Thursday, September 29, 2005

புத்தக திருவிளையாடல்

காட்சி - 1
காலம்: 21'ம் நூற்றாண்டில் பிரிக்கப்படாத பெருமதுரை மாகாணத்திற்கு மிஸ்டர். பாராமுகப் பாண்டியன் மன்னராக (அஃதாவது முதல்வராக) ஆண்டு வந்த காலம்

இடம்: அவை
மாந்தர்: மன்னர், அவையோர், கேனையோர்

(பின்புலத்தில் திடீரெனப் பாட்டு)

பொய்யின் நாயகனே
போலியின் புதல்வனே
அல்பத்தின் சிகரமே
சொல்மறந்த துரோகியே
போட்டுக் கொடுக்கும் பொக்கிஷமே
கீழ்ப்புத்தி கிட்டப்பா
எல்லோருக்கும் எட்டப்பா
நீ காலி காலி ....

(அப்போது சத்திரியராஜ் போன்று முக்காடிட்ட உருவத்தை காவலாளிகள் எக்கி வருகின்றார்கள்)

மன்னர்: யாரிவன்?
மந்திரி: அரசே பாடலைக் கேட்கவில்லை. இவனொரு அண்டை சோழநாட்டின் ஒற்றன். பாருங்கள் கையில் சின்னத்தை பச்சை குத்தி, முகத்திற்கு முக்காடிட்டுக்கின்றான் மூடன்.
மன்: சரி இவனை எதற்காக பிடித்து வந்தீர்கள்?
மந்: அரசே இவன் மரத்தடியில் ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்தான். பிடித்து விட்டோம்.
மன்: மரத்தடியில் அரட்டைக் கச்சேரிதானே வைப்பார்கள். உளவி(றி)னால் தீங்கொன்றுமில்லையே.
மந்: உண்மைதான். ஆனால் அவ்வப்போது உருப்படியாகவும் பேசித் தொலைப்பார்கள்.
மன்: யோவ் பொறுமையை சோதிக்காதே. என்னாச்சுன்னு சட்டு புட்டுன்னு சொல்லு.
மந்: அண்டை நாட்டில் கொடுங்கோல் ஆட்சி நடப்பதைப் பற்றி நம்நாட்டு மக்கள் மரத்தடியில் புட்டு புட்டு வைத்தார்கள். என்ன செய்வது மக்களின் பேச்சில் உண்மை இருப்பினும் நேரிடையாக சொன்னால் தன் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயபேதி ஒற்றனுக்கு.
மன்: அதனால்?
மந்: மக்களுடன் நைச்சியமாய் பேசினான். இங்கேயும் கொடுங்கோல் ஆட்சிதான் நடக்கின்றது. உங்களுக்குத்தான் தெரியவில்லை. அண்டை நாட்டில் பாருங்கள். எல்லாவற்றையும் அவர்களே உற்பத்தி செய்து கொள்கின்றார்கள். அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்று தக்கப்பிழைத்துவிட்டார்கள். பேசாமல் நாமெல்லாம் கலகம் செய்து மன்னரைத் துரத்திவிட்டு அண்டை நாட்டோடு இணைந்தால் அனைவரும் சுகமாயிருக்கலாம் என்று தூபம் போட்டான். ஜீப்பில் அள்ளிக் கொண்டு வந்து விட்டோம் அரசே!
மன்: பேஷ்! பேஷ்! டேய் ஒற்றா முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு? அரிதாரம் கலையடா அறிவிலியே. என்ன விஷயம்?
ஒற்றன் (வழக்கம் போல சுற்றி சுற்றி சொறிகின்றான்): அரசே ஒரே ஒரு ஸ்மைலி போட்டுட்டு வழமை போல் ஓடிவிடுகின்றேனே ஹிஹிஹி
மன் (கடுப்பாகின்றார்): மரத்தடியில் எம்மக்கள் பேசியது உண்மையா இல்லையா?
ஒற்: கொடுங்கோலாட்சின்னு எப்படிங்க சொல்லமுடியும்? மக்களே வேறுவழியின்றி வாள்முனையில் ஏற்றுக்கொண்ட ஆட்சியல்லவோ?
மன்: சரி சரி எனக்கு பயன்படற மாதிரி ஒரே ஒரு துப்பு கொடு. உன்னை உயிரோடு விட்டு விடுகின்றேன்.
ஒற்: அரசே... தர்க்கத்தில் வல்லவரும், வர்க்க ஸாஸ்திர நிபுணருமான ஸ்ரீனிவாசுலு ரநங்கநல்லூர் தத்துவாச்சாரியார் மதுரையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார். தர்க்கத்தைப் பா(ட்)டாய்படுத்தி உங்கள் நாட்டைப் போட்டிக்கழைக்க வருகின்றார். போதுமா? அரசே வுட்டுடுங்க. போட்(§)டா புடிக்கணும். வரட்டா?
மன் (மனத்துக்கண் உரக்க): என்ன ஸ்ரீனிவாசுலு ரநங்கநல்லூர் தத்துவாச்சாரியாரா (செல்லமாய் ஸ்ரீ)? ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் அதுவும் குறிப்பாக வடகலையை கரைத்துக் குடித்து தர்க்கத்தில் மாட்டையே சுக்காவாக்கி வாயு விடும் வித்தகரா? அதுவும் மதுரையை நோக்கியா? சோமசுந்தரராமக் கடவுளே என்ன செய்வேன்? என்னே இது மதுரைக்கு வந்த சோதனை? யோவ் யாரங்கே கூப்பிடும் கோவிலில் பாடும் பரம ஆனந்தாரை. அவர்தான் எதிர் தர்கம் பண்ண சரியான ஆள்.

(ஸ்ரீ அவைக்குவர, தர்கத்திற்கு அழைப்பு விடுக்க, மன்னரின் ஆள் தோற்றால் மதுரையை எழுதி வைக்கவும், ஸ்ரீ தோற்றால் தர்க்கமே செய்யப்போவதில்லை என்றும், பரம ஆனந்தார் சோமசுந்தரக் கடவுளிடம் முறையிட ப்ளா ப்ளா ப்ளா ப்ளா.....)

திரை

காட்சி - 2

(பக்தனின் நிலையை உணர்ந்து சிவனார் பழைய பேப்பர் போடுபவராக வருகின்றார்)

சிவன்: பேப்பர் பேப்பர் ஹிண்டு தினமலர் துக்ளக் கல்கி கல்கண்டு பேப்பர் பழைய பேப்பர்
பொதுஜனம்: ஏம்ப்பா எப்பவும் ஹிண்டு தினமணி ராணி கல்கண்டு குமுதம் பேப்பர் பழைய பேப்பர்'னு தானே கூவுவாங்க
சி: ஹிஹி இது வேற லிஸ்ட்டும்மா உங்களுக்குப் புரியாது
பொ: என்னவோ போப்பா. வேகாத வெயில்லே இப்பிடி பேப்பர் போட்டுப் பொழைக்கறியே
சி: என்னம்மா பண்றது. புள்ளகுட்டி இருக்குதே
பொ: அட புள்ளகுட்டி வேறயா?
சி: குட்டி இல்லேம்மா. ஆனை மாதிரி ஒரு புள்ள குளத்தங்கரை மரத்தடியிலே குந்திக்கினு கீது. அழகான ஒரு புள்ள பக்கத்து நாட்டுல பேப்பர் போடுது.
பொ: அட அங்கேயும் பேப்பரா?
சி: ஆமாம்மா ஆனா இப்ப அங்க பிஸினஸ் கொஞ்சம் டல்லடிக்குது
பொ: அதுனால என்னப்பா? இங்கேயிருந்து உதவலாமுல்ல...?
சி: அட தகப்பனாயிருந்து இது கூட செய்யாம எப்படிம்மா? எவ்வளவு செஞ்சாலும் அவனுக்கு திருப்தியே இல்லம்மா. தக்கிப்பிழைப்பேனே தவிர நக்கிப்பிழைக்கமாட்டேன்'ன்னு சொல்றான்.
பொ: நல்லதுதானேப்பா. தன்மானமுள்ளவன் போலருக்கு.
சி: அட தன்னோட காலுல சுயமா என் புள்ள வந்தா எனக்கும் பெருமைதாம்மா. ஆனா நான் ஏதோ ஒண்ணுமே செய்யலேன்னு சொன்னா கூட பரவாயில்ல. கெடுதலு பண்றேன்னு கூசாம பொய் சொல்றதுதான் வருத்தமாயிருக்கு. வுடும்மா. பெத்த மனம் பித்துதானே.
பொ: அடடே ரொம்ப நொந்து போயிருக்கே போலிருக்கு. சரி சரி இந்தா பழைய பேப்பர். எவ்வளவு தேறும்?
சி: எல்லாஞ்சேத்து 47 ரூவாம்மா
பொ: அடப்பாவி இவ்வளவு கொறைச்சலா சொல்றியே?
சி: என்னம்மா பண்றது லாபத்தை ரெண்டு பங்கா போடணுமே!
பொ: அப்பிடின்னா... அடப்பாவி உனக்கு ரெண்டு சம்ஸாரமா?
சி: ஹிஹி ஆமாம்மா ஆனா ஒண்ணு இந்நாட்டிலே இன்னொண்ணு பக்கத்து நாட்டுல
பொ: அப்பிடிப் போடு. பெரிய கில்லாடியா நீரு
சி: அப்பிடில்லாம் ஒண்ணுமில்லையம்மா. உள்ளூர்க்காரியாவது தலையில உக்காந்து ஆட்டுவிக்கிறா. அண்டை ஊர்க்காரியோ உடம்புல பாதி வேணும்னு உசுரை வாங்குறா. உடம்பை கட்டைம்பாங்க. அதுக்காக வெட்டிக்கொடுக்க முடியுமா? முன்னாடி போனா கடிக்குது. பின்னாடி போனா ஒதைக்குதுன்னு வாழ்க்கை ஓடுதும்மா.
பொ: ஏம்ப்பா ரெண்டு சம்சாரத்தையும் சேத்து வைச்சுட்டா கஷ்டம் குறையுமில்லே?
சி: ஏம்மா கொஞ்சம் பழைய பேப்பரை போட்டுட்டு என் வாழ்க்கைக்கே ஆப்படிக்கிறீங்களே. இது நியாயமா?

(சிவன் தலை தெறிக்க ஓடுகின்றார்)

திரை

காட்சி - 3

(கோவில் திண்ணை. ஸ்ரீ & பஜனைக் குழுவினர்)

ஸ்ரீ: (தாம்பூலம் தரித்து ரிலாக்ஸாக) ஏதாவது உள்ளூர் நியூஸ் உண்டா?
பஜனை: ஐயா அண்டை நாட்டுல கொடுங்கோலாட்சின்னு மரத்தடியில பேசிக்கிறாங்கய்யா
ஸ்ரீ: அது வாஸ்தவம்தானேய்யா. இந்த விஷயத்துல என் தர்க்க ஸாஸ்திரம் எப்பவும் நியாயமே பேசும்.
பஜனை: நீங்க ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தை சொன்னீங்க ஐயா!

(திடீரென்று ஒரு பாடல் தெருவோரத்தில் கேட்கின்றது)

அய்ங்க அய்ங்க அஆஆஆஆஆ
தமிழே நீயென்ற அகம்பாவமே
நீ
அறுத்தவுடன் எந்நாபியில் சீழ்த்தொல்லையே..
.

(பாடல் சில மணித்துளிகள் தொடர்கின்றது)

ஸ்ரீ: (தெருமுனைக்கு பஜனைக்குழுவுடன் ஓடிவருகின்றார். சிவனார் கால் கால் போட்டு தரையில் படுத்திருக்கின்றார்) அப்பா சற்று முன் ஒரு ஜீவ கானம் கேட்டதே. யார் பாடியது?
சி: அட ஜீவமாவது ஜோதியாவது. நாந்தாங்க சும்மா கத்தினேன்
ஸ்ரீ: என்ன கத்தினாயா? இதுபோன்ற ஒரு தர்க்கப்பாட்டை நான் வாழ்நாளிலேயே கேட்டதில்லை. ஏம்ப்பா உனது குரு யார்?
சி: குருவுல்லாம் இல்லீங்கோ. பரம ஆனந்தார் கோவிலில் பாடுவாருங்கோ. அதுல ஒண்ணை அவுத்து வுட்டேன்.
ஸ்ரீ: என்னது பரம ஆனந்தாரா? நாளைய போட்டியில் என்னை பரம சோகானந்தாராக ஆக்காமைக்கு உமக்கு நன்றி. நான் வருகின்றேன்.

(ஸ்ரீ தற்போது தர்க்கம் து(ம)றந்து துக்கம் தொலைக்க சோமபானத்துடன் பெரிய எரிமலைத் தீவிற்கு சென்றுவிட்டதை, சிவனார் பரம ஆனந்தார்க்கு அப்டேட் கொடுக்க -- சுபம்)

திரை

பினா.குனா. தானே தமிழென்று தலைவீங்கி, எதிர்கருத்தை எதிரிக்கருத்தாய் பாவித்து, மார்க்கண்டேயப் பதிவுகளென்ற கற்பனைக் குட்டையில் ஊறித்திளைத்து, உரோமம் தொலைத்துரித்தபாஸிஸகோழிக்கூட்டத்திற்கு இப்பதிவு தர்ப்பணம்.

11 comments:

Anonymous said...

ஆஹ்ஹா ஆஹ்ஹா ;-0)

முகமூடி said...

எனக்கு என்னென்னவோ புரியிற மாதிரி இருக்கே... என் (கன்னித்)தமிழில் கோளாரா???

இருந்தாலும் ஒன்னு ரெண்டு லிங்க் கொடுத்து அந்த பாட்ட கொஞ்சம் நீட்டி போட்டுன்னு இத ஒரு மகா பதிவாக்கியிருக்கலாம்... சான்ஸ வுட்டுட்டீரே குஷ¤ம்பர்...

****

ஸ்டாந்தர்டு பின்னூட்டம் கொஞ்சம் போட்டுக்கறேன் ::

1. இக்காலகட்டதிடை மிகவும் அவசியமாக பதிவு
2. அவசியம் ஆமோதிக்கிறேன்
3. அறிக்க அறிக்க ஆமோதிக்கிறேன்

முகமூடி said...

ஒரு மறத்தமிழ் ஸ்டைல் பின்னூட்டம் போட்டுக்கறேனே ப்ளீஷ் ::

உங்கள் எழுத்தோடு வரிக்கு வரி உடன்படுகிறேன்... இல்லை எழுத்துக்கு எழுத்து உடன்படுகிறேன்.. அய்யோ காற்புள்ளி கமாவெல்லாம் கண் கலங்க வைக்குதே.. உங்க கைய என் நெஞ்சுகுள்ள உட்டு வார்த்தைய பிடுங்கி எழுதுன மாதிரியே இருக்கு... உற்சாகம் பீறிடுது... சட்டைய பிச்சிகிட்டு கதறணும் போல இருக்கே...

சின்னவன் said...

குசும்பரே
என்னை மாதிரி மர மண்டைகளுக்கு கொஞ்சம் விளக்குவீரா..

ஸ்மைலி, ஸ்ரீ: ஏதோ புரியறமாதிரி இருக்கு..
மரத்தடி பக்கம் எல்லாம் நாம் ஒதுக்கினது இல்லை.. பிரியமாட்டேங்கறதே..

சொக்கா ! சொக்கா !

சின்னவன் said...

முகமூடி
பிரிஞ்சுதா உங்களுக்கு.. அப்பாடா அப்படு என்றால் என் தமிழ் OK தான்.

ஆமாம்,
சமீப காலமாய் சில பிரபல வலைபதிவர்கள் அடிக்கடி தொல்லை பேசி கொல்கிறார்கள்
என்று அரசல் புரசலாய் செய்தி கசிகிறதே..

என்னங்காணும் சங்கதி !! விரைவில் ஸ்கூப் செய்தி போட வைச்சுடாதேள் !

Anonymous said...

குரைப்பு ஆறு'ல பினா குனா'வை தூக்கிட்டாங்கப்பு...

Anonymous said...

ஐயா குசும்பணாரே

ஏதோ பாதி புரியுது, மீதி புரியலைங்கையா. புரிஞ்ச வரைக்கும் சில கேள்விகள். பிடிபட்ட ஒற்றனிடம் கேட்டுச் சொல்லுங்கள். ஒற்றனது அண்டை நாட்டில், எல்லாமே அவர்களேஏஏஏ தயாரித்துத்தது என்று பீலா விடுகிறாரே, அவர்கள் எதிர்ப்பொர்ரை கேள்வி கேட்போரைக் கொல்லப் பயன்படுத்தும் ஏ கே 47உம் அவர்களேஏஏஏ தயாரித்ததுதானாமா? பாண்டி நாட்டில் இருந்து கடத்திக் கொண்டு போகும் மண்ணனெய்யும், பெட் ரோலும், பலசரக்கும் யார் தயாரித்தது? இதே ஒற்றன் வெகு நாட்களுக்கு முன்பு அவர்கள் நாட்டில் பிள்ளகள் கூட அண்டை நாட்டுப் படைகள்தான் அளிக்கிறார்கள் என்று என்று குந்தவையின் கணவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது ஓற்றனக்கு மறந்து விட்டதாமா?, இப்ப என்ன எல்லாம் நாங்களே செய்கிறோம் என்கிறார்? கேட்டுச் சொல்லுங்க ஐயா கேட்டுச் சொல்லுங்க.

இந்த ஒற்றன் தானே பிழைப்புக்காக மேற்கு தேசம் ஒன்றில் உட்கார்ந்து கொண்டு தண்ட சம்பளம் வாங்கிக் கொண்டு பல நூறுகள் பிளாகுகள் நடத்திக் கொண்டு உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும் அற்பன்? இவர் பிழைக்க போன தேசத்தில் வாங்கி சோறு நிதம் தின்று வெட்டிக் கதை பேசும் ஒற்றன் அன்றாடம் வாங்கும் உப்பு புளி மீளகாய் எல்லாம் விற்கும் பட்டேல் தேசத்துக் கடை இவர் சொந்த தேசத்துக் கடையா என்ன? நாளை முதல் சாப்பிடுவதை நிறுத்தி விடுவாரா ஒற்றன் என்பதையும் பிடி பட்ட ஒற்றனிடம் கேட்டுச் சொல்லுங்க ஐயா, கேட்டுச் சொல்லுங்க.

இப்படிக்கு
சோழ தேசத்து ஒற்றன்

Anonymous said...

இந்திய மேலாதிக்க நாய்களே வெட்கித் தலை குனியுங்கள்.

Anonymous said...

சோழநாட்டு ஒற்றா
நீயாவது லிங்க் போடப்பா !

முகமூடி said...

// முகமூடி பிரிஞ்சுதா உங்களுக்கு // புரியிற மாதிரி இருக்கேன்னுதானே சொன்னேன்... இதெல்லாம் புரிஞ்சா நம்ம ரேஞ்சே வேறப்பா...

// கொல்கிறார்கள் // விசயகோந்து மாதிரி "ல்" லையும் "ள்"லையும் மாத்தி பேசறீரா இல்ல உண்மையிலே "என்னவோ திட்டம்" இருக்கா... வர வர இந்த 13 மீனிங் பார்டிங்க ரவுசு தாங்க முடியலப்ப்பா...

குஷ¤ம்பர வேற ரொம்ப நேரமா காணோம்... மன்னன் தான மனம் கலங்கனும்... இவர் என்ன பாத்திரத்தோட ரொம்ப ஒட்டிட்டாரா?

சின்னவன் said...

"என்னவோ திட்டம்" இருக்கு !

விரைவில் எதிர்பாருங்கள் !

World exclusive audio tapes !!!

எதற்கும் ஒரு ஸ்மைலி போட்டுவிட்டு போகிறேன்.

:-)