Friday, June 18, 2004

கதை : பகுதி - 1

பெண்ணாகிய ஆண் (கேட்ட கதை)


கணவனுக்கு நினைக்கையில் பற்றிக்கொண்டு வந்தது. தினமும் 8 மணி நேரம் அலுவலகத்தில் அல்லற்படுகிறோம். மனைவியோ வீட்டில் ஜம்மென்று வாழ்வதை நினைக்கையில்தான் பற்றிக்கொண்டு வந்தது. உடனே கடவுளிடம், " இறைவா நான் படும் துன்பம் என் மனவிக்குப் புரிய வேண்டும். அதற்காக என்னை பெண்ணாகவும் அவளை ஆணாகவும் ஒரு நாளக்கு மாற்றிவிடு" என்று வேண்டிக்கொண்டான். கடவுளும் ததாஸ்து என்றார்.

மறுநாள் மனைவியான கணவன் எழுந்து, கணவனுக்கு காலை உணவு சமைத்து, குழந்தைகளை எழுப்பி, பள்ளிக்கு தயார் செய்து, காலை உணவூட்டி, மதிய உணவு கட்டிக்கொடுத்து, பள்ளியில் விட்டு வந்து, துணி துவைத்து, இஸ்திரி போட்டு, வங்கியில் காசு போட்டு, மளிகை வாங்கி, பூனை/நாயைக் குளிப்பாட்டி நிமிர்ந்தபோது மதியம் மணி 1:00.

மெத்தையை சரி பண்ணி, கார்பெட் சுத்தம் செய்து, சமையலறை சீர் செய்து, பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்து வந்து, அவர்களுக்கு மாலை சிற்றுண்டி கொடுத்து, வீட்டு வேலைக்கு ஒத்தாசை செய்து, இரவு உணவுக்கு ஆயத்தம் செய்ய ஆரம்பிக்குபோது மணி மாலை 4:30.

உருளைக் கிழங்கு தோல் சீவி, மீன் கழுவி, பீன்ஸ் நறுக்கி சமையல் தயார். இரவு உணவு முடிந்ததும் மறுபடி சமையலறையை சுத்தம் செய்து, பாத்திரங்களை கழுவப்போட்டு, துணிகளை மடித்து வைத்து, குழந்தைகளை தூங்க வைத்து ஸ்... அப்பாடா...வென நிமிர்ந்தால் இதோ கணவன். கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோடா செல்லம் என்று ஒருவழியாய்.... இணைந்தார்கள்.

விடிந்தும் விடியாததுமாய் மனைவியாய் மாறியிருந்த கணவன் கடவுளிடம், "மன்னிச்சுக்கோங்க பாசு. செய்வது அறியாமல் சிறுபிள்ளைத்தனம் செய்து விட்டேன். மனைவி மேல் இனி பொறாமைப்பட மாட்டேன். ஒரு நாள்லேயே பெண்டு கழண்டு-டுத்து. மறுபடியும் மாத்தி வுடுங்க சாமி"னு கெஞ்சினான்(ள்).

கடவுள்," இது உனக்கொரு நல்ல படிப்பினை. உனை மறுபடியும் மாற்ற ஆசைதான். ஆனால் அதற்கு நீ இன்னும் 9 மாதம் பொறுத்துக் கொள்ள வேண்டும். நீ நேற்று இரவு உண்டாகி விட்டாய்" என்றார்.

பி.கு. பகுதி - 11 வரட்டும் பாசு. அத நானே எழுதி இருக்கேனாம்....

3 comments:

பரி (Pari) said...

இது எதோ Forward ஆன மெயிலோட தமிழாக்கம் மாதிரி இருக்கே. என்ன பாஸூ அநியாயம் பண்றீங்க :-)

குசும்பன் said...

இது கேட்ட கதை பாசு...கொஞ்சம் காத்திருங்கோ !!!

Unknown said...

என்ன ரகளை இது? எங்க இருந்துதான் இந்தமாதிரி கோக்குமாக்கான மேட்டர் கிடைக்குதோ??