Tuesday, May 09, 2006

மு.வ.வ.மா தொடர்கின்றது

(இம்முறை பார்த்திபன்+வடிவேல்+ கூடவே எச்ட்ராவா லொடக்குபாண்டியும்* ஆஜர்)

லொபா: சேச்சேச்சே வரவர மனுஷன நிம்மதியா இருக்க வுடமாட்டேன்ராங்களே. Catch Rabbit three legs say
பார்: டேய் இரு இரு இப்ப என்ன சொன்னே?
லொபா: (காலரைத் தூக்கியபடி) ஹூம்... புடிச்ச முயலுக்கு மூணு காலுங்றான்
வடி: இது 'ஏப்ரல் மாதத்தில்" இல்லியே. "மே மாதம்" வந்தாச்சுங்றத எப்பிடிச் சொல்லி புரியவைக்கிறது?

(முற்போக்குக் கூட்டணித் தலைவரான கோயம்பேடு சின்ராசு என்ற கோசி ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க அவரைச் சுற்றி 3 பெரியவா பவ்யமாக அமர்ந்திருக்கின்றனர்)

கோசி: எனக்கு இலக்கியம் தெரியாது
வடி: ஆஹா கடைசியா ஒருத்தராவது உம்மையைப் பேசுறாருப்பா
கோசி: ஆனால் தொழில்நுட்ப வித்தை தெரியும். உலக உருண்டையையே அது சிறிதாக்கியிருக்கிறது. எடுத்துக்காட்டாக தமிழ்மண...
லொபா: (சப்தமாக) அதான் எனக்குத் தெரியுமே. World in the Palm
பார்: இப்ப என்னடா சொன்னே?
லொபா: என்னண்ணே... உலகமே உள்ளங்கையில்'ன்னேன்
வடி: அப்பிடின்னா உன் உள்ளங்கை என்ன?
லொபா: ம்ம்ம்ம் உள்ளங்கைதான் உலகமே
பார்: அதெப்பிடி ரெண்டும் ஒண்ணில்லையே
வடி: (வெற்றிக்களிப்புடன் மெதுவாய்) நல்லவேளை இவன் கிட்ட நான் மாட்டல
லொபா: அண்ணே குழப்பாதீங்கண்ணே. உலகமே உள்ளங்கையில். அப்பிடின்னா உள்ளங்கை என்ன? உள்ளங்கைதான் உலகமே.
ரெண்டுமே ஒண்ணுதானே?
வடி: என்னது இது செந்தில் வாழைப்பழ ஜோக்கு மாதிரி சொன்னதையே திருப்பி திருப்பி சொல்ற?
பார்: அவன் செந்தில் மாதிரின்னா நான் கவுண்டமணியா?
வடி: ஹூம்... நமக்கு வாயக் குடுத்து அத்த புண்ணாக்கிக்கிறதே வேலையாப் போச்சி
லொபா:: ஹெஹ்ஹெஹ்ஹே... எனக்கு அப்பவே தெரியும் World in the Palm means Palm is the World
கோசி: ஏனப்பா இப்படி அவதூறு செய்கிறாய்?
லொபா: இல்லீங்க ப்ரோபைல்படி நகைச்சுவை புடிக்கும்னு யாரோ சொன்னாங்க... அதான். Good Things Time No.
வடி: என்னாது நல்லதுக்குக் காலமில்லையா? மவனே இன்னொரு தபா சொன்ன இங்கேயே வகுந்து போடுவேன். கவரேஜைப் பாருடா ராஸ்கல்
(கூட்டத்தில் குட்டையாய் சோடாபுட்டியுடன் ஒருவர்): ஏங்க என்னையக் கூப்டீங்களா?
பார்: இல்லங்க அவரு ராஸ்கலைக் கூப்டாரு. ஆமாம் ராஸ்கலைக் கூப்டா நீங்க ஏன் ஓடியாறீங்க? நீங்க போயி நிகழ்ச்சியப் பாருங்க.
லொபா: Raaskals cut cut grow
வடி: டேய் இன்னும் பேசுனா வெட்டுனா எது வளராதோ அத வெட்டிப்புடுவேன் ஜாக்ரதை
பெரியவா1: அய்யா எப்பிடியோ நான் ஒரு வருஷமா கேட்டுண்டு இருந்ததை நிறைவேத்திட்டீங்க. நன்றி
பெரியவா2: ஆமாம். எனக்குக் கூட மூணு மின்னஞ்சல்கள் வந்தது. எப்பிடியோ நினைச்சதை நடத்திக் காட்டீங்க. நன்றி
கோசி: ஏன்யா எனக்குன்னு சொந்தமா மூளையே இருக்காதா? என்னமோ உங்களுக்காக நான் செஞ்ச மாதிரி. என் நிலைமையே நாறிப்போச்சி. நட்சத்திரமா வளத்த நான்...
லொபா:: வெயிட்டீஸ். Grow Goat Chest Strike
பார்: அதாவது வளத்த கிடா மார்புல பாய்ஞ்சுதுங்றே?
லொபா: Yeah அண்ணே நீங்க தெய்வமுண்ணே
வடி: என்னடா பெரியவா3 மாதிரி பேசுற? இன்னும் அவரோட கவரேஜயே ஆரம்பிக்கலியே?
பார்: அதெப்பிடி உனக்கு முன்கூட்டியே தெரிஞ்சுது? அடுத்தது பெரியவா3'ன்னு?
லொபா:: இதுக்கெல்லாம் ஜோசிஸம், எண்கணிதமா போட முடியும்? Snake Leg Snake knows
வடி:
அய்யய்யோ கொல்றானே. இதுக்கு முற்போக்குவாதிங்களே தேவலாம் போலிருக்கே. ஏய் சொக்கா?
சொக்கன்: இந்த முற்போக்கு, பிற்போக்கு போன்ற மாயைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாமென்றுதானே நான் எப்போதோ இணையத்திலிருந்து வனவாசம் சென்று விட்டேன். என்னை ஏன் இழுக்கின்றீர்கள்?
பார்: அட ஜீன்ஸ் போட்ட சாமியார். இது கூட முற்போக்குத்தானே?
(சொக்கன் ஆளை விடுவென்று தெறிக்கின்றார். கூட்டத்தில் புதிதாக ஆஜானுபாகுவாய் ஒரு உருவம் எழுகின்றது)
உருவம்: ஹலோ ஒண்ணு மட்டும் சொல்றேன். அந்த டமாஸ் கேரக்டர பாத்தா சொல்லுங்க. மவனே அப்புறம் இருக்குது பாரு வேடிக்கை
லொபா: ஏம்ப்பா இந்தாளப் பாத்தா முற்போக்கு மாதிரியே தெரியிலியே?
(உருவம் முகமூடி, மாறுவேடம் கலைத்த போது கூட்டமே ஆஹாகாரம் செய்கின்றது. பெயர் இக்னோர் பிரஷாந்த்)
இபி: இப்பிடித்தாங்க அவரு என்னோட தண்ணியடிச்சப்போ சொன்னாரு. கூடவே வந்த இன்னொரு இலக்கியவாதியும் சும்மா இல்ல (சும்மா டேப்ரெக்கார்டர் போல் தொடருகின்றார்)
வடி: என்ன எளவுடா இது? இப்பிடிப் போட்டுக் குடுக்கிறாய்ங்க. படிக்காதவனெல்லாம் தாயா புள்ளையா பளகுறான். படிச்சவனுங்க இப்பிடி அடிச்சிக்கிட்டு நாறுராய்ங்க. சரி சரி சட்டுபுட்டுன்னு முடிச்சிட்டு கெளம்ப வேண்டியதுதான்
பார்: என்ன அவசரம்? இன்னும் கொஞ்ச பேரு வரவேண்டியதிருக்கு. வேணுமுன்னா தொடரும் போட்டுட்டுப் போ. வந்து கவனிச்சிக்குவோம்
லொபா:: Late Come Latest
வடி: என்ன பஞ்ச் டயலாக்கா? இரு வந்து உன்னைய பஞ்சராக்குறேன்.

(தொடரும்)

லொடக்குபாண்டி* இவர் கருணாஸ் என்றழைக்கப்படும் காமெடியன். "ஏப்ரல் மாதத்தில்" என்ற படத்தில் சொலவடைகளை ஆங்கிலப்படுத்தி கலாய்த்தவர்.

4 comments:

முகமூடி said...

அடடா அடங்கமாட்டேங்கறாங்கடா சொக்கா (இது கடவுள்பா)

*

// லொடக்குபாண்டி* இவர் கருணாஸ் என்றழைக்கப்படும் காமெடியன் //

நல்ல வேளை சொன்னீரு.. நான் யாரோன்னு நினைச்சேன்.

குசும்பன் said...

//அடங்கமாட்டேங்கறாங்கடா சொக்கா //

அவனுங்களை அடங்கச் சொல்லு நான் அடங்குறேன் (நாயகன் பாணியில்)

;-))

Anonymous said...

//கோசி: ஏனப்பா இப்படி அவதூறு செய்கிறாய்?
லொபா: இல்லீங்க ப்ரோபைல்படி நகைச்சுவை புடிக்கும்னு யாரோ சொன்னாங்க... அதான். Good Things Time No.//

குசும்ப்ஸ், இப்போதுதான் ப்ரோபைல் பார்த்தேன். ஆமாம் பிடித்தது நகைச்சுவைதான். நல்ல நகைச்சுவை.

ரவி said...

கலக்கல்...அருமையான பதிவு...