Wednesday, September 21, 2005

துப்பறியும் குசும்பு 007

10. True Lies: நியூயார்க்கில் பிரபல பெண் அதிபர் பேத்திவிட்டுப் போனாரென்று அனைவரும் அறிந்ததே. இருப்பினும் கேட்க மறந்த கேள்விகள் என்று கனவையும், காட்சியையும் எழுத்தாய் வடித்து பலே பதிவு போட்ட பையாவை நீங்கள் ஏன் அவற்றை கேட்கவில்லையென்று யாரும் வினவவில்லை. சரி வுடுங்க...வெற்றிவேல் வீரவேல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரான்னு பாட்டு போட்டு கும்தலக்கா டான்ஸு ஆடுவோம்.

9. Open Ticket: தொலைக்காட்சி நடிகர் ஒருவர் (?!@) பிரபல வார இதழில் ஓப்பனா டிக்கெட் தரார். கேத்ரீனா பற்றி இவர் விட்ட டாலர் தேசத்து கதையை குன்னக்குடி ஓவியர் பிய்த்துப் போட்டது தனிக்கதை. இணையத்தில் குழுமமாக பின்னிப் பெடலெடுக்கும் பட்டாளம் அமேதியாயிருப்பதுதான் அதிசயமாக இருக்கின்றது. அயோக்கிய ராஸ்கோலுன்னு கொரலு வுடும் கும்பலில் மற்றவாளை வுடுங்கோ... அட நீங்களுமா டமாசு கர்னாடிக்டமாசு டமாசு

8. Sania Sonia?: சானியா சோனியா ஸ்தீரிகளில் யாரைப் பத்தியும் எழுதலாம்ங்க. ஆனா அதுக்கு முன்னாடி ஒரு மீள்பதிவு போடணும். அதில் சானியா சோனியாவுக்கு பிடித்த/பிடிக்காத எல்லாவற்றையும் பட்டியல் போட்டுத் திட்டவேண்டும். அட ஸ்தீரினிவாஸா ஸ்தீரினிவாஸா ஏம்ப்பா இதுக்கு ஒரு வரை முறையே கெடையாதான்னா.... இல்லைபா. போட்டுத் தாக்குதான் ஒரே வழி. ஊருக்கு எளைச்சவன் ஆண்டிதான் இருக்கானேன்னேன்.... ஆண்டவன் சொத்து ஆளுக்கொரு குத்து. குத்துங்க ராசா குத்துங்க...

7. Super Star: 7. Super Star: 7. Super Star: இந்த வார ஷ்டாரு சும்மா ஜொலிக்குது. ஜொலி ஜொலிக்குது ஆஞ்சலினா ஜோலி மாரி ஜொலிக்குது. ஜொலி ஜொலிக்குது. ஒன்றை வருடம் ஆகிப்போச்சா? ஏதோ நேத்தைக்கு கதைச்சதாய் நெனப்பு. பழைய நெனப்புத்தான் பேராண்டி பழைய நெனப்புதான்'ன்னு கெக்கேபிக்கே'ன்னு யாரோ பாடுறாங்கப்பூ! கலக்குங்க ஷ்டாரே கலக்குங்க!!! நம்மள வெளையாட்டுச் செய்தி படிக்க வைச்ச ஆளுக்கு ஒரு சலாம் குலாமு இல்லேன்னா எப்பிடி? :-)

6. Lost & Out: கண்ணாலம் தான் கட்டிக்கினு ஓடிப்போலாமா'ன்னு ஆசாமிங்க பாடிக்கினே போனது உம்மையாயிடுசுங்கோவ். ராசா ராசா என் மம்முத கேவி ராசா முன்னாடிப்போனா பின்னாடியே குருத மேல அழகரும் போயிட்டார். பாட்டிலுக்கு என்னாச்சுன்னே தெரியல. அடுத்த வர்ஷம் கம்பைலேஷன்னு இப்பவே பயர்பாக்ஸ¤ல லவ்விக்கினு கரும்பு ஜூஸார்... ஏம்ப்பா ஏதாவது செய்ங்கப்பா... ஏதாச்சும் எழுதுங்கப்பா... உபிச மாதிரி அமேதியா இருந்தா நம்ம எப்பிடி குசும்புறது?

5. LIFO (Last In First Out): வாழைப்பழம் வழவழத்து கொழகொழத்து நழுவிக் கீழே விழுந்தது. சரியாகச் செப்பினால் முகமூடியின் கசுமாலப்பொடி பரிசு. இந்த வாழைபழம் கூடத் தேவலாம்ப்பா... சுரா பாரா காத்ரீனா பெப்ஸி உமா ரிவால்வர் ரீட்டா'ன்னு ஒரே வழ வழா கொழ கொழா... இன்னாதாம்பா சொல்ல வரேள்? நச்சுன்னு தெளிவா ஒரு பதிவைப் போடுங்கப்பா கப்பா ப்பா பாபா....

4. Spell Check: ரொம்ப நாளாவே அடக்கி வைச்சுருந்த கொழப்பமான கேள்வியப்பா... அவுஸ்திரேலியாவா? ஒஸ்ரேலியாவா? ஆஸ்திரேலியாவா? சரியான பதிலுக்கு நியூஸிலாந்திலிருந்து கூழோ, கஞ்சியோ ஊத்தப்படும் சேச்சே கொடுக்கப்படும். சின்னவர் போட்டியில் கலந்து கொல்ல அனுமதியில்லை.

3. Haloween: ஆரம்பிச்சுட்டாங்கப்பா... 25 பேய்படம் பாத்துட்டு பயங்காட்டப்போகின்றார் நமது இணைய டைரக்டர். வாய்ப்புத் தந்த நெட்பிலிக்ஸ¤க்கு ஒரு ஓ. ஹாலோ'வீல்' படங்கள (சுட்டும்,சுடாத) மக்கள் நெட்ல போடலாமே? எப்படியோ சொந்த போட்டோவைப் போட்டு பயங்காட்டினாலும் சர்தான்...என்னாபா மொம்மூடி சரியா? :-)

2. NetWatcher: பொன்னார்மேனியனே புலித்தோலை அரையில் கட்டி ஆடுகின்றார் ஆட்டமெல்லாம் தாண்டவக்கோனே !!! ஒண்ணு மட்டும் நிச்சயம். நெட்டும் அகலப்பாட்டையும் வந்தாலும் வந்தது. யாரும் என்னவேணாலும் பெனாத்திட்டு போகமுடியாம போச்சு. டங்குவாரு அந்துபோகுது. கல்க்குங்கோ நைனா கல்க்குங்கோ... :-)

1. Koment: போன பதிவுல பின்ன ஊட்டத்தில உபிச வாடை அடித்ததாக தெரிய வருகின்றது. உம்மையாவா? மெய்யாலுமா? சத்யமாவா?

17 comments:

சின்னவன் said...

//சின்னவர் போட்டியில் கலந்து கொல்ல அனுமதியில்லை.

கொல்லத்தான் வேற நிறைய பேரு இருக்காங்களோ ?

பரி (Pari) said...

இங்கதான் இருக்கேன்- மௌனமா. தொடர்ந்து குஷும்புங்கோ.

வானம்பாடி said...

;-)

குசும்பன் said...

சின்னவரே,

பாயிண்டைப் பிடிச்சேள் :-)

பரியாரே,

நலமா? மதுரைத் திட்டத்திலேயே மூழ்கிப் போயிட்டீங்களா? இலக்கியம் வளக்க வேண்டாமா? சீக்கிரம் மௌனம் கலையுங்கள் :-)

சுதர்ஷன்,

நன்றி !!!

பாத்தீங்களா? மூணு பின்னூட்டமா போட்டு நம்பர ஏத்துற வித்தையை இந்த தபா அடக்கமா பண்ணலைங்கோ !!!

திருந்தறவா சீக்கிரம் திருந்துங்கோ !!!

Anonymous said...

சார் சாரி. கம்பைலேஷனா? க்ளைண்ட் ஸ்பெக் புடிக்கலையோ என்னமோ தெரியல. இன்னும் ப்ராஜக்ட் ஓக்கே ஆகல. ஃபயர்ஃபாக்ஸ், லவ், ம்ஹூம். ப்ராஜக்ட் மேனேஜர்(ஸ்) ஒத்துக்காம ஃப்ரீலான்சிங்க் பண்ற ஐடியா எதுவும் இல்லை.

எனவே இப்போதைக்கு பேச்சு உலரும், உலர் பேச்சு, பேச்சுலர்.

ஆமாம், ரெண்டுநா மின்னால கமெண்ட்டு போட்டேன், காணுமே? காக்கா உ(ஷ்)ஷா?

அப்பறம் தெரியுமா, நான் புதுசா ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கி இருக்கேன். ஃபோட்டோ எடுக்கதான் தெரியல. :-))

எதுனாச்சியும் புதுசா ஐடியா பண்ணி எடுத்து பதிவு போடலாம்னு ஆசெ, தோசெ, அப்பளம், வடே.

க்ருபா

Boston Bala said...

நியூஸிலாந்து?
நியூஸிலாண்ட்??
நியூஜிலாந்த்???
ந்யூஸிலாந்து????

இதுக்கு ஒரு ஆங்கிலம் டு தமிழ் அகராதி போட வேண்டுமா என்று மரத்தடியில் விவாதம் தொடங்கலாம் போலத் தெரியுதே!

குசும்பன் said...

என்ன க்ருபா இப்பிடி ஸோகமாகிட்டியேப்பா :-(
சரி வுடு நைனா கொஞ்ச நாளு பெஞ்ச்சிலே குந்திக்குனு இர்ந்தா நியூ ப்ராஜெக்ட் கிட்டும்.

அது ஸரி எந்த கமெண்ட்பா உஸ்ஸாச்சு? நானே ஆளக் காணமின்னு தேடல் பண்ணிக்கினுகீறன்:-)

குசும்பன் said...

வாங்கப்பா பாபா,

மரத்தடி மகாத்மியத்தில் சங்கமமாக இன்னும் தருணம்வாய்க்கவில்லை. ஆமாம் நியூஸிலந்துகாரங்களை இன்னும் காணோமே...

சின்னவரே,

உங்க பின்னூட்டப் பெட்டியிலிருந்து அக்காவை இங்கன அனுப்பி வையுங்கோ

:-)

Anonymous said...

அது பெர்ர்ரிய கமெண்ட். மூணு எண்ட்ரிக்கும் சேர்த்து ஒரே இதுல போட்டேன். போயே போச். its gone.

அறிவு விசாலத்த வெச்சுப் பாத்தா ரெண்டாவது வகை மாதிரிதான் இருக்கு, இருந்தாலும் கேட்டுடறேன். நீங்க பேச்சுலரா, பேச்சிலரா? :-)

சின்னவன் said...

அக்கா(க்கள்)
ஒரு 2:30 IST மாதிரிதான் வருவாங்க..
வந்த பின்னாடி இடைவிடாத ஒரே பின்னூட்ட "மழை " தான் !!

:-)

Arun Vaidyanathan said...

Kusumbaa...:)
Inaiya Directoraa..naan yaedho inaiyathhai control panra directornu ninaichukittu sandaikku vandhudapporanga :)

குசும்பன் said...

க்ருபா,

அறிவு விசாலமா? விசாலமோ, அறிவோட விலாசம் கூட நமக்குத் தெரியாது :-)

இப்ப ஷொல்லுங்கோ நான் பேச்சுலரா இல்லை பேச்சிலரா?

லொள் (இனிமே ஆங்கிலத்துல ஒரு வாரம் சிரிக்கமாட்டேன் தமிழ்லதான் சிரிப்பேன்)

குசும்பன் said...

அருண் ஸார்,

இணையத்துல படம் அஃதாவது பிலிம் காட்றவர்'னு சொன்னா கோவிச்சுக்வீயளோண்டு பயந்தனம்.

நீங்கதான் ஒரே ஒரு டைரக்டர் இப்போதைக்கு !!! ஜமாயுங்க !!!

ஆமாம் எப்ப நெட்பிலிக்ஸ் பிலிம் காட்றதா உத்தேசம்? :-)

குசும்பன் said...

சின்னவரே!

நம்மளோட பின்னூட்டப் பெட்டி காயுதேப்பா? கொஞ்சம் ரெக்கமண்டேஷன் கொடுக்கப்படாதா?

அதுசரி... நம்ம முகமூடி உண்மையிலேயே வேலை பாக்க ஆரம்பிச்சுட்டாரா? சத்தத்தையே காணோமே...

:_)

Anonymous said...

ஏதோ நாலு தளம் மேஞ்சு, நாலு பெர்ய மன்சங்களோட பேசி நாலு இங்லீசுவார்த்த கத்துக்கறதுக்காண்டியும் டங்குவாரு கில்ஞ்சு நுங்குவாரா தெர்ச்ருச்சு. எங்கேர்ந்து இங்க்லீஸ் எல்லாம் கல்ந்து வேற தமியு பேசறது, எய்துறது நானு.பஸ்ஸு, லெஃப்டு, ரைட்டு தவிர வேற இங்லீஸ் வார்த்த்...இந்த லொள் ஔட் லௌட் வரிக்கு இவ்வளவு பெரிய தன்னிலை வெளக்கம் வேற எங்கிட்ட இர்ந்து.

இன்னா சொல்ல வந்தேன்னாகண்ணாலங்கட்டியும் சந்தோஷமா பேச்சுலரா வாழிய குசும்பர்கள் வாழியவே!

துளசி கோபால் said...

நியூஸிலாந்து

ஆஸ்தராலியா

களி, கூழ் வேண்டாம்.

(அதுக்குப் பதிலா இலந்தவடை கிடைக்குமா?)

முகமூடி said...

// நம்ம முகமூடி உண்மையிலேயே வேலை பாக்க ஆரம்பிச்சுட்டாரா? சத்தத்தையே காணோமே... //

அய்யோ அந்த சோகத்த ஏன் கேக்கறீங்க குஷ¤ம்பர்...

****

அப்புறம் இந்த பதிவ பத்தி என் கருத்து

அ) ஒரு வாரமா தமிழ்மணத்த சரியா மேயாததால எனக்கு ஒன்னும் புரியலையா இல்ல நீங்க நம்ம நேம்லெஸ்ஸோட சகவாசத்துல கெட்டு போயிட்டீங்களான்னு உண்மைய சொல்லலாம் அல்லது

ஆ) நம்ம அவாள மாதிரி "மண்ணில் தெரியும் மனத்துக்கண் போல் கறியில் அகப்பட்ட கிடாவாய் தவிக்கிறேன்னு" அறிவுஜீவி கமெண்ட் கொடுக்கலாம்

என்ன செய்யறதுன்னு ஒரே கொயப்பம்...

அ..ஆ.. ;-)))