Thursday, September 15, 2005

துப்பறியும் குசும்பு 007

ஆஹா வலைப்புள்ளிய வளக்கோணும்னு சவுண்ட் வுட்ட பார்ட்டி கலாஸுன்னு பாலூத்தி பரவசப்பட்டவாக்கும், நம்ம புள்ளாண்டான் காணாமப் பூட்டானேன்னு அக்கறையா தேடுனவாக்கும் கோல்டன் பெல் வார்த்தையில சொல்லணும்னா "நன்றிகள்". "-"ல மீண்டும் குத்தி பரவசப்பட வலைப்பூ நண்பர்களுக்கு மீண்டுமொரு அரிய வாய்ப்பு. என்னாபா மொம்மூடி கையரிக்கோணுமே :-)

10. ஸ்வீட்டான பிரச்சினை: இம்மாதத்தின் சிறப்பு கவனம் பெற்ற வார்த்தை. இதனால் உண்டான வாயுப் பிரச்சினை தனிக்கதை. வாயு ஸ்வீட்டால் விளைந்ததா இல்லை செரிமானம் ஆகாத பீப் சுக்காவால் விளைந்ததா என்று இலக்கிய 'தர்க்கம்'/'தர்கம்' நடக்க இருப்பதாக ஜப்பானிய ரெஸ்டாரெண்ட்டில் சிலர் பேசிக் கொண்டது காதிற்கு மற்றும் கவனத்திற்கு வந்தது.

9. பமக பிளவு?: கலகல வென்று ஆரம்பிக்கப்பட்ட பமக'விலிருந்து மூன்றெழுத்து பெண் பெயர் எழுத்தாளர் வெட்டிக்கொண்டு (அட இங்கனயுமா) போனதாகத் தெரிகின்றது. இதனால் பமக கலகலத்துப் போனதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மருத்துவம் என்னவென்று மருத்துவர் ஐயாவிடம் ரகஸிய இமெயில் தமிழில் அதுவும் யுனிகோடில் சென்றுள்ளதாகவும் தகவல் கசிகின்றன. அந்த மூன்றெழுத்து ஆகாமி யாரென்று க்ளூலி வேண்டுவோர் நேக்கு மெயில் அனுப்புங்கோ!

8. அவனா நீ?: முகமூடி போட்டாலும் போட்டேன். தெனாலி கமல் போல எல்லார்க்கும், எல்லாவற்றிலும், பயம். அவனா நீ? உன் ஷ்டைல் தெரியுறதே? அம்பி நேக்கு நன்னாத் தெரியும். மன்னவனே... தென்னவனே'ன்னு பாடிக்கினு (யோவ் யாருய்யா பாட்டுக்கு லிங்க் கேக்குறது? அதுக்குத்தான் ஆன்லைன் மியூசிக்க மொத்த குத்தகைக்கு எடுத்துக்கினு மசக்கைசூசட்ஸ்ல ஒரு ஆ"சாமி" இருக்காருல்ல. அவரிண்டை போய் அளவளாவுங்கோ) பாடிக்கினு நாம்பாட்டுக்குப் போனா மக்கள் "சின்னவனே" ன்னு சொல்றாங்கோ. அட போங்கப்பா... டிஸ்கிளைமர் போட்டுப் போட்டு அலுத்துப் போச்சு. நான் அவனில்லை. அவன் நானில்லை. ஆளை வுடு அப்பீட்...

7. பயாஸ்கோப்பு படம்: இப்பெல்லாம் பதிவு போட்டு கொயப்பினது போதாதுன்னுட்டு படம் போட்டு கொல்றாங்கோ ;-) கண்ணுல தெரியுது கருவிழி, மண்ணுல தெரியுது மரம் (வெட்ட வந்துடப் போறாங்கப்பா) அப்பிடின்னு கவியரசு ஷ்டைல்ல டைட்டில்ஸ் வேற...ஙௌக்கா மக்கா... பின்ன ஊட்டத்தைப் பாக்கோணுமே... குழுமமா சேந்து கொயப்பறாங்க... வாடி வா எனக்கும் போட்டா புடிக்கத்தெரியும்னு வாத்தைப் புடிச்சிப் பாவம் எக்ஸ்ரே மிஷின்ல போட்டுட்டாய்ங்க... (ஆமா வாத்தின் வயிற்றில் ஒரு மீனின் எலும்பு தெரிஞ்சுதே).

6. போட்டா போட்டி: கவித, கதப் போட்டி ஸீஸன் முடிஞ்சது. அடுத்து என்னாபா? இதோ இணைய மக்களின் மனதில் ஓடும் போட்டி ஐடியாக்கள்: படப்போட்டி (உபயம்: கோல்டு பெல் ஸார்) பின்னூட்டப் போட்டி (ஹையா டோண்டு ஸாரை விட்டா வேறு யாரிதை நடத்த முடியும்?). தர்க்கப் போட்டி (ஆனால் ஒர்த்தர் மட்டுமே இப்போட்டியை நடத்துவார் மற்றும் கெலிப்பார். ஆருன்னு கண்டுபியுங்கோ. பூர்ஷ்வாவின் புத்தகம் பரிசு). என்(ம்)மதம் சம்மதம் போட்டி (அட யாருப்பா இம்மாதிரி நேசமில்லாம ஆரோக்கியமில்லாம போட்டி வெக்கிறது?) என்னாமோ போங்க... அடுத்த போட்டியை சீக்கிரம் வையுங்கோ (வைதல் = திட்டுதல்).

5. அ.அ. (அரட்டை அரங்கம்): மரத்துக்கு கீழே குந்திக்கினு சீட்டுக்கச்சேரி நடத்தறாங்கோன்னு பீடி பெருமாளு தெரிவிக்கின்றார். கச்சேரில அல்லாரும் பூந்து கலாசுவதாக லேட்டஷ்ட் நியூஸ். நாட்டாமை தீர்ப்பை மாத்துன்னு கொடி பிடிக்க ஒருவர் மட்டும் சுகுற்றா கரும்பு ஜீஸ் சப்ளை பண்ணி கூலாக்குவதாகவும் கொசு(று) செய்தி. எல்லோரும் நன்னா இருந்தா ஷரிதான் !

4. சே சேன சேனல் ஜெயம்டா: 240 பாகையில் தென்மேற்கு திசையில் சனிபகவான் காட்சி தருவதால் ஒளிஒலிவாங்கித் தட்டு வைக்க முடியாமல் அவதியுறும் அன்பர்களுக்காக இணையத்தில் ஒரு பதிவுச் சேனலில் செய்திகள் வாசிக்கப்படுகின்றது. வேலை வெட்டி இல்லாதவர்கள் (அஃதாவது அலுவலகத்தில் வேலை செய்பவர்கள்) இச்சேனலைப் பார்க்கலாம்...சே படிக்கலாம். கோலங்கள் அபிக்கு இன்று பிடித்தது தோஷமா? ஜலதோஷமா? போன்ற சரித்திர முக்கியமான நிகழ்வுகள் பற்றி தெரிய படிக்க... (மாயவரத்தானிடம் விளம்பரம் எழுத டிரெயினிங் போகணுமப்பா)

3. பெண் விடுதலை: சானியாப் பொண்ணு என்னா டிரஸ் போடணும்னு அடிச்சிக்கிறாங்கோ. ஏம்ப்பா இதுல மதத்தைக் கொண்டு வாரீங்க? நம்ம அண்ணா யுனிவர்ஸிட்டியில 'பெண் விடுதலை'ன்னு ஒரு புதிய கோர்ஸ் ஆரம்பிக்கப் போவதாக புதிய தகவல் வந்துள்ளது. இதில் டிரஸ், செல்போன் இதர கொள்கைகளைப் பற்றி விரிவாக பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. மேலதிக விபரங்களுக்கு காத்திருக்கவும். பெண் விடுதலை வேண்டுமென்ற பாரதியின் கனவு கடைசியில் நனவாகப் போகின்றது.

2. பேச்சு சுதந்திரம்: நாட்டுல நாக்கைக் கட்டுப்படுத்தி வைக்கிறாங்கன்னு தங்கமான பச்சா குற்றம் சாட்டியுள்ளதாகத் தெரிகின்றது. ஆருன்னா அவருக்கு இணையச்சுட்டிகள் கொடுங்கோண்னா... பேச்சென்ன வெறும் பேச்சு... இங்கன ஏச்சு சுதந்திரம் கூட உண்டுன்னு பாஸுக்கு புரிய வச்சிடலாம்னு ஒரு வாத்து கூறுகின்றது.

1. அழ அழகா: ஏண்டா இதிலேயும் குசும்பா? அப்பிடின்னு செல்லமா நீங்க திட்டுறது தெரியும். இர்ந்தாலும் அழ அழகான பதிவுகளும், சமுதாய பிரச்சினை மற்றும் தீர்வுகளின் பதிவுகளும் நம்பிக்கை கொடுக்கின்றன. ஏன் உன்னால இப்பிடியெல்லாம் உருப்பிடியா எழுத முடியாதா?ன்னு நிக்கலா கேக்றவாளுக்கு... ஐயா/ஐயி (பெண்பால் ஸாரே) உயரப் பறந்தாலும் நான் ஊர்க்குருவிதாம்ப்பா...

9 comments:

சின்னவன் said...

குசும்பர் போன்ற இணைய ஆலமரத்துடன்
நேற்று முளைத்த காளான் என்னை ஒப்பிடவர்கள் யாரோ?

குசும்பரே,
டிஸ்க்ளைமர் விடும் அளவிற்கு நான் இன்னும் பெரிய ஆள் ஆக வில்லையோ என்னவோ.

யாரும்
நீதானா அவர்?
என்று கேட்க மாட்டேன் என்கிறார்கள்.

முகமூடி said...

புரியாத பதிவு / புரியாத பின்னூட்டப்போட்டி வைக்கலாம் இலவச இணைப்பா வாத்து படம் போடணும் சொல்லிபுட்டேன்..

சின்னவன் :: நீர்தானா அவர்?

சின்னவன் said...

முகமூடி
மிக்க நன்றி..

டிஸ்கிளைமர்:


நான் அவர் இல்லை. அவர் நான் இல்லை..

அப்பாடா !!!

வானம்பாடி said...

:))))))
கலக்கல்!

குசும்பன் said...

சின்னவரே,

உம்மோட பின்னூட்டத்தில் ஒருவர் அனானிமஸாக கேட்டிருந்தாரே? மறந்து போயிட்டீயளா? 'அவன் இவன் என்று அவையடக்கமின்றி' எழுதியதற்கு மன்னிக்கவும். ஒரு Flow'ல எழுதியாச்சு.

அப்புறம் அதென்ன ஆலமரம், அரச மரம் அப்பிடி யிப்பிடி'ன்னு... இந்த அடைமொழி வேண்டாம் ஸாரே :-)


டிஸ்கிளைமர் போட்டதுக்குக் காரணம் 'எல்லப் புகழும் குசும்பனுக்கே' என்று மக்கள் சொல்லிடப்படாதில்லையா?

ஏதோ நீங்களெல்லாம் வந்து கலக்குறதாலே நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தேன். மக்களுக்கு மூக்குல வேர்த்துடுத்து !!!

மற்றபடி தொடர்ந்து பின்னி பெடலெடுக்கவும்!

குசும்பன் said...

முகமூடி ஸாருக்கு,

என்ன "-"ல குத்தியாச்சா? திருப்தியா?

என்னாபா நம்ம ஆள இன்னும் காணோம்? ஏதாச்சும் கோவமா?

மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா?

இணையமென்றால் ஆயிரம் இருக்கும்னு எடுத்து சொல்லுங்க வாத்யாரே! அடுத்த பாட்டு என்னா தெர்யுமா?

கவலைப்படாதே சகோதரா

:-)

குசும்பன் said...

நன்றிகள் சுதர்ஷன் !

குழலி / Kuzhali said...

என்ன குசும்பரே அட்டகாசமா திரும்பி வந்து குசும்பு செய்றிங்க, வாழ்க உம் குசும்பு

குசும்பன் said...

வாங்கோ வாங்கோ குழலி !!! நம்ம பணியே குசும்புதானுங்களே !!! :-)