Friday, February 03, 2006

வேலி தாண்டிய வெள்ளாடுகள்

1. உயிர்கையும் காலத்தடமும்: குட்டிச் சண்டையை ஊதிப் பெருசாக்குறதுல வெகுஜன ஊடகமே பிஸியாயிருக்கும் போது சின்ன இலக்கியம் பத்தி கேக்கவே வோணாம். ஏதோ இணையத்துல நம்ம மக்கள் கருத்து சொதந்திர கண்ணாயிரங்களாய் கோழிக்கூட்டமாய் சீய்த்துப் போட்டதும் உலகமறியும். அய்ங் இணையத்துல கூட இலக்கியமான்னு ஆச்சரியப்பட்டு நம்ம மனுசப்புதல்வரோ ஒரு படி மேலப் போயி அல்லாப் போஸ்டரையும் சுகுற்றா ஊர் பேரோட தான் புக்குல ஒட்டிப்போட்டாரு. "அய்யோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு"ன்னு கடல் கடந்து சேதி வர மீட்டரு ஓட ஆரம்பிச்சுது. உருவிப்போட்டதை ஒரு வார்த்தை சொல்லலியேன்னு உயிர்கை புடிச்சிட்டு காலத்தட வேட்டையனிடமிருந்து காப்பாத்துன்னு "ரரா ரரா"ன்னு ரரா இமயமலைக்கு ஜூட் வுட்டுட்டதா பட்சி சொல்லுது. சபாஷ் சரியான போட்டி. லக்கலக்கலக்கலக

2. பிறபஞ்ச வெளிச்சம்: தேவையா நைனா உனக்கு? எப்பிடி இருந்த நீங்க இப்பிடி ஆயிட்டீங்களே'ன்னு விவேக் காமெடியாப் போச்சிது பிறபஞ்ச பல்டி. அமெரிக்காவுல அடிச்ச அணிந்துரையை அதுக்குள்ள மறந்துட்டு சண்டைக்கோழிதான் சாக்குன்னு குட்டி ஸ்டண்ட் போட்ட ஆசாமியை "என்னான்னு சொல்வேனுங்கோ"? (எஸ்ராவுக்கு எதிரா) "துப்பட்டாவை ரெடி பண்ணுங்கோ"ன்னு உசுப்பேத்தி விட்டு வேடிக்கை பாக்குறதா எலக்கிய வட்டாரம் பொலம்புது. என்ன பண்றது? அ(ட) மார்க்ஸ் ஷொன்னது போல் எல்லாம் பா.பி. (நன்றி பாலாஜி) பண்ற வேலை. எஸ்ரா பா.மு.'வா (பாபா'வுக்கு முன்) இருந்த வரைக்கும் கவலையில்லை. ஆனா பா.பி. (பாபாவுக்கு பின்) கதையே வேற... பிற பஞ்சத்தில் இதெல்லாம் சகஜமப்பா! அது சரி க.மு. (கஸ்தூரிமானுக்கு முன்) க.பி. (கஸ்தூரிமானுக்கு பின்) அப்பிடின்னு நம்ம நாகர்கோவில் நாயனம் யாரும் வாசிக்கலையா? காலத்தட ஒத்தூத கச்சேரி கன ஜோரா இருக்குமே! தத்தரீனா...ஊத்திக்கினு கடிச்சுக்கலாம்... கடிச்சிக்கினு ஊத்திக்கலாம்!

3. கெட்டிமேளம்: விஷ(ம)ம் தூக்கல்தான். ஆனாலும் பாவம் நல்ல புள்ளாண்டான். இருந்தாலும் என்ன பண்றது? விதின்னு ஒண்ணு இருக்கே... வெள்ளாட்டுப் புள்ளைக்கு வேட்டு வெச்சிட்டாளாம். எம்மாம் நாள்தான் பயர்பாக்ஸ் உலாவியிலேயே குலாவிக்கிட்டு இருக்கிறது? கரும்(ப்)பு சங்கருக்கு கண்ணாலங்கோ! வாழ்த்த வயசில்லைன்னாலும், அதிமுக அமைச்சர் போல பவ்யமாய் மரத்தடியில் பலியாடு கடுதாசி போட்ட நம்ம ரசிகருக்கு ஏதோ நம்மாள ஆன ஒரே காரியம்... "ஆயுஷ்மான் பவ" அக்காவுக்கு "தீர்க்க சுமங்கலி பவ". (இப்பதிவிற்கும் பாபாவின் குங்கும பதிவு பின்னூட்டங்களுக்கும் சம்பந்தமில்லை. அது குறித்து மேலதிக தகவல்கள் பிறகு :-)

4. மச்சான் பேரு மருத: பேருல என்னாங்க இருக்கு? மேட்டரைக் கவனிங்கோன்னா மக்கா கேக்க மாட்டேங்றா! பேரைச் சொல்லு மீட்டர் போடுறேன்னு ஒரே அநியாயம். அழிச்சாட்டியம். அக்குறும்பு. என் செல்ல ஸாரே! நியாயமான அநாநி'க்குகூடவா கடுக்கா? லக்ஷ்மன் ரேகாவை கொஞ்சம் (நீளமாய்) இழுத்துப் போடுங்கோண்ணா! இப்பக்கூட பாருங்க... நியாயமான அநாநிங்க நெட்டுல இருக்காங்க!!! (மேட்ரிக்ஸ் ஹீரோ என்னப்பா ஆனாரு?) சோழ நாட்லேர்ந்து ஒருத்தர்! (ஆமா அவரு மச்சான் பேரு மருத... அழகா ஏறி வந்தான் ஒரு *ருத அப்டீங்றாங்களே... உம்மையா?) டினோசரஸாய் ஒருத்தர்! பேரு வைச்ச அநாநிங்க ஓகேவா பாவா? (இனிமே வலை பதியுற அல்லாரும் போட்டா போட்டாதான் திரட்டுவோம்'ன்னு தனியுத்தரவு போடாம இருந்தா சரி. ஏன்னா போட்டா புடிச்சா ஆயுசு கம்மின்னு ஆத்தா சொல்லிச்சி ;-)

5. காணாமல் போகும் கருத்துகள்: ஏம்ப்பா அன்னிக்கு போட்ட பதிவைக் காணோமே. இன்னிக்கு வுட்ட பின்னூட்டத்தைக் காணோமே. அப்பிடின்ன்னா நீ மாறிப் போயிட்டியா? பயந்துட்டியா? இப்பிடி கொடச்சல் கொடுக்கிற ஆளுங்க பெருகிப் போயிட்டாங்கப்பா... இனிமே டெய்லி என்னோட 169 (இத்தோட 170 ஹிஹி நம்பர் கேம்) பதிவுகளுடன், பின்னூட்டங்களுடன் பத்திரமா இருக்கான்னு செக் பண்ணிட்டுதான் அதுத்த பதிவு. ஏம்ப்பா இதே கேள்விகளை மின்கம்பம் பார்த்தவுடன் ஏற்படும் நசநச உணர்வுகளுக்கு உடனடி வடிகால் தேடி நனைத்துவிட்டு, பின் அழிக்கும் பேரறிஞர்களிடம் கேட்கக்கூடாது? கேக்கமாட்டீஹ அப்பு... ஏன்னா அவுங்க வுடுவாங்கல்ல ஆப்பு!

கொசுறு:

வாழ்வே மாயம்: "யார் யார்க்கு என்ன தேசமோ இங்கே யார் யார்க்கு என்ன வேசமோ" என்று விச்ராந்தியாய் பரதேசம் (அட வெளிநாடப்பா) போனவர் விசனப்படுகின்றாராம். ஹே ராம்! ஹே ராம். கவலைப்படாதே சகோதரா... எங்கம்மா கருமாரி Watch'சிருப்பா... போகுமிடம் சேத்து வைப்பா கவலைப்படாதே சகோதரா

வர்ட்டா...

விரைவில் எதிர்பாருங்கள். எங்கும் தமிழ் தமிழ் தனித்தமிழ்.

5 comments:

முகமூடி said...

சிற்றிலக்கிய உலகத்த பத்தின பின்னூட்டம் ரெண்டும் பிரியல. குற்றிலக்கிய சம்மேளன உலகை பத்தின ரெண்டும் பிரியுது.. ஒன்னு சிற்றா குற்றான்னே பிரியல... நடக்கட்டும் நடக்கட்டும்.

Anonymous said...

yaruppa athu paradesam ponavar?

Boston Bala said...

பதிவிற்கு கடுமையான கண்டனங்கள்.

ஓவ்வொரு வரிவரியா மறுக்க ஆசைதான். தங்களின் நேரமின்மையை வெளிச்சமிட எனக்கு நேரமில்லை.

1. ---இமயமலைக்கு ஜூட் வுட்டுட்டதா ---

உங்களின் நேர்மையின்மை இதில் தெரிகிறது. 'ஜூட்.. ஆர் யூ ரெடி' என்பது ஸ்ரீகாந்த் நடித்த டப்பா படம். மேலும் ஜூட் தாவரம் இமயமலையில் வளராது என்னும் அடிப்படை அறிவியல், நுட்பியல், பூகோளவியல், தாவரவியல், இதழியல், என்று இயல்-இசை-நாடகம் அறியாதவர் நீங்கள்.

2. ---க.மு. (கஸ்தூரிமானுக்கு முன்) க.பி. (கஸ்தூரிமானுக்கு பின்)---

தங்களின் நாற்றம் சகிக்கவில்லை. குட்டி ரேவதியை கண்டித்தவர்களால், முன்னாள் மதராஸ், இன்னாள் சென்னை மிஸ் அழகி கஸ்தூரியைத் தலைப்பில் போட்டு கொச்சைப்படுத்தியவரை தாங்கள் கண்டிக்காமல், குளிர் காய்வது சமுதாயச் சீரழிவின் பிரதிபலிப்பே.

3. மேல்கைண்ட் நாயகர்; வரும் பத்தாம் தேதி - ஆண் இனம் அணி திரளும், பெண் இனம் பேராதரவுடன் பங்கு கொள்ளும் ஈ-புக் வெளியீட்டாளர்; மீனா...வை மட்டும் குறிப்பிடாமல் ஒதுங்கி இருப்பது குறித்து தனிப் பதிவே போடலாம்.

4. புரியவில்லை
---*ருத ---
எருத? கருத? கிருத?

5. ---இருக்கான்னு செக் பண்ணிட்டுதான்---

தங்கள் செக் செய்யும் நிரலியை எழுதிவிட்டீர்களா? செயலாக்கத்தீற்கு எத்தனை நாள் எடுத்தது? அதை ஏன் மற்ற வலைஞர்களுடன் பகிரக் கூடாது? தாங்கள் மட்டும் வைத்துக் கொண்டு அழகு பார்த்து ரசிப்பது, குமட்டுகிறது.

பின்குறிப்பு(கள்):
1. நகைக்குறி ஒன்று கூட இல்லாததை கவனிக்கவும்.

2. முன்மொழிபவர்கள் (மறுமொழிக்கு எதிர்ப்பதம்) மட்டும் கலர் கலராக வண்ணம் அடித்து பேதம் காட்டும் ஓரவஞ்சனை வருத்தம் அளிக்கிறது.

3. என்னைப் போல் பதில் போடுபவர்களும் இயங்கு எழுத்துருவில் தேசிய மொழிகள் 22-ஐயும் கொண்டு வந்து நல்லிணக்கத்தை மேம்படுத்த வலியுறுத்துகிறேன்.

ஜெ. ராம்கி said...

//உருவிப்போட்டதை ஒரு வார்த்தை சொல்லலியேன்னு உயிர்கை புடிச்சிட்டு காலத்தட வேட்டையனிடமிருந்து காப்பாத்துன்னு "ரரா ரரா"ன்னு ரரா இமயமலைக்கு ஜூட் வுட்டுட்டதா பட்சி சொல்லுது. சபாஷ் சரியான போட்டி. லக்கலக்கலக்கலக

அப்படியா? :-)

க்ருபா said...

¬†¡, ¾í¸û À¾¢Å¢ø ÅÕÁÇÅ¢üÌ ¦¿ÉôÒÄ ¦ÅȢ¡À¡. ¾ýÂÉ¡§Éý.

ŢơŢüÌõ (ÓÊó¾¡ø ¦Á¡öÔ¼ý, ÓÊ¡Ţð¼¡ø ¦ÁöÔ¼ý ÁðÎõ) Åó¾¢ÕóÐ ¾õÀ¾¢¸¨Ç ¬º¢÷ž¢ìÌÁ¡öì §¸ðÎ즸¡û¸¢§Èý.

க்ருபா