Tuesday, September 27, 2005

திரைப்பாடல்களுக்கு நோபல்

திரைப்பாடல்களுக்கு நோபல் பரிசு கொடுக்கவேண்டுமென்று பலகாலமாய் பேரரசுக் கவிஞர்(கள்) போராடி வருவதை உலகம் அறிந்ததே. நோபல்லும் பாடல்களையும், அது எத்துறைக்காக சிபாரிசு செய்யப்படுகின்றதென்பதையும் தீர்மானித்து தமது குழுவின் பரிசீலனைக்குத் தெரிவிக்க வேண்டுமென்று கட்டளையிட்டது. இது போதாதா? ஒரு பெரிய மாநாடு தமிழ்ச்சங்கம் கண்ட மதுரையில் கூட்டப்பட்டது. ஜிஞ்ஜினக்கா ஜிஞ்ஜினக்கா ஜினுக்குத்தானென்று வலைப்பூவாளர்கள் தமது சிபாரிசுக் கவிதைகளை எடுத்துக் கொண்டு மாநாட்டில் குவிந்து விட்டனர். கூடவே தமிழார்வலர்கள், கு(இ)டிதாங்கிகள், துணை வேந்தர்கள், எழுத்தாளர்கள் என்று குழுமி விட்டார்கள். சரித்திரத்தில் முதல் முதலாக இப்பரிசு அறிவிக்கப்படுவதால் பல துறைகளில், பல காலகட்டத்தில் எழுதப்பட்ட பாடல்களை பரி'சீலனை செய்யப்போவதாக மாநாட்டு அறிக்கை தெரிவித்தது. இதோ மாநாட்டில் நடைபெற்றதை தொகுக்கின்றார் நமது சிறப்பு நிருபர்...

நோபல் கட்டு-உரை:

இணையத்தில் சிறியவரும், அனுபவத்தில் மூத்தவருமான பார்ட் சிம்சன் 'சின்ன ராசாவே சித்தெரும்பு என்னைக் கடிக்குது' என்ற பாட்டை தன் தேர்வாகக் கூறினார். பெரிய, வளர்ந்த பனைமர ராசாவை நோக்கி நாயகி பாடிய சின்ன ராசாவே என்ற பாடல் கற்பனை வளம் என்ற துறையில் பரிசு பெற வேண்டுமென்று கூறினார்.

ஒரே ஒரு ராத்திரிக்கு வெச்சேன் கச்சேரி என்று பாடியபடி கலங்கடித்தார் அஆப்பு. ஒரே ஒருவரை மனதில் வைத்து எழுதப்பட்ட பாடல் கு(த)த்துவம் துறையில் இது சிறந்ததாக அறிவித்தார்.

கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருக்கு. எதுக்கு? என்ற பாடல் சிறந்த 'கேள்வி-பதில்' துறையில் பரிசு கொடுக்கலாமென்று ரவிச்சிதா தெரிவித்தார்.

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு .யிரே .யிரே என்ற பாடலே சிறப்புப் பார்வை துறையில் சிறந்ததென்று முகமிலி கூறினார்.

நிலாக்காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணமென்று முக்கி முனகிக் கொண்டே வந்த பீரு பபித்தா ஹம்மிங் துறையில் டைமிங் காட்டியதற்காகவும், சித்தாடை கட்டிக்கிட்டு (இதோட ஒரிஜினல் வெர்ஷனே மறந்து போச்சப்பா) சிறந்த பின்-உல்டா-நவீனத்துவம் துறையில் பரிசு தரவும் சிபாரிசு செய்தார்.

இலந்தப்பழம் இலந்தப் பழம் ம்ம்ம்ம்ம் செக்கச் சிவந்த பழம் என்றபடி எல்லாம் பே(ஏ)சுறவர் வந்தார். ஆன்லைன் முயூசிக்கில் அதிகம் இறக்குமதி செய்யப்பட்ட பாடல் இதுவென்று புள்ளி விவரத்தையும் அள்ளிவிட்டு குழந்தை, குமரன், குமரி, அம்மம்மா, அப்பப்பா கூட ர(ந)சித்த இப்பாடலுக்கு ஆல் டைம் அச்சீவ்மெண்ட் கேட்டகோரியில் பரிசு தரச் சொன்னார்.

அண்ணா பல்கலை துணை வேந்தரோ 'செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே' பெண் விடுதலை துறையில் சிறந்ததாக அறிவித்தார்.

இதற்கு மேலும் கட்டுரையை நீட்டாமல் பாடல், சிபாரிசு செய்த நபர், துறை என்று தருகின்றேன்.

நிலா அது வானத்துமேலே பலானது ஓடத்து மேலே -- அகர ஓவியர் -- மிமிக்கிரி துறை
ஹலோ டாக்டர் ஹார்ட்டு மிஸ்ஸாச்சே -- க்ளூலி -- தூயதமிழ் துறை
ஐ லவ்யூடா யாரும் தம்மடிக்கப் போகாதீங்கடா -- க்ளூலி -- மருத்துவத் துறை
பொன்மேனி உருகுதே என்னாசை பெருகுதே -- பெரியபொண்ணு -- டிகிரி'படிப்பு துறை
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எந்தன் கதையை (ஒரிஜினல் வெர்ஷன் இல்லை :-) -- மலாய்மன்னன் -- மஜா துறை
மல மல மலே மலே மல மலே -- லாடுகும்தாஜ்தாஸ் -- மருதம் துறை
மே மாதம் தொண்ணுத்தெட்டில் மேஜரானேனே -- கருத்து கண்ந்சாமி -- இலக்கியம்
வாடி என் கப்பக் கிழங்கே -- மேலாண்மை மேனாக்ஸ் --வணிக சந்தை
கட வீதி கலகலக்கும் என் அக்கா மக -- மேலாண்மை மேனாக்ஸ் -- பொருளாதாரம்

அம்பது ரூபாதான் அம்பது ரூபாதான் ஐயா என் தேவையெல்லாம் நாளைக்கொரு அம்பது ரூபாதான் -- குவாட்டர்A கோவிந்சாமி -- குடி'யவதாரம்

சங்கே முழங்கு சங்கே முழங்கு -- இணையப்பெரியோர் -- தமிழிசை

மசாலா அரைக்கிற மைனா உன் மத்தாளம் என்ன விலை -- திரைசுவை கோபு -- சமையல்
அட சிங்கம் போல நடந்து வரான் எங்க பேராண்டி -- ஜெயகுமார் -- ஆளுமை
குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன் வெடி குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன் -- பீட்ஸாபசந்த் -- ஆண்மை

சிபாரிசுகளின் எண்ணிக்கை 744'ஐ இன்று தாண்டுவதால் இத்தோடு நிறுத்திக் கொள்கின்றேன். விடுபட்ட/ மறுக்கப்பட்ட / மறக்கப்பட்ட பாடல்களை நேயர்கள் தெரியப்படுத்த வேண்டுகின்றேன்.

11 comments:

குழலி / Kuzhali said...

நம்மள போட்டு தள்ளவில்லையென்றால் உமக்கு தூக்கம் வராதே... ம்... நடத்துங்க...

குசும்பன் said...

என்ன குழலி அப்படிச் சொல்லீட்டீங்க?... போட்டுத் தாக்கறது இணையத்துல வேற ஒருத்தருங்க...

குசும்பு தாங்க நம்ம பணி !!!

:-)

Anonymous said...

//சித்தாடை கட்டிக்கிட்டு (இதோட ஒரிஜினல் வெர்ஷனே மறந்து போச்சப்பா) சிறந்த பின்-உல்டா-நவீனத்துவம்//

;-0)

சின்னவன் said...

//கற்பனை வளம் என்ற துறையில் பரிசு பெற வேண்டுமென்று கூறினார்.

இந்த பாட்டுதானே கிடைச்சுது குசும்பரே எனக்கு ?


US Open Tennis போட்டியின் போது வந்த Andy Roddick "MOJO" விளம்பரங்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?


"Part" சிம்ஸன்...

முகமூடி said...

கானா பாடல்களுக்கு பரிசு உண்டா குஷ¤ம்பர் ::


செந்தமிழ் தேன்மொழியாள்.. செருப்போடு தெருவில் சத்தமிடுவாள் - குருமா கிழவன்
தமிழுக்கும் அமுதென்று பேர் - குருமா கிழவன்
சட்டி சுட்டதடா... துடைப்பம் வெட்டுதடா.. - மருந்து தாஸ¤
எங்கிட்ட மோதாதே நான் ராஜாதி தமிழனடா - குருமா & கோல்டு கூட்டணி

குசும்பன் said...

ஸிம்சரே (மரியாதைப் பன்மையா :-)

அடுத்த தபா சுகுற்ரா குத்திடலாம். கவலையை வுடுங்கோ!

முகமூடியாரே,

//செந்தமிழ் தேன்மொழியாள்//

அசல் பிரதியா இல்லை கல்லூரியில் பாடப்படும் நகல் பிரதியா? ;-)

சின்னவன் said...

"MOJO" பற்றி ஒன்னும் சொல்லலையே தலைவா ?

முகமூடி said...

// கல்லூரியில் பாடப்படும் நகல் பிரதியா //

ஏற்கனவே கலாச்சார கயவாளிகள் ஸாரி காவலர்கள் துடைப்பத்தை போட எது இடம் என்று தோடிக்கொண்டிருக்கிறார்கள்... நீர் வேற நம்ம வீட்ட காமிக்காதேயும்

சின்னவன் said...

//கல்லூரியில் பாடப்படும் நகல் பிரதியா

நம்ம கிட்ட 2.3 version இருக்கு. நம்ம வீட்டையும் கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கணும்.



ப்ரோ மீட்டிங் முடிஞ்சதா ?

குசும்பன் said...

முகமூடி,

ஆளு, அட்ரஸ் சொல்றதுக்கு ஆளிருக்குது ஓய் !!!அஃது நானில்லை...

சி. சகோதரா மீட்டிங் முடிஞ்சது !!!

:-)

சின்னவன் said...

தமிழில் ப்ரோ என்று சொல்லாமல் சகோதரா என்று விளித்தால் எப்படி அய்யா தமிழ் வளர்வது ?