Thursday, June 16, 2005

ஜெ ஜெ சில டைரிக்குறிப்புகள்

பின்புலம்: அகில உலகமே கொண்டாடும் பிளாட்டினத் தாரகை ஜெயமோகினி தனது செயற்கரிய செய்கைகளால் அண்டத்தையே ஆட்டிப் படைக்க முயற்சிகள் மேற்கொள்ள தனது தொண்டரடிபொடியார்களை அழைத்து மூளைச் சூறாவளி (brain stroming?) செய்கின்றார். இதோ காட்சி விரிகின்றது.

காட்சி - 1
இடம்: ஜெயமொகினியின் அலுவலக அறை
மாந்தர்: ஜெயமோகினி மற்றும் மேலே குறிப்படப்பட்டோர்

(ஜெயமோகினி வழக்கம் போல் 2 மணி நேரம் தாமதமாய் வர, நடுக்கத்திலும், பதற்றத்திலும் தொண்டரடிப்பொடியார்களின் கால் மற்றும் கைவிரல் நகங்கள் பாதி காலியாயிருந்தன)

கோழிமுத்து: ஜகம் போற்றும் அம்மா வாழ்க வாழ்க

(அனைவரும் வரிசையாக வாழ்த்துப் பத்திரம் வாசிக்கின்றனர்)

ஜெ: (சிடுசிடுக்கின்றார்) சரி...சரி... எதுக்காக நாம் கூடியிருக்கின்றோம்னு தெரியுமில்ல...

(அனைவரும் தலையாட்டுகின்றனர்)

ஜெ: சட்டுபுட்டுனு ஐடியாக்களை அவிழ்த்து விடுங்க...

இணையக்குமார்: அம்மா... கம்ப்யூட்டரே என்னான்னு எனக்குத் தெரியாது. என்னை கம்ப்யூட்டர் அமைச்சராக்கி அழகு பாத்தீங்க. நானும் மக்கள் கிட்ட A, B, C'ன்னு கதை உட்டேன். அடப் பாருங்க C'ன்னு ஒரு கம்ப்யூட்டர் மொழி இருக்காம். என்னே உங்கள் தீர்க்க தரிசனம்.

s.s. முந்திரன்: (மனதுக்குள்) ஆஹா ஆஹா அள்ளி உடுறாரே... கவனிச்சுக்கின்றேன்

இணையக்குமார்: அம்மா இப்போ புதுசா blog அப்படின்னு ஒரு technology. அங்கே தமிழ்ல கூட எழுதலாமாம். Latest Fashion'னே அதுதான். நாமகூட அம்மா'ங்ற பேருல ஒரு பிளாக் போடலாம்.

சோதா ரவி: என்ன நெட்ல பிளாட்டா? நமக்கும் ஒண்ணு வாங்கிப் போடுங்க.

இணையக்குமார்: யோவ் அது பிளாக். பிளாட்டுல்ல...

s.s. முந்திரன்: ஆமாம்மா நானும் கேள்விப்பட்டேன். ஏதோ சனிக்கோடுல எழுதலாமாம். நம்ம தோஷத்தையெல்லாம் எழுதியே கழிச்சிடலாம். ஏம்ப்பா யானையெல்லாம் தானம் கொடுத்தா அங்க வாங்குவாங்களா?

இணையக்குமார்: ஏய் முந்திரி அது யுனிகோடுய்யா... நானே தேவலாம் போல. அம்மா அங்கே தோழியர்'ங்ற பிளாக் ரொம்ப பிரபலம். நம்ம சின்னம்மா கூட சேந்து நீங்க ஒரு பிளாக் போட்டா பிச்சிக்கிட்டு போகும். என்ன சொல்றீங்க?

ஜெ: (யோசிக்கின்றார்) உருப்படியா ஒரு யோசனை சொன்னீங்க. ஆமாம் அங்க என்னென்னல்லாம் எழுதலாம்

இணையக்குமார்: என்ன வேணாலும் எழுதலாம் தாயி...

ஜெ: கோழிமுத்து, நீங்க என்ன நினைக்கிறீங்க...

கோழிமுத்து: என்னம்மா இப்படி கேட்டுட்டீங்க... 'அம்மா அந்தாதி'ன்னு உங்க புகழைப் பாடலாம். 'நிதி அதோகதி'ன்னு போட்டும் தாக்கலாம்.

S.S: அப்படியே 'பறக்கும் பச்சையும், காவியின் இச்சையும், மஞ்சளின் கொச்சையும்'ன்னு இலக்கியக் கட்டுரையும் எழுதலாம்மா

ஜெ: அட S.S. என்ன தமிழ்ல்ல பொளந்து கட்டுறீங்க?

S.S: எல்லாம் உங்க கடைக்கண் அருளாலம்மா

தளர்மதி: 'ஆற்காட்டிலிருந்து மொடக்குறிச்சி' வரைன்னு குறுநாவல் போடலாம்மா. அதை அப்படியே நம்ம 'வடமேற்குப் பதிப்பகத்துல' புக்கா போட சொல்லிட்டா சூப்பரா இருக்கும்மா.

ஜெ: கையெழுத்து போடவே ததங்கினத்தோம் போடுற ஆளு நீங்க குறுநாவலா எழுதுறீங்க... அடங்குங்க

சோதாரவி: அம்மா அப்படியே 'சாப்டு டாக்' (soft-talk) அப்படின்னு நம்ம 'சபி' பெர்னார்டை விட்டு பேட்டி எடுக்கச் சொல்லலாம். அதை நம்ப டிவிலயும், நெட்டிலையும் போட்டுறலாம்மா...முன்னாடி பேட்டியெடுத்த ஒரு சோமாறியைப் போட்டுத் தாக்கலாம்

ஜெ: பட்டை அடிச்சு, கொட்டை மாட்டுனத்துக்கப்புறம், பகுத்தறிவோட நீங்க செஞ்ச செஞ்ச ரெண்டாவது நல்ல காரியம் இது. டி.டி.வி. பணகரன் கிட்ட சொல்லி உடனே ஏற்பாடு பண்ணுங்க.

Slowசனா: அம்மா அப்படியே இந்த பொருமா, கோயதாஸ் ஆளுங்களுக்கு பஞ்ச் வைக்கிற மாதிரி நம்ம பிளாட்டுக்கு ஸாரி பிளாக்குக்கு 'தோழியர்எக்ஸ்பிரஸ்'ன்னு பேரு வைப்போம். இல்லேன்னா 'அம்மாஎக்ஸ்பிரஸ்' அப்பிடின்னு வைக்கலாம். எவனாவது எதுத்து கேள்வி கேட்டா மெயிலு, குட்ஸ¤, டிரெயினு இதுக்கெல்லாம் தமிழ்ல்ல என்னன்னு கேட்டு ஆட வெச்சிரலாம்...

ஜெ: என்ன 'சுலோ'? சூப்பர் ஸ்பீடுல போற? வெரி குட் வெரி குட். அடுத்த அறிக்கை உம் பேருல போட்டுடலாம்.

சுலோ: (தனது மகனான 'இளகிய'கோவனைப் பற்றிய கவலையில் மூழ்குகின்றார்) அம்மா... நம்ம டிவி மேல கேஸ் போட்டு முடக்கப் பாக்குறாங்க. ஆனா கம்ப்யூட்டரை யாரும் முடக்கமுடியாது. அதுனால உடனடியா பிளாக்கணும்மா.

S.S. என்னாது உங்க டிவி மேல கேஸ் போட்டாங்களா? ஆட்டைக்கடிச்சு, மாட்டைக்கடிச்சு கடைசியிலே டிவியையும் விட்டு வைக்கலியா மஞ்சத்துண்டு மடையன்?

சுலோ: யோவ் அது என் வீட்டு டிவியில்லையா? ஜெ ... சே... அம்மா டிவிய்யா ... (இழவு இந்தாளு வாயைத்தொறக்கலேன்னு யாரழுதா?)

(அப்போது 'ரண்டக்க ரண்டக்க குண்டக்க மண்டக்க' என்கின்ற மியூசிக் கேட்கின்றது. அனைவரும் கிலியோடு திரும்பிப் பார்க்கின்றனர். கரடி முடியை சிலுப்பியவாறு திக்விஜய T. ராஜேந்திரர் நுழைகின்றார்)

தி. எட்டுத்திக்கும் அம்மா பேரை சொல்லும். தித்திக்கும் அல்வா கூட கொல்லும். தகிக்கும் அய்யா வெச்சேன் ஆப்பு. கொதிக்கும் உங்கைய்யாவுக்கு கொடுடா சூப்பு.

ஜெ: சரி சரி ரொம்ப கடிக்காம விஷயத்துக்கு வாங்க.

தி. அட்றஸ் இலாதவங்களுக்கு முகவரியே நீங்கதான் அம்மா. முக' வரியும் நீங்கதான்.

(ஜெ புன்னகைக்க, கோழிமுத்து கடுப்பாகின்றார்)

கோழிமுத்து: அம்மா... முகவரி என்னம்மா முகவரி... சொத்து வரி, கலால் வரி, சுங்க வரி, வருமான வரி, அரி கிரி அசெம்பிளி எல்லாமே நீங்கதான்.

தி. வரி என்றவுடன் வரி'ந்து கட்டுவோரைக் கண்டால் சிரி சிரி என்று சிரிக்கத்தான் தோன்றுகின்றது. அம்மா உடனடியாக ஒரு இளைஞரணி தொடங்கவேண்டும். மூஞ்சிபுரம், கும்மியடிப்பூண்டி வெற்றிகள் வெறும் முகவுரையே. முடிவுரையாய் தமிழகத்தை பறித்து உங்கள் காலடியினில் கிடத்த எனக்கு ஆணையிடுங்கள்.

ஜெ: ஆமாம். நல்ல யோசனை. ஆனால் தலைவராக் கூடிய தகுதியுடைய இளைஞன் யார்?

தி. எதிர்க்கட்சியினைப் பாருங்கள். தாத்தா ஆகிவிட்டவர் இளைஞரணித்தலைவர். என் மகன் இப்போதுதான் 'கடிக்கவே' ஆரம்பித்துள்ளான். அவனொரு சுள்ளான். இதயத்திலும் இளைஞன் நான்.

(சோதாரவி இப்போது கடுப்பாகின்றார்)

சோ: தங்கத் தாயே...நூலறுந்த பட்டமும், வாலறுந்த வானரமும் நிலை கொள்ளாது (தனக்குத்தானே சிரித்துக் கொள்கின்றார்)

இணையக்குமார்: அம்மா பிளாக் ஆரம்பிச்சு ஓட்டுக் கூட போடலாம்மா இப்ப...

தளர்மதி: ஹையா ஜாலி... அப்ப ஓட்டக்கூட நம்ப ஆளுங்களே வெச்சே குத்திடலாம். ஆமா கொமாரு... எலக்ஷன் கமிட்டி கிமிட்டி கெடையாதுல்ல... ஐநூறை அள்ளி விட்டு அலப்பர பண்ணிடலாம்.

இணையக்குமார்: ஐபி அட்றஸ் மாத்தி ஓட்டு குத்தணுமாம். என்னமோ டைனமிக் அட்றஸ் இருந்தா நல்லதாம்.

S.S: என்னாது IB சதியா? டைனமைட்டா? அம்மா பொடா கேஸ¤ல போட்டுத் தள்ளிடலாம்.

இணையக்குமார்: (தலையிலடித்துக் கொள்கின்றார்) ஐய்யோ ஐய்யோ ஐயய்யோ கொஞ்ச நஞ்ச கம்ப்யூட்டர் அறிவும் போயிடும் போலருக்கே

(மேலும் பேசுவதற்கு 'சரக்கு' இல்லாததால் அனைவரும் தவிக்க, 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி' என்ற பேக்கிரவுண்ட் பாடலுடன் தோழியை நாடிச் செல்கின்றார் ஜெ)

பின்குறிப்பு: மேலே குறிப்பிட்டவை அனைத்தும் சுய கற்பனையே. Autos and Court cases will not be entertained.

14 comments:

பரி (Pari) said...

:)))

Anonymous said...

;-)

ஏஜண்ட் NJ said...

போட்டுத்தாக்குறீங்க போங்க !!

அப்பாடா, மாயவரத்தார் வந்து இத சொல்றதுக்கு முன்னாடி நா முந்திக்கிட்டேன்

இந்த நகைச்சுவைக்குப்பின், ஒரு crime story படிக்க ஆசையா? கொல், கவனி, செல்

Boston Bala said...

Part-II undaa
-balaji

குசும்பன் said...

Part-II

Need/Request Ideas BABA :-)

முகமூடி said...

::-)))))

Unknown said...

சூப்பரப்பு., ஆட்டோ வந்தா என்ன?, கேஸூ வந்தா என்ன? நம்மல்லாம் தனி மனுசங்க இல்லப்பு., சமுதாயம்! இணைய சமுதாயம்!!. ஹி!ஹி !!அவுங்களுக்கு மட்டும்தான் பில்டப்பு குடுக்கத் தெரியுமா என்ன?

குசும்பன் said...

வாங்க வாங்க !!!

அப்படிப்போடு, முகமூடி !!!

நலமா?

-L-L-D-a-s-u said...

அமைச்சரவை ரகசிய பேச்சை ஒட்டுக் கேட்டதற்காக உங்களுக்கு 'கஞ்சா' கேஸ் ரெடியாயிட்டு இருக்கு ..

Muthu said...

:-)

மாயவரத்தான் said...

நம்ம ஞானபீடத்தை அனுப்பி என்னோட கருத்தை இங்கே பதிய வெக்க சொன்னேனே.. வந்தாரா?! ;)

வீ. எம் said...

ஹா ஹா ஹா அருமை .
நம்ம டோ. பி அன்னாச்சிய விட்டுடீங்களே !
மொத ஆறு மாசத்துக்கு அவருதான் ப்ளாக்க பத்திரமா... பாத்துபாரு... !

அப்படியே "அனானிமஸ் பதிவு" வசதி பத்தி யாரச்சும் சொல்லி இருந்தா , அம்மாக்கு அறிக்கை விட.. வேற பேர்ல போஸ்டர் ஒட்ட எல்லாம் வசதியா இருந்து இருக்கும்..

வீ எம்

Anonymous said...

:-))

Anonymous said...

Auto illai...Sumo varuthu...

Umai kusumbpappaa

;-)