Thursday, June 16, 2005

போடா போடா புண்ணாக்கு

போடாத தப்புக் கணக்குன்னு...

கம்முன்னு மூலைல குந்திக்கினு குசும்பு பண்ணிக்கினு கிடந்தவனையும் மனுஷனா மதிச்சு மஸ்ட்-டூ கேட்டுக்கினதால, அப்பீட் குடுக்க வழியில்ல மாம்ஸ¥! வந்தது கோபம். பிடி புஸ்தகம்! சும்மா கிடந்த நாதாரிய உசுப்பி விட்டுட்டேளே!

நம்பள்கி புஸ்தக வாசனை ஜாஸ்தியில்லைபா! நிம்பள்கி போஸ்ட் படிச்சான். குசும்'படிச்சான்! கேஸ¤ கீஸ¤ போட்டுடா'தேள்...

மஸ்ட்-டூ உமக்கு ஞாபகம் இருக்கா? (அம்மா சுமதி அப்ப நீ ... சிவாஜி ஸார் வசனம் பாஸ¤). ரத்தம் ஒரே நிறம்'ன்னு யாரோ சுஜாதா மாமி எழுதிண்டு இருந்தா! மறந்து போச்சா நோக்கு! நாயகி எமிலி'ன்னு நினைப்பு. போர் மூள்வதற்குள் உன்னை கர்ப்பம் செய்துவிடுகிறேன் வா' அப்படின்னு வசனம் படிச்ச ஞாபகம் வருதே! யானைக்கால் கொண்டு தலை இடறுதல் கூட சிறுசா ஞாபகம்!

அம்..ஹீம்.. அப்புறம் சவீதா'ன்னு ஒரு ஜீவன். முத்தாரத்துல எழுதுனது. என்னமோ கிணறு... பூதம்... கேனையா... அப்படீன்னு... ஒரு தொடர்கதை. ஸ்கோல்ல, ஸ்டோரி டெல்லிங்ல (காடுவெட்டி தமிழ்க்குடி தாங்குவோர் மன்னிக்க) அண்ணாச்சி (நாந்தான்) சுகுற்றா அவரோட கதையை அள்ளி வுடுவேன்.

அட.. பழைய நெனைப்புதான் பேராண்டி... அப்படின்னு டோண்டு ஸார் ஆப்படிக்கு முன்னர்...

படிச்ச ரெண்டு புக்கைப் போடுறதுக்குள்ள மூச்சும், மூச்சாவும் முட்டுது. இது நாயமா மஸ்ட்-டூ? இருந்தாலும் அய்யா ஆட்டைக்கு வாரன். தடுக்க ஏலுமா?

அவா அவா பொஸ்தக லைப்ரரி படம் காமிக்கறச்சே நான் படிக்கிறதே வலைப்பூக்கள்தான். பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு. அப்படியே படிச்சிடுவேன். நான் மேயற பூக்கள் சில இங்கே...

மேரா டோலக் by கோல்டுபெல் - பிடித்த வரிகள்: ஓல்டு மாங்க் என்னும் ரம்மைக் குடிப்போமடா...சாலைகளெல்லாம் சலம்பல் செய்யவே
பிக்கல்: by தமிழ்சாம்பு இவர் பொதுவாகப் புனைவது பிடிக்கும்
Tulsi மேடை by பெரிய மேடம்: நினைத்தது, நினைக்காதது, பார்த்தது, பார்க்காதது, கேட்டது, கேட்காதது இப்படி எதைப்பற்றியும் படிக்கலாம்.
தூங்க முடியல by சுகவாசி: சில தூங்கமுடியாத நேரங்கள், சர்ச்சசைகள்
Friendly Sneeze by F(r)iend : ஊறலில் திளைத்த நண்பன் உள்ளதை எ(உ)ள்ளல்
இலைகளின் மறைவில் by துவாரக்க்கா: ஹிஹி நியூமராலஜி புக்குங்கோ
பிரெண்ட்ஸ் by பிரெண்ட்ஸ் இது ஒரு 'கூட்டு'ப் புத்தகம். சமையல் குறிப்புகள் தேடி ஏமாற வேண்டாம்
பெயிண்ட் பிரஷ் by குன்னக்குடி வைத்தியர் ஜினிமா ஜிகிடி பகடி'க்கு குறைவில்லை.
போட்டு சாத்து by ஹல்வா சிட்டிபாபு தலை நிமிர்ந்து தமிழ் படிக்கலாம்
பெ(க)ண்ணோட்டம் by கவி கருணாதாஸ் : கருத்துக் குறிப்பு விமர்சன விவாதங்கள்
சொத்து by சொத்து அடி மனதின் ஆழத்தில் கொஞ்சம் அப்படி கொஞ்சம் இப்படி
அடாவடி by அடிதடி சோடாபுட்டி, சைக்கிள் செயின், ஆசிட் முட்டை இத்யாதி சைபோக் by சிவிதா மிஸ்ஸல்ல மிஸ்ஸஸ¤மல்ல ஆணல்ல பெண்ணல்ல நீயல்ல நானுமல்லாத கண்ணோட்டம்
கழுவுதலும், நழுவுதலும் by நழுவி தப்பு தப்பா போடுவேன்னு எதிர்பார்த்தா அதுக்கு நான் பொறுப்பில்ல ;-)

இப்படியே இன்னும் பல பொஸ்தகம் பத்தி போடலாம். நம்மகிட்ட சுமார் 574 புத்தகம் இருக்குங்க. நம்பர் கூட எகிறிகிட்டே இருக்கு. ஆனா authors எல்லாம் அடிக்க வர்ற மாதிரி இருக்கு. வுடு ஜீட்.

1 comment:

SnackDragon said...

//மேரா டோலக் by கோல்டுபெல் - பிடித்த வரிகள்: ஓல்டு மாங்க் என்னும் ரம்மைக் குடிப்போமடா...சாலைகளெல்லாம் சலம்பல் செய்யவே//
:-))