கொஞ்ச காலமாகவே ஆபாசப் பின்னூட்டங்களால் தமிழ் வலைப்பதிவர்கள் தாக்கப்பட்டது புதிய செய்தியல்ல. இதோ தனது குவியம் - 24 பதிவில் தானே பெயரிலி விட்டுக் கொண்ட ஆபாசப் பின்னூட்டத்தைப் பாருங்கள்... போலிப் பெயர்களில் உண்மையான ஆபாச பின்னூட்டமிட்டர்(கள்) பெயரிலியிடம் அரிச்சுவடியிலிருந்து பாடம் படிக்க வேண்டிய அளவிற்கு இலக்கிய ரகப் பின்னூட்டமிது (படம் பெரிதாகத் தெரிய மௌசை படம் மீது கிளிக்கவும்):
இப்பின்னூட்டம் வந்த நேரம் Mon Feb 06, 05:12:08 PM 2006. பிறகென்ன நினைத்தாரோ தெரியவில்லை. Mon Feb 06, 06:43:42 PM 2006 (ஏறத்தாழ ஒன்றை மணித்தியாலம்) கழித்து அப்பின்னூட்டத்தை எடுத்துவிட்டு கீழ்க்காணும் பின்னூட்டம் விட்டார்.
முந்தைய ஆபாசப்பின்னூட்டத்தை வாசித்தீர்கள்தானே என்று அநாமதேயம், அப்டிப்போடு, டிசே தமிழனை குசலம் விசாரிப்பதென்ன? பின்னூட்டத்தை தானே நீக்கிவிட்டதாக ஸ்மைலியோடு சொல்லும் பாங்கென்ன? நல்லவேளை இப்பின்னூட்டம் இன்னும் அப்படியே இருக்கின்றது.
பெயரிலியின் தகிடுதத்தங்கள், போலி அரசியல் நிலைப்பாடுகள், திசை திருப்பும் வேலைகள், அவதூறுப் பிரச்சாரங்கள் எல்லாம் தொடர்ந்து வெளிவரும். என்ன செய்வது பெயரிலி மட்டும்தான் இணையப்படம் காட்ட முடியுமா என்ன? வழமை போல் ;-)
பின்குறிப்பு:
1. படங்கள் டயல்-அப் முறையில் வாசிப்போர்க்கு மெதுவாக லோட் ஆகலாம். முடிந்தவரை குறைவான File Size'யை தேர்ந்தெடுத்து வெளியிடுகின்றேன்.
2. எனது முந்தைய பதிவின் சவாலுக்கு பெயரிலியிடமோ, அவரை ஆதரிப்பவரிடமிருந்தோ பதில் இன்னும் கிட்டவில்லை. இருப்பினும் சவால் இன்னும் சாகவில்லை.
3. இப்பதிவு ஸ்டீரியோ டைப் பதிவுகள் வகையிலில்லை. எவ்வளவு காலம்தான் ஏமாற்றுவார் அல்லது ஏமாறுவார் இணையத்திலே?
4. ஜூகல் பந்தியையும் தொடருவேன்.
தமிழ்ப்பதிவுகள்
Wednesday, February 15, 2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பொலிடிக்ஸ், போலிமிக்ஸ் (polemics) போன்றவற்றை ஒதுக்கிவிட்டு 'பின்புறம்' என்றவுடன் நினைவுக்கு வந்த சம்பவம்:
யாதவப் பிரகாசரிடம் சிஷ்யனாக இராமானுஜர் இருந்த காலம்.
தைத்திரேய உபநிஷதத்துக்கு உரை எழுதி/சொல்லி வருகிறார் குரு யாதவப் பிரகாசர்.
திருமால் உதட்டின் இதழ்கள் 'குரங்கின் ஆசனவாய்'க்கு ஒப்பாக இருக்கிறதாக சீடர்களிடம் விவரிக்கிறார். இராமானுஜரின் கண்களில் நீர் சொரிகிறது.
'என்னடா இராமானுஜா! உவமையைக் கேட்டு ஆனந்த பாஷ்பமா?' என்று பெருமிதத்துடன் வினவுகிறார் யாதவப் பிரகாசர்.
'இல்லை குருவே... இப்படி தப்பாக புரிந்து கொண்டு எங்களுக்கும் தவறாக பொருள் சொல்கிறீர்களே என்னும் வருத்தம்தான்'
'அப்படியா? அந்த வரியை வேறு எப்படி எடுத்துக் கொள்வது?'
'தாமரை இதழ்களின் உள்ளே இருக்கும் விரியாத மடல்களையும் பகவானின் இதழ்களையும், தைத்திரேய உபநிஷதம் உவமிக்கிறது' என்று அதே ஸ்லோகத்தைப் பிரித்து பொருள் காட்டி விளக்குகிறார். (கரெக்டான உபநிஷத வரிகள் கைவசம் இல்லை; கூகிளில் கிடைக்கலாம் :-)
யாதவப் பிரகாசருக்கு கடுப்பு மேலிடுகிறது. சிஷ்யனை கங்கையில் தள்ளி கொலை செய்ய திட்டம் போடுகிறார்.
இராமானுஜர் வரலாறு சுவாரசியமானது. ஆதிசேஷனின் அம்சம்; பதஞ்சலியின் அடுத்த ஜென்மமாகக் கருதப்படுபவர்.
பதஞ்சலி தன்னுடைய சிஷ்யர்கள் அனைவரையும் பஸ்மமாக்கிய கதை, யாதவப் பிரகாசரே சிஷ்யனைப் போட்டுத் தள்ள ப்ளான் செய்தது, குருவை மிஞ்சிய சிஷ்யனாக இளவரசியின் பேயை ஓட்டியது என்று மேஜிகல் ரியலிஸம், அண்டாககசம் கலந்து திரைப்படமாக மசாலா செய்தால் சூப்பர் ஹிட்டாகும் வாய்ப்பு உண்டு.
Post a Comment