Monday, June 14, 2004

கடிதம் எழுதுகிறார்கள் என்று தெரிந்தவுடன்...(ஹி ஹி இதுக்கு மேலே முன்னுரை தேவையா...)

கடிதம் எழுதுபவர்களுக்கு

1. சொந்தமாகக் கடிதம் எழுதுவது, தொடர்ச்சியாக அதை எழுதுவது (கணிணியில் எழுதினாலும்) கைப்பழக்கத்திற்காகவே. மனதுக்கண்ணை சுத்திகரித்துக்கொள்ள ஒரு டெக்னிகல் ஜிகிடி. ஒண்ணரைப் பக்க கடிதம் எழுதியதும் உடன் பிறப்புக்கு கடிதம் எழுதும் கலைஞர் அளவுக்கு கற்பனை வளர்ந்ததாய் நினைக்காமலிருப்பது நலம். ஏனென்றால் கடிதம் என்பது வேறு, மடல் என்பது வேறு.

2. முழு நீளக் கடிதங்களை எழுதுபவர்கள், அடுத்த ஜென்மத்தில் ஆளேயில்லாத ஊரில் பிறப்பார்கள். அப்படியே எழுதித்தான் ஆவேன் என்று அடம் பிடிப்பவர்கள் முதலில் கடிதம் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள். குணா படக் கமல் மாதிரி கண்மணி என்று கண்ட-மேனிக்கு எழுதி கழுத்தறுக்காதீர்கள்.

3. வெறும் ரஜினிகாந்த் தம்மடிக்கிறார், ஷாரூக்கான் தண்ணியடிக்கிறார் குறித்துமே அடிக்கடி கடிதம் எழுதி கடிக்காதீர்கள். அஜீத் ரேஸ் கார் ஓட்டுகிறார், விஜயகாந்த் தமிழ்க் கடவுள் ஆகிறார் என்ற சரித்திர நிகழ்வுகளையும் கடிதத்தில் பதியலாம்.

4. ஒரு நாள் அல்லது ஒரு வாரம் நீங்கள் கடிதம் எழுதாவிடில் ஒன்றும் குடி முழுகிப் போய்விடுவதில்லை. எழுதுங்கள், எதையாவது எழுதுங்கள். எழுத எதுவுமே இல்லாவிட்டாலும் கடிதம் ஒன்றையெடுத்து பிள்ளையார் சுழி மட்டுமாவது போடுங்கள் என்று நான் எங்காவது கூறியிருந்தால் அதை மறந்து விடுங்கள். பதில் கடிதம் எழுதி மானத்தை வாங்காதீர்கள்.

5. சம்பந்தப்பட்டவர்கள் நம் கடிதத்தைப் படிக்கிறார்களா என்று பார்க்க, தொடர்ந்து கடிதம் எழுதிக் குடைய வேண்டாம். அக்நாலட்ஜ்மெண்ட் கிடைத்தால் கடிதம் தபால்காரரை விட்டு உரியவரிடம் சேர்ந்ததாய் மட்டுமே பொருள். படித்தார் என்று அர்த்தமல்ல. கிடைப்பது வேறு. படிப்பது வேறு.

6. விகடன், குமுதம், ஹிந்து, தினமணி போன்ற பத்திரிக்கையிலிருந்து வரும் செய்திகளைப் படித்து உணர்ச்சி வசப்பட்டு குப்ஸாமிக்கும், கோயிந்தசாமிக்கும் கடிதம் போட்டு கலவரம் செய்யாதீர்கள். வேண்டுமானால் தனிப்பட்ட முறையில் உங்கள் குழாயடிச் சண்டையை வைத்துக் கொ(ல்ல)ள்ளவும்.

7. எந்த சப்ஜெக்டிற்காக கடிதம் எழுதுகிறோமென கடிதத்தின் மேலேயுள்ள சப்ஜெக்ட் லைனை ஒருமுறை படித்து விட்டு எழுதவும். உதாரணத்திற்கு "ரஜினிக்கு சப்போர்ட்டா?" என்ற சப்ஜெக்டில் நீங்கள் "சப்போட்டா" பழம் சாப்பிட்ட கதையை அவிழ்த்து விட்டு நாறடிக்காதீர்கள். மீறி ஏதாவது உ(கு)ரை க்க விரும்பினால் "என் ரசனை எல்லைக்கு வெளியே" என்று பிளாக் தொடங்கி, மூப்பண்ணா என்ற முகமூடிப் பெயரில் சல்பேட்டா கதைகளைக் எ(கெ)டுத்து விடுங்கள்.

8. கனவில் கலைஞரிடம் பேசினேன், போனில் புஷ்ஷ¤டன் குலவினேன் போன்ற புருடா சமாச்சாரங்கள் அறவே வேண்டாம். அப்போது யாராலும் ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும், "மவனே (கட்டளைப்) பதிவுகளில் வெக்கறேண்டி" என்று செய்து காட்டுவது திண்ணம்.

9. மடற்குழுக்களில் கடிதம் போடுவோர் கவனிக்க. மடலாடற்குழு விவாதங்களுக்கு மட்டுமே. "மடல் போட்டு ஆடும் குழு" என்று தவறாக எண்ணி வேட்டி உருவி ஆட்டம் போடாதீர்கள்.

2 comments:

Anonymous said...

1. இப்போ நம்பர் போட்டு எழுதறதுதான் ஸ்டைல் அதனால
2. ஸ்டாம்ப் ஒட்ட மறந்தாலும் அட்ரெஸ் எழுத மறக்க வேண்டாம்
3. பிடித்த கலர் பெட்டியில் போடாமல் அந்தந்த ஊருக்கான பெட்டியில் போட வேண்டும்

நவன்

ஈழநாதன்(Eelanathan) said...

தீயினால் சுட்ட வடு ஆறினாலும் ஆறாது வலைப்பதிவால் சுட்ட வடு
அருமையான கட்டளைகள்(கட்டளையா? வேண்டுகோளா? அல்லது கெஞ்சலா?)