Wednesday, May 03, 2006

சில பல இணைய அரசியல்கள்

1. சகவலைப்பதிவர்களுடன் கலந்துரையாடல் செய்வது ஆரோக்கியமான விதயமே. அவ்வப்போது கூடிச்சேர்ந்து சரக்கடித்தலும் ஓக்கேதான். ஆனா மட்டையாயிட்டு, மட்டையடிக்கக்கூடாதென்று அறிக. கூட்டத்தோட கூட்டமா கோயிஞ்சாமி ஆகிறதுல தப்பில்ல. ஆனா சட்டையைக் கிழிச்சிக்கிட்டு கூடத் தண்ணியடிச்சவரோட பதிவுல பின்னூட்டம் போட்டா, சோபராயிட்டு வாடா சோமாறின்னு சுகுற்றா பதிலு ஹாட்டா கிடைக்குமில்ல...

2. கூடுமானவரை ஒரு அண்டர்ஸ்டாண்டிங், ஒத்த மனம் கொண்ட பதிவுகளில் ஜால்ரா பின்னூட்டம் விடுவதே முற்போக்கு என்பதறிக. அதுவும் முற்போக்குப் பதிவுகளில் முற்போக்கு பின்னூட்டங்கள் உங்களை இன்னமும் எங்கேயோ எடுத்துச் செல்லும். ஆத்துல ஆசாரமாயிருந்தாலும் (இணைய) அரங்கத்தில் அப்படிக் காட்டிக் கொள்ளவே கூடாது. அடுத்தவங்களைப் பார்த்து கத்துகலென்னா எப்பிடிங்க? இது தெரியாம கெக்கேபிக்கே'வென்று மதியில் பட்டதைச் சொல்கின்றேன் என்று 'படாபடா' விஷயங்களைப் பேசினால் பெயரில்லாதவர்கள் கூட சம்மி விடுவார்கள். அப்புறமென்ன? ஒருபாட்டம் ஓவென்று அழுதுவிட்டு, அடுத்த நுனிப்புல் மேயப் போக வேண்டியதுதான்.

3. அந்நியனுக்கே 3 வேஷந்தான். ஆனா இணையத்துல கண்டதைச் சொல்ல எத்தினி வேஷமடா ஷாமி? ஆஹா என்னமா தமிழ் பேசுறார்? அய்யகோ இவருக்கு முன்னாடி எதுவுமே ஈடு இணையில்ல! அவர் சொல்றதுலயும் ஒரு மேட்டர் இருக்குதுப்பா! இது சொன்னியே அது பாயிண்ட்டு! அவங்க சைடுலயும் ஒரு நியாயம் இருக்குப்பா! (என்ன இன்றைய வலைப்பதிவர் ஷ்டைலுல கீதா நைனா?) அப்பப்பா... இந்த நியூட்ரல் கியர்லேயே இந்த ஸ்பீடுன்னா, மத்த கியருல இவரு போனா இன்னாபா ஆகும்? எல்லோர்க்கும் நண்பரே நீ வாழி வாழி!

4. வலைப்பதிவர் கூட்ட ஒருங்கிணைப்பாளர் என்பது ஒரு நல்ல தனக்குத் தானே தலைவர் பதவி. சில பல வலைப்பதிவர்கள், கூடவே சில கொசுறுகளை ஒன்றிணைத்து, அவ்வப்போது மாநாடுகளைக் கூட்டிப், பெருக்கி, படம் காட்டுவது பிரதானமான, இலவசமாய், ஆதாயாமின்றி செய்யும் பணி. சென்னை ஒருங்கிணைப்பாளரும், பிரபல எழுத்தாளரும், தீவிர ரசிகருமான ஒருவர் தற்போது ஓரவஞ்சனையாய் செயல்படுவதாய் நியூஸ்பா. ஒரு சிலர் வந்தா பார்ட்டி. வேற சில பேர் வந்தா கல்தான்னு. அட அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா'ன்னு சொல்றீங்களா? அதுவுஞ் சரிதான். தேவுடா தேவுடா!

5. வெள்ளைக்காரவுக நாட்டுத் தலைநகர்லேர்ந்து அம்மாவுக்கு 'ஜெயஜெய' போடும் நபரின் அரிதாரத்தைக் கலைத்தால் படா பேஜாராக் கீதாம். என்னாடா மாம்ஸு விஷயம்'னு கேட்டா "வராண்டா" (அட இங்லீஷ் வராண்டா) மேல சத்தியமா ஆதாரங் கீதாம். அடப்பாவிங்களா? சவுண்ட் ஜாஸ்த்தியா வரும்போதே நெனைச்சேன். என்னடா ஓட்டைப்பானைக்குள்ளே நண்டை உட்ட மாதிரி இருக்கேன்னு. நாராயண! நாராயண!

6. "சிறுத்தைகள் நடமாடும் போது சிங்கங்கள் நடமாடக் கூடாதா" என்று தலைவர் கேட்டதும் நேக்கு ஞாபகம் வந்தது. ஒக்கடி+ஒக்கடி=ரெண்டு. அட அவரு கூட போலிகிட்ட சிங்கம்னு தானே சிலுத்துக்கிட்டாரு. அதுசரி தலீவரோட நாஷ்டாவையே புட்டு புட்டு வைக்கும்போது இது ச்சும்மா ஜீஜீபி.

7. ஆழமாக எழுதுவதெப்படின்னு கையேடு போட்ட ஆழ்குத்தெழுத்துசித்தனே கலங்கிப்போகுமளவிற்கு ஒரு வலைப்பதிவர் அதீத ஹார்லிக்ஸால் வளர்ந்து வருவதாய் கேள்வி. எழுதத் தெரியாதுன்னு ஷொல்லிக்கிட்டே இவர் போடும் குத்தாட்டத்தினைக் காணக்கண் கோடி வேண்டும். அவர் சொல்லும் ரகஸியம். "அதிகமில்லை ஜெண்டில்மேன். ரெண்டே ரெண்டு புக் அதுவும் டைடில்ஸே போதும்". ரெண்டே வார்த்தைகள்ல நாமும் "வாழ்க! வளர்க!!"

8. மாயவரம் மாபியா குசும்பினை மிஞ்சும் வகையில் மதுரக்காரய்ங்க குசும்பு கூடிப்போச்சு பாஸு. பன்னீர் சோடா என்ன, ஜில்ஜில் ஜிகர்தண்டா என்ன, கொத்து பொரோட்டா என்ன எல்லாரும் வைகைப்புயலாய் கூடி கைமா பண்றாங்கப்பு. எனக்குத் தெரிஞ்ச இன்னும் சில மதுர பாஸுக்கள் கலந்துகிட்டா போதுங்ணா. வலைபதிவையே கபளீகரம் செஞ்சுடுவாய்ங்க. நடாத்துங்கப்பு.

9. அல்டிமேட் காமெடியா அவா அவா சொந்த கருத்துத் தி(க)ணிப்பு போடுறது சூப்பரா கீதுபா. லேப்டாப்பும் கையுமா சில பேர், இது எதுவுமே இல்லாம சில பேர்'னு கலக்குறதக் கண்டா கதியே கலங்குது. தெனாலி ராமன் ஊருல எத்தினி காக்கா'ன்னு கேட்ட அக்பருக்கு ஆப்படிச்சது போல் அவங்க அவங்க ஒரு கணக்கு சொல்லும் போது, கண்ணுல தண்ணி தளும்புதுங்ணா. வரட்டும் 5/11 அப்ப இருக்குது...

10. முகமூடி மெட்ராஸுல கிழிஞ்சு போச்சாம். அப்ப நான் முகமூடின்னு ஒரு நாதாரி சொன்னதை நம்பி, கரப்பான் பூச்சியாய் மல்லாக்கப் போட்டுக் குத்தணும்'னு நாகரிகமா எழுதின நாதாரிக்குஞ்சு இப்ப எங்கே? ஆன்னாவூன்னா என்னா ஏதுன்னு வெவரமா புரிஞ்சுக்காமா திராபையாய் இணையப் பெருசை ராங்காய் போட்டுத்தாக்கி, அது அவரது பின்னூட்டமல்ல என்று இருமுறை தெரிந்தும் இன்னமும் கனத்த மௌனத்தையே சுவாசிக்கும் தி ரா'வுக்கு உம்மையிலேயே கடேசி எச்சரிக்கை. ராங்கா கையை வைச்சா அது வீங்க வைச்சுப்புடும்!

10 comments:

மாயவரத்தான் said...

இப்போ என்னா 'ஆயி'ப்போச்சு..ஊப்ஸ்.. ஆகிப்போச்சுன்னு இப்படி குதிக்கிற நைனா?!

Boston Bala said...

கோனார் நோட்ஸ் போட்டாத்தான் என்ன மாதிரி சின்னவங்களுக்கு விளங்குங்க :-)

Anonymous said...

Paathi maatter puriyala. Thelivaa sollum aiiyaa.

Chola Otran

குசும்பன் said...

மாயவரத்தாரே,

ஆயி'ப் போன பின்னாடி குதிச்சு என்னா புண்ணியம்?

பாபா, ஒற்றரே!

ஏதோபா கொஞ்சமா சுட்டிட்டேன்பா!

ஆளை உடுங்கோ!

Muthu said...

தல..தன்யனானேன்..

(உள்குத்து ஏதாச்சும்)...
.அந்த இரண்டு புக்கை மீண்டும் ரெபரன்ஸ் பண்ணி படிக்கணும் போல

முகமூடி said...

1. ஏம்பா அன்னியோன்னியமா பேசும்போது கயிதன்னா உடம்பிறப்பேன்னு அர்த்தம். அத்த வெளியில இருந்து எட்டி பாத்துபுட்டு படா பேஜாராக்கீதுன்னா எப்பிடிப்பா

2. பெரிய எடத்து சமாச்சாராம் போல கீதே. பேசாம நியூட்ரல் ஜல்லி அடிச்சிட்டு விடு ஜூட்.

3. எனக்கு ஒரு சந்தேகம் "இன்றைய வலைப்பதிவர்" க்கு நமக்கு நாமே திட்டத்துல கருத்து அனுப்பிச்சா பரிசீலிப்பாங்களா? "அந்த" அளவு இலக்கிஅ தமிழ்ல அறி முக ப்படுத்த முடியாட்டாலும் நம்ம லோக்கல் தமிழ்லயாவது ஒரு அறிமுகத்த போட்ற மாட்டோம்.

4. அது யாரு வர்றாங்கன்றத பொருத்து இருக்கப்பு... ரஜினிகாந்துக்கு கை கொடுக்கிறதும் ரகுவரனுக்கு கட்டவுட் வக்கிறதும் ஒண்ணா?

5. இது இன்னாபா புதுக்கரடி.

6. இன்றைய வலைப்பதிவர்க்கு இவரு பேரத்தான் பரிந்துரைக்கலாம்னு இருக்கேன். இவர போயி கலாய்க்கிறியே நைனா.

7. ஹைய்யோ ஹைய்யோ.. சிறுபிள்ளத்தனமால்ல இருக்கு

8. என்னதான் மதுரக்காரவிங்க நெறைய பேரு இருந்தாலும் அவங்கள ஒருங்கிணைந்து நடாத்தி செல்ல ஒரு இணைய சக்தி இல்லையேப்பா

9. நம்ம கணிப்பு 1
நம்ம கணிப்பு 2

10. இறந்த காலத்த ஏம்பா விடாம மீள்பதிவு செய்யறீங்க.. ஓம் ஷாந்தி. ஓம் ஷாந்தி.

முகமூடி said...

// என்ன மாதிரி சின்னவங்களுக்கு //

அப்ப நீங்க சின்னவன்னு ஒத்துக்கறீங்களா?

ramachandranusha(உஷா) said...

2- சட்டி சுட்டதடா, கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா
ஆரவார பேய்கள் எல்லாம் அடங்கிவிட்டதடா
மனம் சாந்தி சாந்தி என்று ஆகி விட்டதடா

குசும்பன் said...

முகமூடியாரே!

//1. ஏம்பா அன்னியோன்னியமா பேசும்போது கயிதன்னா உடம்பிறப்பேன்னு அர்த்தம். அத்த வெளியில இருந்து எட்டி பாத்துபுட்டு படா பேஜாராக்கீதுன்னா எப்பிடிப்பா //

அடடே இதைத்தானேப்பா நான் அரசியல்ங்றேன்!

//2. பெரிய எடத்து சமாச்சாராம் போல கீதே. பேசாம நியூட்ரல் ஜல்லி அடிச்சிட்டு விடு ஜூட்.//

பெரிய இ(அ)டம்தான்!

//3. எனக்கு ஒரு சந்தேகம் "இன்றைய வலைப்பதிவர்" க்கு நமக்கு நாமே திட்டத்துல கருத்து அனுப்பிச்சா பரிசீலிப்பாங்களா? "அந்த" அளவு இலக்கிஅ தமிழ்ல அறி முக ப்படுத்த முடியாட்டாலும் நம்ம லோக்கல் தமிழ்லயாவது ஒரு அறிமுகத்த போட்ற மாட்டோம்.//

பிட்டப் போட்டாரய்யா!

//4. அது யாரு வர்றாங்கன்றத பொருத்து இருக்கப்பு... ரஜினிகாந்துக்கு கை கொடுக்கிறதும் ரகுவரனுக்கு கட்டவுட் வக்கிறதும் ஒண்ணா?//

இது இது

குசும்பன் said...

//2- சட்டி சுட்டதடா, கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா
ஆரவார பேய்கள் எல்லாம் அடங்கிவிட்டதடா
மனம் சாந்தி சாந்தி என்று ஆகி விட்டதடா//

யக்காவோவ் என்னாச்சு...? ஒரே சோகமாயிட்டீங்க! அரசியல்ல இதெல்லாம் சகஜமென்றறிக ;-)