Thursday, June 23, 2005

4-D கொண்டாட்டம்

நம்பர்-1 என்று மார்பு (கூகிள் தேடு'பொறியில் மக்கள் சிக்கி ஏமாறுவதற்காக) தட்டிக்கொள்ளும் பல சனரஞ்சக பத்திரிக்கைகளில் ஒன்று, 3D கண்ணாடி போட்டு பல பலான படங்களை குளோஸப்பில் பார்க்கும்படி வரலாற்றில் முதன்முறையாக செய்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள யுனிவர்ஸல் ஸ்டுடியோவில் நம்ப ஆர்னால்டு சுவர்சுநக்கர் பிலிமான டெர்மினேடர் ஷோ காட்டுவானுங்க. அதுக்குப் பேரு 4-D ஷோ. அதாவது 3-D படத்தோட இன்னோரு டைமன்ஷன் (தமிழ்ப்'படுத்த' முடியல) சேத்து நிஜ ஆளுங்களும் சே(பூ)ந்து வெள்ளாடுவாங்க. அதுபோல இது குசும்பனோட 4-D ஷோ... என்ன கண்ணாடி போட்டுட்டேளா?

(குளிர் பிரதேச பின்னணியில், போட்ட/போடாத அரைகுறை உடையால் 'சொல்லாத இடம் கூட குளிர' தொகுப்பாளினி FM தமிழில் அறிவித்து கொல்லுகின்றார்)

எலாருக்கும் வண்க்கம். வெல்கம் டூ குசும்பன் 4-D ஷோ! எல்லாரும் நாங்க கொடுக்கிற காக்கிள்ஸ போட்க்கோங்க! படம் சூப்பரா தெர்யும்! அப்றம் சீட்டவுட்டு ஷோவுக்கு நட்வுல எளுந்த்திரிக்காதீங்க! ஷோ முடிஞ்சதும் வோட்டுப் போடவும் மற்க்காதீங்க! என்ஜாய் த ஷோ! பைய்ய் (பிளையிங் கிஸ் கொடுக்க ரசிகர்கள் அப்ளாஸ் காதை கிழிக்கின்றது)

(சினிமா தியேட்டர் போல ஒரு அறை. மணிரத்தினம் படம் போல இருந்தும் இல்லாதது போல வெளிச்சம். தட்டுத் தடுமாறியபடி ரசிகர்கள் அமர்கின்றார்கள். 3-D காக்கிள்ஸை போட்டுக் கொண்டு அமர, திகில் இசை பரவுகின்றது)

(மேடையில் பலர் அமர்ந்திருப்பது போல ஒரு பிரமை. கேரக்டர்களுக்கு நாமே ஒரு பெயர் கொடுப்போம்)

அரைமொட்டை ஹாசன்: முண்டை...முண்டை...நாயே...என் தாயே...பேயே...என் பெருச்சாளியே போய்சேந்த்திட்டியேடி...இப்ப படத்துல இனிமே யாரை நான் திட்டுவேன்...ஏய் கொத்தாளா...(தடார் படார் சப்தம்...ஹாசன் அறைந்து கொல்கிறார் தன்னைத்தானே)

(ரசிகர்கள் திக்பிரமை பிடிக்க...)

தொகுப்பாளினி: ஹேய் என்ன பயந்துட்டீங்களா அது ச்சும்மா... ஒரு டிரைலர். இனிமே ஒரே ஜாலிதான்...ம்ம்மாமா...பைய்ய்ய்ய்

(திட்டி முன்னேறுவோர் கழகம் மற்றும் கூட்டு-அணிகளின் மீட்டிங்...கரை வேட்டிகளுடன் உடன்பிறப்புகள் ஆஜர்)

அரைமுருகன்: ஐயா நடுரோட்டுல உக்காந்து போராட்டம் பண்ணதால உடம்புல ஒரே சூடு...அடுத்த பொஸ்த்தகத்துக்கு உரை போடுங்கய்யா. வேணா பல்காப்பியம்ன்னு புதுசா கூட எழுதுங்க. ஒரு ஊட்டி, கொடைக்கானல்னு உங்க செலவுல பொண்டாட்டி பிடுங்கல் இல்லாம ரெண்டு வாரம் ஓட்டினா சூடு சரியாயிடும்யா...

(அப்போது யாரோ குலுங்கி குலுங்கி அழுகின்றார்)

போ'கோ: ஐயா...உங்களுக்கு ஞாபகமிருக்குதா? நெஞ்சுக்கு நீதியானாலும், கஞ்சிக்கு சிங்கியானாலும் இந்தத் தம்பிதானே கூட இருந்தான். தடம் மாறிப் போனாலும் தண்டவாளங்களை, வண்டவாளங்களை மறக்குமோ இப்புகை வண்டி?

(கூட்டணி தலைவரான வலை'ஞர் செருமி, தனது கண்ணீரைத் துடைத்துக் கொள்கின்றார்)

அரை: (மனதுக்குள் பொருமுகின்றார். இந்தாளுக்கு அழுகாச்சி நாடகம் போட்டே ஆளைக் கவுக்கிறது வேலையாப்போச்சி...கிளிஸரின் போட்டாக் கூட நமக்கு இந்த இழவெடுத்த அழுகை வரமாட்டேங்குதே...)

ராமநேசு: நமக்கு இப்பிடி சுத்தி வளைச்சு பேச வராது. 'ஏக் ஜட்கா..தோ துக்கடா' ஹிஹி இந்த அம்புமணி புள்ளங்க டில்லியிலேர்ந்து பேசி பேசி நமக்கும் இந்தி ஒட்டிக்கிச்சு...யோவ் வெட்டு ஒண்ணு...

(தொண்டர் காதைக் கடிக்கின்றார்): ஐயா வெட்டணுமா எங்க எங்க?

ராமநேசு: எலேய் காடுவெட்டி கம்முன்னு கிட...

சன்'முடி: ஐயா கள்ளவோட்டு வாக்காளர் பட்டியல் கனஜோரா தயாராயிட்டு இருக்குய்யா. நம்ம வட்டம், மாவட்டம் எல்லாம் சும்மா வலைப்பூ மாதிரி ஜல்லியடிக்கிறாங்கய்யா

ராமநேசு: என்னாது டெண்டர் உடாம ஜல்லியடிக்கிறாங்களா? அப்ப போராட்டம்தான். இனிமே யாரும் ஜல்லியடிக்கக் கூடாது. வெட்டுறது, அடிக்கிறது, படப்பொட்டி கடத்துறது எல்லாத்தையும் டெண்டரே இல்லாம எங்க ஆளுங்கதான் செய்யணும்.

தொண்டர்: ஐயா அது வேற மாதிரி ஜல்லிங்க

ராமநேசு: யோவ் எந்த ஜல்லியா இருந்தா என்னய்யா? ஆமா ஜல்லிக்கு தமிழ்ல என்ன? 'சல்லி'யா? ஒழுங்காச் சொல்லுய்யா...இல்லன்னா உடன்பிறவாமல் கொல்லும் சகோதரி போட்டுத் தாக்கிடும்

வலைஞர் (கரகரப்புக் குரலில்) சரி சரி அமைதியாயிருங்க. சட்டசபைத் தேர்தல் வந்துடும் போலருக்கு. நாம இன்னும் சட்டையே செய்யாமல் அசட்டையாய் இருக்கக்கூடாது. இந்த தவனாண்டி எந்த சில்மிஷமும் செய்யலாம். நாம் சில்லுண்டியில்லையென்று நிரூபிக்க வேண்டும்.

பரிதிவிழும்புழுதி: யோவ் யாராவது விளம்பரம் போடுறாங்கன்னு அந்தாள்கிட்ட சொல்லுப்பா...மெகாசீரியல் பாக்கிற வியாதி அண்ணன் போகோவிடமும் தொத்திக்கிச்சு போல...சார்...சார் அழுதது போதும்...இந்தாங்க மெட்ரோ வாட்டர் குடிங்க...நான் சின்னப்புள்ளையா இருக்றச்ச

போகோ: அட தேவுடா...இப்புடுச் சூடு...

தொண்டர்: ஐயா ஏற்கெனவே நீங்க தெலுங்கர்ன்னாங்க...நீங்க இப்டிகா மாட்லாடினா வம்பு சார்

(இப்படி கூத்தும் கும்மாளமுமாக இருக்க சட்டென்று நாற்காலிகள் குலுங்குகின்றன...படபட'வென்னும் சப்தம் விஷ்விஷ்' என்று கதம்ப ஒலி. ரசிகர்களின் லப்டப் எகிறுகின்றது)

(இ(அ)டம் பொருள் ஏவல்: சந்தி'ரா காங்கிரஸ் கட்சியின் மிக மிக முக்கியமான கட்சி மாநாடு மெரினா பீச்சில் நடக்கின்றது.)

சனிசங்கர ஐ**: என்னய்யா இது...வலைப்பதிவர் கூட்டத்துக்குக் கூட ஆளுங்க அதிகம் வந்திருக்கும். நம்ம கட்சி மாநாட்டுக்கு ஆளுங்களே காணோம்.

தொண்டர்: என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? மேடையில பாருங்க... இவ்வளவு தலைவர்களை ஒரே இஅடத்தில் சேப்பதுக்கே தாவு தீந்து போச்சி... இந்த லட்சணத்துல தொண்டர்கள் கூட கேக்குதா?

இளகியகோவன்: இப்பெல்லாம் தமிழ் தமிழ்'ன்னு சிலர் காட்டுமிராண்டித்தனமாக அலைகின்றார்கள்

தொண்டர்: ஐய்யோ இந்தாளுக்கு வேற வேலையே இல்லையா? ஏற்கெனவே 'ஊது'பவர்'ன்னு சொல்லி வாங்கிக்கட்டிக்கிட்டாரு இப்போ இது வேறயா?

புஷ்பவனம் நாமமூர்த்தி: இதற்கெல்லாம் ஒரே தீர்வு என்னை தலைவராகப் போட்டுவிடுங்கள்

(வாய்திறக்காமல் இருக்கும் தலைவர் தாசனைப் பார்த்து தொண்டர்): இவங்கப்பாவே தேவலாம்ப்பா...பாக்குப் போடறதுக்காவது வாயைத் திறப்பாரு

ஏலகிரி பெரபு: என்னை யாருமே கண்டுக்கவோ, கண்டிக்கவோ இல்லை. நான் டில்லிக்குப் போறேன். அன்னைக்கிட்ட சொல்றேன்.

ஜெயம்தி: ஐயா நானும் கட்சியிலதான் இருக்கேன்யா... என்னை யாராவது திட்டவாவது செய்ங்களேன்...ப்ளீஸ்

கார்ட்டிக்: இளைஞரணி திரட்ட வேண்டும். யூத் இஸ் ப்யூச்சர்.

(தொண்டர் அர்த்தம் புரியாமல் தலையை சொறிய அருகிலிருந்தவர்) அட இவருக்கும் தலைவராக ஆசை வந்துடுச்சுப்பா...பாவகங்கை தொகுதியில நின்னுடுவாரு போலருக்கே...

(காங்கிரஸ் பாலா)காபா: வயசான காலத்துல நிம்மதியா தலைவர் பதவியில இருக்க உடமாட்டேன்றாங்களே

(முதல் மரியாதை ஸ்டைலில் தொண்டர் ஒருவர்) ஏம்ப்பா நம்ம பவனுக்கு சொத்து பத்தெல்லாம் எவ்வளவு தேறும்?

(டேய் சொத்துக் கணக்குக் கேக்குறான்...உருவுடா வேட்டிய என்ற சவுண்ட் வர வேட்டிகள் ரசிகர்களின் கண் முன்னே விஷ்விஷ்'என்று பறக்கின்றது. நடுவிலே வைகிங் அண்டர்வேர் தெரிய யாரோவொருவர் 'தூள்' என்று கத்தி கலகலப்பூட்டுகின்றார். புரியாத ஒரு சிறுமி அப்பாவியாய் 'வைகிங்கதானே சொன்னீங்க சித்தப்பா', என்று சொல்ல திரை)

தொகுப்பாளினி: என்ன மக்க்களே 4-D ஷோ ரசிச்சீங்களா? மீண்டும் உங்க்ளுக்காக அடுத்த வாரம் இதே டைமில வந்த்து உசிரை எடுக்றேன். அதுவரைக்கும் டாட்ட்டா...ச்ச்சீயூ...

1 comment:

Boston Bala said...

>>உடன்பிறவாமல் கொல்லும் சகோதரி
>>கார்ட்டிக்: இளைஞரணி திரட்ட வேண்டும். யூத் இஸ் ப்யூச்சர்.

:)))