Friday, September 16, 2005

துடுப்புகளின் சப்பாத்துகள்

-- சுத்த சன்யாசி

கரங்கள் காய்த்துக் கிடந்தன
வலித்து வலித்து
அட்ச தீர்க்க ரேகைகளாயின்றி குழப்பக் கோடுகள்
கைரேகைகள் குறியீடா?
மேலே கல்வி கீழே கலவி
நடுவே ஆயுள் அல்லது செல்வம்
சை(டு)கிக் கூறினார்

ஒரு பார்வை.
இழுத்து நிறுத்திய இழுத்து நிறுத்திய
நாணோ, உண்டி வில்லோ
வளைந்து பின் திமிறும், விடுக்கையில்
விட்ட கையின் வலிமையே வாசமென

சப்பாத்து கடிக்கின்றது
சபலமும் கடிக்கின்றது பலகாலம் முன்பே தொலைந்துபோன
காமக்கயிறும் கடி'வாளமும்
தலைகீழாய்ப் பிறப்பென்பதால் பிம்பம் எஞ்சும்
ஆடிகளின் பிரதிபலிப்பில் இடவலமாய்

மோனத்திலாழ்வது உள்ளமல்ல
மூத்திரசந்தின் கோலிகில்லி ஆட்டத்தில்
பறந்து மறையும் கிட்டியில் புள்ளென்றது
வலித்துக் காய்ந்த கரமும் தாழ்ந்த சிரமும்
சீறிப் பாய்ந்ததில்
சிதறுகாயாகும் கனவு

எகத்தாளமாய் வலிக்கும் உரமேறிய கைகள்
நீரில் நேர்க்கோடு கிழிக்கின்றது
அலட்சியமாய் முன்னேறும் படகு
தன் சுக்கானைப் பார்த்துத் தானுமொரு
கோட்டை கோடாய்ச் சமைத்து
கரத்தின் கைவன்மையின் நெளிவு சுளிவுகளுடன்
சில குமிழிகள்
நீரோட்டத்தின் நெடிய பயணத்தில் எழுந்தவொரு திடீர் ஆழிப்பேரலை
எழுந்தும் அலையில் அலைபாயாமல்
நாசூக்காய் நகர்ந்து விரையும் படகு
பேரலையைக் கண்டு பெருங்கூச்சலிடும் பேதமை
குழப்பக் கோட்டை கட்டுகின்றது
குமிழிகள் உடைகின்றது

உடைந்து மறைந்தாலும் நிலை தானென்கிறது
நிலையில்லாத நிலைமறந்த நிலைகெட்ட நிலைமை
ஸ்திரமற்ற தன்மையில் வெடித்து மறையும் குமிழி.
எதிர்துருவங்களை இணைக்க
பாதை தேடி படகினைச் செலுத்தி
கட்டுடைக்கும் பயணத்தில் கற்பனை கசிந்துருகி
துடுப்புகளுக்கும் பாதணிகள் கொடுக்கின்றோம்

கீறிப் பிளந்த நீரினில்
விளைந்த குமிழிகள் கடல்கண்ணிகள்.


பி.கு. பிரியாத பதிவு போட்டி ஒண்ணு முகமூடி அறிவிச்சதால இது நம்மளோட பங்களிப்பு
வாத்துப் படம் இல்லாமலா?
போட்டோ உபயம்: feathersite.com

6 comments:

முகமூடி said...

இருக்கறதுலயே டாப் வாத்து இதாம்பா...

ஆமா வாத்து ஏன் டயர்டா கீது

முகமூடி said...

இருந்தாலும் 'சப்பாத்து'ங்கற மசக்கசூட்ல கோப்பிரைட் செய்யப்பட்ட வார்த்தை பிரயோகிக்கிறதால ஒரு வேளை நீதானா 'அந்த' செல்லக்குயில் பாடல் கேக்கணும் போல இருக்கு

சின்னவன் said...

//நீதானா 'அந்த' செல்லக்குயில்

அவரா நீங்க ?

Anonymous said...

ஷுகும்பான், நம்ம பதிவோட வாத்தைச் சுட்டு கறி வச்சதுக்கு ரொம்ப டாங்ஸு. மேலேயிருக்கற வடிசலுக்கே இந்த லொள்ளுன்னா இனி வரப்போற அடியிலிருக்கற அழுகின மண்டிக்கு என்ன லுள்ளு பண்ணுவேள்னு இந்த ஜன்யாசி ஆவலோட எதிர்பார்க்கறான் ;-) இருந்தாலும் பெடலை வலுவா மிதியுங்கோ, மீதியெல்லாம் சுகுர்றா எட்த்துனு போயிரலாம் ;-) மெட்ரோ ஓட்டலுல பட்டர் ஷிக்கன்னு சொல்லிப் போடற வாத்துக் கறி ஒரு பிளேட் ஷொன்னாப் போச்சுது!! ;-) போட்டுக்கோங்கோ ஒம்பத்தொம்பது ஸ்மைலி, கல்க்குங்கோ, கல்க்குங்கோ; இதுமாதிரி ஜூமாங்கோ வெள்யாட்டு வெள்யாடி சொல்ப நாளாச்சு ;-)

குசும்பன் said...

ஆஹா அந்த செல்லக்குயில் மயில் வான்கோழி(!) யாருங்கோ? சின்னவரே அலும்பு தாங்க முடியலேப்பா :-)

யாராவது வான்கோழி பிரியாணி ஒரு பிளேட், ஜாக்டானியல்ஸ் டபுள் அப்புறம் ஒரு எக்ஸ்ட்ரா லார்ஜ் கூழ் சின்னவருக்கு பார்சல் போடுங்கப்பா...

குசும்பன் said...

சன்னாசி ஸாருக்கு சலாம் குலாமு...

நம்மளோட பதிவ குசும்பா எடுத்துக்கிட்டதுக்கு டாங்ஸ் மாமே! டாப்ஸோ பாட்டம்ஸோ (அஃதாவது வடிசலோ மண்டியோ) ஷூகும்பனுக்கு டாப் டூ பாட்டம் குசும்புதான் :-)

ஆட்டமா தேரோட்டமா (பாட்டோட லிங்க் நம்ம உபிச கொடுப்பார்)

வெள்ளாட்டு வந்த்ப்புறம் வெள்ளாடிடுவோம் வாத்யாரே ;-)

லெகின் ஆராம்ஸே மாடி !!!