கவிதைக் குசும்பு (ஙொப்ரான நான் எழுதியது)
எனக்குத்
தெரியாமல் போய்விட்டதடி
மலர்கள்
தேனீக்களுக்கு
மதுவைத்தருவது
மகரந்த சேர்க்கைக்குத்
தானென்று
எனக்குத்
தெரியாமல் போய்விட்டதடி
மரங்கள்
காற்றுக்கு
தலையசைத்தது
பகலவனுடன் ஒளிசேர்க்கைக்குத்
தானென்று
எனக்குத்
தெரியாமல் போய்விட்டதடி
நதிகள்
மணலுக்கு
ஆற்றுப்படுத்தியது
கடலை தேடித்
தானென்று
எனக்குத்
தெரியாமல் போய்விட்டதடி
தோணிகள்
ஆற்றை
துழாவியது
தள்ளிப்போகும் ஒத்திகை
தானென்று
எனக்குத்
தெரியாமல் போய்விட்டதடி
சுயம்வரங்கள்
மணாளனை
தேர்ந்ததெடுத்தது
ஒத்திகையான ஒப்புக்குத்
தானென்று
எனக்குத்
தெரியாமல் போய்விட்டதடி
நீங்கள் (?!)
என்னை
நட்புறவாடியது
என்நண்பனிடம் காதலால்
தானென்று
எனக்குத்
தெரியாமல் போய்விட்டதடி
Thursday, June 24, 2004
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஐயோ பாவம்.
உங்க நண்பர்கள்கிட்ட நட்புஉறவாடுறதுங்க எதாவது உங்க மேல?....
விசாரிச்சுப் பாருங்க :))
அதென்னவோ "நீங்கள்" இந்த இடத்துல ஒத்துவரல. 'நீ'ன்னே போட்டிருக்கலாம். மத்தபடி, இதென்ன புதுசா கவிதையெல்லாம் கிளம்புது.. சொந்த கதை சோகக்கதையா?
silandhi basu...yenna panrathu...vituttu poyEtalE... sorry poyEtangalE...hi hi hi
pari basu,
try panREn. vERa vazi illiyE...appuram ungkalOda yAravathu natpuRavAduna konjam solRELA?
Post a Comment