பொழுது போகாத பொம்முன்னு பழைய குமுதத்தில ஒரு கேரக்டர். அதோட பாதிப்பு இன்னக்கி ஜாஸ்தியாயிடுச்சு...
வர வர மக்களுக்கு பொறுப்பு இல்லாம போய்டுச்சு. நம்மள மதிச்சு ஒருத்தர் கடுதாசி போட்டா படிச்சும் பாக்றது இல்ல. பதிலும் போடறது இல்ல. இன்னும் கொடுமை என்னன்னா அதைப்போய் bulk mail, junk mail, spam mail அப்படி யிப்படின்னு திட்டு வேற...
இன்னைக்கு மட்டும் அப்படி யெனக்கு வந்த கடுதாசிகளைப் பற்றி சில வரிகள்:
கேனோன் டிமிட்ட்ரியஸ்: 4% வட்டிக்கு வீட்டு லோன் தறுவதாக வாக்களித்திருந்தார். (இவருக்கு நான் விண்ணப்பம் போட்டதாய் இவரே சொல்லிக்கொண்டார்.)
மெடினா: அதே கம்பெனியிலிருந்து (USA Broker Group) 4.6% வட்டிக்கு லோன் தருவதாக சொன்னார்(ள்). (அடப் பாவிகளா ஸ்பாம்னா இப்படியா?)
நான்னி வெஸ்ட்: அதே கம்பெனி...4% வட்டி
ரால்ப்: ஸ்பாம் மெயிலைத் தடுக்க மென்பொருள் விற்பதாய்க் கூவினார். (டேய்...இதுக்கும் ஸ்பாம்தானா? நான் உன்னக் கேட்டேனா?)
பிரிட்கெட் கிரே: வயாக்ராவிலிருந்து வேலியம் வரை மருந்து வாங்கிக்கோன்னு கூவுறாரு
இதுக்கு மேல எழுதினா யாரும் படிக்கப்போறதில்ல. ஏன்னா உங்களுக்கும் அனுபவமிருக்கும். ஆனாலும் கொஞ்ஜமாவது ஆராய்ச்சி பண்ணேளா? இதோ சம்மரி:
சைசு(அதோட) பெரிசு பண்ணிக்கோன்னு வந்த மெயிலு - 7 (ஆமாம்...நான் ஆம்பளைன்னு எப்படி கண்டுபிடிச்சாங்க?)
மேலும் படிச்சுக்கோன்னு வந்த மெயிலு - 4 (டேய் யெனெக்கே குசும்பா?)
உடம்பைக் குறைக்க சொல்லி வந்த மெயிலு - 4 (ஆப்பு அண்ணெ...இவங்க தொல்லை தாங்க முடியல)
அப்படி யிப்படி படத்தோட "ஹேய்" அப்படின்னு கூவி அழைக்கிற மெயிலு - 8
சப்ஜெக்டு, மேட்டரு இல்லாம 10 மெயிலு
இயற்கை மருத்துவம் பற்றி ஒன்று (abstractiontea partiesbecauseridiculously மருந்து பேராம்...அடக் கடவுளே, அனுப்பியது அல்போன்ஸா கெண்டால்)
நம்மளையும் மனுஷனா மதிச்சு கடுதாசு போட்டவாளை என்னன்னா பண்றது? (பல்லை நறநறன்னு கடிக்கா-தேள்)
1 comment:
உங்க குசும்பு நல்லாத்தான் இருக்கு ஆமா, பொ.போ.பொ, நீங்க ஏன் உங்களுக்குக் கடுதாசி போட்ட எல்லாருக்கும் ஆளுக்கொரு பதில் எழுதக் கூடாது?
sundaravadivel | Email | Homepage | 06.05.04 - 12:29 pm | #
--------------------------------------------------------------------------------
வாங்க சுந்தரு...வினைய வேலையா தேட சொல்றீங்களே...
குசும்பன்
kusumban | Email | Homepage | 06.05.04 - 1:22 pm | #
--------------------------------------------------------------------------------
உங்களுக்கு சூதாட்டத்துக்கு கூப்பிட்டு ஒரு மெயிலும் வரலயா? சே!
தங்கமணி | 06.05.04 - 1:52 pm | #
--------------------------------------------------------------------------------
அது யாஹ¥ல அடிக்கடி வந்துண்டு இருந்தது. இது வேற ஐடி'ப்பா...
குசும்பன்
kusumban | Email | Homepage | 06.05.04 - 2:13 pm | #
--------------------------------------------------------------------------------
nigeria-la irundhu bank-la million million-a dollar irukku, vaangikkonnu varume yahoo-la!
Shankar | Email | Homepage | 06.05.04 - 3:18 pm | #
--------------------------------------------------------------------------------
குசும்பன்
உங்கள் குசும்பு நன்றாயிருக்கிறது.
எனது வலைப்பதிவைப் பார்த்து கருத்துத் தந்ததற்கு மிகவும் நன்றி.
Mullai | Email | Homepage | 06.05.04 - 7:20 pm | #
--------------------------------------------------------------------------------
நல்லா இருக்குது
Muthu | Email | Homepage | 06.05.04 - 8:06 pm | #
--------------------------------------------------------------------------------
ஸ்பாம் மெயில் எப்பிடின்னு கத்து குடுக்க முடியுமா?
Suren | Email | Homepage | 06.05.04 - 11:19 pm | #
--------------------------------------------------------------------------------
Kusumbanukke kusumba? namakku antha alavu moolai illai baasu. pen-quin yeluthina sankarukku theriyumaa?
kusumban | Email | Homepage | 06.06.04 - 12:25 am | #
Post a Comment