Wednesday, February 01, 2006

பூரணமாகாத கிரகணங்கள்

(பாரதிராஜாவின் கரகர குரலில்) என் இனிய தமிழ் மக்களே!!! தனிப்பதிவாகவேண்டிய தலைப்புகள் இங்கே முற்றுப்பெறாத கிரகணங்களாய், தொடுத்து முடிக்காத தோரணங்களாய், பிடித்து முடியாத பிள்ளையார்களாய் கவனிப்பாரின்றி களைப்பாறிக் கொண்டிருக்கின்றன. கோணல்பதிவுகளாய் வரலாறு காணவேண்டியவை வணக்கம் தமிழகமாய் சப்பென்று போக விடலாமா? (பூங்காற்று திருப்புமா? என் பதிவை விரும்புமா பாடல் ஒலிக்க...)

1. ஓப்பரேஷன் சீறும் பாம்பு: புத்துல புஸ்ஸடக்கி கிடந்த பாம்பு மீண்டும் பின்னூட்டங்களில் படமெடுத்து ஆடுவதாய் பகிரங்க வதந்தி. மலைப்பாம்பு (புத்துல சா(சோ)தாப்பாம்பு மலைப்பாம்பு வேடத்தில் என்றறிக; மூளை இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே :-) என்பதை மறந்து மயக்குவதாய் மகுடி ஊதுகின்றார் மதிமூடி (S.Ve. சேகர் ஸ்டைல் மாமே)!!! மாற்று மருந்தாய் ஆழ்குத்தெழுத்துசித்தமருத்துவம் விடுத்து, T.R. பட்ணம் பொடி ரெண்டு சிட்டிகை எடுத்து (ஆமாம் பாம்புக்கு மூக்கு உண்டா என்ன?) ஆசையுடன் பாம்புக்கு அளித்தால் அது அஸ்க்கு போட்டு அலேக் ஆகும் அல்லேகுல்லாலே!!!

2. ப்ரீயா வுடு ப்ரீயா வுடு மாமே: கம்பன் வீட்டு கட்டுத்தறியுடன் கவியரங்கம், கலைஞருக்கு காரு ஓட்டினவரோடு அதிகாலை 3 மணிவரை இலக்கிய சந்திப்பு, இம்முறை வெளியான பொஸ்தக லிஸ்ட்ன்னு அட அட அடடா ரவுஸு தாங்கல பாஸு!!! ஆளைப் புடிக்கலேன்னு அப்பீட் வுடுங்கோ... அத்த வுட்டுப்போட்டு கண்டமேனிக்கு கழுத்த அறுக்க நானிருக்கும் போது உமக்கும் இதே ரப்சரா? ப்ரீயா வுடு ப்ரீயா வுடு நண்பா என்பதிவுக்கு இல்லே காரண்டி ப்ரீயா வுடு ப்ரீயா வுடு நண்பா உன் எழுத்துக்கு இல்லே வாரண்டி

3. மாடர்ன்மலர் நாற்றமுடைத்து: புனுக்கு புண்ணாக்குன்னு தேள்கடியிலேர்ந்து நாய்க்கடி வரைக்கும் சளைக்காம, சர்புர்கர்'ன்னு கேளாஒலிஅலையில குத்துப் போட்டு கொரலு கொடுக்கிற பதினேழாம் வட்ட வளரும்மதி (அய்யா கொழப்பம் வேண்டாம் வளர்மதி என்பதை Present Continuous பண்ணிட்டேன்) குட்டி மாடர்ன்மலருக்கு ஒரு ஓஓஓ ஓகோ போடு!!!

4. Procrastination Professor: பதிவைப் படிக்க பத்து நாள் தாமஷம் (தற்பவமோ, கிரந்த எழுத்தோ தனித்தமிழ்தாங்கிகளுக்கே வெளிச்சம்). இமெயிலு படிக்க இருவது நாள்... தேவுடா தேவுடா இந்த நெலைமையில எப்பிடிப்பா தமிழு வள(ளை)க்கிறது? தெறமையை மொதல்லேயே கண்டுபுடிச்சு புடம் போட்டு வளப்பதாய் படம் காமிச்சா மட்டும் போதுமா? பாவம் அவா அவாளுக்கு என்ன பணிப்பளுவோ'ன்னு ஜோரா கெளம்பாதீக!!! நாங்க 1 பில்லியன் ஆளுங்களாட அதிபருக்கே மெயிலு போட்ட கேள்வி கேட்ட கெட்ட பரம்பரைங்ணா... "Better Late than Never"ன்னா "Butter Earlier than Ever"ன்னு நாஞ்சொல்றேன். ரப்பு ரப்பு ரப்பிஷ்மா மல்லுக்கட்டலாமா?

5. அசலு கண்ணா அசலு: (சுருளி பாணியில்) "இவன் (அமெரிக்க நேரத்தில்) பகலெல்லாம் தூங்கறான். ராவெல்லாம் பின்னூட்டம் போடறான். இந்த வலைபதிவு வந்தாலும் வந்தது. இவன் இப்பிடி ஆகிப்போட்டானேன்னு" ப்ளாக்கர் மக்களார் பின்னூட்டப் பொட்டி அடைக்கோழிகளாய் ஆகிப்போன காலகட்டத்தில்... அசல் அழுவுறது நாடகம்ன்னு தீர்ப்பை மாத்தி அப்பிடிப்போட்டாங்களாம். கணக்கு கேட்டு கலாட்டா செஞ்ச எங்க தலீவரு மாதிரி ஆதாரத்தை/ஆக்ஷனை அவுத்துவுடு ஐயா... நகல் யாருன்னு ஒப்பனா டிக்கெட் கொடு கொய்யா'ன்னு வீராவேசமாய் வீரலெட்சுமிகள் வெடித்துக் கிளம்ப, அந்த நாள் ஞாபகத்தில் சிலபலர் மூடுமந்திரமாய் மூக்குவிடைக்க, அடப்போங்கப்பா புதுசா ஏதாவது பிராது கொடுங்கப்பா... போரடிக்குது!!!

கொசுறு: போகாதே போகாதே எம் தலைவா: (இப்போதைக்கு இவ்வளவுதான். ஏன்னா கெரகணமே இப்ப(டி)த்தான் புடிக்குது ஹிஹிஹி :-)

8 comments:

Anonymous said...

Vandhadhum varaadhadhumaa ippadi pottu thaakureengale aiiyaa. Super Observation.

Chola Otran

Anonymous said...

சும்மா நச்சுனு இருக்கு தமிழ்முரசு !

(சே சே ஒரே பழக்கதோழமா போச்சு ! )

ப்ரொபசர் யாருங்கண்ணா ?

முகமூடி said...

ரொம்ப வருசத்தப்புறம் இன்னிக்கிதான் பிரியுது பதிவு. அதுக்கே ரொம்ப நண்றி (ண் அழுத்தமாக சொல்வதை குறிக்க)

Anonymous said...

அது அது அது. தலைவா யாரு?

Anonymous said...

//ப்ரொபசர் யாருங்கண்ணா ? //

Really Don' know???

Anonymous said...

---- தலைவா ----
---- தலைவா ----
---- தலைவா ----

சன்னாசி said...

சில நாளைக்கு முன்னாடி 'தகஜூம்' அப்படின்னு ஒரு சத்தம் கேட்டது பாசு.

கம்ப்யூட்டர் கிடுகிடுன்னு நடுங்கிச்சி, சுத்தி தூசியெல்லாம் பறந்தது.

என்னான்னு பார்த்தா இப்பதான் தெரியுது, ரொம்ப நாளைக்குப்பிறகு நீங்க களத்துல குதிச்ச சத்தம்தான்னு ;-)

சலங் சலங்குன்னு சாமுராய் கத்தி சப்தமெழுப்ப நீங்க சரியான சந்தர்ப்பத்துக்கு வந்த யோஜிம்போ மாதிரி நடை போட்டு வர்றதே உத்ஸாகமா இருக்கு தல, கலக்குங்க!!

இங்கேயும் பெரும்பாலும் பினாமிபஸ்ஸுக தொல்லைதான் போல. இப்பிடி பயமுறுத்தி வச்சிருக்கீங்களே, நியாயமா இது?

ஏஜண்ட் NJ said...

சர்வம் ஜகஜாப்லாஸ்!!!