Wednesday, February 22, 2006

பயாஸ்கோப்பு படம் காட்டுறாங்கோ

மன்னாரு கோபுரம்னா என்னாப்பா?
பெண்கள் பூசுமஞ்சள் பிராண்டுபா
அப்ப குப்பைன்னா?
இத்தான்னா வோணாங்றது? வம்புல மாட்டி வுடப் பாக்குறியே...
அட சும்மா சொல்லுப்பா
சரி உனக்குப் புடிக்காதது எனக்குப் புடிச்சா அது குப்பை
அப்பிடிப் போடு அருவாள

இப்ப படங்களப் பத்திப் பாப்போம். சினிமாங்றது ஒரு சிறந்த பொழுதுபோக்கு ஊடகம். ஒரு கனவுத் தொழிற்சாலை'ன்னு கூட சொல்லுவாங்க. மத்த தொழிலைப் போலத்தான் சினிமாத் தொழிலும். மொதலு போட்டு லாபம் பாக்கத்தான் பட மொதலாளிங்கோ நினைப்பாங்க. இதுல மக்களுக்கு சேவை செய்றது அது இதுன்னு பீலா யாராவது உட்டா நம்ப முடியுமா?

கேஎஸ் ரவிக்குமாரை தெரியாத ஆளுங்க இருக்க முடியாது. கிச்சடி டைரக்டர். தன்னோட ஒரே பார்முலாவை கிண்டி கிண்டி படம் கொடுக்குறதுல நிபுணர். அவர் ஒரு பேட்டியில சொன்னாரு: "மொதலு போடறவரோட கையைக் கடிக்காமத்தான் நான் படம் பண்ண விரும்புறேன். நானும் கொஞ்சம் சைடுல பணம் பண்ணிக்கிலாமுல்ல. சேவை, மெசேஜ் அப்பிடியெல்லாம் கொடுக்கறதுக்கு நான் இல்ல." பாரதிராஜா வேதம் புதிது எடுத்து கையைச் சுட்டுக்கிட்டு கொடி பறக்குது எடுத்து கல்லப்பொட்டியை நிரப்பினார். அப்ப நொந்து போயி அவரு சொன்னது "வேதம் புதிது போல பத்து படம் பண்றதுக்கு ஒரு கொடி பறக்குது தேவைன்னு." இப்பிடி சொல்லிக்கிட்டே போகலாம்.

ஆனா எதுக்குமே உணர்ச்சிவசப்படும் தமிழன் நிலைமை அப்பிடியா சினிமாவைப் பாக்குது? பத்து ரூபாய் டிக்கெட் எடுத்துட்டு பத்து நோட்டம் சொல்லுது. குவி லென்ஸ் போட்டு பிரேம் பை பிரேம் ஆராய்ச்சி பண்ணி, "காதல் பட கிளைமாக்ஸில் ஹீரோ பைத்தியமாய் ஞ்ஞஞ்ஞஞன்னு குத்திக்கும் போது பேக்கிரௌண்டில் பெரியார் சிலை தெரிஞ்சுது... ஹீரோ தாழ்த்தப்பட்ட சாதிங்றதுனால உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஹீரோயினோட டைரக்டர் பஸ்ட்நைட் வெக்கில்லேன்னு"... அடப்பாவிங்களா பிஹெச்டி பண்ண வேற நல்ல விஷயங்களா கெடைக்கல்ல...?

ஏதோ படத்தப் பாத்தமா... அடுத்த வேலையைக் கவனிப்போமா'ன்னு இல்லாம சனங்களின் கலைஞன், சமூகக் காவலன், குப்பை/கோபுர கோவிந்தன்'ன்னு குலவையைப் போட்டுகிட்டு... புடிச்சா படத்தைப் பாருங்க... புடிக்கலேன்னா பாக்காதீங்க As Simple As That (இப்பெல்லாம் இப்பிடி இங்கிலீபீஸுல எழுதி பதிவைப் போட்டாத்தான் இயல்பா இருக்குன்னு சொல்றாங்கப்பா). டாக்குமெண்டரி, அவார்ட் பிலிம், குறும்படம் போல நல்ல விதயங்களை இலக்கியமாய்ப் பேசுங்கோ பாஸு. அத்தோட ஆடியன்ஸ் வேற. திரைப்படத்தோட நோக்கமும், ஆக்கமும், ஆடியன்ஸும் வேற. ஏதோ என்னை மாதிரி பாமர விசிலடிச்சான் குஞ்சுகளுக்காக பாவம் திரைப்படங்களை வுட்டுடுங்க மாம்ஸூங்களா!!!

நடிகநடிகையர் மத்த வேலை பாக்கிறவங்க மாதிரிதான்யா. கூலிக்கு வேலை. ஆன்னு அவங்கள நாம பாக்கிறோம். ஒரு சேஞ்சுக்கு அவங்கள கூட்டியாந்து நீங்க பாக்குற வேலையைக் காமிங்க. "அட எப்டிப்பா இப்பிடி முடியுது"ன்னு உங்களோட நாலு வரி ஜாவாக்கோடுக்கும், மெயின்பிரேம் க்ரீன் ஸ்கீரின் ஜிகிடிக்கும் வாயை பொளப்பாங்க! உங்க வலைப்பதிவைக் காட்டுங்க. அட இப்பிடி கூட சிந்திக்க முடியுமா (Both positive and Negative way) தெகைச்சிருவாங்க! ஆனா நாம அப்பிடி செய்யவோ ஏன் நெனைக்கவோ கூட மாட்டோம். To tell you the truth everybody has something special ! (இதுக்கு அர்த்தம் என்னான்னு கேக்கப்படாது. சொலவடை சொன்னா அனுபவிக்கனும். அர்த்தம் கேக்கப்படாது - பம்மல் K சம்பந்தம் - கமல்)

இதுக்கு மேலயும் முடியலியா? சரி HBO'ல பில் மோர் (Bill Maher) ஷோவான Real Time பாத்துருக்கீங்களா? (இணையத்துல கட்டளை போட்டா ரவுண்டு கட்டி அடிப்பாங்க'ன்னு தெரிஞ்சும்) அது மாதிரி இந்தா புடிங்க New Rules:

1. படம் பாத்து அடிக்கடி "உவ்வேக்" என்ற சப்தமுடன் வாந்தியெடுப்பவரா நீங்கள்? உங்களைப் போன்றோரின் பிச்சினைக்குத் தீர்வாக சினிமா டிக்கட்டுடன் அல்லது டிவிடியுடன் பிளைட்டில் கொடுக்கப்படும் Sick Bag மற்றும் எலுமிச்சைப்பழம் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
2. படம் பாத்து விட்டு கண்ணீர் விட்டு கதறுபவரா நீங்கள்? மழை நீரைச் சேமிப்பது போல் ஒவ்வொரு உணர்ச்சிப் படத்திற்கும் கண்ணீர்க் கிண்ணம் வழங்கப்பட வேண்டும். (சென்னையில் புழங்கும் தண்ணீரை விட உப்புச் சத்து கண்ணீரில் குறைவாகவே இருப்பதால்)
3. நடுநிசியில் படம் கொடுத்த தாக்கத்தால் தூக்கமின்றி தவிப்பவரா நீங்கள்? கண்விழிப்பால் ஏற்படும் அஜீரணத்தைத் தவிர்க்க படத்துடன் இஞ்சி மொரபா அல்லது சித்தநாதன் வாசநாதி திரவிய தொழிற்சாலையிலிருந்து ஒரு பாட்டில் ஓமத்தீநீர் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
4. கலாச்சாரத்தையும், மொழியையும் தமிழ் சினிமா மூலம் கற்றுக் கொள்ள விரும்புவரா நீங்கள்? ஸாரி உங்களைத் திருத்தவே முடியாது.
5. படத்தைப் பார்த்து விட்டு குப்பை, கோபுரமென்று குமுறுபவரா நீங்கள்? நீங்கள் குப்பையென்று வீசியதிலேயே பல வயிறுகள் வாழ்க்கையாய் (எகா. குப்பை பொறுக்குபவர்) கொண்டிருப்பதால், நீங்கள் அதிக குப்பைகள் வீசவேண்டும்.
6. This guy should get more recognition என்று ஹீரோ குறித்து இயல்பாய் வருத்தப்படுபவரா நீங்கள்? அட இது ஸிம்ப்பிள். ஒரு கட்சி ஆரம்பித்து அவரை முதல்வர் ஆக்கிவிட வேண்டும். திரைக் கலைஞர்களை நாம் இதுவரை அப்படித்தானே Reconize செய்து வந்திருக்கின்றோம்!
7. படம் பற்றி சிலர் பேசிக் கொண்டிருந்தால் "அச்சச்சோ ஹீரோவுக்கு என்ன ஆச்சு"ன்னு புரியாமல் தவிப்பவரா நீங்கள்? நீங்கள் சமீபத்தில் நியூஜிலாந்திலிருந்து தங்கக் காசுகளுடன் இந்தியா விஜயம் வந்திருக்க வேண்டும். (கரெக்டா?)
8. படம் பார்த்துவிட்டு லாஜிக் புரியவில்லை என்று வருத்தப்படுபவரா நீங்கள்? உங்களுக்கு இடியாப்பம், பாயா இலவசமாக வழங்கப்பட வேண்டும். சிக்கலின்றி இடியாப்பத்தைப் பிரித்து பாயாவில் தொட்டு சாப்பிடுமுன்னர் படம் முடிந்து போயிருக்கும்.
9. தமிழ் சினிமாவின் தராதரம் ஏன் இன்னும் அப்படியே இருக்கின்றது என்று கலங்குபவரா நீங்கள்? உங்களுக்கு ஸ்டீபன் செகால் நடித்த அனைத்து ஹாலிவுட் படங்களும் இலவசமாக தரப்படும். ஒவ்வொரு படத்தையும் பார்த்து அவசரமில்லாமல் நீண்ட விமர்சனங்களையும் எழுத வேண்டும். (மவனே அப்புறம் பேச்சு சத்தம் வரும்? ;-)

வலைப்பதிவு வழக்கத்தில் ஒன்பது கட்டளைகள் மட்டுமே!!!

பி.கு. இது மிக மிக அவசரமாக எழுதிய பதிவு. எனவே பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டால் அதிகாலை மூன்று மணிக்கு சரி செய்து விடுவேனென்று உறுதி கூறுகின்றேன்.

5 comments:

முகமூடி said...

இதை படித்துவிட்டேன். தூங்கப்போகிறேன். தூங்க விடாமல் நடுநிசியில் வேர்க்க விறுவிறுக்க எந்திரிக்க வைத்தால் உங்கள பதிவை பற்றி நல்ல விதமாக நாலு வார்த்தை எமோஷனலாக பொங்க பொங்க எழுதுகிறேன். எழுதவில்லையெனில் குப்பையா கோபுரமா ஆராய்ச்சியில் இருக்கிறேனன கொள்க...

எப்படியிருப்பினும் இது கூச்சல் இல்லை என்பதை தாழ்மையாக சொல்லிக்கொள்கிறேன்

ஏஜண்ட் NJ said...

//வலைப்பதிவு வழக்கத்தில் ஒன்பது கட்டளைகள் மட்டுமே!!!//


வழக்கங்கள்...வழுக்கலாம்...

கட்டளைகள்...மீறப்படலாம்...

தீர்ப்புகள்...திருத்தப்படலாம்...

Laws..&...Jaws...are..there..to...BREAK!!


1.முதல்..பின்னூட்டம்...வுட்டது...யாரு?
2.ரெண்டாவது..பின்னூட்டம்...வுட்டது..யாரு?

is...1=2?

லதா said...

//பி.கு. இது மிக மிக அவசரமாக எழுதிய பதிவு. எனவே பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டால் அதிகாலை மூன்று மணிக்கு சரி செய்து விடுவேனென்று உறுதி கூறுகின்றேன். //

பின்னூட்டம் பெறுவதற்கு இணை(ரஷ்)ய வைத்தியருக்கும், இலவசத்திற்கும் இன்னொரு ஆலோசனை :-)))

இலவசக்கொத்தனார் said...

ஆனால், பதிவு திருத்தப் பட மாட்டாது. திருத்தங்கள் பின்னூட்டமாகவே வரும். என்ன சொல்லறீங்க லதா?

ஜெ. ராம்கி said...

//இப்பெல்லாம் இப்பிடி இங்கிலீபீஸுல எழுதி பதிவைப் போட்டாத்தான் இயல்பா இருக்குன்னு சொல்றாங்கப்பா

Kalkkurrey... Chandru!