் எதிர்பார்த்த உயரத்திற்குப் போக முடிந்தால் அல்லது அவர் எதிர்பார்க்கிற பலன்கள் அவருக்குக் கிடைத்தால் எனக்கு அதில் மகிழ்ச்சியே. இளவஞ்சியைத் தூண்டி விட்டவர்கள், கடைசியில் அவரைக் கைகழுவிவிட்டு, அவரை மட்டுமே பொறுப்பாளியாக்கிவிட்டு நிற்பதைப் பார்த்தாவது, எதிர்காலத்து பலிகடாக்களுக்கு முன்கூட்டியே தெளிவு பிறக்கும் என்று நம்புகிறேன்.

அவரவர் எழுத்தின்மூலம் அவரவர் அகங்கள் தெரியும் என்பது என் நம்பிக்கை. அந்த நம்பிக்கை மெய்த்து வருவதை இப்போக்குகள் காட்டி வருகின்றன.

குசும்பனின் மூன்றாவது பதிவில், நடுநிலை வாசகர்களுக்கு என்று அவர் கேட்டிருந்த கேள்விகளை அவருக்காக இல்லாவிட்டாலும், இது விஷயத்தில் ஒன்றும் பேசாமல் இதுவரை அமைதியாக இருந்த எனக்காகவாவது - நடுநிலைவாதிகளான (உள்குத்து எதுவுமில்லை. இந்த விஷயத்தில் பேசாமல் அல்லது ஆரோக்கியமான அக்கறை காட்டிய அனைவருமே நடுநிலைவாதிகள்தான்.) பாஸ்டன் பாலாஜி, இகாரஸ் ப்ரகாஷ், பத்ரி சேஷாத்ரி, உஷாஜி போன்றோர் இளவஞ்சியிடம் கேட்டுச் சொன்னால் நல்லதுதான். அல்லது, இளவஞ்சியின் நண்பரும் எனக்கும் நண்பருமான கொங்கு ராசா அவர்கள், "பீ" என்றும் இன்னபிற ஆபாசமாகவும் என்னைப் பற்றி அவர் பதிவில் அவர் எழுதுகிற அளவுக்கு, இளவஞ்சிக்கு என்மீது என்ன வெறுப்பு என்று அறியத் தந்தால் தன்யனாவேன். இளவஞ்சியின் பிழைப்பிலோ சம்பாத்யத்திலோ ஏதும் கைவைத்துவிட்டேனோ என்று நானே வருந்துகிற அளவுக்கு என்னைப் பற்றிக் காத்திரமாக அவர் எழுதியதற்குக் காரணம் என்ன? சும்மா வெற்று அரசியலும், ஈகோவும், பரிணாம வளர்ச்சியில் மாறிக் கொண்டு வருகிற கருத்தாக்கங்களும் மட்டுமே ஒருவர்மீது இவ்வளவு வெறுப்பை வளர்க்குமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. அவர் அரசியல் அல்லது இன்னபிற கருத்துகளைக் கூட மறுத்தோ எதிர்த்தோ நான் எங்கும் எழுதியதில்லை என்று மீண்டும் சொல்கிறேன். ஒருவேளை, அவர் வேறு பெயரில் ஏதும் எழுதிக் கொண்டிருந்து, அங்கே ஏதும் அவர் வாதங்களை மறுத்துப் பேசியிருக்கிறேனா? அவர்தான் சொல்ல வேண்டும்.

தமிழ்மணத்தைவிட்டு நானாக வெளியேறிய பின்னர், தமிழ்மணத்தைப் பற்றி நான் எழுதியதில்லை. தமிழ்மணம் காசி அவர்களிடம் எனக்குப் பிரச்னைகள் இருக்கின்றன. என் பெயரில் வெளிவந்த போலிப் பின்னூட்டங்களை நான் வேண்டிக் கேட்டுக் கொண்ட பின்னரும் "கருத்துச் சுதந்திரம்" என்ற போர்வையில் வைத்திருந்து அழகு பார்த்த நியாயவான் அவர். இன்றைக்கு அவரைப் பற்றியும் அவர் பெயரிலும் வருகிற ஆபாசப் பின்னூட்டங்களைப் பார்த்தாவது அவருக்குப் போலிகளைப் பற்றி புத்தி வந்திருப்பது மகிழ்ச்சியே. என் குற்றச்சாட்டுகளை சரியான இடம், நேரம் பார்த்து நான் சொல்லிக் கொள்வேன். அதேபோல, காசி ஆறுமுகத்துக்கோ அல்லது தமிழ்மணத்தின் மற்ற நிர்வாகிகளுக்கோ என்மீது ஏதும் பிரச்னை என்றால் அதற்காக நேரிடையாக என்னை எதிர்கொள்வதுதான் சரியாக இருக்கும். அதைவிட்டுவிட்டு, எனக்கு யார் என்றே தெரியாத இளவஞ்சி போன்றோர் இப்பிரச்னையில் பலிகடா ஆக்கப்படும்போது உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது. ஏற்கனவே, என்னுடன் சண்டைபோட ஒருவரை அனுப்பி, அந்தச் சண்டைக்குப் பின்னர் அவர் வலைப்பதிவில் எழுதாமல் இருப்பது எனக்கு உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது என்பதை பிரகாஷ் போன்ற நண்பர்களுடன்கூட நேரிடையாகப் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

முகமூடியின் நையாண்டியின் பதிவில் நான் பின்னூட்டமிட்டதுதான் என் மீதான "காண்டு"வுக்குக் காரணம் என்று நம்ப முடியவில்லை. அப்படியென்றால், முகமூடியின் அந்த நையாண்டிப் பதிவைப் பாராட்டிய அனைவரையும் தாக்காமல் இளவஞ்சி மிகவும் குறிப்பாக, முகமூடி, குசும்பன், நான் என்று தேர்ந்தெடுத்துத் தாக்க காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

என் கருத்தாக்கங்களோ, எழுத்துகளோ பிடிக்கவில்லை என்றால் தயவுசெய்து படிக்காதீர்கள். என்னைப் பிடிக்காதவர்கள் என் எழுத்துகளைப் புறக்கணியுங்கள். வாசகர்கள் புத்திசாலிகள். நான் சொல்கிற எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் சிந்தனைக்குச் சரியென்று படுவதை ஏற்றுக் கொள்வார்கள். வாசகர்களை முட்டாள்கள் என்று நினைக்கிறவர்கள் மட்டுமே, எதிராளி வாசகரை மயக்கிவிடுவார் என்று பயப்பட்டு எதிராளியை எழுதவிடாமல் செய்ய, தரக்குறைவானத் தாக்குதல்களில் இறங்குவார்கள்.

நான் புத்தகம் போடுவதில் மற்றவர்களுக்கு ஏதும் பிரச்னை இருந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? அவர்களும் புத்தகம் போடவும் பல வெற்றிகளைக் குவிக்கவும் மனதார பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

"எல்லா அநியாயவாதிகளிடமும் ஒரு நியாயம் இருக்கிறது. அந்த நியாயமே அவர்களை நியாயவாதிகளாக்கிவிட முடியாது. அதேபோல, எல்லா நியாயவாதிகளிடமும் ஒரு அநியாயம் இருக்கிறது. அந்த அநியாயம் மட்டுமே அவர்களை அநியாயவாதிகளாக்கிவிட முடியாது." - இதை வலைப்பதிவின் வாசகர்கள் பெரும்பாலோர் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் எல்லாரும் தொடர்ந்து எழுதுவோம். நியாயவாதி, அநியாயவாதி என்பதை நாம் நமக்குள் முடிவு செய்து கொள்ளாமல், காலத்தின் கையில் விட்டுவிடுவோம்.

-பி. கே. சிவகுமார்

மாயவரத்தான் said...

நன்றி :-) ** அர்ததம் கண்டுபிடித்து கொள்ளுங்கள் :-)**

Anonymous said...

தமிழ் வலையுலகில் வெறி நாய்களின் அட்டகாசம் குறித்து ஒரு அலசல்:
---------------------------------------


தமிழ் வலைப்பதிவுலகில் இந்த வெறி நாய்த் தொல்லை ஆரம்பம் முதலே ஜாஸ்தியாகத்தான் உள்ளது, தங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து எழுதுபவர்களை மிரட்டவும், அரட்டவும், அடி பணிய வைக்கவும் ஒரு சதிகாரக் கும்பல் இயங்கி வருகிறது. இந்தச் சதிகாரக் கும்பல் இந்திய விரோத , இந்து விரோத, பிராமண விரோத, தேச விரோதக் கும்பல், இந்தக் கும்பல் அடிப்பதற்கென்றே , பயமுறுத்துவதற்கென்றே ஏவி விட பல வெறி நாய்களை எப்பொழுதும் பழக்கப் படுத்தி வைத்துள்ளார்கள். முகமூடிப் பதிவிலும், பி கே எஸ் பதிவிலும், குசும்பன் பதிவிலும், மாயவரத்தான் பதிவிலும், இன்னும் எத்தனையோ இந்திய தேசியம் பேசும் பதிவர்களின் பதிவில் இந்த வெறிநாய்கள் பாய்ந்து, பாய்ந்து குரைத்தும், கடித்தும் வருவது தொடர்கிறது. அதைப் பற்றி வழக்கம் போல இந்த வழிப்போக்கனின் ஒரு தொகுப்பு:




"நாய்க்குக் கோமணம் கட்டி நந்த வனத்தில் விட்டாற் போல" இந்தத் தமிழ் கோமணத்தில் பல சொறி நாய்களும், வெறி நாய்களும் திரிகின்றன. அதில் ஒரு ஏவல் நாய் தன் பதிவில் எழுதுவதெல்லாம் வசவுகள் மட்டுமே, அதைக் கேட்டால் "புழுத்த நாய் கூட குறுக்க போகாது" ஆனால் "வைத்தியன் வீட்டு நாய் நோய் அறியாது என்பது போல" இந்த நாய்களுக்கு வெறி பிடித்தது கூடத் தெரியாமல் எஜமான் பேச்சைக் கேட்டுக் கொண்டு "உதை பட்ட நாய் ஊரெல்லாம் சுற்றினாற் போல" பாய்ந்து குதறுகின்றன. ஆனால் இந்த ஏவல் நாய்களுக்கு மரியாதை என்ன என்பதும் சபை நாகரீகமும் தெரிவதில்லை, "முதலியார் வீட்டு நாய்க்கு முத்து மாலையின் பெருமைதான் தெரியுமா என்ன?" இது போன்ற அடியாள் வேலை பார்க்கும் நாய்களுக்கு தமிழ் மணத்தில் இதற்காகவே பதவிகள் கொடுக்கப் படுகின்றன "வெக்கங்கெட்ட நாய்க்கு வெண் பொங்கலாம் என்பது போல்". இதில் ஒரு நாய் குரைத்தால் ஒன்பது நாய் பின்னூட்டப் பெட்டியில் வந்து குரைக்கின்றன, "முதல் தெரு நாய் குலைத்தால் மூணாந்தெரு நாயும் குரைக்கும் என்பது போல".


ஆனால் "இந்த வெறிநாய் கடி பட்டவனுக்கு நாட்டில் ஒரு மூலிகை கிட்டாமல் போகாது என்பது போல" குசும்பனும், முகமூடியும் பதிலடி கொடுத்தனர். இந்த வெறிநாய்கள் எல்லாம் அடங்காது "பட்டி நாய் தொட்டி சேராது என்பது போல". ஆனால் ஒரு முறை ஏவப் பட்டு செமத்தியாக பதில் அடி வாங்கிய நாய்கள் மீண்டும் உடனே வந்து குரைப்பதில்லை என்பது முந்தைய பதிவுகளைப் படித்தவர்களுக்குப் புர்நிதிருக்கும் 'சூடு கண்ட நாய் சாம்பல் குளிக்காது என்பது போல". "கொட்டவால் நாய்க்கு நெஞ்சில் அறிவு" என்பார்கள் அதுவும் சரிதான் என்பது போலத்தான் இருக்கிறது இவர்களது நடவடிக்கைகள். "வண்ணான் வீட்டு நாய் வீட்டுக்கும் உதவாது துறைக்கும் உதவாது" என்பது போல இந்த அடியாள் நாய்களின் பதிவுகளால் யாருக்கும் பயன் கிடையாது என்பது தான் உண்மை. இந்த ஏவல் நாய்களுக்கு முகமூடி, குசும்பன் போன்றோரின் அங்கதமும் தெரிவதில்லை அவர்கள் அருமையும் தெரிவதில்லை, ஏவி விட்டால் வந்து பாய்ந்து கடிக்கத்தான் தெரியும், "செட்டி வீட்டு நாய் கணக்குப் பார்த்தா கடிக்கும்?" "வக்கீலும் வைத்தியனும் வாசலில் நாயைக் கட்டியிருந்தால் உருப்படுமா?" அது போல தமிழ் மண நிர்வாகியாக இது போன்ற ஏவல் நாய்களைக் கட்டி வைத்தால் தமிழ் மணம் உருப்படுமா? ஆனால் "நாய் நக்கிக் குளம் வற்றப் போவதில்லை" என்பது போல இந்த நாய்களின் நக்கல்களுக்கு முகமூடி, குசும்பன் போன்றவர்கள் பயந்து வற்றி வாடிவிடுவதில்லை என்பது ஒரு ஆறுதல்தான். இப்ப செம அடி வாங்கிய பின் "குட்டி போட்ட நாய் கூனி உட்கார்ந்தது போல", " மழையில் நனைத்த நாய் முடங்கிப் படுத்தது போல" கொஞ்சம் ஒதுங்கி இருக்குதுங்க ஆன மீண்டும் மீண்டும் வரும். "சத்திரத்தையும் கட்டி நாயையும் வைத்தது போல" தமிழ் மணத்தையும் கட்டி இள வஞ்சி போன்ற ஆட்களை நிர்வாகியாகவும் வைத்துள்ளார்கள்


"நாய் நக்க நக்க கல்லும் தேயும் என்பது போல" மீண்டும் மீண்டும் ஏவி விடுகிறார்கள் எஜமானிகளும், எஜமானர்களும் அமெரிக்காவிலும், அலாஸ்காவிலும், கனடாவிலும் உட்கார்ந்து கொண்டு. அவர்கள் ஏவி விட விட, "திருடன் துணைக்கு திருட்டு நாய்" என்பது போல இந்த அடியாள் நாய்கள் "கழுநீர் தொட்டி நாய் போல" வந்து விழுகின்றன. "நாயை அடிப்பானேன் பீயைச் சுமப்பானேன்' என்பது போல இந்த நாய்களை அடிக்கப் போய் குசும்பனோட கவுரவத்துக்குத்தான் குறைவாகி விட்டது. "காலடி பட்ட நாயும் காலறுந்த செருப்பும் கவைக்கு உதவா" என்பது போல இந்த அடியாள் நாய்களை இனி யாரும் மதிக்கவும் மாட்டார்கள். ஆனால் முகமூடியும், குசும்பனும், பாஸ்டன் பாலாஜியும் "நாய்க்கும் நாகத்துக்கும் தலையில்தான் உயிர் நாடி" என்பதறிந்த நச்சென்று நாலு சாத்து சாத்தினார்கள்.



ஆனால் இந்த வெறிநாய்களின் கொட்டம் அடங்காது. "மசநாய் சாவதெப்போது ஊர் சுத்தம் ஆவதெப்போது ?" "வேட்டை கண்ட நாயும் சாட்டை கண்ட மாடும் சும்மா இருக்குமா என்ன?" ஆக கொஞ்சம் நாள் கடந்து மீண்டும் வந்து குலைக்கவும் கடிக்கவும் செய்யும். என்னதான் அடி வாங்கினாலும் "நக்க விட்ட நாயும், கொத்த விட்ட கோழியும்" நிற்கவா போகின்றன? "பச்ச புள்ள பீயை நக்க வர்ற நாய் மாதிரி" மீண்டும் மீண்டும் வரத்தான் போகின்றன.


ஆகவே குசும்பரும், முகமூடியும் பி கெ எஸ்ஸ¤ம், இன்னும் இந்திய தேசியத்தின் மீதும், தர்ம நியாயங்கள் மீதும், மனிதர்களை மனிதர்களாக நடத்தும் குணம் உள்ளவர்கள் மீதும் வெறி நாய்கள் மீண்டும் மீண்டும் , எஜமானர்களாலும், எஜமானிகளாலும் ஏவி விடப் பட்டு கடித்துக் குதறத்தான் போகின்றன. இப்பொழுதுதான் ஒரு நாய் அடி வாங்கி ஒதுங்கி ஓரமாய் உட்கார்ந்து தன் புண்களை நக்கிக் கொண்டிருக்கிறது, மீண்டும் அடுத்த ஏவல் நாயை இவர்கள் தயார் படுத்தும் வரைக்கும் நீங்கள் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம், ஆனால், எல்லோரும் சொல்கிறார்கள் என்பதற்காக கம்பை மட்டும் கீழே வைத்து விட்டு ஓய்வெடுத்து விடாதீர்கள். இந்த நாய்களுக்கு வெறி பிடித்திருக்கின்றன என்பதை எப்பொழுதுமே நினைவில் வைத்துச் செயல் படுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மீண்டும் இந்த வழியே வரும் பொழுது சந்திப்பேன், அது வரை நாய்க்கடி படாமால் ஜாக்கிரதையாக இருக்கவும்

அன்புடன்
வழிப்போக்கன்

பி.கு: இன்னும் நாய் பழமொழி வேணும்னா சொல்லி விடவும், ஒரு லாரி லோடு பழமொழி அனுப்பி வைக்கிறேன், உங்க அடுத்த பதிவுகளுக்கு ஒத்தாசையா இருக்கும்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
ramachandranusha(உஷா) said...

பி.கே.எஸ் ஜி,
பல கேள்விகளை எழுப்பியுள்ளீர்கள், உங்கள் வருத்தங்கள் தெளிவாய் புரிந்தாலும் இவை எதற்கும்
என்னிடம் பதில் இல்லை.
இணைய குசும்பன் மற்றும் இளவஞ்சியைக் கேட்டுப் பாருங்கள். இருவரின் வலைப்பதிவை படிக்கிறேன்.
ஏதாவது சொல்ல தோன்றினால், நேரமிருந்தால் ரெண்டு வரி பின்னுட்டம் இடுவேன். அவர்களுடான
நட்பு அவ்வளவே!

அதை ஏன் நீக்க சொல்லவில்லை, இதை ஏன் நீக்க சொல்லவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. நதி மூலம் ரிஷிமூலம் தெரியும் இதை நீக்கி விடுங்கள் என்று ஆரம்பித்தே குசும்பரிடம் கோரிக்கை வைத்தேன். இதன் பொருள் இணையத்தில் சில வருடங்களாய் இருப்பவர்கள் அனைவருக்கும் பொருந்தும். இவரை சொன்னால் அவரை கைக்காட்டுவார், அவரைக் கேட்டால் இன்னொருவர் பக்கம் கை நீளும். ஐயா, நான்
பதிவாளர்களுக்கு எழுதும் எழுத்துக்கு சென்சார் செய்யும் வேலையைப் பார்க்கவில்லை. இனியும் செய்யும் உத்தேசமும் இல்லை :-)

இதற்கு மட்டும் ஏன் வந்தாய் என்று நினைக்கிறீர்கள் இல்லையா? பெண் வலைப்பதிவாளர்கள் மற்றும் பதிவாளரின் வீட்டு பெண்களையும் இழுத்தது. இவை இரண்டும் என் மனதிற்கு ஒப்பவில்லை.
அதனாலேயே நீக்குமாறு கோரிக்கை வைத்தேன். ஆக நான் நடுநிலைமைவாதி இல்லை என்று
ஒப்புதல் வாக்குமூலம் தந்து விட்டேன் என்று நம்புகிறேன் :-)
மீண்டும் இணைய குசும்பனுக்கு நன்றி
உஷா
பி.கு கடிதங்கள் முதற்கொண்டு பதிவுவரை, நான் எழுதுவது எதற்கும் யாரையும் கலந்தாலோசித்ததில்லை.
இந்த ஒப்புதல் வாக்குமூலம் எதற்கு என்றால், கூட்டம், குழு இவற்றில் சேருவதில் எனக்கு கொஞ்சம்
ஒவ்வாமை உண்டு. அதனால் எனக்கு எந்த பிரச்சனையோ அல்லது பாராட்டோ வந்தாலும் அதற்கு முழு
பொறுப்பும் நானே!

ilavanji said...

குசும்பன் /PKS,

முதலில் ஒரு நாய் வண்டியை எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக திரிந்து நாய்களைப்பிடித்து வந்து நாய்க் கண்காட்சி வைக்காமல் பெயரைச்சொல்லி முகத்தில் குத்திய உங்கள் நேர்மைக்கு என் வந்தனங்கள்!

இதை எழுதுவதற்கான ஒரே காரணம் "பாஸ்டன் பாலாஜி, இகாரஸ் ப்ரகாஷ், பத்ரி சேஷாத்ரி, உஷாஜி போன்றோர் இளவஞ்சியிடம் கேட்டுச் சொன்னால் நல்லதுதான்" என்ற வரிகள்தான்! அவர்கள் என்னை கேட்கப்போவதில்லை. ஆனாலும் சிலவற்றை சொல்லவதன் மூலம் அவர்களுக்காவது என் அயோக்கியத்தனமான அங்கதத்தில் சொல்ல வந்த உணர்வுகள் புரியுமென்ற நம்பிக்கைதான்!

எனக்கும் இளவஞ்சிக்கும் என்ன தொடர்பு? எதற்காக என்னைத்தாக்கி பதிவிடுகிறார்? நான் என்றைக்காவது அவரைத் தாக்கியதற்கான சுட்டிகளை கொடுக்கமுடியுமா? என்ற கேள்விகளுக்கான பதில்களை தேடும்முன் உங்களுக்கு அதே கேள்விகளை இங்கே வைக்கிறேன்! இத்தனை நாட்கள் நீங்கள் அங்கதம் என்ற பெயரில் அனைவரையும் போட்டுத்தாக்கும் பதிவுகளைப்போட்டதில் எத்தனை பேர் உங்களோடு தொடர்புடையவர்கள்? எத்தனை பேர் உங்கள் மீது கொண்ட வன்மம் காரணமாக உங்களை அவதூறாக தாக்கி பதிவிட்டிடுக்கிறார்கள் என்பதற்கான சுட்டிகளை என் பார்வைக்கு அளிக்க முடியுமா? உங்களைப்பற்றி அங்கதம் என்ற பெயரில் அவதூறாக பதிவிடுவதற்கு உங்களையும் உங்கள் கருத்துக்களையும் பிடிக்காமல் இருந்தாலே போதும்! இதுபோல போட்டுத்தாக்கிவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்! நாமெல்லாம் செய்து கொண்டிருப்பதைப்போல. போட்டுத்தாக்கிய ஒரே ஒரு பதிவின்மூலம் உங்கள் தரமெல்லாம் இறங்கி என்னை கிழிகிழியென கிழித்து பதிவுகள் இடும் அளவுக்கு உங்களுக்கு கோபம் வருகிறதே? உங்கள் அங்கததின் மூலம் பாதிப்பான மற்றவர்களுக்கு எவ்வளவு கோபம் வரும் என்று என்றைக்காவது நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா? அல்லது உங்களைப்போல பதிலுக்கு வார்த்தைகளின் மூலம் விளையாட வக்கில்லாமல் மனதுக்குள் குமைந்துகொண்டிருக்கும் அவர்களது இயலாமைதான் உங்கள் பலமா?

அதெல்லாம் அங்கதம்.. அதனால் பாதிக்கப்பட்டதாக யாரும் எனக்கு சொன்னதில்லை. ஆனால் நீ செய்தது அவதூறு என்பீர்களானால் உங்களது அங்கதம் பற்றிய அளவுலோலை இங்கே அனுப்பிவைப்பீர்களானால் நன்றியுடையவனாக இருப்பேன்! நானும் அடுத்தவர் வாயைத்திறந்து சொல்லக்கூட முடியாத அளவுக்கு என் நரகல் நடையை மாற்றிக்கொண்டு நாசூக்காக பிடிக்காதவர்களை குத்திக்கொண்டே இருப்பேன்! நிர்வாகியாக இருந்துகொண்டே வலைப்பதிவாளன் என்று எழுதியது என பல்டி அடிக்கிறாயே என்றால் என்ன சொல்வது? உங்களுக்கு எப்படி நீங்கள் மகிழ்சியாக இல்லமலேயே அந்த பதிவுகளை எழுத முடிந்தது!? அதுபோலத்தான் இதுவும்!

மேலும் சிலவற்றை சொல்வதற்கு முன்பாக சில கேள்விகளை முன்வைக்கிறேன்...

1. "இந்த பதிவு யாரையாவது குறிப்பிட்டால் அது தற்செயல்தான்..." என்ற ஒரு வரியை கடைசியில் போட்டுவிட்டால் யாரைப்பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? இதைப்பற்றிய உங்கள் கருத்தென்ன?

2. "நையாண்டியை இன்சல்ட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது" என்பதைப்பற்றிய உங்கள் கருத்தென்ன? "இது எனக்கும் நகைச்சுவைதான்" என்று யாரைக்குறித்து எழுதப்பட்டதோ அவன் சொல்ல வேண்டுமா? இல்லை எழுதறவனே "நான் உன்னைப்பற்றி கேவலமாக எழுதுனதுக்கெல்லாம் இன்சல்ட் ஆகாத மகனே! நகைச்சுவை உணர்வை வளர்த்துக்க" அப்படின்னு எழுதறவன் சொல்லனுமா?!

3. பேரை கொஞ்சம் மாத்தி என்ன வேணா எழுதலாம்! அது தனிமனித தாக்குதலாகாது என்பதைப்பற்றிய உங்கள் கருத்தென்ன?

கடைசியில் கண்ட டிஸ்க்ளெய்மரை பார்த்தீர்களா? "இது யாரையாவது குறிப்பிட்டால் தற்செயல்தான்" என தெளிவாக சொல்லிய பிறகும் ஏன் நீங்கள் உங்களை குறிப்பதாக எடுத்துக்கொள்கிறீர்கள்? உங்களை பாதிப்பதாலா? உங்களைப்போல நேரடியாக முகத்தில் குத்தாமல் ஒரு நாய்வண்டியை எடுத்துக்கொண்டு வீதிவீதியாக நாய்பிடிக்க அலையவைத்தது இந்த டிஸ்கெய்மரில் உள்ள அயோக்கியத்தனத்தை உணர்திருப்பதால் தானே?! ஒருவன் கவிஞன் ஆக ஆசைப்படுகிறேன் என்று சொல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? அவனை காத்துவாயன் என்று கண்டுபிடிக்கிற அளவுக்கு அவன் மீது உங்களுக்கு என்ன காண்டு? ஒருவர் நான் எழுத்தாளராக வரவிரும்புகிறேன் என்று சொன்னால் "3000 பேரு படிச்சா நீயெல்லாம் எழுத்தாளனா?" என்று ஷகிலா போஸ்டரை பார்த்த கணக்கோடு வருவதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? இவர்களை விட அதிகமாக 90000 பேர் பார்த்ததன்மூலம் இப்படி மற்றவரை தூற்ற உங்களுக்கு உரிமையும் தகுதியிருக்கிறது என்றா? ஒருவரை அவ்ரது உருவத்தை வைத்து காயப்படுத்துவதற்கு வேண்டிய தினவை உங்களுக்கு கொடுப்பது எது? நீங்கள் உங்கள் முகத்தை மறைத்திருக்கும் தைரியம்தானே? எங்கே உங்கள் படத்தையும் போடுங்களேன் பார்ப்போம்? மற்றவர்களின் கருத்துக்களையும் கொஞ்சம் அறியலாம்!

தேன்கூடு பற்றி சொல்லியதெல்லாம் நீங்கள் அடிக்கடி உபயோகப்படுத்தும் "முதுகு சொறிதல்" என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டை சொல்வதற்காகதான்! உச்சகட்டம் மற்றும் உங்கள் கதையைப்பற்றி சொன்னதெல்லாம் போகிற போக்கில் போட்டுத்தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருப்பதுதான்! அங்கதம் என்று எழுத ஆரம்பித்த பிறகு சொல்லும் கருத்தில் லாஜிக் எல்லாம் பார்க்க முடியுமா என்ன? எதைச்சொன்னால் எதிராளி மனதளவில் காயப்படுவான், கோபம் பீரிட்டுக்கிளம்பும் என குறிபார்த்து அடிப்பதுதான்! இத்தனை நாள் அங்கதம் எழுதும் உங்களுக்கு இது புரியவில்லை என விளக்கம் கேட்டால் நான் என்ன சொல்வது? இரண்டாவதான நாய்ப்பதிவு கண்டிப்பாக, சத்தியமாக, உண்மையாக உங்களைப்பற்றியது இல்லை! ரெண்டு ரூவா இருந்தா கொடுங்க(என் குடும்பத்துக்கே ப்ளைட் டிக்கெட் வாங்கித்தறவுக நீங்க..ரெண்டுரூவா கொடுக்கமாட்டீங்களா என்ன? :) ) கற்பூரம் வாங்கி வந்துகூட சத்தியம் செய்கிறேன்! ஊரெல்லாம் தேடித்தேடி பார்த்தாலும் நாய்கள் மட்டுமே கண்ணுக்கு தெரியும் பார்வைக்குறைபாடுள்ள ஒருவருக்கு அவரது நிலையை விளக்கும் பதிவு அது!

அந்த இரண்டு பதிவுகளையும் எழுதுவதற்கு உங்களுக்கு எவ்வளவு நேரமாயிற்று? 30 நிமிடங்கள்?! எனக்கு 40 நிமிடங்கள்! அவ்வளவே! இதுபோன்ற அயோக்கியத்தனமான அங்கதங்கள் எழுதுவதற்கு அறிவுஜீவித்தனமோ இல்லை புத்திசாலித்தனமோ தேவையில்லை! மூளையில் கொஞ்சம் மடங்கல் இருந்தால் போதும்! போகிற போக்கில் போட்டுத்தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்! இப்பகூட ஒன்று சொல்கிறேன் பாருங்க! "வழிப்போக்கன்: போகிற வழியெல்லாம் வயித்தால போறவன்!" அவ்வளவுதான் இதற்கு என்ன திறமை வேண்டும் என நினைக்கிறீர்கள்? இப்படியும் அப்படியும் மடக்கும் மாற்றியும் திரித்தும் எழுதப்படும் சொற்களை வைத்து மற்றவர்களது சின்னச்சின்ன குறைகளை பெரியதாக மாற்றி அடுத்தவன் உணர்வுகளை மதியாமல் அவர்களை அலங்கார,அதீத, அங்கத சொற்களால் அடித்து வீழ்த்தி அவர்களை வாய்திறவாமல் செய்வதில் இல்லை திறமை! இவ்வளவு இருந்தும் தெரிந்தும் அவைகளை பிடிக்காதவர்கள் மீது ஏவாமல் அவர்கள் கருத்தையும் மதிப்பதில் உள்ளது நமது திறமைகளின் மீதான நமது நம்பிக்கை!

இத்தனை பேர் கருத்துச்சொல்லியும் என்னைமட்டும் அவதூறு செய்தது ஏன் எனக்கேட்டும் PKSக்கு.. அது அங்கே இருந்த மண்ணாந்தைகளில் உங்களை மட்டும் ஆந்தையாக பார்த்தால்கூட இருக்கலாம்! நையாண்டியை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற உங்களது கருத்து நிஜமாகவே புல்லரிக்க வைத்தது! அப்படிப்பார்த்தால் எனது பதிவுகூட ஒரு வைகையான Black Humour தான்! இதுமட்டும் ஏன் உங்களுக்கு நகைச்சுவையாக தெரியவில்லை? உங்களைப் பாதித்ததாலா? அங்கு படித்ததில் யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டார்கள் என எனக்கு தெரியாது. அதைத்தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என்று சொல்வீர்களானால் ஏன் என் பதிவில் உள்ள ஆழமான நகைச்சுவையை உங்களால் உணரமுடியவில்லை! உங்கள் உணர்வுகள் காயப்பட்ட ஒரே காரணத்தாலா? காத்துவாயன், பொறுக்கிகள் என குறிப்பிட்ட ஒரு ஆட்களை மட்டும் தாக்கப்பட்டபோது நீங்கள் ரசித்து சிலாகிக்கும் அளவுக்கு உயர்ந்து இருந்த அந்த நகைச்சுவை உணர்வு ஏன் என் பதிவினை படிக்கும் போது இல்லை? நம்மை பற்றிச்சொல்லும்போது நமது நகைச்சுவை உணர்வுகளை இழுத்துப்பூட்டி வைத்துவிட வேண்டுமா என்ன? "அடுத்தவனை கேவலப்படுத்தும்போது கைதட்டி சிரிக்கறையா.. இரு.. இரு.. உன்னை சொல்லும்போது என்ன செய்யற பார்க்கறேன்" என்ற சிறுபிள்ளைத்தனமான கோபத்தின் வெளிப்பாடே உங்களைப்பற்றி சொல்லியது! பார்க்கப்போனால் அந்த பதிவே ஆத்திரம் கண்களை மறைக்க இவனுங்களை எப்படியும் காயப்படுத்தி விடவேண்டும் என்ற வெறியுடன் எழுதப்பட்டதுதான்!

பலியாடு, பலியாடு என்று என்னவோ என் தலைவெட்டப்பட்டு ரத்தவெள்ளத்தில் துடிப்பதுமாதிரியான பில்ட்டபுடன் என்ன நிறுவ முயல்கிறீர்கள்? நீங்களெல்லாம் சுயசுந்தனையுடைய பிரம்மாக்கள் என்றும் உங்களை தாக்கி ஒரே ஒரு பதிவிட்டதால் என்னையெல்லாம் உலகெங்கிலும் இருந்து தூண்டிவிடுகிறார்கள், சதி செய்கிறார்கள், அடியாளாக உபயோகப்படுத்துகிறார்கள் என்றா? ஒரு பதிவுக்கே நீங்கள் இத்தனை கற்பிதங்கள் கொடுக்கமுடியும் எனில் இத்தனை நாள் நீங்களெல்லாம் போட்டுத்தாக்கிய பதிவுகளுக்கு எத்தனை பேர், எத்தனை நாடுகளில் இருந்து எத்தனை நாட்கள் உங்களை தூண்டி, மூளைச்சலவை செய்து அடியாளாக உபயோகப்படுத்தியிருக்க வேண்டும்! நினைக்கவே மலைப்பாக இருக்கிறது!

உங்களது தவறுகளை எடுத்துச்சொல்ல உங்களுக்கு இருக்கும் நண்பர்களை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது! அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! இதுபோல அங்கதம் என்ற பெயரில் அடுத்தவரை போட்டுப்பார்க்கும் பதிவுகளை படிக்கும்போது தலையில் குட்டி கண்டிக்கவில்லையெனினும், படித்து விட்டு அன்னப்பறவைபோல அதிலிருக்கும் நகைச்சுவையை மட்டும் மனதார பாராட்டிவிட்டு நடையைக்கட்டாமல் நண்பன் என்ற உரிமையிலாவது "இது தவறு" என்று ஒரு முறை சொன்னீர்களானால், அடுத்தமுறை இதுபோன்ற கருத்துக்களால் மோதிக்கொள்ள முடியாமல் அங்கதம் என்ற பெயரில் மறைந்து அடுத்தவரை அடித்து வீழ்த்தும் அயோக்கியத்தனமான பதிவுகளை எழுதும் முன், சக வலைப்பதிவாளர்கள் மீது மரியாதை இல்லையெனினும் உங்கள் மீதுள்ள மரியாதைக்காகவது இதுபோல எழுதுவதற்கு முன்பு ஒரு முறை யோசிப்போமல்லவா?! தயவு செய்து இனி இதனை செய்யுங்கள்!

நீங்கள் மதிக்கும் நண்பர்களின் மீது எனக்கும் மதிப்பும் மரியாதையும் உள்ளது! அவர்களையும் என் நண்பர்களாகத்தான் நினைக்கிறேன்! ஆகவே என் பதிவிலிருக்கும் ஆத்திரம் கண்களை மறைக்க தாக்கியே ஆகவேண்டும் என எழுதிய பகுதிகளை மகிழ்சியுடன் எடுத்துவிடுகிறேன். அப்ப மிச்சமிருக்கிறது என்ன எங்கிறீர்களா! எப்படி உங்கள் பதிவுகளை நீங்கள் அங்கதம் என்று நம்புகிறீர்களோ அது போல நிஜமாகவே எனக்கு அது அங்கதம் தாங்க! :) அதில் ஏதேனும் வருத்தமிருப்பினும் சொல்லுங்கள்! நீக்கிவிடுகிறேன்!

இந்த பதிலையும் நீங்கள் வரிக்கு வரி ஆராயலாம்! சொல்லுக்கு சொல் திருப்பிப்போட்டு அடிக்கலாம்! அதைப்பற்றி எனக்கு வருத்தமில்லை! இதனை ஒரு தனிப்பதிவாக் போட்டு நாலுபேர் குழாயடிச்சண்டை என சொல்வதிலும் விருப்பமில்லை! எனவே பின்னூட்டமாக அளிக்கிறேன்! மேலும் ஏதேனும் கேள்விகள் இருப்பினும் கேளுங்கள்! பதிலிருந்தால் தருகிறேன்! இலக்கிய இணைய அரசியகளின் மீதான எனது அறிவு எனது ஏதேனும் ஒரு பதிவைப்படித்தாலே உங்களுக்கு விளங்கிவிடும்! பொய்சொல்வதற்கோ, புரட்டு பேசுவதற்கோ, இமேஜ் பில்டப்புக்கோ நான் என் பதிவுகளை பயன்படுத்துவதில்லை! ஆகவே, இங்கே சொன்னவற்றை எப்படி எடுத்துக்கொள்வது என்பது உங்களுடைய விருப்பம்! திராவிட கலரின்மீது 5 நிமிடம் கால் போட்டதையே மறைக்காமல் எழுதுகிறவனுக்கு இதெல்லாம் மறைக்கவேண்டிய அவசியமில்லை என்பதை நீங்கள் உணர்ந்தால் மகிழ்வேன்!

Jayaprakash Sampath said...

அன்புள்ள நண்பர்களுக்கு

எழுதலாமா வேண்டாமா என்று நீண்ட நேர யோசனைக்குப் பிறகு, இந்த மறுமொழி. தயக்கத்துக்குக் காரணம், பின்னால் வருகிறது.

இந்தப் பதிவுக்குக் காரணமான இளவஞ்சியின் பதிவு, முகமூடியின் பதிவு, பிகேஎஸ்ஸின் பதிவு, மற்றும் குசும்பனின் நீக்கப்பட்ட இரு பதிவுகளையும் வாசித்தேன்.

குசும்பனின் இடுகைகளை நீண்ட நாட்களாகத் தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன். சில சமயம் புரியும், பல சமயங்களில் புரிவதில்லை. எதிர்மறைக் கருத்துக்களை, நேராகவோ, அல்லது அங்கதம் சேர்த்தோ சொல்ல யாருக்கும் உரிமை உண்டு.

அவை விரிவான வாசகர் வட்டத்தைப் பெறுவதும், ஒதுக்கித் தள்ளப்படுவதும், எழுதுகிறவரின் திறமையைப் பொறுத்தது,

அந்த வகையில் நானும் குசும்பனின் நீண்ட நாள் வாசகன் தான். சில சமயங்களில், அவருடைய பதிவுகள், கருத்தியல் ரீதியாக இல்லாமல், தனிப்பட்ட ரீதியிலான தாக்குதல்களாக அமைந்த போது, ( எனக்கு அப்படித் தோன்றியது என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள் ) அதைக் கண்டுகொண்டதில்லை. குசும்பன் என்ற புனைப்பெயருக்குப் பின்னால்

இருக்கும் அவர் யார் என்று எனக்குத் தெரிந்த போது, தனது அரசியல் நிலைப்பாடுகள்/கருதுகோள்கள் அடிப்படையில்

பிறரை எதிர்கொள்கிறார் என்கிற போது அதிலே எனக்கு மறுப்பேதும் இல்லை. புரிந்தால் படித்து விட்டு சிரிப்பது, இல்லை என்றால், அடுத்த வேலையைப் பார்ப்பது என்பதுதான் என்னுடைய நிலை.

குசும்பனின் கொள்கைகளுடன் முரண்படுபவர்கள், அவரது பதிவுகளில் அவ்வபோது இடம் பெறுவதும்,அப்படி இடம் பெறுபவர்கள், பின்னூட்டப் பெட்டியில் டிஃபன்ஸ் செய்வதும், தொடர்ந்து சில நாட்கள் வரை இந்த விவாதம் நடை பெறுவதும் அவ்வப்போது நடக்கிற விஷயம் தான். இதைப் புரிந்து கொள்கிற எனக்கு, குசும்பனின் காசி மீதான தொடர்
தாக்குதலைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில்,

1.விவாதங்களுக்கு வித்திடுகிற எந்த விஷயத்திலும், காசி, தன்னுடைய கருத்துக்களை ஆணித்தரமாக அடித்துச்

சொன்னதாகவோ, அல்லது தொடர்ந்து எழுதிய மாதிரியோ எனக்கு நினைவில்லை. இப்போது இட ஒதுக்கீடு விவகாரத்தில்

பலரும் எழுதுகிற மாதிரி.

2. குசும்பனின் அரசியல்/சமூகம்/பொருளாதாரம்/ஈழம்/சினிமா ஆகியன குறித்த கருத்துக்களுக்கு எதிர்மறையான கருத்துக்களை காசி தன்னுடைய பதிவில் எழுதிய மாதிரி நினைவில்லை.

அப்படி இருக்கும் போது, குசும்பன், தன் இலக்கில்லாத கோபத்தை காசி மீது காண்பிப்பது, தன்னை தமிழ்மணம் பட்டியலில் இருந்து நீக்கியதற்காக மட்டும் தானா என்பதைத் தெரிந்து கொள்ள ஆவல். அதைத் தெரிந்து கொள்ளூவது, கருத்தியல் ரீதியாக மட்டுமே வம்பு செய்பவர்கள் என்று நான் நினைக்கும் குசும்பன் உள்ளிட்ட சக நண்பர்களின் நோக்கங்களை
மறுபரிசீலனை செய்ய உதவும்.

இளவஞ்சியின் சர்ச்சைக்குரிய பதிவு, காசியின் தூண்டலால் தான் இடப்பட்டிருக்க முடியும் என்று நம்ப எத்தனை தூரம் இடம் இருக்கிறதோ, அதே அளவு, காசி, இளவஞ்சியைத் தூண்டி இருக்க மாட்டார் என்று நான் நம்புவதற்கும் இடம் இருக்கிறது.

காசியை தேவைக்கு அதிகமாகத் தாக்குகிறார்கள் என்கிற நினைப்பில், அவருக்காக இளவஞ்சி, ஆர்வக் கோளாறில், ஒரு பதிவு எழுதியிருக்க வாய்ப்பு இருக்கிறதென்பதை மறுக்க முடியாது. எப்படி, இளவஞ்சியை காசி தூண்டினார் என்பதை நிரூபிக்க முடியாதோ, அதே போல, காசி அதைச் செய்ய வில்லை என்பதையும் நிரூபிக்க இயலாது. எனக்கு காசியுடன்
தனிப்பட்ட முறையில் நட்பு இருக்கிறது, அவரை ஓரளவுக்கு எனக்குத் தெரியும் என்ற காரணத்தினால் தான் என்பதை
வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறேன். எப்படி, முகமூடி என்கிற புனைப்பெயரிலும், நேசகுமார் என்கிற பெயரிலும் எழுதுபவர் பி.கே.சிவக்குமார் தான் என்று பலமான புரளீ எழுந்த போது, பி.கே.எஸ்ஸை ஓரளவுக்குத் தெரியும் என்ற முறையில் நான் அதை பல இடங்களில் authoritative மறுத்தேனோ அதைப் போல. தனிப்பட்ட ரீதியில் எனக்கு ஏற்படும் பரிச்சயங்களின் வாயிலாகத்தான் ஒருவரது, நோக்கங்களைப் புரிந்து கொள்ள முடியும் என்பதை நம்புகிறவன் நான்.

இப்படி காசியைத் தொடர்ந்து தாக்கி வருவதை ஒட்டி, குசும்பனின் புரிதல்களுக்காக வேண்டி, அவருக்கு ஒரு ஆரம்ப மடல் ஒன்றை எழுதி இருந்தேன். ( அதிலே இந்த விவகாரம் குறித்துத் தான் பேசப் போகிறேன் என்று சொல்ல வில்லை). இருநாட்கள் விடுமுறை முடிந்து வந்து எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பதற்குள், இளவஞ்சியின் பதிவு மூலம் வேண்டிய அளவு டேமேஜ் நடந்து விட்டது. அப்படி எழுதினாலும், காசியின் இன்னொரு அடியாள் என்று நினைத்துவிட்டால் என்ன செய்வது என்று பயமாக இருந்ததால் எழுதவில்லை. ( முதல் வரியில் சொன்ன தயக்கத்துக்கான
காரணம்) ( இதை இங்கே பகிர்ந்து கொள்ளலாமா என்று தெரியவில்லை. தவறாக இருந்தால் மன்னிக்கவும்)

கொள்கைகளுக்காக வாளெடுத்துப் போர் செய்வது, தமிழிணையத்தின் கலாசாரம். நியூஸ்க்ரூப், யாஹு குழுமங்கள் வழியாக இன்று வலைப்பதிவு உலகம் வரை தொடர்ந்து நடக்கிற விஷயம். சக நண்பர்களுக்காக களத்தில் குதித்து சண்டை இடுவதும்,

அங்கனமே. ஆனால், யாரை என்ன காரணத்துக்காகக் குறிவைக்கிறோம் என்று தெரியாமல், அடிப்பது, எந்த போர்முறைப் படியும் நியாயமில்லை. குசும்பன் உள்ளீட்ட நண்பர்களை ஒழித்துக் கட்டுவதுதான் காசியின் தலையாய பணி என்கிற இமேஜ் தோன்றுமளவுக்கு, எழுதப்படும் பதிவுகளுக்கான மூல வித்து எது என்று
சத்தியமாகத் தெரியவில்லை. அனைத்துப் பதிவுகளையும் தொடர்ச்சியாக வாசிக்கிறேன் என்றபடியால், இது எனக்கு இன்னும்
விளங்காத விஷயமாகவே இருக்கின்றது.

ஒரு காலத்திலே, கொள்கைகளுக்காகவும் ( கொள்கைகள் என்று நான் நினைத்திருந்தவற்றுக்காகவும் என்று வாசிக்கவும் )

நண்பர்களுக்காகவும், வாளெடுத்துச் சண்டை இட்டிருக்கிறேன். தொனி, பேசும் விதம், உள்குத்து, உள்குத்து இன்மை, சூழ்நிலை ஆகியவை வெளிப்படையாகத் தெரியாத வெற்றுக் கணித்திரை ஒளிப்புள்ளிகளின் அர்த்த/அனர்த்தங்களை வைத்து
மணிக்கணக்காகச் வம்பு செய்திருக்கிறேன். இன்றைய நிலையில் அவை எனக்கு பைத்தியக்காரத்தனமாகத் தெரிகின்ற
போதும், எழுதிய காலத்தில், அவை எனக்கு ஏதோ ஒரு வித திருப்தியைத் தந்தன. அது போன்றதொரு திருப்தியை, இப்போது நடக்கிற விவாதங்கள் குசும்பன் உள்ளிட்ட நண்பர்களுக்குத் தருகின்றதென்றால் சரி. வலைப்பதிவு உலகம் போன்ற, ஒரு eco system, பரஸ்பரம் பாராட்டிக் கொள்கிற mutual admiration society ஆக இருக்கக் கூடாது என்று எத்தனை தூரம் நம்புகிறேனோ, அதே அளவுக்கு, தத்தமது பிடிப்புகளுக்காக, வகை தொகை தெரியாமல், கெரில்லாத் தாக்குதல் நடத்தி மனிதர்களைக் காயப்படுத்தக் கூடாது என்றும், வாயில் நுழையாத பெயர்கள் கொண்ட பரதேச ஊர்களில் இருக்கும் வழங்கிகளில் சேமிக்கப்படும் எழுத்துக்களை விடவும், மனிதர்கள் முக்கியம் என்பதையும் நம்புகிறேன். தனியாகவும், பொதுவிலும் சண்டையிட்ட நண்பர்களூடனும், கொள்கை அளவில் துளியும் ஒத்துப் போகாதவர்களுடனும், எவ்வித மனத்தடையும் இன்றி பேச முடிவதற்கும், நேரிலே சந்தித்தால், முரண்படுகிறவை தவிர்த்தும் பேச விஷயம் இருக்கின்றதற்கும் இந்த நம்பிக்கையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இளவஞ்சி, எழுதியது சந்தேகமில்லாமல் அதிகப்படியானது. ஆனால், அந்தப் பதிவுக்குத் தூண்டலாக இருந்தது காசிதான் என்கிற சந்தேகமும் அதிகப்படியானதுதான்.

இந்த மறுமொழியின் மூலம், காசியின் அடியாள் என்று நான் பிராண்ட் செய்யப்படுவது குறித்து எனக்குக் கவலை இல்லை. தொன்று தொட்டு, யாரோ ஒருவரின் அடியாளாகத்தான் அறியப்பட்டு வந்திருக்கிறேன், காலப் போக்கில் என்னுடைய முதலாளீகள் மாறிவந்திருக்கிறார்கள். ( பிறர் கருத்துப் படி) என்பதால், அதைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை.இந்த விஷயத்திலே இது குறித்து தோன்றுவதை எல்லாம் எழுதிவிட்டேன். இனி எழுத ஒன்றுமில்லை.

அன்புடன்
பிரகாஷ்

Pavals said...

PKS >> //அல்லது, இளவஞ்சியின் நண்பரும் எனக்கும் நண்பருமான கொங்கு ராசா அவர்கள்//
(இதுல ஒரு உள்குத்தும் இல்லைன்னு நம்பறேன்) :)
நானே ஒன்னும் புரியாம திருகிட்டு நிக்கறேன்.. நீங்க வேற பொறுப்பெல்லாம் குடுக்கரீங்க.. ம்ம்


இதை மறுபடியும் கிளறனுமான்னு தான் எனக்கு படுது
(உன்னைய சொல்லியிருந்தா தெரியும்'னு சொல்ரீங்களா?)

நாகை சிவா said...

குசும்பனாரே!
மிக்க நன்றி. பெருதன்மையாக நடந்து கொண்டீர்.........
உங்க வழக்கமான குசும்ப ஆரம்பிங்க அப்பு. பார்த்து நாளாச்சு........

PKS said...

அன்புள்ள பிரகாஷ்,

இதில் நீங்கள் நுழைந்து உங்கள் கருத்தைச் சொன்னமைக்கு நன்றி. தயக்கமெல்லாம் வேண்டாம். நாம் தனியாகப் பேசும்போது எப்படிப் பரஸ்பர நியாயங்களைப் பகிர்ந்து கொள்கிறோமோ அப்படி இங்கேயும் பகிர்ந்து கொள்ளலாம். குசும்பன் அவர் பதிவிலேயே, உச்சகட்டம் பதிவில் என்று நினைவு - தமிழ்மணத்தைவிட்டு வெளியே வந்தபின் எங்கும் தமிழ்மணத்தைப் பற்றி அதற்கு முன் எழுதியதில்லை என்று சொல்லிப் படித்த நினைவு. ஆனால், நீங்கள் குசும்பன் தொடர்ந்து, தமிழ்மணத்தையும் காசியையும் தாக்கி வந்திருப்பதாகச் சொல்கிறீர்கள். அதனால், அதற்கான பதில் என்ன என்று குசும்பனிடம் இருந்து அறிவதில் நானும் ஆர்வமாக இருக்கிறேன். அவர் பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன். குசும்பன் எழுதுகிற பல விஷயங்கள் எனக்கும் புரிவதில்லைதான். நான் பிடிப்பனவற்றிற்கும் புரிகிறவற்றிற்கும் மட்டுமே நேரம் இருந்தால் பாராட்டிச் சிலவரிகள் என் பெயரில் யார் பதிவில் என்று பார்க்காமல் எழுதுவதுண்டு. ஆனால், பதிவர்கள் நான் பின்னூட்டம் இடுவதே பிடிக்காமல், ஏதோ நானாகப் போய் இடுவதால் சகித்துக் கொள்கிறார்கள் என்று இளவஞ்சி கண்டுபிடித்திருக்கிறார். அப்படி என் பின்னூட்டங்களைப் பிடிக்காமல் அனுமதிக்கிறவர்கள் யாரென்ற பட்டியலை அவர் முன்வைக்க வேண்டும். அப்படி அவர் முன்வைத்தால், அந்தப் பதிவுகள் அவர் சொல்கிற மாதிரி "அஜீரண வாந்தி எடுப்பதை" நிறுத்தி விடுகிறேன்.

இளவஞ்சி அவர்களும் ஒரு நீண்ட பதிலைக் கொடுத்திருக்கிறார். நானும் நீளமாகத்தான் பேசப் போகிறேன். இளவஞ்சியிடம் அல்ல.பிரகாஷீடம். இடையில் இளவஞ்சி அவர்களுக்கும் பதில் இருக்கலாம். அதனால் நீளத்திற்கு மன்னிக்கவும். தமிழ்மணத்தின் இணைநிர்வாகியாக மட்டுமில்லாமல், ஒரு வலைப்பதிவராகவும் பிரகாஷ் அவர்கள் இதற்குச் சொல்லப் போகிற பதில்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

"தமிழனுக்கு நகைச்சுவை உணர்வு இல்லை" என்பது பலகாலமாக நான் சொல்லி(எழுதி) வருகிற விஷயம்தான். இட்லி-வடை அவர்கள் இந்திய ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்களைப் பற்றி எழுதிய பதிவில்கூட, என் பின்னூட்டத்தில், "தமிழர்கள் நகைச்சுவை உணர்வைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். தேடிச் சென்று அதைப் பார்த்துக் கொள்ளலாம். அப்படி எனக்குள் இருக்கிற கருத்தின் தொடர்ச்சியாக, "நகைச்சுவையை இன்சல்ட்டாக எடுத்துக் கொள்கிற சமூகத்தில்" என்று மொத்த சமூகத்தையுமே நான் குறிப்பிடும்போது இளவஞ்சி மட்டும் துள்ளிக் குதித்து என்மீது ஆபாசம் தெறிப்பது ஏன்? அவருக்கு நையாண்டியின் இலக்கணம் சொல்லித் தருவது என் வேலை அல்ல. ஆனால், யாரோ எதுவோ தெரியாமல், தெரிந்து கொள்கிற எந்த முயற்சியும் எடுக்காமல், இதுதான் நையாண்டி என்று தோன்றிய ஆபாசத்தை எழுதி என்னைத் தாக்கும்போது அவர்களைக் கேள்வி கேட்கிற உரிமை இருக்கிறது. உங்களைப் பற்றி யாரும் தாக்கியோ நையாண்டியாகவோ எழுதினால் அதற்காக நீங்கள் எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்கள். நான் வரவேற்கிறேன். சட்டத்தின் முன் எது நையாண்டி என்று அப்போது சொல்லித் தருவார்கள். அப்படி கேட்பதற்கு வக்கில்லாமல் அவர்கள் பதிவில் பின்னூட்டமிடுகிறவர்களைத் தாக்குவது பேமானித்தனம். உதாரணமாக, முகமூடியின் பதிவில் அதைப் பாராட்டி நண்பர் மீனாக்ஸ் கூட எழுதியிருக்கிறார். இன்னும் பலரும் எழுதியிருக்கிறார்கள். ஆனால், இளவஞ்சியின் பதிவில், என்னை மட்டும் எடுத்துத் தாக்குவது ஏன்? முகமூடியும் குசும்பனும் வலிக்கிற மாதிரியான விஷயங்களை நையாண்டியாக எழுதுகிறார்கள் என்றால், அவர்களைத் தாக்கி மட்டும் இளவஞ்சி எழுதினால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், அங்கே தொடர்பே இல்லாமல் நான் ஏன் வருகிறேன்?

இப்படிப் பல உதாரணங்கள் தர முடியும். ஒன்றை மட்டும் சொல்கிறேன். தங்கமணியின் பதிவில் ஜெயஸ்ரீ எழுதினால் - ஜெயஸ்ரீக்கு யார் பதிவில் எழுதுவது என்பது தெரியவில்லை என்பது வேறு விஷயம் - அதற்கு ஜெயஸ்ரீயைத் தாக்குவதற்குப் பதிலாக அங்கே என்னை இழுத்து வைத்து, புத்தகம் போடுபவர்கள் தூண்டிவிட்டால் எழுத வந்துவிடுகிறீர்கள் என்று ஒரு பெண்மணி எழுதுகிறார். இணையத்தில் எழுதுகிறவர்களில் புத்தகம் போடுகிறவர்கள் எனக்குத் தெரிந்து இரண்டு பேர். ஒன்று, அத்தொழிலில் என் முன்னோடியான பத்ரி அவர்கள், இரண்டு நான். இதில் யார் தங்கமணியின் பதிவில் தாக்கப்பட்டது? தங்கமணியோ அல்லது அதை எழுதியவர்களோ சொல்வார்களா? யார் சொல்லியும் ஜெயஸ்ரீயை எழுத வைக்க முடியாது என்று இவர்களுக்குத் தெரியாதா? அல்லது பிறர் சொல்லி இவர்கள் வந்து எழுதுவதால், மற்றவர்களும் அப்படியே என்று நினைத்துக் கொள்கிறார்களா? இந்த தங்கமணி - ஜெயஸ்ரீ விவாதம் ஒரு உதாரணம்தான். எப்படித் தேவையில்லாமல் என்னைப் போன்றோர் என் கருத்துகளுக்காக, நாங்கள் பங்கு பெறாத விவாதங்களிலும் தாக்கப்படுகிறோம் என்பதற்கு உதாரணம். இப்படி விரவிக் கிடக்கிற உதாரணங்கள் நிறைய. கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?

நகைச்சுவை/நையாண்டி என்பதற்கான இலக்கணங்கள் இளவஞ்சிக்குத் தெரியவில்லை என்றால், என்னைக் கேட்டு என்ன பயன்? முகமூடியின் அந்த நகைச்சுவைப் பதிவை இன்னும் நீக்காமல், ஆனால், இளவஞ்சியின் பதிவை நீக்கியதன் காரணம் என்ன என்று இளவஞ்சி "அடங்கி ஒடுங்கிக் கட்டுப்படும்" தமிழ்மண நிர்வாகிகளை அவர் கேட்கலாம். தமிழ்மண நிர்வாகிகளுக்கு அப்பதிவு ஆட்சேபமில்லை என்றால் (அதனால்தானே, நீக்காமல் வைத்திருக்கிறார்கள்), அந்தப் பதிவில் பின்னூட்டமிட்டுள்ள பலருக்கு அப்பதிவு ஆட்சேபமில்லை என்றால், அதில் பின்னூட்டமிட்ட என் மீது மட்டும் இளவஞ்சிக்கு ஏன் இத்தனை கோபம், இத்தனை வெறுப்பு?

பேரைச் சொல்லி நையாண்டி செய்வதைப் பற்றிக் கூட எனக்குக் கவலையில்லை. அது ஆபாசமாக இல்லாதவரைக்கும் அதற்குள் வெறுப்பின் தொனி தெரியாதவரைக்கும். அப்படி நானே பலரை நையாண்டி செய்திருக்கிறேன். பிரகாஷ் அவர்களே அந்த நையாண்டி ஒருமுறை பிடிக்கவில்லை என்றபோது, அவரிடம் பொதுவில் மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் - மரத்தடியில். ஏனென்றால், இங்கே அமெரிக்காவில் ஜே லெனோவையும் டேவிட் லெட்டர்மேனையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இளவஞ்சியின் பதிவில் என்னைப் பற்றி (மற்றவர்களைப் பற்றி நான் பேசப்போவதில்லை) நீங்கள் எழுதியது நையாண்டி மட்டுமே என்றால், உங்கள் பதிவைத் தாங்கிப் பிடிக்காமல் தமிழ்மணம் தூக்கியது ஏன்?

முகமூடியோ குசும்பனோ இளவஞ்சியை விமர்சிக்கவில்லை என்கிறார்கள். அவரின் நண்பர்களை விமர்சித்தார்கள் என்று இளவஞ்சி சொன்னால், நண்பர்களுக்காக இளவஞ்சி தரம்தாழ்ந்து அடிப்பார் என்றால், அதில் என்னை ஏன் இழுக்கிறார்?. இப்போது இளவஞ்சி எழுதுவதற்கெல்லாம் அவர் நண்பர் கொங்கு ராசாவை நான் தரம்தாழ்ந்து திட்டினால் அது நியாயமாக இருக்குமா? இருக்காது. அப்படித்தானே இளவஞ்சி செய்தார்?

இப்போது தமிழ்மணம் விஷயத்திற்கு வருவோம். இளவஞ்சியின் என் மீதானத் தாக்குதலைப் பார்த்தபின்னர், தமிழ்மண நிர்வாகிகள் சில பேருக்கு என்மீது காரணமில்லாமல் கடுப்பும் வெறுப்பும் இருக்கிறது என்று இப்போது நான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன். இதுநாள் வரை இந்த விஷயத்தை, "போகட்டும்.. போகட்டும்.. காசி தமிழ் வலைப்பதிவர்களுக்காக அவரால் இயன்றதைச் செய்கிறார்" என்ற நல்லெண்ணத்தில் நான் பேசாமல் தவிர்த்து வந்தாலும், இளவஞ்சியின் இந்தப் பதிவு, தமிழ்மணம் குறித்த என் எல்லாக் கேள்விகளையும் சந்தேகங்களையும் பொதுவில் கேட்க வைக்கிறது. இதன்மூலம் என் கேள்விகளுக்குத் தெளிவான பதில் கிடைத்தால் நல்லதே. ஏனென்றால், காசி அவர்கள் என் கேள்விகளுக்கோ/வேண்டுகோளுக்கோ பதில் சொல்வதில்லை. (உதாரணம்: என் பதிவை தமிழ்மணத்திலிருந்து நீக்கும்படிப் பொதுவில் பல வேண்டுகோள் வைத்தும் நீக்கவில்லை. காசிக்கு ஒரு தனிமடலை பத்ரிக்கு CC: செய்து எழுதியபின்னரே, எந்தப் பதிலும் சொல்லப்படாமல் என் பதிவு தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டது.) ஆனால் அதே காசி சுந்தரமூர்த்திக்கோ ரோசா வசந்துக்கோ தேசிகனுக்கோ ஒரு பிரச்னை என்றால் அதைப் பொதுவில் பின்னூட்டத்தில் கேட்டாலும் ஓடிவந்து பதில் சொல்கிறார். அப்போது படியளப்பு, தவச தானியக் கதைகள் வருவதில்லை. இதைப் பார்க்கிற யாரும் காசியிடம் "ஜாதிய மேலாண்மை/நிலக்கிழாரியத் தன்மைகள்" இருப்பதாகத்தான் சொல்வார்கள். ஒரு சேவையை நடத்துபவர் யார் கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல வேண்டும். இல்லையென்றால், யாருக்கும் பதில் சொல்லக் கூடாது. காசி எனக்குப் பதில் சொல்லவில்லை என்பது என் குற்றச்சாட்டில்லை. நான் சொல்லப் போகிற பின்வருகிற விஷயங்களைக் காசிக்கு அனுப்பினாலும், இதே மாதிரி பதில் வராது என்பதாலேயே பொதுவில் பகிர்ந்து கொள்கிறேன் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

தமிழ்மணம் நிர்வாகிகள் சிலருக்கும் காசிக்கும் என்மீது காரணமில்லாமல் வெறுப்பும் கடுப்பும் இருப்பதற்குக் காரணம், குசும்பன் போன்றோர் தமிழ்மணத்திலிருந்து எந்த நோட்டீஸும் கொடுக்கப்படாமல் நீக்கப்பட்டபோது, அதை நான் கேள்வி கேட்டது உட்படப் பல காரணங்கள் என்று நம்புகிறேன். எல்லாக் காரணங்களையும் இம்மடலில் நான் சொல்லப் போவதில்லை. நான் எழுத்தில் வைக்கிற கருத்தாக்கங்களுக்கு எதிராக இருப்பவர்கள் என் மீதான வெறுப்பைத் தூண்டிவிட தமிழ்மணம் துணை செய்கிறது என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன். பாஸ்டன் பாலாஜி போன்ற அன்பர்கள் "தமிழ்மணத்தில் இருக்கிற வாக்களிப்பு முறையைப் பயன்படுத்தி ஒருவரே பல வாக்குகளை அளிக்க முடியும்" என்று சுட்டிக் காட்டிய பிறகும், வெறும் வீறாப்புக்காகவும் பிடிக்காதவர்களைப் பற்றிய தாக்குதல்களை ஒருவரே பல ஓட்டுகள் போட்டு முன்னணியில் வைக்க வேண்டும் என்பதற்காகவும், தமிழ்மணம் வைத்திருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறேன். அதனாலேயே, என்னைப்பற்றிமோசமாகவும் விமர்சித்தத் தரம் கெட்டப் பதிவுகள் தமிழ்மணத்தால் அதிக ஓட்டுப் பெற்று முன்னணியில் வைக்கப்பட்டு, தமிழ்மண நிர்வாகிகள் சிலர் தங்கள் அரிப்பைத் தீர்த்துக் கொண்டார்கள் என்றும் சந்தேகப்படுகிறேன். தமிழ்மண நிர்வாகிகளில் சிலர் தங்கள் வெறுப்பையும் அரசியலையும் நேரடியாகக் காட்டுகிற தைரியமற்றுக் கைத்தடிகளைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் என்று சந்தேகப்படுகிறேன். இப்படி நான் எழுதுவது எல்லாம் அவதூறு என்றால், தமிழ்மண நிர்வாகிகள் எடுக்கப் போகிற எந்தச் சட்டபூர்வமான நடவடிக்கையையும் சந்தித்து என் நிலையை விளக்கத் தயார். யார் சட்டத்தின் முன் முதலில் போவது என்பதுதான் பிரச்னை என்றால், நான் தமிழ்மணத்தின்மீது அவதூறு செய்கிறேன் என்று காசியோ அல்லது பிரகாஷ் அவர்களோகூட முதலில் சட்டத்தின் முன் போகலாம். அதற்காக அவர்கள் மீது கோபப்படவோ வருத்தப்படவோ மாட்டேன். கலகம் பிறக்காமல் நியாயம் பிறக்காது என்பது மாதிரி சட்டம் என்கிற கலகத்தின் மூலம் நியாயம் பிறந்தால் சரியே.

இளவஞ்சி தமிழ்மண நிர்வாகியாக ஒன்றை எழுதுவாராம். மற்றவர்கள் அதைக் குறிப்பிட்டுக் கேள்வி கேட்டுச் சில நாட்கள் ஆனபின்னர், தமிழ்மணத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று டிஸ்கைளைமர் போட்டுவிடுவாராம். சரி அப்படியே வைத்துக் கொள்வோம். வாழப்பாடி ராமமூர்த்தியை இளவஞ்சிக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். அவருக்குத் தெரியவில்லை என்றால், குழலி அவர்களைக் கேட்டுப் பார்க்கவும். திரு. ராமமூர்த்தி அவர்கள் மத்திய அமைச்சராக இருந்தபோது, இப்படித்தான், காவிரி பிரச்னையைப் பற்றிக் கருத்துச் சொல்லப் போக, ஓர் அமைச்சர் அப்படிச் சொல்லலாமா என்ற விவாதம் எழுந்தது. கடைசியில் அவர் அமைச்சராக இருந்து அமைச்சரவைக்கு ஒவ்வாமல் அப்படிப் பேசக்கூடாது என்பதன் அடிப்படையில் அவர் பதவி விலகினார். அது நேர்மையான செயல். "ஒரு அரசியல்வாதியான" வாழப்பாடி ராமமூர்த்தியின் நேர்மை மற்றும் பொதுவாழ்வின் ஒழுக்கம்கூட இளவஞ்சிக்கோ தமிழ்மண நிர்வாகிகளுக்கோ இல்லையா? தமிழ்மண நிர்வாகியாகவும் இருந்து கொண்டு, இப்படி எழுதக்கூடாது என்று தெரிந்தபின்னும், எழுதிவிட்டு, பின்னர் ஒரு டிஸ்க்ளைமர் போட்டுவிட்டால் சரியாகி விடுமா? இளவஞ்சி பதவி விலக வேண்டும் என்று எந்த நியாயமான தமிழ்மண நிர்வாகிகளும் அல்லது வேறு யாரும் சொல்லவில்லையா? அப்படியிருக்கும்போது தமிழ்மண நிர்வாகிகள் சிலரின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனுமே அவர் இப்படியெல்லாம் எழுதுகிறார் என்று மற்றவர்கள் ஏன் சந்தேகப்படக்கூடாது? இந்த லட்சணத்தில் தமிழ்மணமும் அதன் நிர்வாகிகளும் காசியும் அல்லது நாமும் இனிவரும் காலங்களில் தொடர்ந்து அரசியல்வாதிகளின் அராஜகம், நேர்மையின்மை, பொதுவாழ்வில் ஒழுக்கமின்மை ஆகியன குறித்து முதலைக் கண்ணீர் வடித்து நம் சமூகக் கடமையை நிறைவேற்றுவோம் என்று தெரியும்போது சிரிப்பாக வரவில்லையா?

மேலும் போலி டோ ண்டுவைப் பற்றி இப்போது பத்திரிகை, காவல்துறை என்று பல இடங்களில் புகார்கள் உள்ளன. போலி டோ ண்டு என்பவர் ஒரு நபர் என்று எனக்கு ஏனோ தோன்றவில்லை. முக்கியமாகப் போலி டோ ண்டுவால் தான் பாதிக்கப்படும்வரை, காசி ஆறுமுகம் அவர்களே, "பதிவில் வருகிற பின்னூட்டங்களுக்குத் தான் பொறுப்பில்லை" என்ற டிஸ்க்ளைமரைப் பதிவில் போட்டுவிட்டுப் பல அனானிகளின் தரக்குறைவான ஆதாரமற்றத் தாக்குதல்களை என்மீது கூட அனுமதித்திருக்கிறார். பல நாட்கள் கழித்து, பத்ரி அவர் பதிவில், "ஒருவரின் பதிவின் பின்னூட்டத்தில் எழுதப்படுகிற கருத்துக்கும் பதிவரே பொறுப்பு" என்று சட்டம் சொல்வதைச் சுட்டிக் காட்டிய பிறகே அவற்றை நீக்கினார். அதுமட்டுமில்லாமல், promise-this-is-not-a-spam என்ற பெயரில் என்னைத் தாக்கியவர், அவர் யாரென்று காசி அறிவார் என்றே காசியின் பதிவில் எழுதியதும் இருக்கிறது.

பொதுவில் அவர் பதிவில் என் பெயரில் வந்தப் போலி பின்னூட்டத்தைக் கூட நான் பொதுவில் கேட்டுக் கொண்ட பின்னரும்கூட காசி நீக்கவில்லை. இப்படிப் பல போலிகளைப் பிடிக்காதவர்களுக்கெதிராக அமைதியாக ஆதரித்த அதே காசி ஆறுமுகம் அவர்கள் இப்போது போலி டோ ண்டு பிரச்னை பற்றிப் போலீஸூக்குப் போகிறார். பத்திரிகைகளுக்குப் போகிறார். அதுகுறித்த நடவடிக்கைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டு எடுக்கும்போது, அந்த வழக்கில் என்னையும் நான் இணைத்துக் கொண்டு, இணையத்தில் போலிப் பெயரில் பிறரைத் தாக்குவதை ஆரம்பித்து வைத்தது யார், போலிப் பெயரில் எழுதி இணையத்தில் இதுவரை கையும் களவுமாகப் பிடிபட்டவர்கள் யார், காசியின் பதிவில் போலிப் பெயர்களில் என்னைப் பற்றியும் தமிழ்மணத்தை விமர்சித்தவர்களைப் பற்றியும் தாக்கி எழுதியவர்களுக்கும் காசிக்கும் என்ன தொடர்பு, அவற்றை காசி ஏன் நீக்காமல் வைத்திருந்தார் போன்ற விஷயங்களைச் சட்டம் ஆராய வேண்டும் என்று கண்டிப்பாகக் கேட்டுக் கொள்ளலாமா?. இப்படிச் செய்யும்போது, இணையத்தில் போலிகளின் தோற்றம், வளர்ச்சி, அவற்றை ஊக்குவித்த சக்திகள், போலிகளால் லாபம் அடைந்த நபர்கள் ஆகியவற்றைப் பற்றிய ஒரு முழுமையான பார்வை கிடைக்கும். இல்லையென்றால், ஒரு போலி டோ ண்டு போய் பிற போலிகளின் ஆட்டங்கள் தொடரத்தான் செய்யும்.

இப்படி ஏற்கனவே தமிழ்மண நடவடிக்கைகளைக் கேள்வி கேட்கிறவர்கள் மீதான தாக்குதலை அனுமதித்த காசியும் தமிழ்மண நிர்வாகிகளும் இளவஞ்சியையும் தூண்டி என்னைப் பற்றி இப்படி எழுத வைத்திருக்கிறார்கள் என்று ஏன் ஒருவர் சந்தேகப்படக்கூடாது. எனவே, போலி டோ ண்டு என்ற பெயரில் ஒருவர் எழுதுகிறாரா அல்லது அரசியல்/தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காகப் பலர் அந்த ஐ.டி.யைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கே இருக்கிறது. கவனமாகப் பார்க்கவும். போலி டோ ண்டுவை நான் ஆதரிக்கவில்லை. போலி டோ ண்டுவால் நானும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால், போலி டோ ண்டுவால் மற்றவர்கள் பாதிக்கும்போது வேடிக்கைப் பார்த்துவிட்டு, தான் பாதிக்கப்படும்போது, நீதி, நியாயம் என்று பேசுவது அயோக்கியத்தனம். இரண்டாவதாக, போலி டோ ண்டுவை ஒத்தப் பல போலிகள் இணையத்தில் தமிழ்மண நடவடிக்கைகளுடன் ஒத்துப் போகாத பலரைத் தாக்கிய முன்னுதாரணம் இருக்கிறது. அதனால், காவல்துறையானது போலி டோ ண்டு மீது மட்டும் நடவடிக்கை எடுக்கக் கூடாது. போலி டோ ண்டுவின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டோ , வேறு பெயர்களிலோ தமிழ்மணத்தில் திரட்டப்படும் பதிவுகளில் போலியாக எழுதிச் சொந்தப் பெயரில் எழுதும் பிறரைத் தாக்குகிறவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் அதே காவல்துறையை நான் கேட்டுக் கொண்டால் அதில் யாருக்கும் ஆட்சேபம் இருக்காதே? கேட்கட்டுமா?

குமுதம் ரிப்போர்ட்டர் விஷயத்துக்கு வருவோம். பிரகாஷின் சென்னை விஜயத்தின்போது அவரிடம் ஏற்கனவே இந்த ரிப்போர்ட்டர் விஷயத்தைச் சொல்லியிருக்கிறேன். குமுதம் ரிப்போர்ட்டரில் போலி டோ ண்டுவைப் பற்றி எழுதினால் சரி. ஆனால், தமிழில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வலைப்பதிவுகள் இருக்கின்றன. அவை அனைத்தையும் காசி ஆறுமுகம் நடத்துகிற தமிழ்மணம் என்ற வலைதிரட்டி திரட்டுகிறது என்று படித்தேன். அத்தகவலை குமுதம் ரிப்போர்ட்டருக்கு யார் தந்தது என்று எனக்கு அறிய இப்போது ஆவலாக இருக்கிறது. குமுதம் ரிப்போர்ட்டரில் பத்ரி, இகாரஸ் பிரகாஷ், டோ ண்டு ராகவன், நாராயணன் போன்றோர் வலைப்பதிவர்கள் சார்பாகப் பேசியிருக்கிறார்கள். இவர்கள் யாருக்குமே, தன்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலேயே தமிழ்மணத்தில் பதிவுகள் சேகரிக்கப்படுகின்றன என்று காசி ஆறுமுகம் சொல்லியதும், குசும்பன் போன்றோரை நோட்டீஸ் எதுவும் கொடுக்காமல் ஓரிரவில் திடீரென்று நீக்கியதும், என்னைப் போன்றோர் அதை ஆட்சேபித்துத் தானாகத் தமிழ்மணத்தை விட்டு விலகியதும் தெரியாதா? அப்படியிருக்கும்போது, தமிழில் இருக்கிற எல்லா வலைப்பதிவுகளையும் தமிழ்மணம் திரட்டுகிறது என்ற "பொய்த் தகவலை" ரிப்போர்ட்டருக்குத் தந்தது யார்? பத்ரி, நாராயணன், பிரகாஷ், டோ ண்டு ஆகியோர் இத்தகவலைத் தந்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் அதை உறுதி செய்ய வேண்டும். அப்படி அவர்கள் தாங்கள் அதைச் சொல்லவில்லை என்று சொன்னால், இவ்விஷயத்தைக் குமுதம் நிர்வாகத்திற்கு எடுத்துச் செல்ல நான் விரும்புகிறேன். தமிழ்மணத்தை ஆதரித்து ஒரு பொய்த்தகவலை ரிப்போர்ட்டரின் நிருபர் எழுதியதற்காக, குமுதம் என்ன செய்யப் போகிறது என்று கேட்கப் போகிறேன். அதற்காகவேனும் சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டும். இனி எந்தப் பத்திரிகையில் தமிழ்மணம் எல்லாத் தமிழ் வலைப்பதிவைகளையும் திரட்டுகிறது என்ற பொய்த் தகவலோ, காசி தமிழ்ச்சேவை செய்கிறார் (காசியின் வார்த்தைப்படி, தமிழ்ச்சேவை எல்லாம் அதிகப்படியான சொல். அவருடைய விருப்பப்படியே அவர் பதிவுகளைத் திரட்டுகிறார் என்று அவரே எழுத்தில் பதிந்திருக்கிறார். எனவே காசி இப்படி எழுதச் சொல்லியிருக்கமாட்டார் என்று நம்புகிறேன்) என்று யாரும் ஜால்ரா அடித்தால், காசிக்கு எதிராக என்று அல்லாமல், உண்மையை விளக்கும் பொருட்டு, அப்பத்திரிகைகளுக்கு நானே எழுத எழுதினால் அப்போது காழ்ப்புணர்வு என்று யாரும் சொல்ல மாட்டீர்கள்தானே? எழுதலாம் என்றுதான் தோன்றுகிறது. பொய்க்கு ஆயிரம் வாய்கள் இருந்தால், உண்மைக்கு ஒரு வாய் என்றாவது எடுத்துச் சொல்ல யாரும் வேண்டாமா?

ஏன் இப்போதுகூட, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பிராமண ஜாதிக்கெதிரான துவேஷத்தை உமிழ்கிற பல பதிவுகளைத் தமிழ்மணத்தில் நான் காண்கிறேன். தமிழ்நாட்டில் இருக்கிற ஒரு இணைய மையத்தில் வலைமேயச் சென்றால்கூட, ஒருவர் தன்னுடையத் தகவல்களை எல்லாம் தர வேண்டும். இப்படி ஒரு சட்டம் இருக்கிறது. இதைப் பற்றி பத்ரிகூட ஒருமுறை எழுதியிருந்தார் - இந்தக் கெடுபிடிகள் அதிகமென்று. ஒரு பதிவரின் பின்னூட்டத்தில் ஆபாசமான பின்னூட்டம் மற்றவர் எழுதினாலும் பதிவரே பொறுப்பு என்று பத்ரி எடுத்துக் காட்டியிருக்கிறார். ஆனால், எல்லாப் பதிவுகளையும் திரட்டுகிற தமிழ்மணம் போன்ற திரட்டிகளுக்கு மட்டும் அப்படிப்பட்ட பொறுப்பு எதுவும் இல்லையா? ஒரு டிஸ்க்ளைமர் அல்லது பயனர் ஒப்பந்தம் என்று போட்டுவிட்டால், தவறில்லை என்றாகிவிடுமா? அதுவுமில்லாமல், காசி அவர்கள் தன்னுடைய தனிப்பட்ட விருப்பப்படியே தமிழ்மணத்தில் பதிவுகளைத் திரட்டுகிறேன் என்று சொல்லியிருப்பதால், தமிழ்மணத்தில் திரட்டப்படுகிற அனைத்துப் பதிவுகளுமே அவர் விருப்பப்படியும் ஆசைப்படியும் இருக்கின்றன என்றுதானே பொருள். அப்படியிருக்கும்போது யாரேனும் போலியாகவோ தரம்கெட்டோ அப்பதிவுகளில் எழுதினால் அதில் காசிக்குப் பொறுப்பில்லையா? இதுபற்றியெல்லாம் சட்டமும் பொதுமக்களும் என்ன சொல்கிறார்கள் என்பதைப் போலி டோ ண்டு மீதான சட்டபூர்வமான நடவடிக்கைகள் வலுவடையும்போது கண்டிப்பாக நான் காவல்துறையின் மூலமோ சட்டத்தின் மூலமோ கேட்டால் யாருக்கும் பிரச்னை வரக்கூடாது இல்லையா? மாறாக, இந்தக் கேள்வியை கேட்பதன் மூலம், பல "போலிப் பூனை"களுக்கு மணி கட்டமுடியும் என்ற அளவில் பிரகாஷின் ஒத்துழைப்பையும், தமிழ்மண நிர்வாகிகளின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கலாமா? போலி டோ ண்டுவின் மீதான நடவடிக்கைக்கு நான் எதிரியில்லை. பிற போலிகளையும் அவர்களை மறைமுகமாக தூண்டிவிடுகிறவர்களையும்கூட காவல்துறை ஆராய வேண்டும் என்றுதான் இங்கே சொல்கிறேன்.

ஏற்கனவே, தமிழகக் காவல்துறை சைபர் க்ரைம் பிரிவிடம் போலி டோ ண்டு பற்றி புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று அறிய வருகிறேன். அப்புகார் மீது நடவடிக்கை வலுவடையும்போது, மேற்சொன்ன எல்லாச் சந்தேகங்களையும், அதுகுறித்து என்னிடமிருக்கிற எல்லா ஆதாரங்களையும் சட்டத்தின் முன் கண்டிப்பாக ஒப்படைத்தால், அப்போது யாரும் என்னைத் தமிழ்த் துரோகி என்று சொல்ல மாட்டீர்கள் என்பதற்காகவே இவ்வளவு விரிவாக விளக்கிக் கொண்டிருக்கிறேன். நான் அதைச் செய்யலாமா?

என் கருத்துக்கு எதிரானவர்கள் என்னோடு சொந்த அடையாளங்களுடன் கருத்து ரீதியாக மோதுவதையும், அதன் பொருட்டு என்னை நேரடியாக எவ்வளவு மோசமாகத் தாக்குவதையும் நான் வரவேற்கிறேன். நண்பர்கள் ரோசா வசந்த் போன்றவர்கள் அதைச் செய்கிற தைரியமுள்ளவர்கள். ஆனால், சட்டப்படி நடக்கிற ஒருவருக்கு, நியாயத்தின் காரணமாகவும் அநியாயமான ஆயுதங்களைத் தூக்க விரும்பாதவருக்குத், தனிமடலிலும், தொலைபேசியிலும் வலைப்பதிவர்களைச் சந்தித்து, மற்றவர்மீது வெறுப்பை விதைத்து ஆதாயம் தேட விரும்பாத ஒருவருக்கு, சட்டம் மட்டுமே துணை. அதை நான் பயன்படுத்துவது யாருக்கும் மிரட்டலாகத் தோன்றினால் அதைப் பற்றி நான் கவலைப்பட வில்லை. இணையத்தில் ஞாநி அவர்கள், மாலன் அவர்கள் ஆகியோர்கூடத் தாங்கள் பாதிக்கப்படும்போது சட்டத்தின் துணையை நாடுவதாகச் சொன்னவர்கள்தான். அப்படிச் சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அப்போதெல்லாம் வேடிக்கை பார்த்தவர்கள் இப்போது நான் சட்டத்தின் முன் போகிறேன் என்று சொல்லும்போது, என்னையும் அமைதியாக வேடிக்கை பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஒரு வலைப்பதிவருக்கு ஒரு அரசியல் படுகொலை பற்றிச் சில சுட்டிகளை எடுத்துக் கொடுத்ததற்காக ஒரு பெண் நண்பர் ஆபாசமானப் பல மின்மடல்களைப் பெற்றார் என்று கேள்விப்படுகிறேன். இணையத்தில் நானோ நண்பர் ஹரன் பிரசன்னாவோ எங்கும் எந்த ஜாதியை ஆதரித்தும் பேசியதில்லை. யாரையும் ஜாதி வைத்துத் திட்டியதில்லை. அந்தப் பெண் நண்பரும் மரத்தடியைச் சார்ந்தவர். ஆனால், நானும் ஹரன் பிரசன்னாவும் தொடர்ந்து போலி டோ ண்டு என்ற பெயரால் பாதிக்கப்படுவதற்கும், எங்களைத் தாக்கும்போது மரத்தடி குழுமத்தின் பெயரும் இழுக்கப்படுவதற்கும் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதையும் சட்டமும் முடிந்தால் பொதுமக்களும் கண்டுபிடிக்க வேண்டும். இந்த வெறுப்புகளுக்கு எல்லாம் மூலம் யார் என்றும் காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும் என்று நாம் அனைவரும் கேட்டுக் கொள்ள வேண்டும்தானே. முக்கியமான ஒரு அரசியல் இதில் இருக்கிறது. மரத்தடி குழுமத்தைப் பற்றிக் கேள்வி இருந்தால் மரத்தடி குழுமத்தில் கேளுங்கள் என்று பலமுறை கரடியாகக் கத்தியாகிவிட்டது. ஆனால், மரத்தடி குழும விஷயங்கள், தமிழக, இந்திய, பன்னாட்டு அரசியல் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த அரசியல்களில் என் கருத்தோடு ஒத்துப் போகாதோர், என்னைத் தாக்க காசியே அவர் பதிவில் தளம் அமைத்துக் கொடுத்தபின்னர், இப்போது இளவஞ்சி எழுதியதில் காசிக்குப் பங்குண்டு என்பது ஊகம் மட்டுமே என்று சொல்வது, நம்பும்படியாகவா இருக்கிறது? பிரகாஷ்தான் சொல்ல வேண்டும். காசிக்கு இதில் முழுப் பங்கில்லை என்றால், வேறு யாருக்குப் பங்கிருக்கிறது? தமிழ்மணமும் அதன் நிர்வாகிகளும் இதிலிருந்து எப்படிச் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு தங்கள் நேர்மையை நிரூபிக்கப் போகிறார்கள். கண்டிப்பாக இதில் பிரகாஷுக்குப் பங்கில்லை என்று நான் நம்புகிறேன். எனவே, அவர் இதை பர்சனலாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அல்லது, இதை என்னைப் போன்றோர் பொறுமையாகக் கேட்கும்போது பதில் சொல்லத் தேவையில்லை. சட்டத்தின் முன் வரும்போதுதான் பதில் சொல்வோம் என்பது தமிழ்மணத்தின் நிலையா? ஆமெனில், அதையாவது வெளிப்படையாகச் சொல்லுமாறு வேண்டுகிறேன்.

இளவஞ்சி என்பவருக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான். "உங்களுக்கும் எனக்கும் ஒன்றுமில்லை. ஏதேனும் ஒருபக்கத்தைக் கேட்பவர்கள்கூட அடுத்த பக்கம் என்ன என்று அறியாமல் முடிவெடுக்க மாட்டார்கள். அடுத்த பக்கம் என்ன என்று தெரிந்து கொள்கிற நோக்கம்கூட இல்லாமல், குற்றவாளியேயானாலும் அந்தத் தரப்பையும் கேட்டு முடிவெடுக்கலாம் என்ற பகுத்தறிவு இல்லாமல், யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக, என்னை ஏன் தாக்குகிறீர்கள். இப்போது பாருங்கள். காசியோ மற்றவர்களோ போலி டோ ண்டுவைப் பற்றி எங்கு புகார் சொன்னாலும், தமிழ்மண இணை நிர்வாகியான இளவஞ்சியே அந்த அளவுக்கு எழுதுகிறவர்தான் என்ற பெயர் வருகிறதே." இந்தப் பெயரைத்தான் காசியோ மற்றத் தமிழ்மண நிர்வாகிகளோ விரும்புகிறார்களா?

கடைசியாக, தமிழ்மணத்தை விட்டு நானாக வெளியேறியதிலிருந்து இந்தப் பதில் எழுதும்வரை நான் தமிழ்மணத்தைப் பற்றியோ காசியைப் பற்றியோ எங்கும் எழுதியதில்லை. காத்திருக்கும் நியாயங்கள் அந்தக் காத்திருக்கும் பொழுதிலே வலுப்பெறுகின்றன என்பது என் நம்பிக்கை. ஆனால், இளவஞ்சி போன்றோர் எழுதியதைப் பார்க்கும்போது காத்திருக்கும் காலம் முடிந்துவிட்டது என்று நம்புகிறேன்.

இவற்றையெல்லாம் நிறுத்த ஒருவழி இருக்கிறது. இருதரப்பும் பேசுவது. தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளை அனுமதிப்பதில்லை என்று தமிழ்மணம் விதி கொண்டு வருவது. தமிழ்மணத்தில் இணைந்து கொள்ள விரும்புகிற எவரும் தன்னைப் பற்றித் தனிப்பட்டத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று முறைப்படுத்துவது. பதிவுகளுக்கு வாக்களிக்க்கும் முறையில் இருக்கும் ஓட்டைகளை அடைப்பது இல்லையென்றால், அந்த முறையையே எடுத்துவிடுவது. சென்ற முறை சென்னை சந்திப்பில் நான் சந்தித்த வலைப்பதிவர்களில் பலர் குசும்பனைத் தமிழ்மணத்தை விட்டு அனுப்பியது தவறு என்று என்னிடம் சொன்னார்கள். பிரகாஷும் அப்போது அங்கிருந்தார். அதனால் யார் அப்படிச் சொன்னது என்பதை அவரே அறிவார். அப்படியிருக்கும்போது எந்த ஈகோவுக்காக, யாரைத் திருப்திபடுத்த காசியும் தமிழ்மணமும் அந்த நடவடிக்கையை எடுத்தனர்? சொல்வார்களா?. தமிழ்மணத்தைப் பற்றி வெளியே வந்தபிறகும், தமிழ்மண நிர்வாகி ஒருவர் எழுதினால், தனிப்பட்ட முறையில் எழுதினாலும், நிர்வாகியின் கருத்தாகவே பார்க்கப்படும் என்பதை அறியாத முதிர்ச்சியற்றவர்களா தமிழ்மணத்தை நிர்வகிக்கின்றனர்? இந்த இடத்தில் இன்னொரு நுண்ணரசியலும் இருக்கிறது. காசி, காசியின் குடும்பம் உள்ளிட்டு என்று நான் உட்படப் பலரைப் பற்றியும் வாய்கூசுகிற அளவுக்கு ஆபாசமாகப் போலி டோ ண்டு எழுதி வருகிறார். அவருடனேயே சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடங்க தமிழினி முத்து அவர்கள் விரும்பியபோது அனைவரும் அனுமதித்தனர். காசியும் அதை அனுமதித்து இருப்பார் என்று நம்புகிறேன். நானும் அந்த முயற்சிக்குச் சரியென்று சொன்னவன்தான். அவ்வளவு மோசமான போலி டோ ண்டுவிடமே சமாதானமாகப் போய்விட வேண்டுமென்று காசி போன்றவர்கள் விரும்புகிறார்கள் என்றால், குசும்பனிடம் "தவறு நடந்துவிட்டது. மீண்டும் தமிழ்மணத்திற்கு வாருங்கள்" என்று அழைப்பதைத் தடுப்பது எது? யார்? போலி டோ ண்டுவைவிடக் குசும்பன் மோசமாகத் தமிழ்மணத்தை/அதன் நிர்வாகிகளை அதில் இருந்தபோது தாக்கியுள்ளாரா? அறிய ஆவலாக உள்ளேன். மேலும், போலி டோ ண்டுவுடன் சமாதானம் பேசலாம் என்ற யோசனையைவிடக் குசும்பனுடன் சமாதானம் பேசலாம் என்ற யோசனை மோசமானதா? அந்த அளவுக்குக் குசும்பன் தமிழ்மணத்திற்கு என்ன கெடுதல் செய்தார் என்பதைக் காசியோ தமிழ்மண நிர்வாகிகளோ அறியத் தந்தால், நானும் சேர்ந்து குசும்பனைத் திட்ட வசதியாக இருக்கும். தருவாரா?

என்னைப் பற்றி - எந்த முகாந்திரமும் இல்லாமல் தரக்குறைவாகத் தமிழ்மண இணைநிர்வாகியான இளவஞ்சி எழுதியதற்கு தமிழ்மணம் அவரை நிர்வாகப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும். அல்லது, அவராக விலக வேண்டும். இது வேண்டுகோள் இல்லை. டிமாண்ட். இல்லையென்றால், தமிழ்மணம் நிர்வாகிகள் யாருக்கும் பொதுவாழ்வில் தூய்மை, பிறரை விமர்சிக்கிற நேர்மை எதுவும் இல்லையென்று பொருள். பிரகாஷ், ஆவன செய்வீர்களா? தமிழ்மணம் நிர்வாகக் குழுவிலிருந்து இளவஞ்சி தானாக விலகவோ அல்லது நீக்கப்படவோ இல்லையென்றால், தமிழ்மணத்திற்கு இளவஞ்சி எழுதிய கருத்துகளிலும் வசைகளிலும் முழு உடன்பாடு இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகும்.

சாக்கடையில் இறங்கினால்தான் சுத்தம் செய்ய முடியும். சுத்தம் செய்யும்போது சாக்கடையின் சேறும் நாற்றமும் நம்மீது படத்தான் செய்யும். அதனால், என் மீது எந்தக் குற்றச்சாட்டு வந்தாலும் பரவாயில்லை என்று போலி டோ ண்டு பற்றிய காவல்துறையில் ஏற்கனவே இருக்கிற புகாருடன், தமிழ்மணத்தில் இருந்தபோது பிற போலிகளால் நான் பட்ட துன்பங்கள், கையும் களவுமாக இதுவரை என்னிடம் பிடிபட்ட போலிகள், சில பதிவுகளைக் காசி தமிழ்மணத்திலிருந்து நீக்கியபோது, அவர் பதிவில் அதுபற்றிக் கேள்வி கேட்டவர்கள் மீது எதிர்த்தாக்குதல் நடத்திய பின்னூட்டங்கள் வந்த ஐ.பி. அட்ரஸ்கள், இதில் காசிக்குப் பங்கிருக்கிறதா என்று கண்டுபிடிக்க வேண்டுகோள் ஆகியவற்றையும் நான் ஏன் சேர்க்கக் கூடாது? தயவுசெய்து சொல்லுங்களேன்.

இணையத்தில் நடுநிலையாகவும் முதிர்ச்சியுடனும் எழுதுகிற பலருக்கு இந்தப் போக்கைக் கட்டுப்படுத்துகிற பொறுப்பும் அன்புடனோ கடிந்தோ நண்பர்களைச் சரிசெய்ய வேண்டிய கடமையும் இருந்தது. ஆனால், எல்லாரும் முற்போக்குப் பட்டம் வாங்குவதில் குறியாக இருப்பதால், நான் ஏற்கனவே பிற்போக்குப் பட்டம் வாங்கிவிட்டதால், நானாவது இதைத் தொடங்கி வைக்கட்டுமா? யார் வாழ்வையும் கெடுத்தேன் என்ற பெயர் எனக்கு அப்போது வரக்கூடாதே. போலி டோ ண்டு திருந்த வேண்டும் என்பதற்காகத்தானே அவர்மீது நடவடிக்கை எடுக்கச் சொல்கிறோம். அந்த மாதிரியே தமிழ்மணமும் அதைப் பயன்படுத்திக் குத்தாட்டம் போட்டுக் கொழிக்கும் போலிகளும் திருந்த இந்த நடவடிக்கையை ஏன் எடுக்கக் கூடாது? சொல்லுங்களேன்.

தமிழ்மணத்துக்கும் காசிக்கும் எனக்குமான உறவு நன்றாக இருந்த காலமும் இருக்கிறது. மோசமான காலங்களும் இருக்கின்றன. இந்தப் பதிவு அதை முழுதுமாகச் சொல்லவில்லை. சொல்லப் போனால், பிறருக்கு என்மீது இருக்கிற அரசியல் கலந்த வருத்தங்களை வைத்து, என்மீது காசி வெறுப்பை வளர்த்துக் கொண்டார் என்றே நான் நினைக்கிறேன். இப்போதைக்கு இது போதும். காசியின் தமிழ்மண நோக்கத்தை நான் இன்றும் பாராட்டுகிறேன். ஆனால், அவர் நல்லெண்ணத்தைப் பயன்படுத்தி கொண்டு அவரைப் பகடைக்காயாக்கி பிடிக்காதவர்மீது வெறுப்பு அரசியல் பரப்பும் தளமாகத் தமிழ்மணம் மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டைக் களைய அவர் எதுவும் செய்யவில்லை என்பதே என் முழு வருத்தமும் குற்றச்சாட்டும்.

கடைசியாக என்னோடு சண்டையென்றால், குழந்தைகளை அனுப்பி வைக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். அது அவர்களுக்குப் பழக்கம்தான். அறிவேன் நான். ஆனாலும், ஒருபாவமும் அறியாத இளவஞ்சி போன்ற இளநெஞ்சங்களில் தங்கள் நஞ்சை ஏன் விதைக்கிறார்கள். அவர்களாகவே வரலாம். ஒன்று, சட்டபூர்வமாகச் சந்திக்கலாம். அல்லது, நண்பர்கள் மூலமாகச் சமாதானமாகவும் போகலாம். நான் சமாதானத்தை விரும்புகிறவன் ஆனாலும், சண்டை என்று வந்துவிட்டால் பின்வாங்குகிறவனில்லை. என்றைக்குக் காசி தமிழ்மணம் அவர் முயற்சியில் உருவான, அவரின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்ட திரட்டி என்று சொன்னாரோ அன்றே நான் அதைப் பற்றிப் பேசியதை நிறுத்திவிட்டேன். ஆனால், தனிப்பட்ட ஒருவரின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்ட திரட்டியில் ஒருவரைப் பற்றிய வசைகளும், அவதூறுகளும் அனுமதிக்கப்பட்டால் அதற்குக் காசி மட்டுமே தார்மீகப் பொறுப்பு என்கிற ஜனநாயகத்தன்மையுடனாவது அவர் இருப்பார் என்று நம்புகிறேன்.

பி.கு: என் தரப்பைப் பொதுவில் வைத்துத்தான் எனக்குப் பழக்கம். அதைச் செய்துவிட்டேன். ஆனால் அதில் ஒரு அசௌகரியம் இருக்கிறது. அது என்னவென்றால், மற்றவர்கள் வந்து கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று விஷயத்தை திசை திருப்புவது. அதை நிறைய அனுபவித்து விட்டேன். எனவே, என்னுடைய இந்தப் பதிவுக்கு காசி அல்லது பிரகாஷிடமிருந்து வருகிற பதில்களுக்கு மட்டுமே நான் பதில் தருவேன். மற்ற பதில்களை நான் பொருட்படுத்தப் போவதில்லை. ஆகவே, மற்றவர்கள் யாரும் எனக்கு இங்கே பதில் சொல்ல முன்வர வேண்டாமென்று வேண்டுகிறேன்.

அன்புடன் மட்டுமே, பி.கே. சிவகுமார்

குசும்பன் said...

போலியின் பின்னூட்டங்களால் வேறு வழியின்றி மட்டுறுத்துதலை ஆரம்பிக்க வேண்டியதாப் போச்சி. கருத்து சுதந்திரம் அப்பிடி இப்பிடின்னு ஒரு புண்ணாக்கு விஷயமுமில்லை. சிரமத்திற்கு மன்னிக்கவும். 24/7 வலை மேயும் சொகுசு இல்லாத காரணத்தால் சில பின்னூட்டங்கள் வெளிவர காலதாமதமாகலாம். பொறுத்துக் கொள்ளவும்.

ரவி said...

நன்று...வரிவரியா படிக்க மணிக்கணக்கா ஆகும்போல இருக்கே..!!!

நன்று...நன்று...நன்று...

Kasi Arumugam said...

நண்பர்களே,

//குசும்பன் அவர் பதிவிலேயே, உச்சகட்டம் பதிவில் என்று நினைவு - தமிழ்மணத்தைவிட்டு வெளியே வந்தபின் எங்கும் தமிழ்மணத்தைப் பற்றி அதற்கு முன் எழுதியதில்லை என்று சொல்லிப் படித்த நினைவு. ஆனால், நீங்கள் குசும்பன் தொடர்ந்து, தமிழ்மணத்தையும் காசியையும் தாக்கி வந்திருப்பதாகச் சொல்கிறீர்கள்.//

பிரகாஷ் போன்ற நேரடியாக சம்பந்தப்படாத ஒருவருக்கே குசும்பன் தமிழ்மணத்தையும் காசியையும் தொடர்ந்து தாக்கி வந்திருப்பதாகத் தெரியும்போது, குசும்பனைத் தொடர்ந்து வாசித்துவரும் அன்பு நண்பர் சிவகுமாருக்கு, (தன்னுடைய இந்த ஒரு மறுமொழியில் மட்டும் 74 முறை 'தமிழ்மண'த்தையும் 48 முறை 'காசி'யையும் குறிப்பிட்டவருக்கு,) பிரகாஷ் சொல்லித்தான் தெரியும் என்பது எப்படிப்பட்ட நேர்மை! உண்மையிலேயே செலக்டிவ் அம்னீஷியாவின் உச்சத்தையே இங்கே காட்டுறீங்களே சிவா, பேஷ் பேஷ்.

//அதனால், அதற்கான பதில் என்ன என்று குசும்பனிடம் இருந்து அறிவதில் நானும் ஆர்வமாக இருக்கிறேன். அவர் பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன். //

பதில் சொல்லட்டும், காத்திருப்போம்.

//முகமூடியின் அந்த நகைச்சுவைப் பதிவை இன்னும் நீக்காமல், ஆனால், இளவஞ்சியின் பதிவை நீக்கியதன் காரணம் என்ன என்று இளவஞ்சி "அடங்கி ஒடுங்கிக் கட்டுப்படும்"... //

ஏன் அய்யா, உங்கள் மனோபாவத்தையெல்லாம் இளவஞ்சி மீதி திணிக்கிறீர்கள்? 'தமிழ்மணத்தின் உறுப்பினர் என்றவகையில் அதன் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப இந்த முடிவினை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.', என்று இளவஞ்சி சொன்னதுக்கும், நீங்கள் சொல்லும் 'அடங்கி ஒடுங்கிக் கட்டுப்படும்'க்கும் எத்தனை வித்தியாசம் என்பதை நடுநிலையாளார்கள், வேண்டியதில்லை, தமிழ் வாசிக்கத் தெரிந்த எவரிடமும் கேட்டுப்பாருங்கள். எத்தனையோ நூல்கள் படிப்பதாகச் சொல்கிறீர்கள், இப்படி வாசித்தால் என்ன பிரயோசனம் போங்க!

//....தமிழ்மண நிர்வாகிகளை அவர் கேட்கலாம். தமிழ்மண நிர்வாகிகளுக்கு அப்பதிவு ஆட்சேபமில்லை என்றால் (அதனால்தானே, நீக்காமல் வைத்திருக்கிறார்கள்),//

ஆட்சேபம் தான். ஆனாலும் 'அரசியல் முதிர்ச்சி'யால் விடப்பட்ட பதிவுகள் சிலதில் இதுவும் அடக்கம். சில 'ஞானி'கள் எழுதிய பல இடுகைகளும் அந்த வகைதான். தமிழ்மண நிர்வாகிகளை இக்கட்டுக்குள்ளாக்கி அதன் மூலம் குளிர்காயவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே சில இடுகைகள் எழுதப்பட்டதுண்டு. அவற்றையே நீக்காமல் விட்டுவைத்திருக்கும்போது இதை நீக்கி ஏன் கல்லடி பட வேண்டும்? 'வேலியில் போகும் ஓணான்' என்று வெறுப்பில் விடப்பட்டது என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்களேன்.

//இளவஞ்சியின் பதிவில் என்னைப் பற்றி (மற்றவர்களைப் பற்றி நான் பேசப்போவதில்லை) நீங்கள் எழுதியது நையாண்டி மட்டுமே என்றால், உங்கள் பதிவைத் தாங்கிப் பிடிக்காமல் தமிழ்மணம் தூக்கியது ஏன்? //

தவிர்த்திருக்ககூடிய, 'மூதி', 'குசு', 'பீ', என்ற கொச்சையான சொற்களைத் தவிர்த்து எழுதியிருந்தாலும், மற்ற வலைப்பதிவரைப் பெயர் சொல்லி தனிமனிதத் தாக்குதல் செய்யப்படாமலும் இருந்திருந்தால், இன்னும் அது தூக்கப்பட்டிருக்காது. அட, இளவஞ்சியின் நையாண்டிக்கும், முகமூடி/குசும்பனின் நையாண்டிக்கும் அதைத்தவிர வேறு என்னங்க வித்தியாசத்தைக் காணமுடியும்?

//இப்போது தமிழ்மணம் விஷயத்திற்கு வருவோம். இளவஞ்சியின் என் மீதானத் தாக்குதலைப் பார்த்தபின்னர், தமிழ்மண நிர்வாகிகள் சில பேருக்கு என்மீது காரணமில்லாமல் கடுப்பும் வெறுப்பும் இருக்கிறது என்று இப்போது நான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.//

சாட்டுவது உங்கள் உரிமை. இது மனப் பிராந்தியாக இருக்கலாமோ என்று சந்தேகிப்பது என் நிலைமை.

தமிழ்வலைப்பதிவுகளிலும், தமிழ்மணத்திலும் நீங்கள் யாரய்யா? உங்களையெல்லாம் நினைத்துப்பார்க்கக் கூட எனக்கு நேரமில்லை. உங்கள் ஒருவரை முன்வைத்து எதாவது வலைப்பதிவில் எழுதப்பட்டிருக்கிறதா என்று கூட எனக்கு நினைவில்லை. ஆனாலும் இது ரொம்ப ரொம்ப ஓவர் சிவா. எதற்கும் ஒரு மனநல மருத்துவரிடம் காட்டிக்கொள்வது குடும்ப நலனுக்கு நல்லது.

// இதுநாள் வரை இந்த விஷயத்தை, "போகட்டும்.. போகட்டும்.. காசி தமிழ் வலைப்பதிவர்களுக்காக அவரால் இயன்றதைச் செய்கிறார்" என்ற நல்லெண்ணத்தில் நான் பேசாமல் தவிர்த்து வந்தாலும்,//

அட, அட, தமிழ் வலைப்பதிவர்களுக்காக இயன்றதை செய்வதால், பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிட்டீர்கள்! என்ன ஒரு பெருந்தன்மை! இப்போது சொல்கிறேன், நான் தமிழ்வலைப்பதிவர்களூக்காக இயன்றதை மட்டும் செய்யவில்லை, இயலாததையும் செய்கிறேன். இதுவரை தமிழ்வலைப்பதிவுகளுக்காக என் சிந்தனை, உழைப்பு, மட்டுமல்லாமல் ஒரு லட்ச ரூபாய் வரை கைநட்டப்பட்டிருக்கிறேன். இதை பெருமைக்காகவோ எவரிடமும் பிச்சை வேண்டியோ சொல்லவில்லை. என்னை 'ஓசி ஆறுமுகம்' என்று எழுதிய குசும்பனும் தெரிந்துகொள்ளட்டும் என்று சொல்கிறேன். (தயவு செய்து இதைப் பற்றிப் பேச நேர்ந்ததற்காக தமிழ்மணம் சேவை பெறும் பயனர்கள் எவரையும் குறைத்து மதிப்பிடுவதாகக் கொள்ளவேண்டாம். நீங்கள் ஒவ்வொருவரும் இந்தச் செலவில் பங்கெடுக்க முழுமனதுடன் ஆவலாயிருக்கிறீர்கள் என்று அறிவேன்.)

இன்னும் இரு வருட விசா மிச்சமிருந்தும்,(இளவஞ்சிக்குப் பதிலாக என்னைக் கூப்பிட்டால் குசும்பனுக்கு விசா செலவு மிச்சம்!) பச்சை அட்டைக்கான வாசல் திறந்திருந்தும், 'என் நாடு என் மக்கள்' என்று அதையெல்லாம் உதறிவிட்டு வந்து, ஏசி அறை சொகுசு வேண்டாம், விரும்பிய தொழில் செய்ய அஸ்பெஸ்டாஸ் கூரை போதுமென்று, சொந்தப்பணத்தையும் என்னை நம்பி முதலீடு செய்துள்ள பலநாள் நண்பர்களின் நல்லெண்ணத்தையும் முதலீடாகப் போட்டு இங்கே கோவைக்கு அருகில் கிராமத்தில் சிறு தொழில் தொடங்கி, கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கும் வேளையிலும், இடம், கணினி, இணையம், நிரலாளர் கூலி ஈடு செய்து தமிழ்மணத்தை நடத்தி வருகிறேன். அலாஸ்காவிலோ, அண்டார்ட்டிகாவிலோ யாரும் டாலர் கொட்டுவது இல்லை. அமெரிக்காவில் உட்கார்ந்து தேசபக்தி பேசும் கூட்டம் என்னைப்பார்த்து 'தேசத் துரோகி' என்கிறது, எல்லாம், நேரம்டா சாமி.

இதில் உம் மீது கடுப்பும் வெறுப்பும் வளர்த்து எனக்கு ஆன பயன் என்ன? எதாவது சுய நினைவுடன் தான் பேசுகிறீரா?

//இளவஞ்சியின் இந்தப் பதிவு, தமிழ்மணம் குறித்த என் எல்லாக் கேள்விகளையும் சந்தேகங்களையும் பொதுவில் கேட்க வைக்கிறது. இதன்மூலம் என் கேள்விகளுக்குத் தெளிவான பதில் கிடைத்தால் நல்லதே. ஏனென்றால், காசி அவர்கள் என் கேள்விகளுக்கோ/வேண்டுகோளுக்கோ பதில் சொல்வதில்லை.//

பதில் சொல்வது அவசியம், நேரம், விருப்பம் சார்ந்தது.

//(உதாரணம்: என் பதிவை தமிழ்மணத்திலிருந்து நீக்கும்படிப் பொதுவில் பல வேண்டுகோள் வைத்தும் நீக்கவில்லை. காசிக்கு ஒரு தனிமடலை பத்ரிக்கு CC: செய்து எழுதியபின்னரே, எந்தப் பதிலும் சொல்லப்படாமல் என் பதிவு தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டது.)//

நீக்கவேண்டுமானால் நிர்வாகிக்கு மெயில் அனுப்ப வேண்டும் என்பது தமிழ்மணம் தளத்திலேயே தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. (பார்க்க: http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=start#தளத்தைப்_பயன்படுத்துவோர்_அறிந்துகொள்ளவேண்டிய_விதிமுறைகள் )அதை விடுத்து 'பொதுவில் கேட்டேன்' என்றால் எப்படி நீக்க முடியும்? யாருடையதை வேண்டுமானாலும் நீக்கச் சொல்லி யார் வேண்டுமானாலும் பொதுவில் கேட்கலாம், சில சமயம் அத்தகைய பொது வேண்டுகோள்கள் கண்ணில் படாமலும் போகலாம். இதையெல்லாம் மனதில் கொண்டுதான் அத்தகைய முறை கடைப்பிடிக்கப்படுகிறது. முறைமை என்று வந்தபின் அதைக்கடைப்பிடிப்பது எப்படித் தவறாகும். இதில் பத்ரிக்கு சிசி போட்டதால்தான் காரியம் ஆனதாக அவருக்கு ஏன் ஜால்ரா தட்டவேண்டும்? நீங்கள் முதலில் தனி மெயில் அனுப்பி நடக்காமல் போய், பின்னர் பத்ரிக்கு நகல் போட்டபின் நடந்திருந்தால் அந்த சிசி எல்லாம் இங்கே எழுதலாம். என்னமோ போங்க! பாவம் பத்ரி!

//ஆனால் அதே காசி சுந்தரமூர்த்திக்கோ ரோசா வசந்துக்கோ தேசிகனுக்கோ ஒரு பிரச்னை என்றால் அதைப் பொதுவில் பின்னூட்டத்தில் கேட்டாலும் ஓடிவந்து பதில் சொல்கிறார். அப்போது படியளப்பு, தவச தானியக் கதைகள் வருவதில்லை.//

இது என்னய்யா வம்பா இருக்கு! என் நண்பர்கள்னு யாரும் இருக்கக் கூடாதா, அவர்களுக்கு நான் உதவக்கூடாதா? அன்றைக்கு டோண்டுவும் நானும் சரவணபவனில் சாப்பிட்டோம். நான் தான் காசும் கொடுத்தேன் (பிசாத்து 25 ரூபாய்). ஆகவே 'டோண்டுவுடன் மட்டும் எப்படி சாப்பிடலாம், ஏன் மாயவரத்தானுடன் சாப்பிடலை'ன்னு கேக்கற மாதிரி இல்லை நீங்கள் கேட்பது? இப்பொதும், எப்போதும் நான் எனக்குப் பிடித்திருந்தால் யாருக்கும் உதவுவேன், பதிலளிப்பேன், உங்களை அதற்கெல்லாம் கேட்டு அனுமதி வாங்கி செய்ய முடியாது.

இன்னொன்று, தவசதானியம் என்று எங்க ஊர்ப்பக்கம் சொல்வதையும் (கொங்குராசாவுக்குத் தெரிந்திருக்கலாம்:), வேறு சில இடங்களில் 'திவச தான்யம்' என்று சொல்வதையும் பலர் குழப்பிக்கொண்டிருப்பதாக எனக்கு ஒரு நண்பர் சொன்னார். இதில் யாருக்காவது தவறான புரிதல் இருந்து அதனால் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக மிகவும் வருந்துகிறேன்.

//இதைப் பார்க்கிற யாரும் காசியிடம் "ஜாதிய மேலாண்மை/நிலக்கிழாரியத் தன்மைகள்" இருப்பதாகத்தான் சொல்வார்கள்.//

அப்படின்னா என்னன்னு இந்த இலக்கிய ஞான சூன்யத்துக்கு விளக்குங்க, அப்புறம் பதில் சொல்றேன்.

//ஒரு சேவையை நடத்துபவர் யார் கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல வேண்டும். இல்லையென்றால், யாருக்கும் பதில் சொல்லக் கூடாது. //

நீங்கள் சேவை நடத்தும்போது இதை உங்கள் தரக்கொள்கையாகவே வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். ஆட்சேபமில்லை. ஆனால் நான் இப்படி அறிவித்துக்கொள்ளாத நிலையில், என் விருப்பம் போலவே யாருக்கும் உதவுவேன். இது என் அடிப்படை சுதந்திரம். தமிழ்மணம் தளம் ஒரு ஆசிரிய-உள்ளடக்கமற்ற, முழுக்கமுழுக்க தனியங்கிக் கருவிகளால் இயங்கும் தளம். அனுமதிக்கும்போது ஒருமுறை சரிபார்த்தல், பிறகு மட்டுறுத்த வேண்டுகோள்கள் (மின்னஞ்சலில் வருவது மட்டும்) மேல் செயல்படல், என்ற, ஒரு நாளைக்கு அரை மணிநேரம் கூடப் பெறாத, வேலைகளே நிர்வாகப் பணிகள். இந்தப் பணியையே மற்ற 4 இணை நிர்வாகிகளும் பங்கு போட்டுக்கொள்கிறார்கள். இதைத் தவிர இந்தக் கருவிகளைத் தயாரித்தல், மேம்படுத்தல் என்பன நுட்பரீதியான பணிகள். தளத்தை வழங்கியில் தொய்வின்றி இயக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்தல், உரிமையாளரின் பணி. இவற்றிலெலல்லாம் என்ன நடக்கிறது என்பதுகூட இணை-நிர்வாகிகளுக்குத் தெரியாது. எனவே தனிப்பட்ட நட்பின் பால நான் பதில் சொல்வதும், உதவுவதும், மற்ற எந்தப் பயனருக்கும் பாரபட்சம் காட்டுவதாக ஆகாது என்பதை என்னுடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள் அறிவார்கள்.

//தமிழ்மணம் நிர்வாகிகள் சிலருக்கும் காசிக்கும் என்மீது காரணமில்லாமல் வெறுப்பும் கடுப்பும் இருப்பதற்குக் காரணம், குசும்பன் போன்றோர் தமிழ்மணத்திலிருந்து எந்த நோட்டீஸும் கொடுக்கப்படாமல் நீக்கப்பட்டபோது, அதை நான் கேள்வி கேட்டது உட்படப் பல காரணங்கள் என்று நம்புகிறேன்.//

நம்புங்க, ம், மேலே...

//எல்லாக் காரணங்களையும் இம்மடலில் நான் சொல்லப் போவதில்லை. நான் எழுத்தில் வைக்கிற கருத்தாக்கங்களுக்கு எதிராக இருப்பவர்கள் என் மீதான வெறுப்பைத் தூண்டிவிட தமிழ்மணம் துணை செய்கிறது என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.//

ஆதாரம்?

//பாஸ்டன் பாலாஜி போன்ற அன்பர்கள் "தமிழ்மணத்தில் இருக்கிற வாக்களிப்பு முறையைப் பயன்படுத்தி ஒருவரே பல வாக்குகளை அளிக்க முடியும்" என்று சுட்டிக் காட்டிய பிறகும்,//

சிவா, நீங்க மென்பொருள் கன்சல்டன்ட்டா? கொஞ்சம் நுட்பரீதியா உள்ளே இறங்கிப் பார்க்கலாமா. மின்னஞ்சல் வழியாக அழைப்புகள் அனுப்பப்பட்டு வாக்களித்தால் அன்றி (அப்படியும் புதுப்புது முகவரிகள் தொடங்கி கள்ள வாக்குப்போட்டால்..) உள்நுழைவு (login) தேவைப்படாத இணைய வாக்களிப்பில் ஒட்டையில்லாத முறையே கிடையாது. அதை நான் விளக்க ஆரம்பித்தால் இதுவரை தெரிந்துகொள்ளாதவர்களும் தெரிந்துகொண்டுவிட வாய்ப்பிருக்கிறது, எனவே தவிர்க்கிறேன். இண்டிப்ளாக்ஸ் விருதுகளுக்காக வாக்களித்ததிலேயே கடந்த் 2003, 2004-ல் செயல்படுத்திய இவ்வித முறைகளில் உள்ள குறைபாட்டால்தான் உள்ளதில் சிறந்த (ஓட்டைகளற்ற என்று பொருளல்ல) மின்னஞ்சல் அழைப்பு வழியான வாக்களிப்பை 2005க்கு பயன்படுத்தினார்கள். எனவே பாஸ்டன் பாலாஜி தன் நுட்ப அறிவை வெளிப்படுத்தவே இதைச் சொன்னதாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டுமே அன்றி, தமிழ்மண வாக்கெடுப்பின் பிரத்தியேகக் குறைபாடாக இதைக் கொள்ள முடியாது. வாசலில் தங்க நகை தவற விட்டால் காணாமல் போவதற்கான வாய்ப்பையும், பிஞ்ச செருப்பைத்தவற விட்டால் காணாமல் போவதற்கான வாய்ப்பையும் ஒரு அளவீடு செய்து பாருங்கள், எதற்கு வாய்ப்பு அதிகம் என்று. அதே ஒப்புமைதான் போலத்தான் வருடம் ஒருமுறை வரும் இண்டிபிளாக்ஸ் விருதில் கள்ள வாக்குப்போட முயற்சிப்பதும், வாரத்துக்கு 25 வரும் பரிந்துரைத்த இடுகைகளுக்குக் கள்ள வாக்குப் போட முயற்சிப்பதும். அதிலேயே ஓட்டையுள்ள முறைமை கடைப்பிடித்ததைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டவர்கள், (அதில் அவர்கள் கொடுத்த விருது பதாகையை சிலர் பெருமையாக வேறு போட்டுக்கொண்டார்கள்!) இந்த பிசாத்து தற்காலிக 'பரிந்துரை'முறையைக் கேள்விக்குள்ளாக்குவதற்கு ஒரே காரணம்தான் இருக்கமுடியும்: கேவலம், அரசியல்!

இந்த ஓட்டையில்லாத, நேரடியாக வாக்களிக்கும் எந்த தளத்தையும் எனக்கு சுட்டுங்கள். நான் கள்ள வாக்குப் போட்டுக்காட்டுகிறேன். அப்படி இல்லையென்றால்... கற்றுக்கொள்கிறேன் ஆசிரியரே.

என் வேலைக்கு நடுவில் இன்றைக்கு இவ்வளவுதான் ஆச்சு. இனி நாளையோ, பிறிதொரு நாளோ இயன்றால் மீதிக்கு பதிலுரைப்பேன். இல்லாவிட்டால் என்னை தவறாக எண்ண வேண்டாம், மீண்டும்: 'அவசியம், நேரம், விருப்பம்......'

இன்னொன்றும் சொல்லவேண்டும். ஏகப்பட்ட இடங்களில் சட்ட நடவடிக்கை பற்றி எழுதியிருப்பதுபோல் தெரிகிறது. என் பதிலுக்காகக் காத்திராமல் அந்த வழியில் செல்லவும். பிறந்ததிலிருந்தே களி தின்று வளர்ந்த உடம்புதான் இது. மைக்ரோவேவிலேயே களி செய்ய முடியுமா என்று ஆராய்ந்த கழுதை இது. ஆகவே எதற்கும் பயமில்லை. வக்கீல் நோட்டீஸ்கள், சம்மன்கள், ஏன் வாரண்டுகள் இருந்தாலும் வரட்டும். வரவேற்கிறேன்.

அன்புடனும், மற்ற ஏகப்பட்டதுடனும்,
-காசி

பி.கு. இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே, கோவையில் பருவமழை தொடங்கியாகிவிட்டது. ஊரை ஏசி செய்தாயிற்று, வருபவர்கள் வாருங்கள்.

Kasi Arumugam said...

என் முந்தைய மறுமொழி 'அன்புள்ள நண்பர்களே' என்று விளித்தாலும், அது பெரும்பாலும் சிவகுமாரின் மறுமொழிக்குக் கொடுத்த பதில். நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.
நன்றி.

PKS said...

காசி அவர்கள் எனக்கு பதில் எழுதியிருக்கிறார். அவர் பதில் எழுத விழைந்த - அவர் பாஷையில் சொல்வதென்றால் "அவசியம், நேரம், விருப்பம்" ஆகியவற்றுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

அவர் பதிலுக்கு நான் பதிலளிக்குமுன், என்னுடைய ஆதாரமான முக்கிய கேள்விகளுக்கு அவர் பதிலில் எதுவும் விளக்கம் இல்லை என்பதாலும், "அவசியம், நேரம், விருப்பம்" கருதி, அவர் இன்னொருமுறை, எனக்குப் பதிலளிக்கக் கூடும் என்று நம்புவதாலும், அவர் பதில் பூர்த்தியடையும்வரை நான் காத்திருக்கப் போகிறேன். அப்புறம் அவர் கேள்விகளுக்கு என் பதிலைத் தருகிறேன்.

ஆனால், குசும்பன் தொடர்ந்து காசியைத் தாக்கினார் என்று வரும் வாதங்களுக்கு விரைவில் குசும்பன் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

இந்த விவாதத்தை - காசி, பிரகாஷ், நான், குசும்பன் என்று தொடர்புடையவர்கள் மட்டுமே தொடர அனுமதித்து அமைதியாக இருக்கும் அனைவருக்கும் நன்றிகள். விவாதம் முடியும்வரை அதே ஒத்துழைப்பைத் தருமாறு, அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புடன், பி.கே. சிவகுமார்

Kasi Arumugam said...

PKS,
ஓரு சமயத்தில் நான் இவ்வளவு எழுதுவதே பெருஞ்சுமை. (எனக்கு தட்டச்சத் தெரியாது இரு சுட்டுவிரல்கள் மட்டுமே பயன்படுத்துவேன்) எனவே, உண்மையிலேயே இதற்கு ஒரு தீர்வு வேண்டும் என்ற எண்ணமிருப்பின், நான் இதுவரை எழுதியமட்டிலும் நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்வது நல்லது. என் விருப்பம் போலவேதான் அடுத்தவருக்கும், எனவே நான் யாரையும் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. மீண்டும் சொல்கிறேன். அடுத்து எனக்கு நேரம் கிடைத்து நான் எழுதுவது எப்போது என்பது சொல்ல முடியாது. அதுவரை 'இது கிடக்கட்டும்' என்றாலும் சம்மதமே.

குசும்பன் said...

அன்புள்ள பிரகாஷூக்கும், காசிக்கும் மற்றும் சக வலைப்பதிவு நண்பர்களுக்கும்,

முதல்ல பிரகாஷின் நீண்ட பதிலுக்கு நன்றி. இங்கே காசி மற்றும் தமிழ்மணம் மீதான குசும்பனின் தொடர் தாக்குதல் என்று நீங்கள் கூறியதற்கு மட்டும் என் தரப்பினை விளக்க முயற்சிக்கின்றேன்..இதை தட்டச்சுவதற்குள் காசியும் பின்னூட்டமிட்டிருக்கின்றார். என் சம்பந்தப்பட்ட பகுதிக்கும் விளக்கம் கொடுக்க முனைகின்றேன்.

ஜூன் 1 2004' லேர்ந்து இணையத்துல குசும்பு பண்றேங்க. வலைப்பதிவுலகில் நட்பு தேடி நான் ஆரம்பிச்ச பதிவு, இதுல தனி மனித தாக்குதலே இருக்காதுங்ற கொளுகையோட குப்பை கொட்ட ஆரம்பிச்சேங்க. பரி, பாட்டில் பாலா போன்ற பலபேரு நமக்கு வாசகரானாங்க. பரி 'உதாசீனம்'னு யாருக்குமே புரியாம ஒரு கவித பாணியில ஒரு பதிவப் போட, அதை 'ஊதாசீனம்'ன்னு தலைப்பிட்டு ஜாலியாய் கிண்டல் செஞ்சேங்க. சரி அத்த விடுங்க... என்னங்க நெட்டுல எல்லாரையும் கவர்ந்த பெயரிலியை விட நான் குசும்பு பண்ணியிருக்கேனுங்களா இம்மாதிரி பதிவுகளைக் கிண்டல் பண்றதுல?

அப்புறம் மக்களுக்கு செக்ஸ் அவேர்னஸ் கொடுக்கிறேன்னு எய்ட்ஸ் பத்தி ஒரு பதிவு போட்டு, சகவலைப்பதிவர்கள் ராஜா மற்றும் முகுந்த்தோடு ஒரு சின்ன உரசல். அப்புறம் ஒரு ஸ்மைலி போட்டு பிரண்டாகிட்டோம். அதேமாதிரி SRL(சுப்புலெச்சுமி என்ற பெயரில் எழுதிய வலைப்பதிவர்)'லோட ஒரு சிறு கருத்து மோதல். அப்புறம் ரெண்டு பேரும் ஸ்மைலி போட்டு சமாதானமாகிட்டோம்ங்க. ஏதோ அப்பப்ப மக்கள்ஸ்ஸோட பதிவுகளின் தலைப்புகளையும், டெஸ்கிரிப்ஷன்ஸையும் குசும்ப்ஸ் பண்ணி கொஞ்ச நாளு காலத்த ஓட்டினேனுங்க. பாரா ஸாரு தான் கொஞ்சம் பாவம். ஒன்பது கட்டளைகள் பதிவுல கொஞ்சம் ஜாஸ்தி ஆட்டம் போட்டேனுங்க. அது எதனாலேன்னு சமயம் வரும்போது சொல்றேனுங்க. இதுனால சகலமானவர்க்கும் என்னான்னா என் பதிவால யாரும் பாதிக்கப்பட்டேன்னு கோடி காட்டுனா கூட என் சைடு விளக்கம் கொடுத்துட்டு 'மன்னிச்சுக்குங்க'ன்னு சொல்லிட்டு ஸ்மைலி போட்டுட்டு போய்க்கினே இருக்குறதுதான் என் வாடிக்கைங்க... ஆனா என்னைக் குறிப்பிட்டு தேவையில்லாம தனிமனிதத் தாக்குதல்களில் சிலர் இறங்கிய போது, நானும் அவர்கள் லெவலில் இறங்கி அடிச்சதுலேர்ந்துதான் இந்த "தனிமனிதத் தாக்குதலின்' தொடக்கமுங்க. என் சண்டையை எப்பவும் நாந்தாங்க போடுவேன்.

செப் 9'2004 அன்று "அப்புறமென்ன தமிழ்மணத்தில் இப் பொன்மலரும் (வலைப்பூவப்பா!) 'நாற்ற'முடைத்து!!!" அப்பிடின்னு சொல்லிட்டு தமிழ்மணத்துல இணைச்சிக்கிட்டேன்பா !!! உண்மையைச் சொல்லணும்னா "Terms and Conditions" படிக்காமத்தான் இணைஞ்சேன். சரி இப்ப எதுக்கு வரலாறுன்னு கேக்கறீங்களா? சொல்றேன்.

முதன்முதலில் தமிழ்மணத்தைப் பற்றி நானெழுதிய பதிவு . அங்ககூட தமிழ்மணத்துக்கு ஆதரவாத்தானுங்க எழுதினேன், "என் மாடு பால் கறக்கவில்லை. பொண்டாட்டி வையறாங்க. தப்புத் தப்பா இணையத்துல பேசறாங்க. ஐ'பீ கலெக்ட் பண்றாங்க. எரிதம் வருது. ஆபீஸுல வலைப் பதிய முடியல. ஆமாம் இதெற்கெல்லாம் இந்த தமிழ்மண நிர்வாகிகள் என்னதான் செய்றாங்கோ? (அய்யா அன்பு இது குசும்பைய்யா...)" அன்பு அப்போ தமிழ்மண நிர்வாகியா இருந்தார். அய்யா எல்லாப் பிரச்சினைகளுக்கும் தமிழ்மணத்த ஏன்யா இழுக்கறீங்க'ன்னு தாங்க கேட்டேன்.

அக்டோபர் 19' 2005 குசும்பன் பதிவை நள்ளிரவோடு காசி தமிழ்மணத்திலிருந்து தூக்கியபின் விளக்கம் கேட்டு நேரிடையாக நான் எழுதிய பதிவு இது அதற்கு இன்றைய தேதி வரை காசியோ, ஏனைய நிர்வாகிகளோ எனக்கு பதில் அளிக்கவில்லை. இதற்கு காரணமென்ன? ஏன் நீங்களும் நிர்வாகக் குழுவில் இருப்பவர்தானே? சென்னையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில்கூட நடுநிலையாளர்கள் "குசும்பனை நீக்கியது தவறு" என்று கூறியதாக் கேள்விப்பட்டேனே? அச்செய்தி உண்மைதானா? நீங்களே கூறுங்கள் பிரகாஷ். எந்த காரணங்களுக்காக எனது பதிவு விலக்கப்பட்டது? அதுவும் நள்ளிரவு நடவடிக்கையாக, அதிரடியாக என்று கூற முடியுமா? ஜெயஸ்ரீ அவர்கள் காசியின் பதிவிலேயே இது குறித்து நேரிடையாக் கேட்ட நியாயமான கேள்விகளுக்குக் கூட இன்னமும் விடைகளில்லையே ஏன்? இவ்வளவு ஏன்... கண்ட கருமங்களுக்குக் கூட வாக்குப்பதிவு நடத்தி ஜனநாயகத்தை வாழவைக்கும் உத்தி கூட குசும்பன் பதிவை நீக்குவதில் காசி காட்டவில்லையே? என்னிடம் ஒரு சிறு விளக்கமாவது கேட்டிருந்தால், என்னால் விளக்கமுடியாத காரணங்களிலிருந்தால் நானே சந்தோஷமாக தமிழ்மணத்திலிருந்து விலகிக் கொண்டிருப்பேனே? இப்படிக் கேட்பது கூட அராஜகமா? 100 கோடி மக்களின் அதிபர் காசியின் மின்னஞ்சலுக்கு பதில் சொல்லவில்லை என்றால், இமெயில் ஐடியை பொதுவில் வைத்ததற்காக அவர் பொறுப்பேற்க வேண்டும் என்று முழங்கும் காசி, தனது தமிழ்மணம் பொதுவில் வைக்கப்பட்ட காரணத்துக்காகக் கூட இன்னமும் பதிலளிக்காமல் இருப்பது கேலிக்கூத்தில்லையா? நீங்களே கூறுங்கள்.

என்னை என்ன காரணங்களுக்காக தமிழ்மணத்திலிருந்து நீக்கியிருக்கக்கூடாது என்று நடுநிலையாளர்கள் கருதுகின்றார்களோ அதை காசியோடு பகிர்ந்து கொண்டீர்களா? காசி பிகேஎஸ்ஸிற்கு கொடுத்த பதிலில் கூட "குசும்பன் பதிவை நீக்கியதற்காக காரணங்களைக் கூறாததிற்கு" அவரது செலக்டிவ் அம்னீஷியாதான் காரணமா?

காசியையும், தமிழ்மணத்தையும் இதற்குப் பின்னர் நானிட்ட பதிவுகளில் எங்கெங்கே தொடர் தாக்குதல் நடத்தினேன் என்று பிரகாஷ் விவரிக்க வேண்டுகின்றேன். ஒரு வேளை "The நியாயஸ்தன்" பதிவைக் கூறுகின்றீர்களா? இப்பதிவில் என்ன தாக்குதல், என்ன அவதூறு என்று கூற முடியுமா? முற்றிலும் நடந்த உண்மை நிகழ்வுகளைக் கொண்டு, சினிமா விமர்சனமாய் எழுதப்பட்ட பதிவு அது. இந்நிகழ்வுகளையே நீண்ட அலுப்பூட்டும் வார்த்தைகளைப் போட்டு என்னால் எழுத முடியும். ஆனால் 10 பாயிண்டுகளில் முடித்து விட்டு போய்க்கொண்டே இருந்தேன். உண்மை விஷயம் தானேங்க சொன்னேன். ஏன் அவற்றை காசியால் மறுக்க முடியுமா? அவதூறு என்று சொல்ல முடியுமா? சுட்டிக்காட்டுங்கள் திருத்திக் கொள்கின்றேன்.

என்னை அவதூறாக எழுதிய மலரவன் என்ற ஈழநாதனின் பின்னூட்டம் இன்னமும் காசியில் பதிவில் இருக்கின்றது. இது மட்டும் நியாயம். ஆனால் நான் கேட்ட கேள்விகளுக்கு சுற்றி வளைத்து தவச தானியம், கசையடி, நண்டு/கஜினி படம் பார்க்க வேண்டும் என்று காசி எழுதியதை வைத்து ஒரு அநாநிமஸ் என் பதிவில் "காசிக்கு நண்டு VCD பரிசளிக்க வேண்டும்" என்று பின்னூட்டமிட்டால் அது அநியாயம். தனிப்பட்ட தாக்குதல். இவ்விடத்தில் பிகேஎஸ் அவரது பெயரிலேயே வந்த போலிப் பின்னூட்டப் பிரச்சினைகளையும் நோக்க வேண்டும். ஆனால் அவரது கேள்விகளை அவர் கேட்டுக் கொள்ளட்டடும். போன பின்னூட்டத்தில் அவர் தெளிவாகக் கேட்டுமிருக்கின்றார். தாக்குதல் என்பதை எந்த தராசு மூலம் அளவீடு செய்கின்றீர்கள் பிரகாஷ்?

டோண்டு ஸார் போலியின் பின்னூட்டத்தால் தொடர்தாக்குதலுக்கு உட்பட்ட போது தமிழ்மணம் சும்மா இருக்கும். (ஏற்கெனவே தமிழ்மணத்தை எல்லா பிரச்சினைகளுக்கும் இழுக்காதீங்க'ன்னு நானே சொல்லியிருக்கேன்). காசி போலியால் தாக்கப்பட்டவுடன் நடவடிக்கைகள். ஏனிந்த பாரபட்சம்? நடுநிலையாளராகவே பதில் சொல்லுங்கள். ஒரு சக வலைப்பதிவர் இதைக் கேட்ட போது, இன்னொரு வலைப்பதிவர் சதிராட்டமே போட்டார். அதெப்படி டோண்டுவின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலும், காசியின் மீது நடந்ததுன் ஒரே விதமா என்று. இதைத்தான் குறட்டை அரங்கம் என்ற பதிவில் எழுதியிருந்தேன். தனிப்பட்ட தாக்குதல் என்பது டோண்டுவிற்கு வந்தால் ஒரு மாதிரி, காசிக்கு வந்தால் வேறு மாதிரியா? சொல்லுங்கள் பிரகாஷ். அவதூறு பின்னூட்டம் காசியின் பதிவில் வந்தால் அதை வைத்து அழகு பார்ப்பார். ஆனால் அவரைப் பற்றி எனது பதிவில் ஒரு பின்னூட்டம் வந்தால் அதை உடனே நான் எடுத்து விட வேண்டும். இல்லாவிடில் அது நான் செய்யும்/அனுமதிக்கும் காசி மற்றும் தமிழ்மணம் மீதான தொடர் தாக்குதல். பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு'ன்னு சொல்லத் தோன்றுகின்றதா பிரகாஷ்?
வெறும் தமிழ்மணத்தை விட்டு நீக்கியதுதான் குசும்பனின் கோபத்திற்கு காரணம் என்று சுருக்கிக் கொள்ள விழைகின்றீர்களா? இப்ப இட ஒதுக்கீடு பிரச்சினையை எடுத்துக்குவோம். அதுக்கு சப்போர்ட்டா சண்டை போட்டு எழுதுறவங்க எல்லாம் தாம் பலனடைவோம் என்ற சுயநலத்துக்காகத்தான்னு சொல்வீங்களா? நான் போடுற இந்தச் சண்டை வெறும் எனக்கு மட்டும் தான் பலனளிக்கும்'னு செய்றேனாங்க? குசும்பனைப் போன்ற நியாயமான காரணங்களுக்காக இல்லாமல் வேறேதும் வலைப்பதிவுகள் தூக்கப்பட்டிருந்தா கூட எனது ரியாக்ஷன் இப்படித்தாங்க இருந்திருக்கும். என்ன நான் மட்டும் கேள்விகள் கேக்குறேன். பலர் மௌனமா இருக்காங்க.
ஏங்க தமிழ்மணம் ஒரு நல்ல முயற்சி'ன்னு சொன்னவனுங்க நானு. இங்க ஒனக்கு இடமில்ல போடா வெளியிலே'ன்னு பொலிட்டிகலி கரெக்டாச் சொல்லியிருந்தா நான் பாட்டுக்கு போயிக்கினே இருந்திருப்பனே பாஸு. ஏன் இவ்வளவு நாளா தமிழ்மணத்தை வுட்டு வெளியிலதானே இருக்கேன் "குறையொன்றுமில்லை கோவிந்தா"ன்னு.

சும்மா இருந்தாலும் வுடாம அவதூறு லின்க் கொடுத்திருக்கின்றாய் என்று காசியிடமிருந்து குற்றச்சாட்டு. அதுவும் "Defamatory" என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு. அதற்கு பதிலளிக்கும் விதமாக நான் பொதுவில் வைத்த பதிவு உச்சக்கட்டம். அவரது பெயர் போட்டுத்தானே அப் பதிவெழுதினேன். குசும்பன் சுத்தி வளைச்சி எழுதலியே? இல்ல இதுவும் உங்களோட தொடர் தாக்குதல் கேட்டகிரில வருதா? "ஏம்ப்பா நான் ஏற்கெனவே நெறைய கேள்விகள் கேட்டிருந்தேனே? அதுக்கும் பதிலு சொல்லுப்பா"ன்னு தானே அப்பதிவில் காசியைக் கேட்டேன். எனது வேறொரு பதிவில் லொடுக்கு பாண்டியாய் "ஏங்க உலகமே உள்ளங்கையில்...அப்பிடின்னா உள்ளங்கை என்ன? உள்ளங்கைதான் உலகமே" அப்பிடின்னு சொன்னது தரக்குறைவான தாக்குதலா? ஆனந்தவிகனுக்குக் கூட 'மௌண்ட்ரோடு ஆவி'ன்னு ஒரு வலைப்பதிவர் சுட்டி கொடுத்திருக்கின்றார். உடனே அது அவதூறு லின்க் ஆகிவிடுமா? அட இவ்வளவு ஏங்க பிரகாஷ்... மின்னஞ்சலில் உருப்படியான தொனியில கேட்டிருந்தாக் கூட இதை நானே நீக்கியிருப்பேன். ஆனால் "அவரது பாதையும், எனது பாதையும் எங்கேயும் சந்திக்காததால்" என்ற ஜல்லி வேறு. சரி இனிமேலாவது காசிகிட்ட என்னைய அறிமுகப்படுத்தி வைங்க. ஒருவேளை குசும்பன தூக்கினது கூட அவருக்கு தெரியுமோ தெரியாதோ? கேட்டுச் சொல்லுங்க.

காசியை தேவைக்கு அதிகமாகத் தாக்குகிறார்கள்'ன்னு சொல்றீங்களே? யாராருங்க அது? கொஞ்சம் விரிவா சொல்ல முடியுமா? அப்புறம் நான் கருத்தியல் ரீதியா சில எதிர்வினைகள் வைக்கிற மாதிரி சொல்லியிருக்கீங்க. ஏங்க குசும்பன இப்பிடி உசுப்பேத்தறீங்க? :-) எல்லாரும் கருத்தியல் ரீதியா போனா இணையம் தாங்குமா?

அப்புறம் குசும்பனையும் அவரது நண்பர்களையும் ஒழிச்சுக்கட்ட காசி முயற்சி செய்கின்றார் என்ற லெவலுக்கு நான் எழுதினேனா? மாற்றாக ஏதோ என்னைப் போன்றவர்கள் காசியையும், தமிழ்மணத்தையும் ஒழித்துக் கட்டிவிட்டு தான் மறு வேலை பார்ப்பவர்கள் என்ற தொடர் பில்டப் கொடுக்கப்பட்டு வருகின்றது. ஏங்க என்னை ஒரு மைனாரிட்டி (தமிழ்மணத்தின் மீது காழ்ப்பு கொண்ட) பார்ட்டியில பிராக்கெட் போட்டிருக்காங்க. நீங்க என்னமோ நான்(ங்க) மெஜாரிட்டி (தமிழ்மண பயனர்கள் கொண்ட) பார்ட்டிய மெரட்டுற மாதிரி சொல்றீங்களே? அப்பிடியே செஞ்சாலும்தான் எடுபடுமா?

அப்புறம் காலை எழுந்தவுடன் நான் காப்பி குடிக்கிறேனோ இல்லையோ காசியையும், தமிழ்மணத்தையும் எப்படி ஒழிப்பது என்று சதியாலோசனை செய்யும் அளவிற்கு பில்டப் கொடுக்கப்படுவதை நானறிவேன். ஏங்க உண்மையிலேயே கேட்கின்றேன் எனக்கெல்லாம் வேறு வேலைகளே கிடையாதா? என்னமோ தமிழ்மணத்தை விட்டுத் தூக்கினதால காசி மேல காண்டுங்கறீங்களே? தமிழ்மணத்தால் விரட்டப்பட்ட பின்னர் என்ன எனக்கு குடியா முழுகி விட்டது? இல்ல தமிழ்மணத்துல இருக்கும் போது நான் சூப்பர் ஸ்டாராகவா இருந்தேன்? என்னமோ போங்க பிரகாஷ். இளவஞ்சி சொன்ன நான் அடிக்கடி போயிட்டு வரும் நியூட் பீச்'சிலேர்ந்து 120மைலு ஸ்பீடுல 10 சூறாவளிகள் எங்கூருக்கு சீக்கிரமே வரப்போவுதாம். இங்கன டங்குவாரு கிழிஞ்சிக்கிட்டு இருக்குது. நீங்க என்னடான்ன்னா 24/7 நான் காசி/தமிழ்மண தொடர் தாக்குதலில் இருக்குறதா சொல்றீங்க...ம்ம்ம்ம் சுவாரஸியமாக இருக்கின்றது.

சரி தமிழ்மணத்தில் இருந்த போதும், விலகிய பின்னரரும் தொடர் தாக்குதல் பதிவுகளைக் காட்டுங்கள். சர்ச்சைக்குட்பட்ட இளவஞ்சி குறித்தான இரு பதிவுகளை மட்டுமே தூக்கியிருக்கின்றேன். பாக்கிப் பதிவுகள் அப்படியே உள்ளன.

எப்படியோ (தனக்காகவோ மற்றவருக்காகவோ) சண்டை போடும் பழக்கத்தில் இருந்து விடுபட்டு உங்களைப் போல பரிணாம வளர்ச்சியோ, முதிர்ச்சியோ எனக்கும், என்னைச் சார்ந்த பிறர்க்கும் எதிர்காலத்தில் வரலாம். வராமலும் போகலாம்.

ஏதோ எனக்கு இதுவரை தோன்றியதெல்லாவற்றையும் அடுக்கி விட்டேன். நீங்களாவது எனது கேள்விகளுக்கு, ஒரு சில விடைகளாவது பெற்றுத் தந்தால் தன்யனாவேன்!!!

அன்புடன்,
குசும்பன்.

***************
அன்புள்ள காசிக்கு,

தொடர்தாக்குதல் குறித்த என் தரப்பை மேலே உள்ள பகுதியில் விளக்கியிருப்பதாக நம்புகின்றேன். நேரம் கிட்டும்போது பதிலளிப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

நடுநிலை வலைப்பதிவாளர்கள் நீங்கள் குசும்பனை நீக்கியது தவறென்று வலைப்பதிவர் கூட்டத்தில் பேசியதாகவும், அப்போது பிரகாஷ் உடனிருந்தாரென்றும் கேள்விப்பட்டேன். நீங்கள் இன்னமும் எனது பதிவினை நீக்கிய காரணத்தைச் சொல்லவில்லை. தயவு செய்து இப்போதாவது விளக்க முடியுமா?

//என்னை 'ஓசி ஆறுமுகம்' என்று எழுதிய குசும்பனும் தெரிந்துகொள்ளட்டும் என்று சொல்கிறேன்.//

தெரியாமல் கேட்கின்றேன் காசி. உண்மையிலேயே கூறுங்கள்... உங்களை 'ஓசி ஆறுமுகம்' என்று தாக்கிப் பதிவிட்டேனா? இளவஞ்சி முக'மூதி', 'குசு'ம்பன் & 'பீ'கேஎஸ் என்று எழுதியதையும், அதை தமிழ்மணம் அனுமதித்ததையும் வைத்து ஓகோ இதுதான் தமிழ்மணம் அங்கீகரித்த அங்கதமா? அப்படியானால் இலவசமாக அஃதாவது தமிழ்மண சேவையை ஓசியாக வழங்குவதாய் அனைவராலும் கூறப்படும் போது, உங்களை 'ஓசி' ஆறுமுகம் என்று அழைத்தால் அதற்கு சிரிப்பீர்களா என்று கேள்வியெழுப்பினேன். ஓசி ஆறுமுகம் என்பது தமிழ்மணப்படி அங்கீகரிக்கப்பட்ட அங்கதமா என்று வினவினேன். ஓசி ஆறுமுகம் என்று எனது பதிவில் ஒரு கேரக்டரையோ அல்லது நேரடியாகவோ கூறினால்தானே அது உங்கள் மீது நான் தொடுக்கும் தனிமனித தாக்குதல் ஆகும்? சிறு விளக்கம் கூட இல்லாமல், முன்னறிவிப்புக் கூட கொடுக்காமல், விளக்கம் கூடக் கேட்காமல் தங்களின் தன்னிச்சையான நடவடிக்கை குறித்துதான் நான் கேள்விகள் வைத்தேனே ஒழிய தமிழ்மணத்திற்காக உங்களது உழைப்பையோ, நேரம் செலவிட்டதையோ எங்காவது நான் கிண்டல் செய்திருக்கின்றேனா? The நியாயஸ்தன் பதிவில் எழுதிய போது கூட கவனமாக தண்ணீர்ப் பந்தல் என்றுதான் தமிழ்மணம் குறித்து எழுதினேன். தண்ணீர்ப்பந்தல் என்ற ஒப்பீடு கேவலமா? அதை ஒருவர் நடத்தினாரென்று ஒப்புமைப் படுத்தினால் அது கேவலமாகுமா? சொல்லுங்கள். தவறே செய்யாத மனிதனில்லை. என்னை திருத்திக் கொள்ளும் வாய்ப்பாக உங்கள் விளக்கம் அமையுமானால் மிக்க மகிழ்ச்சியே.

//அமெரிக்காவில் உட்கார்ந்து தேசபக்தி பேசும் கூட்டம் என்னைப்பார்த்து
'தேசத் துரோகி' என்கிறது, எல்லாம், நேரம்டா சாமி.//

உங்களது தேச பக்தியை உலகம் அறியத் தந்ததற்கு மிக்க நன்றி. இவ்வாக்கியங்கள் யாரை நோக்கி வீசப்பட்டவை என்று தெரியவில்லை. பிகேஎஸ்ஸின் மீதென்றால் அவரது தேசபக்தியை அவர் நிலைநாட்டட்டும். என் மீதென்றால் ஒரு சிறிய விளக்கம். குசும்பன் யாரென்று பிரகாஷ் தனக்குத் தெரியுமென்று கூறியுள்ளார். வேண்டுமானால் அவரிடம் பேசி என்னுடைய தேசபக்தியை நீங்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் உங்களை 'தேசதுரோகி' என்று எங்கும் நான் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ கூறியதில்லை. பதிவுகளின் பின்னூட்டங்களில் அநாநிகள் யாரும் அத்தொனியில் கூறியிருந்தால், என் மீது அவதூறாக தங்கள் பதிவுகளின் பின்னூட்டங்கள் (மலரவன் போன்ற) நீக்கப்படும் பட்சத்தில், உங்களுக்கு ஆட்சேபகரமாக உள்ள பின்னூட்டங்களை நானும் களைகின்றேன். அவ்வாக்கியங்கள் என்னைக் குறித்ததல்ல என்றால் எனது இந்த விளக்கத்தை விட்டுத்தள்ளுங்கள்.

உண்மையுடன் (வேறெந்த உள்குத்தும் இதிலில்லை)
குசும்பன்.

PKS said...

காசி அவர்களுக்கு,

உங்கள் சுருக்கமான இரண்டாவது பதிலுக்கு நன்றிகள். உங்கள் முதல் பதிலுக்குக் கட்டாயம் பதில் எழுதுவேன். உங்களைப் போல, அவசியம், நேரம், விருப்பம் இருந்தால் மட்டுமே பதில்
சொல்வேன் என்று என் பொறுப்பை நான் தட்டிக் கழிக்க மாட்டேன். ஆனால், அதற்குமுன் என் முதல் பதிலில் நான் கேட்டிருந்த ஆதாரமான கேள்விகள் எதற்கும் நீங்கள் பதில் சொல்லவில்லை
என்பதைச் சுட்டிக் காட்டுகிறேன். அதனால் அவற்றுக்குப் பதில் அளிக்குமாறு மீண்டும் ஒருமுறை அன்புடன் வேண்டுகிறேன். எனக்கும்கூட வேலைகள், பிற சமூகக் கடமைககள், சொந்தத் தொழில்,
குடும்பம் என்று பல இருக்கிறது. ஆனாலும், கண்டிப்பாக இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவருகிற நிஜமான ஆர்வமும், எங்கேனும் நான் தவறு செய்திருந்தால் அத்தவறுகளைத் தட்டிக்
கழிக்க விருப்பமின்மையும் உள்ளது. அதனால், காசி அவர்கள் இக்கேள்விகளுக்குப் பதில் சொல்வது முறையாக இருக்கும். காசி அவர்கள் இவற்றுக்குப் பதில் சொல்லாவிட்டாலும், காலம்
காலத்திற்கும் இக்கேள்விகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.. அதைத்தான் காசி விரும்புகிறாரா? ஆமெனில், அதன் உள்ளிருக்கும் அரசியலோ சமூக நோக்கங்களோ எனக்குச் சத்தியமாகப்
புரியவில்லை. :-(

முதல் பதிவில் நான் கேட்ட ஆதாரமான கேள்விகள்,

1. குசும்பன் எதற்காகத் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டார்? தயவுசெய்து கவனிக்கவும், ஏன் நீக்கினீர்கள், நீக்குவதற்கு நீங்கள் யார் என்றெல்லாம் யாரும் இப்போது கேட்கவில்லை.
நீக்கிவிட்டீர்கள். பிரச்னையில்லை. என்ன காரணத்திற்காக நீக்கினீர்கள் என்று கண்டிப்பாகச் சொல்கிற கடமை உங்களுக்குத் தமிழ்மண நிர்வாகியாக இருக்கிறது. அந்தப் பொறுப்பை நீங்கள்
தட்டிக் கழித்துத்தான் வருகிறீர்கள். நீங்கள் எழுதிய நீண்ட பதிலில் இந்தக் கேள்விக்குப் பதிலே இல்லை. ஏன்? குசும்பன், நான் உட்படப் பலர் எதற்காகக் குசும்பன் நீக்கப்பட்டார் என்று கேட்கிறோம். இன்னும் பல "நடுநிலைவாதிகள்" என்று நீங்கள் அழைக்கிறவர்கள் உட்பட பலர் கேட்க நினைத்தும் கேட்காமல் இருக்கிற கேள்வி இது. யார் கேட்டால் பதில் சொல்வீர்கள்? கொலைக் குற்றம் சாட்டப்பட்டவருக்குக் கூட அவர் செய்த குற்றம் என்ன என்று சொல்லப்படுகிறது. குசும்பனுக்கு ஏன் சொல்லப்படவில்லை. இது என்ன நியாயம்?

2. முகமூடி ஒரு நையாண்டிப் பதிவு எழுதியிருந்தால், அவருக்குப் பதில் சொல்லும்போது தமிழ்மண இணை நிர்வாகி இளவஞ்சி என்னை ஏன் அவசியமில்லாமல் தாக்கினார்? அது சரியா தவறா?

3. இளவஞ்சியையோ தமிழ்மணத்தையோ நான் எங்கும் தாக்கி எழுதியிருக்கிறேனா? ஆமெனில்சுட்டி தரமுடியுமா?

4. காசிக்குத் தெரியாமல் இளவஞ்சி எழுதியிருக்கலாம் என்கிறார் பிரகாஷ். ஆனால், காசி எழுதிய முதல் பதில் முழுதும் இளவஞ்சிக்காக டிஃபெண்ட் செய்கிறது. இதில் பிரகாஷ் சொல்வது
உண்மையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். தமிழ்மண நிர்வாகியாக இருந்து சம்பந்தமேயில்லாத என்னைப் பற்றி அவதூறாகத் தாக்கி எழுதிய இளவஞ்சி இன்னும் தமிழ்மண நிர்வாகியாகத்
தொடர்வது ஏன்? வாழப்பாடி ராமமூர்த்தி ராஜினாமா போன்ற உதாரணங்கள் தமிழ்மண நிர்வாகிகளுக்குப் பொருந்தாதா? அரசியல்வாதிகளைவிட தமிழ்மண நிர்வாகிகள் புனிதமானவர்களா? இளவஞ்சி
தானே தமிழ்மணப் பொறுப்பிலிருந்து விலகுவாரா அல்லது காசி அவரை விலக்குவாரா அல்லது ஒன்றுமே நடவாததுபோல் எல்லாம் தொடருமா? தெளிவாகச் சொல்லுங்களேன் ப்ளீஸ்.

5. உங்கள் பதிவில் என் பெயரில் வந்தப் போலி பின்னூட்டங்களை அப்போதே நீக்கும்படி உங்கள் பதிவிலேயே கேட்டுக் கொண்டபின்னரும், நீக்காமல் வைத்திருந்து வேடிக்கை பார்த்ததற்குக்
காரணம் என்ன? சொல்ல முடியுமா? என் பதிவில் உங்கள் பெயரில் வந்த எந்தப் போலி பின்னூட்டத்தையும் நான் அனுமதித்ததில்லையே. அப்படியிருக்கும்போது, போலிகளை ஆதரிக்கும்முகமாக,
நான் வேண்டிக் கேட்டுக் கொண்டபின்னும், என் பெயரிலான அந்தப் போலிப் பின்னூட்டங்களை வைத்திருந்தது ஏன்? தயவுசெய்து சொல்லுங்கள்.

6. வோட்டிங் சிஸ்டம் பற்றி, தேசபக்தி பற்றி, மற்றும் நீங்கள் எழுதிய அனைத்துப் பிற விஷயங்கள் பற்றியும் - அவற்றில் பல இவ்விவாதத்துக்கும் எனக்கும் தேவையில்லாதவை என்று அடியேன்
நினைக்கிறேன் - ஆனாலும், நான் அவற்றுக்குக் கண்டிப்பாகப் பதில் தருகிறேன். தயவுசெய்து மேற்கண்ட கேள்விகளுக்கு நேரடியான சுருக்கமானப் பதில்களையாவது காசி தரவேண்டும் என்று
வேண்டிக் கொள்கிறேன்.

பின்குறிப்பு: இங்கே லாங் வீக்எண்ட். மேலும் அஜீவன் கலந்து கொள்கிற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணி என்று பிஸியாக இருப்பேன். செவ்வாயன்றுதான் திரும்ப எழுத முடியும். அதற்குள்
பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன். காசி பதில் சொன்னாலும், செவ்வாய் வரை பதில் சொல்லமுடியாத என் நிலைக்குப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

அன்புடன், பி.கே. சிவகுமார்

Pavals said...

எல்லாஞ்சரி.. அங்கங்க நடுவால 'கொஙகுராசா' ஏன் வராரு. எதுக்கு வராரு, எப்படி வராரு'ன்னு நமக்கு தனி மயில் போட்டு கேக்குற கோடானு கோடி (மொத்தம் 4 மயில் தான்) பொதுசனங்களுக்கும், இனிமேல் கேக்க நினைக்கறவங்களுக்கும் சேர்த்து ஒரு பதில் :
(குசும்பரே.. உங்க இடத்துல நம்ம மேட்டரை எதுக்குடா போடுறன்னு எல்லாம் கோவிச்சுக்க மாட்டீங்கள்ல... மாட்டீங்க)

ரொம்பவும் சீரியசான கருத்து சொல்ற படத்துல காமெடியன் வருவாங்கள்ல அந்த மாதிரி தான் இது..
அப்பப்போ நடுவால வந்து போற பப்பூன் மாதிரி.. அவ்ளோதான்.. வேற எதுவும் எனக்கு தோனலை..

குழலி / Kuzhali said...

//சரி அப்படியே வைத்துக் கொள்வோம். வாழப்பாடி ராமமூர்த்தியை இளவஞ்சிக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். அவருக்குத் தெரியவில்லை என்றால், குழலி அவர்களைக் கேட்டுப் பார்க்கவும்
//
பி.கே.எஸ் , வாழப்பாடி இராமமூர்த்தியை தெரியவில்லையென்றால் குழலியை கேளுங்கள் என்பதில் உள்ள உங்கள் அரசியலும் நீங்கள் சொல்ல விழைவதும் புரிகின்றது, இதே மாதிரியாக பேசுவது எல்லோருக்கும் தெரியும்(அல்லது குறைந்தபட்சம் எனக்கு தெரியும்) என்பது உங்களுக்கு புரியும் ஏற்கனவே முகமூடியின் ஒரு பதிவின் பின்னூட்டத்தில் உங்கள் மொழியிலேயே நானும் பேசியிருக்கின்றேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

தமிழ்மண நிர்வாகியிலிருந்து இளவஞ்சி விலக்கப்படவேண்டும் என்று எந்த நியாயத்திற்கும் தார்மீகத்திற்கும் பொருந்தாமல் பேசிவருவதை எதிர்த்து என் கடுமையான கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

கடந்த ஓராண்டாக வலைப்பதிவில் நான் வலம் வந்ததில் பி.கே.எஸ்சை கவனித்து வருவதில் அவர் பக்கம் பக்கமாக எழுதிய பின்னூட்டத்தில் எத்தனை சுயமுரண்கள் உள்ளது என்பது புரிகிறது இது எனக்கு மட்டுமல்ல பி.கே.எஸ்க்கும் புரியும்(சுட்டியெல்லாம் தேடி தேடி எடுத்து கொடுக்கும் சு.மு.வை போன்ற பொறுமையெல்லாம் எனக்கில்லை, இல்லையில்லை கண்டிப்பாக வேண்டுமென்றால் பார்க்கின்றேன்)

குழலி / Kuzhali said...

//தமிழ்மண நிர்வாகியிலிருந்து இளவஞ்சி விலக்கப்படவேண்டும் என்று எந்த நியாயத்திற்கும் தார்மீகத்திற்கும் பொருந்தாமல் பேசிவருவதை எதிர்த்து என் கடுமையான கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
//
அதிலும் குறிப்பாக பி.கே.எஸ். கேட்பதற்கு எந்த தார்மீகமும் நியாயமும் இல்லையென கருதுகிறேன்

மாயவரத்தான் said...

//'டோண்டுவுடன் மட்டும் எப்படி சாப்பிடலாம், ஏன் மாயவரத்தானுடன் சாப்பிடலை'ன்னு //

ஹையோ..இதிலே என்ன உள்குத்துன்னு யாராச்சும் விளக்குங்களேன்.

Anonymous said...

Cool blog, interesting information... Keep it UP anti virus spyware software review Penis enhacnement pills Used 2002 saab 9-3 cd radio Last dance neil young 1945 1955 gmc pickup truck photo27s free gmc repair manuals do it yourself mesotherapy products cheapest cialis free shipping 2002 gmc hd2500 for sale Women&aposs bodybuilding photos http://www.auto-floor-mats.info/gmc_lending.html

Anonymous said...

What a great site » » »