நம்ம கோனார் நோட்ஸும் புரியவில்லையாம். அட ஏடுகொண்டலவாடா, எண்ட குருவாயூரப்பா மற்றும் இன்னபிற உள்ளங்கவர் கள்வர்களை உடனழைத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
கொஞ்சம் ரிலாக்ஸ்டா இந்த ஜோக்கைப் படிங்க. (டிஸ்கிளைமர்: யாரையும் மலினப்படுத்தும் உத்தேசமில்லை. ஜோக் http://www.funtoosh.com தளத்திலிருந்து உருவப்பட்டது. எல்லாப் புகழும் அந்த தளத்திற்கே!!!)
ஹனுமான்ஜீ எம்மதத்தைச் சேர்ந்தவர் என்று இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மற்றும் சீக்கிய அன்பர்கள் விவாதித்துக் கொண்டிருந்தனர்.
இந்து: ஹனுமான்ஜீ ராம்ஜீயை வழிபட்டவர். ராமர் இந்துவாகையினால் ஹனுமாஜீயும் இந்துதான்.
முஸ்லிம்: இருக்கவே முடியாது. சுலைமான், ரஹ்மான் போல ஹனுமான் என்ற பெயர் வருவதால் அவர் முஸ்லிம்தான்.
கிறிஸ்துவர்: ஒருக்காலும் இருக்காது. Heman, Superman போல Hanuman இருக்கின்றது. எனவே அவர் கிறிஸ்துவரே.
சீக்கியர்: (பலமாக மறுதலிக்கின்றார்) யாரோட பொண்டாட்டியவோ, யாரோ தூக்கிட்டுப் போயிட்டாங்களாம். அதுக்குப் போயி தன் வாலுல தீயை வைச்சுக்கிட்ட ஹனுமான் கண்டிப்பாக சர்தாராகத்தான் இருக்க வேண்டும்.
படிச்சீங்களா? ராம்வாச்சர் என்பவர் தனது பதிவில் சில ஐபீ அட்றஸ்களை வெளிப்படுத்தினாராம். தனது ஐபீயை ஏன் போலிகளோடு ஒப்பிடும்படியான பதிவில் வெளியிட்டீர்களென்று முகமூடி தன்னோட பதிவுல கேள்வி கேட்டாராம். உடனே தன்னோட ப்ளாக்குல தீப்பதிவு போட்டு உடனே வழக்கம் போல அணைத்தும், பின் அழைத்தும் விட்டார் அருமை அண்னை. இப்ப சொல்லுங்க யாருடைய பதிவுக்கோ, யாரோ கேள்வி கேட்க தீயை வைச்சுக்கிற அண்னை அனுமந்துசிங் யார்? முகமூடி பதிவுல ஒரு இடத்தில் தனது பெயர் இழுக்கப்பட்டதாய் கூறுவார். சரிதாம்பா! அதுக்கு மட்டும் பதிலச் சொல்லிட்டுப் போகவேண்டியதுதானே? இல்லேன்னா நானும் வாச்சும் ஒண்ணு! இதை அறியாதவன் வாயில ஐபீ மண்ணு!ன்னு சவுண்ட் ஜோரா உட வேண்டியதுதானே!!! அடடே அதுல அவரே பின்னூட்டம் போட்டுகினு கொஞ்ச நேரம் ரசிச்சப்போ போலிகளே வெட்கப்பட வேண்டும். என்ன போலி பின்னூட்டங்கள் கிராமத்து அக்மார்க் ரக இலக்கியம் எண்டால் அண்னையோடது பின்நவீனத்துவ இலக்கியம். ஏனெண்டால் அது பாவம் ஏதோ நாயின் பின் காயத்தைப் பற்றி விலாவாரியாக விளக்கியது (பின்னூட்டத்தைத் தேட வேண்டாம். வழமைபோல் அது ஜண்டுபாம் விளம்பர வலியைப் போல் காயப். போயே போச். போயிந்தே. It's Gone!) இதே போல் வரும் பின்னூட்டங்கள் ஸ்மைலியோடு போடப்பட்டால் அது பகிடி (தமிழ்குஷ்பூவில் அங்கீகரிக்கப்பட்ட அங்கதத்தை பகிடி என்பார்கள்) என்று கூறுகின்றார் கொளுகை பரப்புச் செயலாளர் கெடா வெட்டி கர்னாடிக் டமாஸ். போலிகளுக்குப் புரிந்தால் சரி!!! ஏதோ என்னாலானது... நாராயண நாராயண!!!
சரி... ஆடி(ய)வரைக்கும் சின்னதா மீண்டுமொரு குத்தாட்டம் போடலாமா? கடந்த ஜூன் மாதம் 30'ம்திகதி அண்னை இட்ட இந்தப் பின்னூட்டத்திற்கு பதிலென்ன?
நானிருக்குமிடம் "நண்பர்" மூலம் தெரிந்தாலும், கூடிப் பேசலாம் வாங்க என்று "நண்பர்" மூலம் அழைத்தாலும், போகி (Bogi) என்று தம்போலா கொரலு கொடுத்திட்டு பொஸ்ரன் ரீ பார்ட்டிக்கு பதிவு போடுறீரே? எங்கே உம்ம பின்னூட்டத்தை உண்மையெண்டு நிரூபியுங்கோ... கேஸு கீஸு எல்லாம் போடமாட்டேன் பாஸு. உம்ம மோப்பபல்லாவை (ஐபீயை முகர்ந்து தெரிவிக்கும் சொப்ட்வேர்; பல்லா என்றால் சிங்களத்தில் நாய்; கர்மம் கர்மம் கோனார் நோட்ஸ் போட்டே கண்ணைக்கட்டுதே) மாத்துங்கோன்னு விண்ணப்பிச்சாலும் இன்னும் நான் பத்து மைல் தூரத்தில் இருப்பதாய் பகல் கனவு காணும் உம்மை என்னான்னு சொல்வேனுங்கோ! உம்மை தெய்வமாய்ப் பார்க்கும் பக்த அடிப்பொடிகளை நினைத்தால்தான் பாவமாக இருக்கின்றது. தர்க்க ஸாஸ்திரப்படி இல்லாவிட்டாலும், உம்மால் நிரூபணம் செய்ய முடியாத பட்சத்தில், உமக்குத் தெரிந்த நியாயமான வழியில் தவறை ஒத்துக்கொள்ளலாம். அதுவரை ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே அடுத்தவனுக்கு பட்டை நாமம் போடுவோமே இனி ஆடுவோமே ;-)
தமிழ்ப்பதிவுகள்
Thursday, February 09, 2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இப்படித்தான் ஒரு காலத்துல என்ன நடந்துச்சின்னான்னு ஒரு Deja-Vu பதிவையும் 50 பின்னூட்டங்களையும், மொத்தம் ஒரு 4057 வார்த்தையில இங்க ஒரு பின்னூட்டமா போட்டா பிரசுரிப்பீங்களா? சம்பந்தா சம்பந்தம் இல்லாம இவ்ளோ பெரிய பின்னூட்டத்த ஒரு பதிவா எளுதி சுட்டியா கொடுக்காம இப்படி பின்னூட்டமா தர்றானேன்னு மட்டுறுடுறுத்தல் பண்ணா, உங்க கருத்து சுதந்திரத்த திட்டி உங்க நேர்மைய சந்தேகப்படுவேன். பரவாயில்லையா?
Post a Comment