Wednesday, December 20, 2006

குசும்பன் கிராக்கர்ஸ்


(மூட்ஸ் காண்டம் ஹிந்தி விளம்பரம்)
டாக்டர்: யே கியா ஹூவா? கைய்ஸே ஹூவா? (இது என்ன நடந்தது? எப்படி நடந்தது?)
யானை: அட அத ஏன் கேக்கறீங்க டாக்டர்? பைக்ல போகும்போது மூட்ஸ் காண்டம் வேணுமின்னு தும்பிக்கையால காதைத் திருகிட்டா? அதான்
எதுத்தாப்புல வந்த லாரியில மோதிட்டேன்.

சிக்கன் வைக்கச் சொல்லி அடிச்ச கணவனை ஜெயில்ல போட்டு வாரத்திற்கு ரெண்டு தடவ சிக்கன் போடுறாங்களாமே? சிக்கனையே
அடிச்ச இந்த சேவலுக்கு என்ன தண்டனை யுவர் ஹானர்?

(சேவல் பண்ணைக்காரனைப் பார்த்து) ஏதோ ஒரு சம்சாரத்தைக் கட்டிக்கிட்டு இவ்வளவு அலுத்துக்கிறானே? என் நெலைமையை
என்னிக்காவது நெனைச்சிப் பாத்தானா?
புல்லரிக்கும் தத்துவம்: கார்த்திகை மாதத்தில் எப்போது ஒரு பெண்நாய் நள்ளிரவில் கூட சுதந்திரமாக நடமாட முடிகின்றதோ அப்போதுதான் நமக்கு முழு சுதந்திரம் கிடைத்ததாய் கருத முடியும்.
நீதிபதி: நீ ஏன் தொட்டியிலிருந்த அந்த மீனைச் சாப்பிட்டாய்?
பூனை: Cat Fish'ன்னு போட்டிருந்ததே எசமான்

என்னதான் தமிழ்ல தலைப்பு வைச்சா வரிவிலக்குன்னாலும், 101 Dalmations படத்துக்கு 101 புள்ளி ராசாக்கள்'ன்னு பேரு வைக்கிறது
கொஞ்சம் ஓவருங்க...


Tuesday, December 19, 2006

கணக்கு பண்ணுவோமா

நேக்கு ஸமீபத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கணக்குப் போடுவதில் இஷ்டமே கெடையாது. இம்பூட்டு ஏன் கணக்கு பண்றதுல கூட கஷ்டப்படுறவன் நானாக்கும். பின்னே இப்பிடியெல்லாம் கணக்குப் பண்ணுனா நாடு தாங்குமா என்ன?





பி.கு. கணக்கு பண்ண உதவிய தோழிக்கு நன்றி :-)

Thursday, December 07, 2006

குழந்தைகள் நேரம்

ஸன் டிவியில் அனிதா குப்புசாமி நடாத்தும் நிகழ்ச்சியினை ஸமீபத்தில் காணும் பாக்கியம் கிட்டியது. குட்டீஸ் பல்வேறு ஆடை அலங்காரங்களுடன், மழலை மொழியில் பேட்டி கொடுக்க, அடடே இது நன்றாக இருக்கின்றதே சில பிரபலங்களை வரவழைத்து குசும்பு நேரமாக்க்கினோம். இதோ முதல் குழந்தைப் பிரபலம்:

அனிதா: வாங்க வாங்க கிரேக் சேப்பல். நீங்க போட்டிருக்கிறது கோமாளி வேஷமா?
சேப்பல்: ஆமாங்க
அ: சரி நீங்க என்ன செய்யப் போறீங்க? ஓகோ பாட்டுப் பாடப் போறீங்களா?
சே:
கோச்சாய் பிறக்க வைத்தான்; எங்களை
கோமாவில் இருக்க வைத்தான்
கோச்சாய் பிறக்க வைத்தான்; எங்களை
கோமாளி ஆக்கி விட்டான்

ஒருநாள் தோற்பார்
டெஸ்ட்டில் தோற்பார்
ஒவ்வொரு மேட்ச்சும் துயரம்
ஜெயித்தால் ஓடும்
தோற்றால் வாடும்
இதுதான் கோச்சின் வாழ்க்கை
இதுதான் கோச்சின் வாழ்க்கை

(ஓ'வென்று கதறி மன்னிக்கவும் ஓ'வென்று' என்பதில் கூட சேப்பல் வெல்லவில்லை... கதறுகின்றார். அடுத்ததாக...)

அனிதா: அடடே என்.சொக்கனா வாங்க வாங்க. என்னது லெட்டர் பேடும் கையுமா? ஓகோ எழுத்தாளர் வேடமா?
சொக்கன்: வேடமில்லை மேடம். இதுதான் ஒரிஜினலே.
அ: அப்படியா? நீங்க சொன்னா சரிதான். இப்ப என்ன பண்ணப் போறீங்க.
சொ: நானா. நானொரு கடிதம் வாசிக்கப் போகின்றேன். (கலைஞரின் கரகர குரலில்)
"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பே! தினமொரு கவிதை மூலம் உங்களைச் சந்தித்து வந்த என்னை நிந்தித்து இணையத்தில் எழுதி விட்டார்கள் என்பதறிந்து நீ எவ்வாறெல்லாம் துடிதுடித்திருப்பாயென்று எண்ணி எண்ணி மாய்ந்து போகின்றேன். அச்சுலகமென்னை அரவணைத்து ஆண்டுகள் சிலவானதால் இணையத்தில் நானொதுங்கி நாட்கள் பலவானதை நீயறிவாயென்றாலும், காற்றில் காகித வாட்கள் வீசப்படுவதைக் கண்டு நான் அஞ்சிவிடப்போவதில்லை என்பதை எண்ணிப் பார்த்து நீ கண் துஞ்சலாம். கண்ணில் படும் மதங்களையெல்லாம் காதலித்து வந்த இந்த வேசமில்லா தாசனுக்கு துவேசம் பட்டம் கட்டினாரே அய்யகோ! இதை விண்ணும், மண்ணும் தாங்காதே என்று நீ இறைஞ்சுவது என் காதிற்கு கேட்டது. நேற்று இணையத்தை மேய்கையிலே இன்று இருக்கிறதோ இல்லையோ அக்பர் கண்ட "தீன்-இலாஹி" மதத்தைக் கூட நான் காதலிக்க ஆரம்பித்து விட்டேன். எதிர்காலத்தில், இனி வரும் காலத்தில் உதிக்கப் போகும் மதங்களைக் காதலிக்கக் கூட என் இரும்பு இதயத்தில் இடமுண்டு என்று கூறிக் கொண்டு விடை பெறுகின்றேன். நன்றி. வணக்கம்.

(அனிதா மைக்கை அவசர அவசரமாக உருவிக் கொள்ள அடுத்தவர் உதயம்)

அனிதா: வாங்க வாங்க என்ன திருவோடும் கையுமா? நீங்க என்ன பிச்சைக்காரர் வேடமா?
ஈவிகேஎஸ் இளங்கோவன்: ஸாரி மேடம். நான் ஒரு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காரன்.
அ: (ஆஹா சன் டிவியில் தனக்கு ஆப்படிக்கப் போகின்றார் என நடுங்குகியபடி) நீங்க என்ன செய்யப் போறீங்க?
இ: வழக்கமான பஜனைப் பாட்டுதான் மேடம். (திருவோட்டை ஆட்டியபடி)

கலைஞரே கலைஞரே
கபடி ஆடும் கலைஞரே
ஆட்சியில் நீ
எந்த வகை கூறு

ஆட்சியிலே ரெண்டுவகை
மந்திரியுண்டு வாரியமுண்டு
ரெண்டில் நீ எந்தவகை கூறு

(பேக்கிரௌண்டில் கலைஞர் வாய்ஸ்; கபடி என்பது அவர் ஆட்டம். ஆட்சியில் பங்கில்லை என்பது எம் நாட்டம். இளங்கோவன் அழுதபடி "அம்மா ஆஆஆ அம்மா" என்று கண்ணைக் கசக்க வாசன் என்னும் குழந்தை சாந்தப்படுத்துகின்றது. இன்னுமொரு இணையப் பிரபலம்)

அனிதா: ஓ என்னது கையில் விளக்கோடு வருகின்றீர்களே... நீங்கள் கைவிளக்கேந்திய காரிகையா?
மு.சுந்தரமூர்த்தி: (இன்னொரு கையால் நடுங்கியபடி மைக் பிடித்து சுற்று முற்றும் நோக்குகின்றார்)
அ: ஏன் இப்பிடி நடுங்கிறீங்க?
சு: பயம். எதைக் கண்டாலும், கேட்டாலும், படித்தாலும் பயம்.
அ: என்னங்க நீங்க? ஸ்டூடியோ லைட் வெளிச்சத்திலேயும் "விளக்கோட" அலையறீங்களே... பிறகென்ன பயம்? வீர...
சு: (தடாலடியாய் குறுக்கிட்டு) என்னது வீரமணியா? எங்கே எங்கே?
அ: அட வீரத்தோடு இருக்கச் சொன்னேங்க. இப்பிடி திரா...
சு: என்னது திராவிடமா? தமிழா? தமிழ் மட்டுமல்ல எனக்கு கன்னடம் தெரியும். தெலுங்கு தெரியும். (மூச்சிரைக்கின்றது)
அ: திராபையா இருக்குறீங்களேன்னு சொல்ல விடாம தடுக்கிறீங்களே...சாக்ரடீஸ் என்ன சொன்னார் தெரியுமா?
சு: அய்யய்யோ இது திட்டமிட்ட சதி. எனக்கு சாக்ரடீஸ் தெரியாது. டயாபடீஸ் தான் தெரியும். கொஞ்சம் கொஞ்சம் ஆர்க்கிமிடீஸ் தெரியும்.
அ: சூர்ய...
சு: நாசமாய்ப் போச்சி. என்கிட்ட எப்பவோ படிச்ச சூர்யகலாவை ஏன் இங்க இழுக்கறீங்க?
அ: அட தேவுடா? நான் சூர்யனுக்கே விளக்கு பிடிப்பீங்க போலிருக்கே அப்பிடின்னு சொல்ல வந்தேன். ஆமாம் உங்க ஊரு MLA பேராவது தெரியுமா ?
சு: ஹிஹிஹி அதான் சூர்யகலா விஷயமா? என்னது MLA'வா? (மறுபடியும் நடுங்க ஆரம்பிக்க... அனிதா வாழ்க்கையையே வெறுக்கின்றார்)

(பிளாஷ் லைட்டுகள் மின்ன மின்ன "ரேம்ப்" என்றில் ரெமோவுடன் மின்னலுடன் கேட் வாக் செய்கின்றார் ஒருவர்)
கொஞ்சம் பருத்தி
கொஞ்சம் கஞ்சி
ஒன்றாய் சேர்த்தால்
கைத்தறி புடவை

கொஞ்சம் வேஷம்
கொஞ்சம் ராயல்
ஒன்றாய்ச் சேர்த்தால்
எந்தன் வாழ்க்கை

வசுந்த ராஜே ஏஏஏஏஏ
வசுந்த ராஜே ஏஏஏஏஏ

அனிதா: வாங்க வாங்க நீங்க என்ன மலைக்கா அரோரா கானா?
வசுந்தரேஜே சிந்தியா: இல்லீங்க மேடம். நான்தான் முதலமைச்சர்.
அ: என்னது தெலுங்கு பட டைட்டில் மாதிரி இருக்கே?
வ: மன்னிக்கணும். "நான்தாண்டி முதலமைச்சர்"
அ: என்னாது?
வ: மன்னிக்கணும். அப்டீன்னாதான் தெலுங்கு பட டைட்டில்ன்னு சொல்ல வந்தேன். நானொரு பாட்டுப் பாடப் போறேன்.

"காந்தி மகான் என்ற
காலைக்கதிரவன்
கைத்தறி அணிந்து
உலவச் சொன்னான்"

அ: ஆனால் காந்தியென்றால் RSS'ற்கு பிடிக்காதே மேடம்.
வ: (தெலுங்கு வில்லி பாணியில்) ஏஏஏஏய்ய்ய்ய்ய் இசுக்கு (என்று எகிற அடுத்த பிரபலம் திரையில் தோன்றுகின்றார்)

(கால்கரி சிவாவின் பத்து நாள் முள் தாடியுடன், கோர்த்துப் பின்னப்பட்ட தலைமுடிக் கற்றைகளுடன் சிம்பு)
அனிதா: வாங்க நீங்க யாரு? ரேப்பிசைப் பாடகரா?
சிம்பு: நாந்தாங்க சிம்பு. எங்கிட்ட வேண்டாம் வம்பு. நான் பத்து பிகரைப் பாத்தேன். மூணை ரவுண்ட் கட்டினேன். ஆனா ஒண்ணுகிட்ட ஒதை பட்டேன்.

லூஸுப் பெண்ணே லூஸ¤ப் பெண்ணே லூஸுப் பெண்ணே
லூஸுலதான் என்னைய உட்டே
லூஸா சுத்துறேன்

யம்மாடி ஆத்தாடி ஒன்னய எனக்குத் தர்றியாடி
கடிச்ச ஒதட்ட கடிப்போமா?
கிழிச்ச கையைக் கிழிப்போமா?
ஏ யம்மா யம்மா யம்மம்மா

(என்றவுடன் "குழந்தைகளை எண்ணி கட் செய்யப்படுகின்றார் சிம்பு. அடுத்து கலக்கல் காஸ்ட்யூமில் 60 வயது மதிக்கத்தகுந்த ஒருவர்)

அனிதா: என்னது ஜில்லுன்னு புறப்பட்டு வந்திருக்கீங்களே... அதென்ன சட்டையில யாரு இப்பிடி ஹோலி விளையாடி இருக்காங்க?
டோண்டு: நான்தான் டோண்டு. சட்டையில இவ்வளவு விளையாடி இருக்காங்கன்னா நானொரு தமிழ் வலைப்பதிவரென்று அர்த்தம்.
அ: (குழம்பியபடி) அப்படியா?
டோ: ஏன் சந்தேகமிருந்தால் எலிக்குட்டியை ஹைபர் லின்க்கின் மேல் வைத்துப் பார்த்தால் என் பிளாக்கர் எண் தெரியும். இதை உண்மையான டோண்டுதான் கூறினான் என்பதற்காக எனது பின்னூட்டப்பதிவிலும் நகலாய் இடுகின்றேன்.
அ: என்னாது எலிக்குட்டியா?
டோ: இப்படித்தான் ஸமீபத்தில் ஒரு டெலிமார்க்கெட்டிங் பிகரொன்று...
அ: (டென்ஷனாகின்றார்) வேறென்ன சொல்லப் போகின்றீர்கள்?
டோ: எனது கன்சூமர்களைக் கவர்வது எப்படி என்று பதிவிட்டதற்கு மொத்தமாய் முப்பது பின்னூட்டங்களே வந்தது. ஆனால் அந்தப் பதிவிற்கு ஏறக்குறைய...

(உடனே வெளியிலிருந்து ஒருவர் ஓடி வந்து " என்ன டோண்டு ஸார் இங்க வந்துட்டீங்க? வலைப்பதிவர் சந்திப்பு பக்கத்து ஹோட்டல்ல", என்று சொன்னவுடன் தனது கருத்துக்களை எந்த இடமானாலும் ஆணித்தரமாய் வைத்து விட்ட திருப்தியுடன் டோண்டு விடை பெறுகின்றார்)

Friday, September 22, 2006

அமெரிக்க லிங்கம்

Thing of Beauty is joy (NOT) forever


உண்மை அசிங்கமானது என்பது அம்மணத்தின் அழகு. அறியத்தந்த அமெரிக்க லிங்கத்திற்கு நன்றி.

ரென்சன் ஜாஸ்தியானால்
இங்கே செல்லவும். ஸ்டாக்கும் இருந்தால் பொஸ்தகம் வாங்கிப் படிக்கவும்... :-)

பி.கு. போட்டோ கொப்பிரைட் நானாக்கும். க்கும். சும்மா அப்புறம் பொரட்டு திருட்டுப்பட்டம் யாரும் கட்ட முடியாதாக்கும். ;-)

Friday, September 15, 2006

பாவேந்தர்கள்

கதை திரைக்கதை டைரக்ஷனுக்கு அடுத்தபடி நமது இணையவாதிகள் பாடல்களுக்குத் தாவுவதை தவிர்க்கவா முடியும்? இதோ கோலிவுட்டில் டைரிக்கட்டுகளோடும், கத்தை காகிதங்களோடும் நமது பேவரிட் இணைய பாடலாசிரியர்கள்:

மு. சுந்தரமூர்த்தி (முசு): ஸார் அருமையான தத்துவப் பாடல் கைவசமிருக்கு
கங்கை அமரன் (கஅ): இப்ப நான் படமே எடுக்கிறதில்லையேப்பா
முசு: அதனாலென்ன ஸார் பாட்டைக் கேளுங்க
கஅ: (மனதிற்குள்) என்ன எழவாப் போச்சி...
முசு:
மேதை மேதை
ஊரெல்லாம் மேதை

டண்டநக்கர அட டண்டநக்கர
மேதை மேதை அவர் கிரேக்க மேதை
டண்டநக்கர அட டண்டநக்கர

கஅ: சூப்பர். 'சலம்பாட்டக்காரன்'ன்னு ஒரு படமெடுத்தா யூஸ் பண்ணிக்கிறேன். கிரேக்க மேதைன்னா அது சாக்ரடீஸ்தானே?
(சாக்ரடீஸ் பேரைக் கேட்டவுடன் முசு சடாரென "யு" டர்ன் போட்டு மறைய, காரணம் தெரியாமல் கஅ விழிக்கின்றார்)

பாஸ்டன் பாலா (பாபா): சார் பாரின் டச்சோட பாடல்களைத் தரேன் ஸார்
ஷங்கர்: சிவாஜி படம் முடிய இன்னும் டயம் இருக்கு. ஒரு ஐந்தாண்டுகளுக்கு அப்புறம் வாயேன்.
பாபா:
அன்பிரேக் மை ஹார்ட்
நீயொரு ஸ்பேர் பார்ட்
அண்டூ மை பாஸ்ட்
நான்தான் எவர் லாஸ்ட்
ஷங்கர்: (பிரமித்து) ஆஹா அருமையான தமிழ்ப் பாட்டு. சிவாஜிக்கு ஐஸ்வர்யாராய் இப்பக் கூட ரெடின்னாலும், உடனே ஷ்ரேயாவைத் தூக்கிட்டு ரஜினிக்கு இந்தப் பாட்டைப் போட்டுடலாம். பத்தாயிரம் அடி கிராபிக்ச்ஸுல போட்டு பின்னிடலாம். ஆனா ரஜினிக்கு லாஸ்ட்'ன்னா பிடிக்காதே? கொஞ்சம் மாத்திப் பாடறீங்களா ஸாரி போடறீங்களா?
பாபா: ஓ தாராளமா போட்டுடலாமே...
அண்டூ மை வொர்ஸ்ட்
நான்தான் எவர் பெஸ்ட்

ஷங்கர்: ஐய்யோ ஐய்யோ பின்றீயேப்பா...நீதான் இண்டஸ்ட்ரியோட லேட்டஸ்ட் வைரமுத்து. பின்னி பெடலெடுப்போம்ப்பா பாபா
(பாபா'விற்கு உல்டா'ப் பாடலுக்கே இப்படியாவென ஜன்னி வராத குறை)

ராமச்சந்திரன் உஷா: வணக்கம் ஸார்
கௌதம்: அடடே வாங்க வாங்க. தாமரைதான் உசிரெடுக்க வந்தாங்களோன்னு பயந்தே போயிட்டேன். என்ன விஷயம்?
உஷா: இல்லீங்க நானும் பாடல்கள் வடிப்பேன். அதான் ஸாம்பிள் சொல்லி சான்ஸ் கேக்கலாமுன்னு...
கௌதம்: (அடப்பாவிங்களா விட மாட்டீங்களே என்ற நறநறத்தபடி) அப்பிடியா வடிங்களேன் ஸாரி படிங்களேன்
உஷா
காட்சிப் பிழைபோலே
இணையத்தில்
சாட்சிப் பிழையானேன்
கோபம் வருகின்றதே
என்மேல்
கோபம் வருகின்றதே

(அய்யய்யோ தாமரை ஜூனியர் வந்துட்டாங்க என்று ஜூட் விடுகின்றார் கௌதம்)

கால்கரி சிவா: (நாலுநாள் தாடியுடன் அசல் கவிஞராய்) அன்பர்களுக்கு நமஸ்காரம்
ஜேடி-ஜெர்ரி: யாருப்பா நீ?
சிவா: ஜில்லென்று ஒரு ஜிகர்தண்டா மாதிரி ஒரு பாட்டு ஸார். கேளுங்க...
இணையம் செஞ்ச தப்புல
ராத்திரி அடிச்ச மப்புல
போட்டிருக்கேண்டி
பதிவு போட்டிருக்கேண்டி

சௌதியத்தான் வெட்டிக்கோ
ஷேக்கையெல்லாம் திட்டிக்கோ
என்னை மட்டும் ஒட்டிக்கோ
பின்னூட்டத்த தட்டிக்கோ

கண்ணோரம் அச்சம் காட்டவா?
அப்புறமா மிச்சம் காட்டவா?
(ஜிகர்தண்டாவே இப்பிடின்னா என்று வாயைப் பிளந்தபடி ஜேடி-ஜெர்ரி கிர்ரடிக்கின்றனர்)

ரோஸாவசந்த்: (கொஞ்சம் நிலவு பாடலை ஹம் செய்தபடி) வணக்கம் ஐயா. என் பாடலைக் கேட்கின்றீர்களா?
மணிரத்தினம்: (ஜெர்க்காகி) என்னது வந்ததுமே கச்சேரிய ஆரம்பிக்கிங்றீங்களே? யாரு நீங்க?
ரோஸா: (மனதிற்குள் ஹீம் காலத்தின் கட்டாயம். வந்தேறிகளுக்குள்ளேயே கேள்விகள் கேட்கின்றார்) அதுதான் எம் பாணி
கொஞ்சம் வெறுப்பு
கொஞ்சம் குரோதம்
ஒன்றாய்ச் சேர்த்தால்
எந்தன் நெஞ்சம்


கொஞ்சம் மனிதன்
கொஞ்சம் மிருகம்
ஒன்றாய்ச் சேர்த்தால்
ஆளவந்தான்
(கோரஸ் குரலில்)
ஆளவந்தான் ன்ன்ன் அது நாந்தான் ன்ன்ன்
மணி: ஆஹா ஆஹா ஆஹா குரு படத்தில் பிட்டைப் போட்டுட வேண்டியதுதான். ஆனா இதை Rock இசையில் போடலாமா? இல்லை Rap'பா ஆக்கிடலாமா?
ரோஸா: என்னது ரேப்பா? மவனே உன்னய அறுக்ககாம விடமாட்டேன்
(ரோஸா பிளேடுடன் மணிரத்தினத்தைத் துரத்த, மணி எஸ்கேப் ஆகின்றார்)


ஆஸாத் பாய்: மிஷ்கின் பாய் சலாம் குலாமு
மிஷ்கின்: அய்த்தலக்கடி ஆஸாத் பாய்
ஆஸாத்: சூப்பர் கானா கைவசமிருக்கு போட்டுத் தாக்கிடலாமா?
மிஷ்கின்: (வேண்டான்னா விட்டுடவா போறீங்க) குத்துங்க பாய்
ஆஸாத்:
எணையத்துல போடாதீங்க சண்டைங்கோ
சண்டையில ஒடையிறது மண்டைங்கோ
மனுசனுக்கு தேவயில்ல மதமுங்கோ
பூவாவுக்கு முக்குறோங்க நிதமுங்கோ

வலைப்பூவில அடிக்கிறாங்க லூட்டிங்கோ
மரத்தடியும் நாறடிக்கும் பார்ட்டிங்கோ
வலைதிரட்டி வாங்கிட்டாங்க சேட்டுங்கோ
எப்பவுமே நெலைச்சி நிக்கும்....
என்னோட பாட்டுங்கோ

(மிஷ்கின் ராவாக கிடைத்த சரக்கை அடித்து விட்டு ஆஸாத் பாயுடன் குத்தாட்டம் போடுகின்றார்)

பத்ரி: (கொஞ்சம் பயத்துடன்) ஸார் உள்ளே வரலாமா?
கமல்: (கனைத்தபடி) அதான் வந்துட்டீங்களே (ட்ரேட்மார்க் சிரிப்பு) சொல்லுங்க
பத்ரி: ஒரு நல்ல பாட்டு. அத உங்கள விட்டா அருமையா திரையில கொண்டுவர ஆளேயில்ல
கமல்: இந்தப் பிரபஞ்சத்துல நாமெல்லாம் ஒரு அணுவை விட சாதாரணமானவங்க. ஆப்பிரிக்கக் கவிஞன் சொல்றான்..
பத்ரி: (அவசர அவசரமாக)
உன்னை நெனைச்சே பெட்டிஷன் போட்டேன்
தங்கமே ஞானத் தங்கமே
உன்னை நெனைச்சே நல்லது செஞ்சேன்
தங்கமே ஞானத் தங்கமே

என் குணம் தெரிஞ்சாத்தான்
என் மனமே புரியும்
அந்த மனம் போல் சிலபேர்
சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
கமல்:
ரொம்ப அடிபட்டிருக்கீங்க போலருக்கு. இதாங்க சவால். ஆரோகணம் சரியா இருக்கு. ஆனா அவரோகணத்த கொஞ்சம் டச்சப் செய்யணும். செஞ்சுடலாம். இதக் கானடா'வுல செய்யச் சொல்லி ரஹ்மானக் கேக்கலாம். இல்ல கீரவாணியாப் போட்டுலலாமா?
பத்ரி:
ரஹ்மானோ கீரவாணியோ ரெண்டு பேருமே நல்ல மியூஸிக் பண்றாங்க. நீங்களே டிசைட் பண்ணிடுங்களேன்
கமல்: தப்புப் பண்றீங்க நான் சொன்னது கீரவாணி 21ஆவது மேளகர்த்தா இராகம். அதாவது 72 தாய் இராகங்களில் ஒன்று. அதுல பாருங்க அவரோகணம்...
பத்ரி: (இடைமறித்து) இந்த நூல் பிடித்து பின்னர் எழுதுகின்றேன்
கமல்: (இணைய அரசியல் புரியாமல்) என்ன எனக்கே நூல் விடுறீங்களா? நான் எத்தனை நூல் விட்டிருப்பேன்? சரி அத விடுங்க. நம்மவர் மாதிரி சூப்பர் சப்ஜெக்ட். படம் பேரு நல்லவர். அட... இங்க பாருங்க சப்ஜெக்ட்டுக்கு ஏத்த மாதிரி நீங்க இருக்கீங்க. ஹீரோவா உங்களயே போட்டுடலாம். நம்ம கலைப்புலி தாணு தயாரிப்புல 100 கோடி புரடக்ஷனுல பூஜை போட்டுடுவோம். என்ன சொல்றீங்க?
(ஒரு சேஞ்ச்சுக்காக இப்போது பத்ரி தெறிக்கின்றார்)

(மற்ற பாவேந்தர்கள் நான் நானென்று இன்னும் ரேஷன் கடைக் கியூவாய் அணி வகுக்க எனக்கோ ஸ்ஸப்பா இப்பவே கண்ணக் கட்டுது. அதனால இப்போதைக்கு அப்பீட்டு.)

Thursday, September 07, 2006

You Non-Sensed Me

டேய் சுந்தரமூர்த்தி. தப்பு பண்ற. வேணாம். ஓடிப்போயிடு. என்னால முடியலடா யேய்ய்ய்ய்ய்ய்ய்ய்(அட தப்பா எடுத்துக்காதீங்க பாஸு... வேட்டையாடு விளையாடு வில்லன் ஞாபகத்தில் வெறும் நையாண்டிதான் இது :-)

(இது நவீன மெக்கார்த்தியிசம்'ன்னு டாக்டரு சுந்தரமூர்த்தியின் இடுகைக்கு யாம் தீப்பெட்டி சேம்பிளாய் அனுப்பிய பின்னூட்டம். பிரசுரிக்கப்படுமோ/ படாதோ, எனது பதிவில் சேமித்துக் கொள்கின்றேன். தலைப்பு உபயம்: வலைப்பதிவின் தந்தை)

அடடே குடியாத்தம் முனிரத்னம் சுந்தர மூர்த்தியா? ஒரு வேளை நம்மவரா? அது சரி சொம்மா இருக்காம பங்காளியே வம்புச் சண்டைக்கு வந்தா, அத்த வுடுறது வொமக்கு மரியாத இல்லீயேப்பு... நம்ம சூர்யகலாவ ரொம்பக் கேட்டதா சொல்லுங்க... காசா பணமா என்ன?

கருப்போ, அய்யனாரோ, அடைக்கலம் காத்தவரோ, எல்லைச் சாமியோ கொல தெய்வத்துக்கு கொலவ போட்டு, பட்டையக் கெளப்புவோமா? மும்மூர்த்தியில இப்போ குசும்பனும் பிரஸெண்ட் ஸார்.

உமக்குத்தான் எத்'துணை'(!) நல்ல நண்பர்கள்? ஹிஹி பெயர்களை இப்போது வெளியிட வேண்டாமென்று அவர்களே சொல்லியிருப்பார்களே? அட ஆம்பளைச் சிங்கமே... உமது அவ்காத் (ஹிந்தியில கேட்டு தெரிஞ்சுக்கோ) என்ன? என்னமோ உம்மப் பத்தி அவதூறு பரப்பி என்ன அவனவன் மில்லியனர் ஆயிட்டானா? இல்ல இப்ப (உ)நம்ம புஷ்ஷு மாதிரி ஸ்டண்ட் அடிச்சாவாவது டெமாக்ரெட் கட்சி காங்கிரஸ் எலக்ஷன்ல தோக்கப் போவுது. உம்மப் பத்தி ஸ்டண்ட் அடிச்சா என்னா தேறும்? காலணா தேறுமா? ஸ்ஸப்பா என்னா இமேஜ் பில்டப்பு அப்பு? காலங்காத்தாலேயே கண்ணக் கட்டுதே! ரஜினியின் சிவாஜி படம் கூடத் தோத்துப் போகும். ஏண்டாப்பா டாக்டரு இப்பிடி எம்மாம் பேரு கெளம்பியிருக்கீக?

*த்தா... SHIT*** ஒரு அளவில்ல... அடங்குங்கடா (ஸாரி மறுபடி வேட்டையாடு விளையாடுதான்... :)

பங்காளி எப்ப நம்ம உம்ம நையாண்டி கச்சேரி செஞ்சோம்? ஓகோ 'சுனா முனா'ன்னா? அட குசும்பன் அகராதி தெரிஞ்சவாளை கேட்டுப் பாக்க வேண்டியதுதானே? 'சுனா முனா'ன்னா என்னானு? அத்த முழி பேத்தா 'சூ** மூடு'ன்னு அர்த்தம். அப்பிடின்னா உம்மோட மொத பேருலேயே (first name) தகறாரா? வலைப்பூவின் தந்தை தனிமெயிலில் சொன்ன மாதிரி "You Non-sensed Me"!

வொனக்கு செவக்குமாரு மேல காண்டுன்னா அத்த அவரண்ட நேரா காமி நெஞ்சில மாஞ்சா இர்ந்தா. அத்த வுட்டுப் போட்டு திண்ணை, மும்மூர்த்தி, முகமூடின்னு ஏன் பப்ளிக்கா கழியிற? கேஸு போடுவேன்னு செவக்குமாரு சொன்னா பாஸிஸம். இப்போ நீ பண்றது என்னா? மெக்கார்த்தியிஸம்'ன்னு இன்னோரு பேரா? அடடே என்னே "நகை"முரண். விக்குதுபா. கோலி சோடா ஒண்ணு கொடுபா.

கிராமத்துல வெள்ளாட்டா சொல்வா. "எந்த நேரத்துல ஒங்கொப்பன் கோமணம் அவுத்தானோ?"ன்னு. அத்தயே டவுனுல "உன்னப் பெத்ததுக்கு பதில் உங்கப்பா செகண்ட் ஷோ போயிருக்கலாமுன்னு". என்னா வக்கீலைப் பாத்தேன்னு பயமுறுத்துறியா பங்காளி? இப்ப சொல்றேன் கேளு. உன்னோட டேட்டா-பேஸை அனாலிஸிஸ் பண்ணிப் பண்ணி பெர்ஸாக்கிட்டே இரு. ஆனா உம்மையிலேயே நீ முன்ரத்னத்திற்கு மரியாத செலுத்தணுமின்னா எம்மேலயும் கேசு போடு. என் அப்பன் பெயரோட அடையாளத்தோட பங்காளி நானும் வரேண்டாப்பு.

எனக்கும் வீரமணிக்கும் என்னா தொடர்பு? நீ உன் இனிசியலுக்கு சொந்தக்காரன்னா நீ புரணி பேசுனத நிரூபி. இதுல என்னாடாப்பா ஹேஷ்யம் உனக்கு? பொட்டை மாதிரி எதுக்கு சந்துல சாடை பேசுற?

வேறு சில நண்பர்களை சீண்டிய போது பங்காளி உன்னையும் சீண்டினேனா? அது சரி வீரமணியோடு எனக்கு என்னா சம்பந்தம்டாப்பா? நேரா சொல்லேண்டாப்பா...

மும்மூர்த்திகளா? ஓ கர்னாடிக் டமாஸ் ட்ரூஸ் கேட்டு காலில் விழுந்த போது சொன்னதா? அப்ப எல்லாம் ஒரே ரூட் போட்டு கிளம்பியிருக்கேள்'னு சொல்லுங்க. அட 'பேடிமூர்த்தி'ங்களா... நாய் வாலை நிமித்தவே முடியாது போலிருக்கே...

பங்காளி நீ எக்கேடோ கெட்டுப் போ... கூடவே ஃபெட்னா (FETNA)வயும் இழுத்துட்டுப் போ... நேக்கு கிஞ்சித்தும் அக்கறையில்லை. ஆனா "ஃபெட்னாவின் முன்னாள் நிர்வாகி ஒருவர் மீது சட்டத்தின் கரம் பாய்ந்திருக்கிறது"ன்னு அவரோட பேரு கூடக் குறிப்பிட முடியாத கபோதியாப் போயிட்டியே பங்காளி... இப்ப பாரு எனக்கு பயமில்லேன்னு சொல்லிக்கிட்டே எனக்கும் ஃபெட்னாவுக்கும் அவ்வளவு சம்பந்தமில்லேன்னு சொல்லிக்கிட்டே பம்முற... ஏண்டாப்பா? இப்ப வொனக்கு கன்னடமும், தெலுங்கும் பேசத் தெரியுங்ற வரலாற்றுச் செய்தியை வொலகுக்குச் சொல்ற... அப்ப பச்சத் திராவிடன் இல்லியா நீ? ஏண்டி பேக்கு? மீக்கு சுந்தர தெலுகு ஒஸ்துந்தா? மல்லி மலயாளம் தெலுஸா? ஹைதராபாத் வெல்லி அக்கட கொத்திகா ஹிந்தி, உருது நேர்ச்சுகோ... தராவத்து பெத்தாபுரம் எல்லி... (அக்கட ஏமி சேஸ்தாமெண்ட்டே மீக்கு தெலுசுகதா... :-) அடப் பாருங்க மறுபடியும் நையாண்டி... மல்ட்டி லாங்குவேஜில்...

அடிக்கடி சொந்த பேரு, ஊரு பேருல எழுதுறேன்னு டகால்ட்டி வேல காட்டுறதே பொழப்பாப் போச்சிப்பா... ஒன்ன மாதிரி பொட்டத் தனமா அவனா இவன் இவனா அவன்'ன்னு நான் கேட்டிருக்கேனா? அப்பிடி ஹேஷ்யம் கெளப்பின ஒருத்தன நாக்க புடிக்கிற மாதிரி கேட்டேன். அந்தாளு இன்னமும் தன்னோட ஆண்மையை சுய பரிசோதனை செஞ்சிட்டிருக்காரு போல. இப்ப பங்காளி நீ கெளம்பியிருக்க. மொதல்ல எனக்கும் வீரமணிக்கும் என்னா தொடர்பு'ன்னு சொல்லு. இல்லேன்னா கேஸைப் போடு. டேட்டா-பேஸு அது இதுன்னு கழுத்தறுக்காத. ஊரு பேரு நாறுது பாரு...

ஒன்னய நான் என்னிக்குமே சீந்தாதப்ப, என்னய ஒரு பங்காளியா மதிச்சு பதிவு போட்டிருக்கே... நன்னி... என்னிக்குமே நான் பயந்து ஓடினதில்ல... வா பங்காளி... ஆட்டைய தொடருவோம்... சிக்கன்-குனியா வந்த சீக்காளி மாதிரி இல்லாம நேரடியா மோது... இல்லியா வாயையும், அத்தயும் மூடிண்டு இரு... ஷேமம்.

Wednesday, August 23, 2006

கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் 2

(பொதுவா ஸீகுவல்' பத்தி எனக்குப் பெரிய அபிப்பிராயம் கிடையாது. இருப்பினும் சுஜாதா சொல்றமாதிரி 15 நிமிடப் புகழ் யாரை விட்டது? :-)

தருமி: (பேக்கிரௌண்டில் திகில் மியூஸிக்) மதுரை பக்கத்துல ஒரு குக்கிராமம். சின்ன வயசுல நம்ம ஹீரோ அழகர் ஆத்துல இறங்குறத பாக்குறதுக்காகப் போனபோது தவறி அழகருக்கு பதிலா ஆத்துல வுழுந்துடுறாரு. ப்ரீஸ். அப்புறம் குளோசப்புல அந்தக் குழந்தை ஆத்துல மூழ்குறது மாதிரி காட்டுறோம். கட். பிளாஷ்பேக் ஓவர். இதுனால நம்ம வளர்ந்து விட்ட அந்த ஹீரோவுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி நடந்ததெல்லாம் ஞாபகத்துக்கு வருதுங்ற ஒன்லைனர்தான் கதையே. இதுனால ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி நடந்த கொடுமைக்காக இப்ப இன்னும் வரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு எப்பிடி ஹீரோ பழி வாங்குறார்ங்கிறது ஸ்டோரி பில்டப். எப்பிடி? இந்த மாதிரி தத்துவ படங்களுக்கு கமலஹாசனை விட்டா வேற யாரு இருக்கா? This Dude Kamal... என்று அவர் உணர்ச்சி வசப்பட ("பேராஸிரியர் ஸார் ஏன் இப்பிடி என்னைய வதைக்கிறீங்க?" என்று குணா போல் ஸவுண்ட் விட்டபடி பேராஸிரியர் ஞானசம்பந்தத்திடம் அடைக்கலமாகின்றார் கமல்)

டோண்டு: (நள்ளிரவு வரை விழித்திருந்து பதிவு போட்டதில் கண்கள் சிவப்பாக இருக்கின்றது) நமக்கும் பீதியைக் கிளப்பத் தெரியும். ஆனா இப்ப அடிதடி ஸீஸனாக்கும். நம்ம ஹீரோ தன்னோட காரில் (அதாவது வாடகைக்காரெல்லாம் அவருடைய கார்தான்) செல்லும் போது செல்பேசி கிணுகிணுக்கிறது. ஒரு டெலிமார்க்கெட்டிங் பிகர் "லோனு வாங்கலையோ லோனு"ன்னு திருவிளையாடல் சிவாஜி கணக்காக கூவ, கோவம் வந்த ஹீரோ "டெலிராணியே எனக்கு போன்போடாத நீ; ஜென்ம ஜென்மமாய் இதுக்கு கட்டுப்பட்டு நீ" என்று கலாய்க்கின்றார். பாடலை எழுதிய ஜயராமனுக்கு நன்றி. இப்படியே பெண்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியத்தையும் ஆங்காங்கே ஹீரோ வலியுறுத்துவான். மசாலாவிற்கு குறைவேயில்லை. 'ஏங்க சிவஞானம்ஜி உங்களோட போலியைப் பிடிச்சு ஒரு கிளுகிளுப் பாடல் எழுதி வாங்கிட்டீங்கன்னா, அரேபியப் பாலைவனத்துல, கால்கரி சிவா உதவியோட படமாக்கிடலாம் என்ன சொல்றீங்க?'( சிவஞானம்ஜி உடல் முடியாத நிலையிலும் ஓடி எஸ்கேப்பாகின்றார்). அப்படியே இஸ்ரேல்-லெபனான் பார்டர்ல ஒரு சண்டைக் காட்சிக்கு வஜ்ரா இருக்கவே இருக்காரு. என்னது மியூசிக்கா? அதுக்குதான் நம்ம சிமுலேஷன் இருக்கவே இருக்காரே...அடப்போங்க ஸார் ஹீரோவுக்கு விவேக்க வுட்டா ஜனங்களுக்கு அட்வைஸ் கொடுக்க வேற யாரு இருக்கா? (அடப்பாவிங்களா... இம்சை அரசன் மாதிரி காமெடி பண்ணலாமுன்னு பாத்தா, டாக்குமெண்டரி போட்டு கவுத்துடுவானுங்களேன்னு விஸ்க்கென்று எஸ்கேப்பாகின்றார் விவேக்)

ஜொள்ளுப்பாண்டி: எனது பணி இளசுங்கள கவருவதே என்ற உன்னத நோக்கோடு ஹீரோவின் பயணம் பஸ்ஸாடாப்பில் தொடங்குகின்றது. காடு, மேடு, கழனி, கஞ்சித்தொட்டி என்று போகுமிடங்களிலெல்லாம் அவனுக்கு மவுசு. முதலில் காட்டில் ஒரு கரலாக்கட்டை பெண் காதலிக்கின்றாள். அதன்பின் மேட்டில் ஒரு திம்ஸுக்கட்டை. அப்புறம் கழனியில் ஒரு நாட்டுக்கட்டை. அப்புறம் கஞ்சித்தொட்டியில் ஒரு செமகட்டை என்று பட்டையக் கிளப்பும் ரோல். இது போதாதென்று வெளிநாடுகளுக்குச் சென்று வெள்ளைக்கட்டைகளோடும் விளையாடுகின்றார். கொசுறாக மாடல்கட்டைகளையும் கொஞ்சுகின்றார். இப்படம் மட்டும் வெளிவரட்டும். அப்புறம் அடுத்த மன்மதனாய் நாந்தான் பேசப்படுவேன். பாத்தீங்களா மன்மதன் நாந்தான்னா நயாந்தாரா யாருன்னு கேக்கிறீங்களே...ஹிஹிஹி? ('ஙௌக்காமக்கா'வென கதை கேட்ட இணையமக்கள் 'உருட்டுக்கட்டை'யுடன் துரத்த ஜொள்ளுப்பாண்டி அப்ஸ்காண்ட்)

காசி: நாளைய சமுதாயம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற எண்னத்தில் இன்றைய வரலாறுகளைப் பதிய வேண்டுமென்னும் தாகமுள்ளவன் என் ஹீரோ. தாபமுள்ளவன் என் ஹீரோ (உடனே பத்து பேர் கை தட்டுகின்றார்கள்). எல்லாவற்றையும் ஒரே இடத்தில் திரட்டி, வரலாற்றை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் உன்னத முயற்சியில், வில்லன்கள் குறுக்கிடுகின்றார்கள். "கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன் இதுவொரு தமிழ்மாலைப் பொழுது" என்று ஹீரோ பாடுகின்றார். வில்லன்களின் எல்லா கேள்விகட்கும் "மௌனமே காதலாய் ஒரு பாட்டுப் பாட வேண்டும்" என்று சொல்லிச் செல்லும் 'மௌனி'தான் என் ஹீரோ (கைத்தட்டல் அடங்க மறுக்கின்றது). இறுதியில் வெறுத்துப் போய் "சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்லை" என்று பாடிவிட்டு, நித்தியசோதனை என்ற வரலாறு எழுதிவிட்டு, திரட்டியதை விற்று விடுகின்றான் ஹீரோ வெறும் தவசதானியங்களுக்கு (கேட்போரின் விசும்பொலி). இறுதியில் "கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சாமியே அய்யப்பா" என்று ஹீரோ அமைதி காண ஐய்யப்பனிடம் செல்வதாய் படம் முடிகின்றது. ஹீரோவா நம்ம சேரனைப் போட்டுடலாம். என்ன அழும்கட்டத்தில் மட்டும் முகத்தை மூடிவிட்டால் போதும். மத்தபடி பொருத்தமான கேரக்டர். (ஐயப்பனோ "என்னால பணிக்கர் பிரஸ்னத்துக்குக் கூட தீர்வு சொல்ல முடியும். ஆனா இந்த நித்தியப் பிரச்சினைக்கு?" என்று கூறிவிட்டு புலி மீதேறி கிலியுடன் அடர்ந்த காட்டுக்குள் ஐக்கியமாகின்றார். இனி படத்தில் நடிக்கவே மாட்டேனென்று அரசியலில் புகுந்து விடுகின்றார் சேரன்).

வஜ்ரா ஷங்கர்: நீங்க நெனைச்ச மாதிரியே படம் இஸ்ரேலைச் சுத்திச் சுத்தி வருது. நீளமான அடுக்கு வசனங்களை, புள்ளி விவரத்தோடு அள்ளித் தெளிச்சி அசத்திப்புடுவோம்ல. "ஹைபா, ஹதேரா, ஆக்கோ மீது கத்யூஷா ராக்கெட்டுகள் விட்டு விட்டு Peace Peace என்று பேசுகின்றாயா? மவனே பீஸ் பீஸ் ஆக்கிடுவேன்"ன்னு அடித்தொண்டையியில ஹீரோ கத்துறதுலேர்ந்து ஸ்கிரீன் பிளே ஆரம்பம். ஸமீபகாலமா சுமார் 2000 ஆண்டுகளா இஸ்ரேலியர்கள் படும் துன்பத்தை நம்ம டோண்டுவின் உதவியில் அப்பிடியே தத்ரூபமாக் காமிக்கிறோம். என்னாது அப்ப வில்லனுக்கு யாரு வசன உதவியா? அட வெளங்காப்பயலுகளா... நம்ம நிலமெல்லாம் ரத்தம் எழுதின பாரா'தான். ஹீரோவா இவ்வளவு புள்ளி விவரங்களை அடுக்கத் தெரிஞ்ச ஒரே ஆளு நம்ம விஜயகாந்த்தான். வில்லனாய் அடி வாங்க சோப்ளாங்கி நம்ம லெபனான் சாரி சாரி லியாகத் அலிகான். படம் பேரா ஆக்காங் 'இஸ்ரேல்புரி' (தர்மபுரி படம் நட்டுக்கிட்டாலும் சரி இவனுங்க நம்மளோட அரசியல் வாழ்வையே அஸ்தமிக்க யோசிக்கிறாங்களே என்று தனது உதவியாளர் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டு விட்டு ஓடி ஒளிகிறார் கேப்டன்)

கைபுள்ள: "என்னடாது இதுவரைக்கும் பிஞ்ச கதையாக் கேட்டு காது பஞ்சராகிப் போச்சே, இன்னும் நம்ம கடிக்கக் கைபுள்ளய காணோமின்னுதான்ன பாக்குறீங்க? என்னடா இவன் சின்னப்பயதானேன்னு தானே நெனப்பு. ரேஸ்கல்ஸ்" என்று ஓப்பனிங்கிலேயே பிட்டைப் போட்டு நுழைகின்றான் இம்சை அரசன். அட அதாங்க நம்ம ஹீரோ வடிவேலு. வில்லனா ஒரு சேஞ்ச்சுக்கு நம்ம பார்த்திபன். வலைப்பதிவு முடமான பார்த்திபனிடம், "ஏண்டா வா.மாணிகண்டனுக்கு ஆப்போஸிட்டா எழுதுறது யாருன்னு தெரியுமா?" என்று கேட்பார். முழிக்கும் பார்த்திபனிடம் "Go. ராகவன்டா என் வென்ரு" என்று பொடனியில ஒண்ணு குடுக்குறதுக்கு இணையமே குலுங்கும். கல்யாணம் பண்ண வேண்டுமென்ற பார்த்திபனிடம் "எப்பேர்ப்பட்ட பொண்ணு வேணும்?" என்று வினவுவார். "ஏதோ வத்தலோ, தொத்தலோ" என்பார் பார்த்திபன். "வத்தல்னா அது சரி. அது ஒன் ரேஞ்சு. அதென்னடா தொத்தல்?" என்று மறுபடியும் ஒரு அடி. "தொத்தல்னா அடி என்னத்துக்கு? அவ்வ்வ்வ்வ்வ்" என்று பதுங்கும் பார்த்திபனைப் பார்த்து சவடாலாய் "டேய் தொத்தல்னா அது ஆப்பத்துக்கும், அல்வாவுக்கும் பொறந்த ஹைபிரிட்டுடா. ஒன் முகத்துக்கு தொத்தலா கேக்குது. இப்பிடியே பஸ் புடிச்சு துபாய்க்கு ஓடிப்போயிடு" என்று விரட்டும் போது உலகமே சிரிப்புச் சுனாமியில மூழ்கிடும்ல. என்னாது ஹீரோயினா மடிப்பு அம்ஸாவா... என்னது சின்னப்புள்ளத்தனமாயிருக்கு போயி மல்லிகா ஷெராவத்த அள்ளிட்டு வாடாங்கோவ்...(போலி கைப்புள்ள அலப்பரை தாங்க முடியாமல் வடிவேலு "அவனா நீயென்றபடி" வாய் பிளந்து நிற்கின்றார்)

(நீளம் தாங்க முடியலீப்பா... படிச்சுட்டு சொல்லுங்க அடுத்த முயற்சி செய்யலாம்)

Tuesday, August 22, 2006

கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன்

சுஜாதா, மதன், கிரேஸி மோகன், பாலகுமாரன், எஸ்.ரா, ஜெயமோஹன் போன்ற (ந)அச்சு ஊடக வித்துவான்களையே கோலிவுட் தத்தெடுத்துக் கொள்கின்றதே என்று நான் ஆதங்கப்படாத நாளே இல்லை எனலாம். ஏன் இணைய எழுத்தாளர்களுக்கு கதை விடத் தெரியாதா? இதோ இணைய ஜாம்பவான்கள் கதை விடத் தயாராகின்றார்கள்:

ரஜினி ராம்கி: ஒரு அருமையான கதை கைவசம் இருக்கு. சொல்றேன் கேளுங்க. திருக்குவளைன்னு ஒரு சின்ன ஊரு. நம்ம கதாநாயகன் அங்கதான் பிறக்கிறார். அப்புறம் அஞ்சு வயசுல புளிப்பு முட்டாய் வாங்கித்தராத தகப்பனை எதிர்க்க, தண்டவாளத்தில் தலைவைத்துப் படுக்க ஒரு புரட்சியாளன் உருவாகின்றான். பின்னர் அவனே அரசியலில் நுழைந்து ஐந்து முறை முதலமைச்சராகவும் ஆகின்றான். இதுல ரஜினி ஸார்
நடிச்சா கண்டிப்பா படம் பிளாட்டினம் ஜூப்ளிதான். வில்லனா சோக'தாஸ்'ங்ற கேரக்டருல பிரகாஷ்ராஜைப் போட்டு பெண்டைக் கழட்டலாம். படத்தோட ரெண்டு ஹீரோயின்ஸ் யாரு யாருன்னு தலைவர் முடிவு செஞ்சுட்டா போதும். நாளைக்கே படத்த ஆரம்பிச்சுடலாம். (அவசர அவசரமாக சத்திக்கு எஸ்.எம்.எஸ் பறக்க, படித்துப் பார்த்த ரஜினி பதற்றமாகின்றார்)

பி.கே.எஸ்: ஹே ஹே ஹே கொஞ்சம் நிறுத்துப்பா. இது சரித்திரப் படங்களின் காலம். கோலிவுட் இம்சை அரசனிலிருந்து, ஹாலிவுட் பைரேட்ஸ் வரை பார்த்துத் தெளியவேண்டுமென்று எனக்கு இளவதிலேயே போதித்த ஆசானை அன்புடன் நினைத்துப் பார்த்து, மனதில் வியக்கும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி வாய்க்கும் வாய்ப்புப் பெற்றவன்...

ரஜினி ராம்கி: ஏங்க அங்கங்க ஒரு புல்ஸ்டாப் போடுங்க. பாருங்க எப்பிடி மூச்சு வாங்குது?

பி.கே.எஸ்: சரி. கதைக்கு வருவோம். குஜராத் என்கின்ற பிற்படுத்தப்பட்ட மாநிலத்தில் நமது கதாநாயகன் பிறந்து, வளர்ந்து பின்னாளில் ஆதிக்க சக்தியை எதிர்க்கும் அகிம்சைத் தலைவரா அவதாரமெடுக்கின்றார். ஹீரோவா யாரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். ஆனா உண்மையான ஹீரோ யாருன்னா படத்துக்கு வசனம் எழுதப்போகும் ஜெயக்காந்தன்தான். (விஷயம் கேள்விப்பட்டு ஜெர்க்காகின்றார் ஜெயக்காந்தன்)

முகமூடி: ஆளாளுக்கு இப்பிடி கதை வுட்டுக்கிட்டு இருந்தா எப்பிடி? நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க. கோயம்பேடுலேர்ந்து கொசப்பேட்டைக்கு போற 12-B பல்லவனை, வண்டலூர்லேர்ந்து தப்பிச்சு வந்த குரங்குக் கூட்டம் ஒண்ணு கடத்துது. அந்த பஸ்ஸை நம்ம கதாநாயகன் எப்பிடி காப்பாத்துறார்ன்னு சொல்றோம். சும்மா ஸ்பீடு-3 மாதிரி பேசப்படப்போற படமிது. ஹீரோவா விஷால பேசி முடிச்சிடலாம். அவருதான் இண்டஸ்டிரியில கறுப்பா இருக்காரு. என்ன வழவழன்னு ஒரு மொட்டையப் போட்டோமின்னா நம்மூரு 'சாமுவேல் ஜாக்ஸன்' அவருதான். அப்பிடியே நம்ம இராம.நாராயணனைப் பிடிச்சு டைரக்டராப் போட்டுட்டா போதும். சும்மா ஜிவ்வுன்னு எல்லா செண்டர்லேயும் கூட்டம் கூடுமில்ல. (விஷால் உடனடியாக சிலப்பதிகாரம் பட ஷெட்யூலிலிருந்து காணாமல் போய்விட்டதாக செய்தி பிளாஷாகின்றது)

பி.கே.எஸ். (மனதிற்குள்) அடப்பாவி Snakes in the Plane'னை மடிச்சிப் போட்டு கத வுடுறனுங்களே...
முகமூடி: (உணர்ந்தவராக மனதிற்குள்) ஆமாமா இவரோடது மட்டும் ஒரிஜினலா என்ன? காந்திய அப்பிடியே உல்டா பண்ணி டகால்டி காட்டுறானுங்களே...

ரோஸாவசந்த்: கதை என்ற பதத்திற்கே அர்த்தம் தெரியாத அனர்த்தங்களுடன் இனிப் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை என்ற பொதுப்புத்தி கொஞ்சம் வந்திருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு ஒருப் பிரச்சினையுமில்லை என்றாலும் அதைச் சொல்லி உங்களுக்கு விளக்க முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை. ஆகையால் வெறும் விவாதக்கூத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் விஷயத்திற்கு வருகின்றேன்.
ஹீரோ ஒரு ஐந்து நட்சத்திர விடுதிக்கு அடிக்கடி சென்று மதுபானம் அருந்துபவர். ஆனால் அங்கேயும் தமிழ் வளர்க்கும் ஆர்வலர் அவர். 'பார்லி-வடிநீர்' என்றுதான் ஆர்டரே கொடுக்கும் திராவிடர் அவர். சைடு டிஷ்ஷாக பீப்-சுக்கா சாப்பிடும் இந்துமத எதிர்ப்பாளர் அவர். எதை எதிர்க்க வேண்டுமென்றாலும் 'பாஸிஸமென்ற' துண்டைப் பாங்குடன் போடுபவர். இவற்றை எதிர்க்கும் வில்லனின் ஆண்குறியை அறுத்து விடும் அளவிற்கு நமது ஹீரோவிற்கு குவாட்டர் அடித்தால் (சே-)குவாராவை விடக் கோபம் வரும். வில்லனாக நமது சிம்புவைப் போட்டு விடலாம். வில்லனின் அடியாளாய் விடாது கருப்புவை போட்டு விடலாம். என்னது ஹீரோ யாரா? அடத் தாயோ*ங்களா? என் படத்துல என்னை விட வேற யாருடா ஹீரோவா நடிக்க முடியும்? போயி புரடியூசர கொண்டுவாடா பொறம்போக்கு... (பட விஷயம் கேள்விப்பட்ட சிம்பு நயன்தாராவிடம் அடைக்கலமாகின்றார்)

விடாது கருப்பு: சமீபத்தில்தான் கேள்விப்பட்டேன். ரோஸாவசந்த் என்னும் பொட்டி பூர்ஷ்வா தனது படத்தில் என்னை வில்லனின் அடியாளாய்ப் போட திட்டமிட்டிருக்கின்றார் என்று. இவரை ராயர் காமெடி கிளப் என்ற படத்தில் திரு.மலை என்பவர் ஓட ஓட விரட்டி அடித்த காட்சிதான்
ஞாபகத்திற்கு வந்து தொலைக்கின்றது
. ஏய் வெட்டி பூர்ஷ்வாவே... எனது கதையைக் கேள். வில்லன் ஒரு பாம்பே ரிட்டர்ன் தீவிரவாதி. ஹீரோ போலீஸ் கமிஷனர். ஆனால் தலையில் அடிபட்டதால் தீவிரவாதியின் போன் நம்பர், மெயில் ஐடி போன்றவற்றை பச்சை குத்தி அலைகின்றார். கடைசியில் வில்லனை என்கவுண்டரில் போட்டுத் தள்ளுகின்றார். படத்தின் பெயர் 'கஜினி காக்க'. கடைசியில் ட்விஸ்டாக அந்த தீவிரவாதி ஒரு பார்ப்பனர் என்று க்ளோஸப்புல காட்டுறோம். கத எப்பிடி? ஹலோ வில்லனா யாரு நடிக்கிறாரா? அது நம்ம பொட்டி பூர்ஷ்வாதான். அந்தாளே ஹீரோவா நடிக்கும் போது என்னோட படத்துல நாந்தான் ஹீரோன்னு முடிவே பண்ணியாச்சு. சரி சரி பணப் பொட்டிய எடுங்க. ஷூட்டிங்கிற்கு லேட்டாச்சு... (விஷயம் கேள்விப்பட்ட ரோஸாவஸந்த் காண்டாகின்றார்)

ராமச்சந்திரன் உஷா: அடடே எல்லாரும் சினிமாக் கதை வுடுறீங்களா? என்னோட கதையில ஹீரோவே ஹீரோயின்தாங்க. அவங்க பாம்பேல இருக்கிற ஸ்லம் ஏரியாவப் பாத்துட்டு கண்ணீர் வுடுவாங்க. திடீர்னு அநீதிக்கு எதிரா சவுண்ட் குடுப்பாங்க. போராடுவாங்க. ஆனா போராடுற மாதிரி தெரியாமப் பாத்துகுவாங்க. கேள்வி கேப்பாங்க. கதை எழுதுவாங்க. விஷய தானம் செய்வாங்க. மொத்தத்துல அவங்க ஒரு 'ஆல்-இன்-ஆல்' அழகுராணி. ஜான்ஸி ராணிக்கு அடுத்தபடி பேச வைக்கிற புரட்சிப் பெண் கேரக்டர். என்ன கேட்டீங்க? ஹீரோ யாரா? ஒரு நிமிஷம் இருங்க... வீட்டுக்காரரை கேட்டுட்டு வந்துடறேன். (வீட்டுக்காரர் கேள்விப்பட்டு மூர்ச்சையாகின்றார்)

இட்லிவடை: பிரச்சினையே இல்லாம பிரச்சினையை உருவாக்கிற படம் என்னோடது. கதை, வசனம், களம் பற்றி கவலையேப் பட வேண்டாம். துக்ளக், கல்கி, குமுதம், ராணி, கல்கண்டு'ன்னு ஸ்கேன் பண்ணியே ஒப்பேத்திடலாம். ஹீரோவ ஒரு கூட்டமே நடிக்குது. பிரபல எழுத்தாளர் ஒருவர். பிரபலமாகத் துடிக்கும் புதுமுக எழுத்தாளர் ஒருவர். ஸமீபத்தில் கல்யாணமான இனிக்கும் ஒருவர். இன்னும் கொஞ்சம் வழுக்கை அகலமானால் ரன்வேயே போடலாமென்று போலியாரால் புகழப்பட்ட ஒருவர். இவர் தவிர்த்து போலி ஸாமியாராய் உலா வரும் எக்ஸ்ட்ரா ஹீரோ ஒருவர். படத்தின் டைட்டில் "பஞ்ச பாண்டவர்". அடுத்த எலக்ஷனுக்குள்ள ரிலீஸ். படத்தோட பேருலதான் பஞ்சமே தவிர, மத்தபடி நெட்டுல ஹிட்டுதான் எப்பவுமே. (விஷயம் லீக்காக எஞ்சிய கோயிஞ்சாமிகள் எஸ்கேப் ஆகின்றார்கள்)

மயிலாடுதுறை சிவா: இப்ப எவன் மக்களுக்காக படம் எடுக்கிறான்? நான் சொல்றேன் பாருங்க. பிற்படுத்தப்பட்டாலும் மிகவும் பிற்பட்டதாய் தன்னை அறிவித்து, ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டோரை அடித்து வீழ்த்தினாலும், தற்போது அசத்தும் ஆங்கிலத்தில் பேசுபவர் நம் ஹீரோ. புரட்சி என்ற பெயரில் திராவிட கலாச்சாரத்தையே கோட்டு சூட்டால் அடித்து வேட்டியையே கடாசியவர். மரத்தை வெட்டி பசுமை மாநிலம் காண்பவன் என் ஹீரோ. இந்தப் படம் மட்டும் ரிலீஸாகட்டும் 'படப்பெட்டியை கடத்தியவர்' என்ற பட்டம் மறைந்து 'படப்பெட்டி ஓட்டியவர்' என்ற பட்டம்தான் நிலைக்கும். என்னது ஹீரோவா யாரா? நம்ம அமைச்சர் அன்புமணிதான். முன்னாடி மாறனைப் போடலான்னு தான் நெனைச்சேன். ஆனா அவரு 'டாட்டா' காட்டிட்டாரு. (இது வேற வம்பா என்று அன்புமணி அப்பீட் ஆகின்றார்)

குழலி: ஆஹா ஆஹா... இது நடவாதா என்று நான் நடக்காத காலம் முதலாக எண்ணி எண்ணி எண்ணம் மாளாதிருந்த காலம் போய் இன்று திராவிடன் நான்தானென்று அடையாளம் கண்ட திருநாளிது. இதற்காக நான் என் 'மதி'க்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். வாளாவிருந்த என்னை வால் நட்சத்திரமாக்கி வானில் உலவவிட்டாயே... 'வாலாகினானும் நொந்து நூலாகவில்லையே' என்று வைரமுத்து வரிகளோடு எனது ஹீரோ அறிமுகமாகின்றான். "அறிந்த முகத்திற்கே அறிமுகமா? வெட்டிய மரம் வேர்தான் பிடிக்குமா?" என்ற பஞ்ச் டயலாக்கோடு பீடி பிடிக்கும் பெருமாளை அறை விட்டு மீண்டும் அறிமுகமாகின்றார் ஹீரோ. 'என்னோடு ஜெயங்கொண்டம் கலா தியேட்டருக்கு வந்தாயா? படப்பொட்டி கடத்தினாயா? இல்லை விருத்தாசலம்-சென்னைச் சாலையில் மரம் வெட்டிப் போட்டாயா? யாரைக் கேட்கின்றாய் திராவிடன் யாரென்று?' என்று காது கிழியும் பஞ்ச் டயலாக்குகளை அய்யா மாலடிமை எழுதிக் கொடுத்திருக்கும் பட்சத்தில் படம் எல்லா செண்டர்லேயும் ஹிட்டுதான். (மாலடிமை அய்யா மயக்கம் போட்டு விழுகின்றார்)

துளசி கோபால்: 'என்ன நடக்குது இங்க?' அப்பிடின்னு டைட்டிலோட நம்ம படம் ஆரம்பிக்குது. ஒரு பழத்திற்காக உலகை சுற்ற நான் ரெடின்னு ஹார்லி-டேவிட்ஸன் பைக்கில் இரண்டாம் பிள்ளை முர்ஹேன் அமர்ந்து படபடக்க. மூத்தபிள்ளை பீள்யாரோ "Ma, Dad World - World Dad,Ma"டா என்று பஞ்ச் கொடுத்து பழம் வாங்க ஒரே கிளாப்ஸ். ஹார்லி டேவிட்ஸன் பைக் மெக்கானிக்கா (காதல் முருகன் புகழ்) பரத் நம்ம மூர்ஹேன் கேரக்டர். (ஆனா பீள்யாரா யாரைப் போடலாமென்று குழப்பத்துடன் அவர் கோபாலைக் கேட்க அவர் விழுந்தடித்து ஓடுகின்றார்)

இராமகி: பலுக்கிப் பெருக்குதல் நம் கலை. எந்த வார்த்தைக்கும் தமிழ் வேருண்டு என்பதை திராவிடன் அறிவான். உதாரணமாக "கேட்டை" என்பது "கேட்" ஆகி, அதுவே பலுக்கிப் பெருகி வடமொழியில் தவறாக "கேட்ஸ்" ஆனது. ஆகையால் பெயரில் "கேட்ஸ்" உள்ளவரெல்லாம் பிறப்பிலில்லாவிடினும் திராவிடன்தான் போன்ற புரட்சிக்கருத்துகளை எடுத்துச் சொல்கின்றான் என் நாயகன். இந்த எனது களக்கருத்தையே அமெரிக்கர்கள் சுட்டு "My Big Fat Greek Wedding" என்று எடுத்து விட்டார்கள். இதில் 'மை' என்ற வார்த்தை 'மசி' என்பதிலிருந்து மருவி, 'பிசின்' எனக் கிளைத்ததால், பேசாமல் 'அசின்'னே நாயகியாகட்டும் என்று முடிவெடுத்து விட்டேன். தம்பி தேனப்பன்தான் ப்ரொட்யூசர். (ஏற்கெனவே மண்டை உருளும் தயாரிப்பாளர் தேனப்பன் இனி சினிமா பக்கமே தலைவைக்க மாட்டேன் என்று பிள்ளையார்பட்டி ஓடி விடுகின்றார்)

சின்னவன்: "சின்னவா சின்னவா மன்னாதி மன்னனல்லவா" என்ற பாடலுடன் கலாய்க்கும் பார்ட்டியாக அறிமுகமானலும் என் ஹீரோவிற்குள்ளேயும் ஒரு அந்நியன் அடங்கிக் கிடக்கின்றான். ஒரு பிரச்சினையில் பொங்கியெழுந்து பத்து பெயர்களில் தசாவதாரம் எடுத்து அநியாயத்தைத் தட்டிக் கேட்கின்றான். அந்நியன் ஷங்கர் போல கிராபிக்ஸ் டகால்டி இல்லாமல் ஒரே ஐபி அடையாளத்துடன் எனது ஹீரோ எளிமையாக வலம்வர ஒருநாள் கருங்காலிகளால் காட்டிக் கொடுக்கப்படுகின்றான். அநீதிக்கு எதிரான வேடத்திற்கு தண்டையனையா என்று வெறுத்துப் போய் "போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்" என்ற வைதேகி காத்திருந்தாள் பட டயலாக் பேசிவிட்டு கேமராவுடன் ஆப்பாயில், ஆம்லெட்டு என்று படமாய் சுட்டுத் தள்ளுவதாய் படம் முடிகின்றது. இந்த ரோலுக்கு பொருத்தமானவர் நம்ம தனுஷ்தான். ஏன்னா அவரு கோவப்பட்டாதான் சகிக்காது. அப்புறம் ஹீரோயினா? இராமகி படத்துல நடிக்கலேன்னா நம்ம அசினுதான்... (தனுஷ் 'மாமா இமாலயாஸுக்கு டபுள் டிக்கெட் போடுங்க' என்றபடி ரஜினி காலைப் பிடிக்கின்றார்)

(இப்போதைக்கு ஒரு டஜன்தான் என்றாலும் பலருடைய எண்ணங்களும் கைவசமுள்ளன. சினிமா இண்டஸ்ட்ரிபடி நல்ல சகுனம் பாத்துட்டு வாரன்)

Sunday, July 30, 2006

பேசாத பேச்செல்லாம் பேசவந்தார்

எவ்வளவு நாள்தான் குண்டுச்சட்டியிலேயே குதிரை ஓட்டுவது? சரி ஊரையும் அடித்து ஒரு உலை வைப்போமே என்று கிளம்பியபோது நம்ம கண்ணகி கண்ணில் மாட்டினார்.

'என்னங்க மறுபடி மெரீனாவுல ஹாயா கடற்கரை காத்து வாங்குறீங்க போலருக்கு?' என்று ஆரம்பித்தேன்.
'ஆமாம் காற்று வாங்கப்போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்'ன்னு பாடற மாதிரியா கடற்கரை இருக்கு? அதுவும் ராத்திரியாச்சுன்னே இங்கே நிற்பதற்கு எனக்கே பயமாக இருக்கிறது. பேசாம குடோனிலேயே இருந்திருக்கலாம் போல...
'எப்பிடியோ வரவிருந்த இன்னொரு சுனாமிய தடுத்துட்டீங்க போலருக்கே?'
'அடப்பாவிங்களா இந்த பகுத்தறிவு ஆளுங்களோட ரோதனை தாங்க முடியலப்பா!'

பேசிக்கொண்டிருந்தபோதே நடிகர் திலகம் சிவாஜி தென்பட்டார். அழுதழுது கண்களெல்லாம் ரத்தச் சிவப்பாய் தோன்றின.
'என்னங்க ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடேசியில உங்களையும் கடிச்சிட்டாங்க போலருக்கு?'
'அட அத ஏன்பா கேக்குற? தமிழுக்கு என்ன சேவை செய்தேன்? அப்பிடின்னு ஜாதி சொல்லி அடிக்கிறாங்கப்பா... இவங்க முன்னேற்றத்திற்காக தமுமு ஆரம்பிச்சு கையில இருந்த மோதிரத்தக் கூட இழந்தேன். எல்லாரும் கேட்டாங்க முன்னேற்றத்துலேயே முன்னணி இருக்கேன்னு... அட தமிழனுக்கு ஒரு முன்னேற்றம் பத்தாதுன்னுதன் ரெண்டு வச்சி கச்சி நடத்தினேன். ஹூம் எல்லாம் என் நேரம்' என்றபடி 'ஜிஞ்ஞினக்கா சின்னக்கிளி சிரிக்கும் பச்சக்கிளி' என்ற சோக கீதம் இசைக்க ஆரம்பித்தார் செவாலியே. உண்மைக் கலைஞனுக்கே இந்த கதியென்றால் நான் எம்மாத்திரம் என்று நொந்து கொண்டேன்.

சைடில் 'சிவ சிவ சிவ சங்கரா நமக்கு எல்லாம் சாமிடா' என்ற பாடல் ஒலிக்க சிவன் சைடு வாக்கில் நடந்து போய்க் கொண்டிருந்தார்.
'என்ன மிஸ்டர் சிவன் நலமா?' என்றேன்
'அட நீ வேற குசும்பா... சிதம்பரசாமியான என்னை விட இப்ப ஆறுமுகச்சாமிதான் பேமஸ்'. பேசாம அவரோட சிலையை சித்சபையில வைச்சுடலாம்'
'ஓஹோ சிற்றம்பலத்தைத்தானே சொல்றீங்க?'
'அதான் வலைப்பதிவுல ஆர்க்கிடெக்சர் படமே போட்டிருந்தாங்களே. இப்போ எது பொன்னம்பலம்'னு கூட எனக்கே தெரியாது.'
'என்னது அப்ப பொன்னம்பலம் நீங்க இல்லியா?'
(சிவன் டென்ஷனாகிறார்)
'சரி சரி சபிச்சுடாதீங்க வரேன் என்று நழுவினேன்.

பாட்டு திடீரென 'யப்பா யப்பா அய்யப்பா கண்ணுல பிரஸ்னம் காட்டப்பா' உச்சஸ்தாதியில் அலறியது.

'வாங்க லார்டு அய்யப்பன். எப்பிடி இருக்கீங்க? ஆமாம் புலி எங்க கூட்டிட்டு வரலியா' என்று கிண்டினேன்.
'ஏம்ப்பா புலியப் பத்தி பேசி கிலி ஏத்துற? பொடாவுல புடிச்சி கிடிச்சு போட்டுடப் போறாங்க. இப்பதான் தம்பி படம் 110 நாள் விழாவுல கலந்த கையோட வரேன். அதான் புலிய கொஞ்ச நாளைக்கு ப்ளூ கிராஸுல கொடுத்துட்டு வந்திருக்கேன்'
'என்ன கோடம்பாக்கத்துக்கு நீங்களும் வந்திருக்கீங்க? உங்க தேவஸம் போர்டு தலைமை தந்திரி மோகனகண்டரு சொல்லி வந்தீங்களா?'
'அய்யப்ப சாமிக்கு இருக்குற மரியாதையே தவணை முறையில ஏலம் போடுறாங்க குசும்பா. இப்பதான் பிரஸ்னம் பிரச்சினை பின்னே போனது. மறுபடி மோகனரோட மோகப் பிரச்சினை. கல்லும் முள்ளும் மெத்தையாய் நடந்து வர என் உண்மை பக்தர்களை நினைத்து ஆறுதலடைகின்றேன்'
'ஜெய...'
'என்னது மறுபடி ஜெயமாலா பிரச்சினையா? ஆளை வுடு சாமி'
'இல்லீங்க ஐய்யப்பன். ஜெயம் என்றும் உங்களுக்கேன்னு சொல்ல வந்தேன்'
அய்யப்பன் ஆசுவாசமாகின்றார்.

பாடல் மாறுகின்றது...

உடலினை உறுதி செய்
ஏறு போல் நட
நேர்ப்படப் பேசு
நையப்புடை
நினைப்பது முடியும்

'யாரது யாரது தம்பி படப்பாடலை பா(போ)டுறது? உடனே ஆப் பண்ணுங்க' என்று பதறுகின்றார் அமைச்சர் பரிதி இளம்வழுதி.
'ஏங்க அது தம்பி படப்பாடல் இல்லீங்க பாரதியார் பாட்டு' என்றேன்.
'என்னது ஏங்கிட்டயே குசும்பா? ஏற்கெனவே நான் தம்பி பட 110 நாள் விழாவுல கலந்துகிட்டு முழிச்சிக்கிட்டு இருக்கேன். நீ வேற?'
'அதான் சொல்லிட்டீங்களே. நான் யாரோட பேச்சையும் கேக்கலேன்னு'
'தவறு. நான் தலைவர், தளபதி பேச்சை மட்டுமே கேட்பேன்'
'அப்போ கேக்கலைன்னு பேட்டி கொடுத்தீங்களே?'
'யோவ் அது மீட்டிங்லயா..."
'அப்போ தலைவரையோ, தளபதியையோ மீட் பண்ணினாலும் அவங்க பேச்சை கேக்க மாட்டீங்க அப்பிடித்தானே?'
'யப்பா தாவு தீந்து போச்சி ஆளை வுடு'


அப்போதுதான் கலை வாக்கிங் முடித்து கலைஞர் திரும்புகின்றார்.
'தல கலக்கிட்டீங்க. கலர் டிவி, அரிசி, ரெண்டு முட்டை'ன்னு கலக்குறீங்களே?'
'செப்பிஞ்சே நேனு சேஸ்த்தானு. சேஸிஞ்சே நேனு செப்தானு என்றான் பெத்தராயுடுவில் என் தம்பி ரஜினி. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்குமென்று நான் அதை சுவீகரித்துக் கொண்டேன்'
'மிடாஸே யாருக்கு சொந்தம்னு கண்டு பிடிச்ச உங்களுக்கு சிறுதாவூர் பங்களா மட்டும் யாருதுன்னு கண்டுபிடிக்க முடியலியாக்கும்? உங்களோட முன்னாள் தம்பிகளான வைகோ, திருமா ரெண்டு பேரும் அது ஜெ'வோடது இல்லேன்னு சர்ட்டிபிகேட் கொடுக்கிறாங்க?'
'நான் கேட்கும் கேள்வியிலேயே பொதிந்துள்ள பதிலை உடன்பிறப்புகள் அறிவார்கள்'
'சட்டசபையை வாஸ்துபடி திருத்தியமைத்துள்ளாய் ஜெ கூறும் குற்றச்சாட்டு குறித்து?'
'மஞ்சள் துண்டால்' முகத்தை துடைத்தபடி 'பட்ஜெட் கூட்டத்தொடர் நலமாய் முடிந்ததிலிருந்து தெரியவில்லையா குசும்பா? மற்றபடி வாஸ்து பார்த்தது யாரென்று கண்ணகிக்கே தெரியும். வரட்டுமா?'

'கண்ணகி என்ன சொல்றீங்க?'ன்னு கேட்கத் திரும்பினால் அவர் சிலையாய் சமைந்து விட்டிருந்தார்.

Saturday, July 29, 2006

தேன்கூடு அரசியல்


கூட்டு வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக தேன்கூட்டைத்தான் கூறுவர். ஆனால் அங்கே நடக்கும் அரசியலைப் பற்றி வலைப்பதிவர்கள் கூட பேசமாட்டேன் என்றிருப்பதுதான் விந்தையிலும் விந்தை.

நேற்று ஒரு தகவல் படிச்சேன். அது என்னன்னா, தேனை புண்ணுக்கு மருந்தா வச்சுக் கட்டலாமாம். ஏன்னா தேனால கூட free'யா radicals உண்டாக்க முடியுமாம். என்ன கொடுமை பாத்தீங்களா? இங்கிலீஷுல வீக்கான நான் ஆங்கில திசாரஸ எடுத்துப் பாத்தா ரேடிகல்'னா அடிப்படை தீவிரவாதமுன்னு சொல்லுது. கொஞ்சம் சத்தமா சொன்னா தேன்கூட்டுக்கே தடாவோ பொடாவோ போட்டுடுவாங்க போலக்கீது!

அத்தோட விட்டுர்றதா? தேனுக்கு மட்டும் ஏனிப்படி தீவிரவத குணமுன்னு படிக்கப் போக, தேனீக்களைப் பத்தி நாம் அந்தக்காலத்துல படிச்சது மறந்து போயி ஒண்ணுமே தெரியாம இருந்துச்சா, சரி தேன்கூட்டையும் ஒரு கையி பாத்துரலாம்னு முடிவு செஞ்சேன். படிக்கப் படிக்க ஒரே ஆச்சரியம். உங்களுக்கும் இருக்கணுமே... இதைப்பற்றி காட்சியைக்கூட கனவாய்க் கண்டு எழுத்தாய் வடிக்கும் சுந்தரவடிவேல் எழுதவேண்டுமே என்று நினைத்தேன். அவர் ஏமாற்றவில்லை. நானும் ஏமாறவில்லை.

'தேன்' இலவச தீவிரவாதத்தை (free radicals) ஊக்குவிக்கின்றது என்ற ஊகமே தவறு என்கின்றார் இணையத்தில் எழுதும் பிரபல டாக்டர் சுந்தரவடிவேல். அதைப் பற்றி டில்லியிலிருந்து இயங்கும் 40 ‘தேசிய’(national) தேன்கூடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றிலும் உயர்ந்த 10 தேன்கூடுகளில் இருந்தபடி அந்தந்த தேனெடுக்கும் கூடுகளின் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்த தேனீக்களின் மதம், சாதி, பால் உட்பட பல விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இத்தேன்கூடுகளின் பட்டியலலைப் பிறகு தருகின்றேன் என்று மார் தட்டும் அவர், இவற்றில் 37 தேன்கூடுகளிலிருந்து பல விபரங்கள் கிடைத்ததையும் பட்டியலிடுகின்றார். ஆண்டாண்டு காலமாய் மனுதர்மத்தைக் கொண்டு அதர்மம் செய்யும் பிராமணீய சூழ்ச்சி மனித வாழ்க்கைக்கு மட்டும்தான் உண்டு என்று சொல்பவர்கள் கவனிக்கவும். ஒவ்வொரு தேன் கூட்டுலயும் மூனு வகை தேனீக்க இருக்கும். ஒரு 50,000 வேலைக்காரத் தேனீக்கள், ஒரு ராணி அப்புறம் 300-3000 ஆண் தேனீக்கள். இங்கேதான் தேன்கூடு வர்ணாசிரமம் ஒளிந்திருக்கின்றது என்கின்றார் சுந்தரவடிவேல்.

மேலும், "வேலைக்காரத் தேனீக்கள் எல்லாரும் பொண்ணுங்களாம். ஆனா முட்டையிடவோ, புணரவோ முடியாது. ஏன்னா ராணித் தேனீகிட்டயிருந்து வர்ற ஒரு சுரப்பை (pheromone) இவங்க சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க, இந்தச் சுரப்பு இவங்களை முட்டையிடாம வச்சிருக்கும். இந்தச் சுரப்புலேருந்து வர்ற வாசனைதான் அவுங்கவுங்க கூட்டை அடையாளம் கண்டுக்க உதவுது. வேற கூட்டுக்கு மாறிப் போமாட்டாங்க, அப்புடிப் போனா அங்க வேற வாசம், கொட்டு வாங்க வேண்டியதுதான்" என்ற கொடுமையையும் தெரிவித்தார்.

இது குறித்து தேன்துளி என்னும் பத்மா அரவிந்த் என்ற வலைப்பதிவாளரின் கருத்தைக் கேட்டேன். வழக்கம் போல அனைத்து செய்திக்கும் நன்றி கூறும் நல்லவரான அவர் இச்செய்திக்கும் நன்றி கூறி ஆரம்பித்தார், "இது கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டியது. என்ன கருத்துக் கூறுவது என்று நான் குழம்பியிருந்த வேளையில் நான் கூற நினைத்ததை என்னை விடத் தெளிவாக சுந்தரவடிவேல் கூறி விட்டார். நன்றி" என்றார்.

ஏன் வேலைக்கார தேனீக்கள் பெண்களாய் மட்டும் இருக்க வேண்டும்? இது குறித்து அச்சு ஊடகத்திலும் புகுந்து புறப்பட்ட பிரபல வலைப்பதிவரான ராமச்சந்திரன் உஷாவைக் கேட்டோம். "அட அத ஏன் கேக்குறீங்க... என்னைப் பொறுத்தவரை ஒரு சம்பவம் ஒரு முடிவுதாங்க. மேலும் ஒரு சம்பவத்துக்கு ஒரு கேள்வி கேக்கலாமுன்னுதான் மொதல்ல இருந்தேன்" என்று சஸ்பென்ஸோடு அவர் தொடர முயல அவரது விஷயதானத்துக்கு நன்றி சொல்லிப் புறப்பட்டேன்.

"தேனீக்கூட்டமே ஒரு விபச்சாரக் கூட்டம்", என்று காட்டமாக ஆரம்பித்தார் இணைய சமூக நீதிக்காவலரான கார்த்திக் (ர)மாஸ். இதற்கு சான்றாக கையிலிருந்த ஸ்கேன் செய்யப்பட்ட வால்மார்ட் டிஷ்யூ பேப்பரைக் காட்டினார். "வேலை செய்ய வேண்டுமாம். அதுவும் பெண்களாம். ஆனால் புணரக் கூட முடியாதாம்; இதிலிருந்தே தெரியவில்லையா இது பிராமணீய அவாள் சூழ்ச்சி", என்று தனது நீதியை நிலை நாட்டினார்.

'பெண்ணுக்கு பெண்தான் எதிரி' என்று மெல்ல ஆரம்பித்தார் அருணா ஸ்ரிநிவாசன். ராணித்தேனிதான் மத்த வேலைக்கார தேனீக்களுக்கு எதிரிங்றது வருத்தம் வரவைக்கின்றதென்றும், இது குறித்து அடுத்த மாத திசைகள் பெண்கள் சிறப்பிதழில் வரவிருக்கின்றதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் கொழாயடிச் சண்டையை இன்று தீர்த்துக் கொள்பவர் போல், "இது நல்லாருக்கு:)) நல்ல பதிவு" என்று குழப்(ம்)பினார் செல்வநாயகி.

"தேன்கூட்ட ஒரு குடும்பமால்ல நான் நினைச்சிக்கிட்டுருந்தேன். இப்ப என்ன ஆச்சி?" என்ற துளசி கோபாலை இன்னும் குழப்ப விரும்பாமல் அகன்றேன். தன்னோட எடைக்குச் சமமான எடையுள்ள அளவு தேனை ஒரு தேனீயால தூக்கிக்கிட்டு பறக்க முடியுமாம் என்ற செய்தியை அவர் கோபாலுக்கு தெரிவிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். அடுத்தமுறை இந்தியாவிலிருந்து திரும்பும் போது லக்கேஜ் ஹேண்டில் பண்ண ஊக்காமாய் இருக்குமென்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

"கூட்டுப்புழுவுலேருந்து புதுசா வெளியில வந்திருக்க சின்ன வேலைக்காரத் தேனீக்கள் மெழுகைச் சுரக்கும். குண்டூசி தலையளவுக்கு. அதையெல்லாம் பெரிய வேலைக்காரத் தேனீக்க சுரண்டிக்கிட்டு வந்து கூடு கட்ட, அறையை அடைக்கன்னு வச்சிக்குமாம். சுரப்பது ஒரு தேனி. அதை சுரண்டுவது இன்னொரு தேனி. இந்த இரண்டு தேனிக்களும் இணையாதா என்று சிறிய வயதிலிருந்து ஆதங்கப்பட்டவன் நான். ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நடந்து வரும் இந்த அநியாயத்தை நிவர்த்தி செய்யத்தான் அய்யாவும், சின்னாய்யாவும் உளமாற உழைக்கின்றார்கள். இன்று இரு தேனீக்களும் இணைந்ததைப் பார்த்து தேன் குடித்த நரியாய் இருக்கின்றேன்" என்றார் குழலி.

"வேலைக்காரத்தேனீக்கள் என்றாலே இளக்காரமாகிவிட்டது. அதனால்தான் எல்லாரும் இளக்காரம் செய்கின்றார்கள்", என்று நொ(கொ)தித்தார் முத்து தமிழினி.

'உழைக்காமல் உண்டு கொழிக்கும் ராணித்தேனி ஒரு பாப்பாத்தி' என்ற அரிய தகவலை நியோ அகழ்வாராய்ந்து தெரிவித்தார். டோண்டுவோ "வேலைக்காரத் தேனீக்கள் இது குறித்து அதிகம் கவலைப்படக்கூடாது. போடா ஜாட்டான் தேனீக்களா", என்று சொல்லிவிட்டு தன் வேலையைப் பார்க்க வேண்டுமென்று தெரிவித்தார்.

ஒரு தேனீ போயி புதுசா ஒரு இடத்துல தேன் இருக்கதைக் கண்டுபுடிச்சுட்டு வந்துச்சுன்னா, கூட்டுக்குள்ல வந்து ஆட்டம் போடும் என்ற தகவலைக் கேட்டு நல்லடியார் கொதித்துப் போனார். இந்த மாதிரி பெண் தேனீக்கள் ஆட்டம் போடுவதை வன்மையாகக் கண்டித்து பதிவு போடப்போவதாகக் கூறினார். 'இதென்ன கொடுமை. பெண்தேனீக்களுக்கும் புர்கா போடுகின்றார்கள். இந்து மதம்தான் பெண் தேனீக்களுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கின்றது' என்ற தனது கருத்துடன் பதிலடி தரப்போவதாய் நேசகுமார் தனது ரகஸிய மறைவிடத்திலிருந்து தெரிவித்தார்.

இதனால் எரிச்சலடைந்த சீமாச்சு, "தேன்கூடுங்றது ஒரு பிரைவேட் பிராபர்டி. அங்க என்ன செய்யணுங்றத தேனீக்களே முடிவு செய்யட்டும்" என்றார்.

"தேன் கூட்டுல தேனீக்கள் ஆட்டம் போட்டதுங்றது பிரச்சினையா? இல்ல வேலைக்கார தேனீக்கள் ஆட்டம் போட்டதுங்றது பிரச்சினையா? இதையெல்லாம் வுட்டுட்டு தேனைக் குத்தம் சொல்றது என்ன நியாயம்?" என்று ரெண்டு படம், எழுபது சுய பின்னூட்டங்களோடு முகமூடி பதிவெழுதினார். இதனால் ஆவேசப்பட்ட ஆருரான், "ஈழத்தமிழருக்கு தேன் உயிர் போன்றது. தேனையும் அவர்களையும் பிரிக்க முடியாது. ஆனால் தேனெடுப்பதற்காக தீப்பந்தம் ஏந்தி ஞானசம்பந்தத்தை போல் தேன்கூட்டை எரித்தது பிராமணர்களே", என்ற திடுக் ரக குற்றச்சாட்டை முன் வைத்தார்.

"நம்மள மாதிரி கடுந்தோலுக்குள்ள தேனி கொட்டினா கொக்கி மாட்டிக்கிட்டு எடுக்க முடியாது. விர்ருன்னு கிளம்பி பறக்குற வேகத்துல கொடுக்கோட சேர்ந்த தேனீயோட கொஞ்சம் உடம்பும் பிஞ்சு போயிடும். அதனால மனுசனைக் கொட்டின தேனீ கொஞ்ச நேரத்துல செத்துப் போயிடும். இது தெரியாம கொட்டுன தேனீயை அடிச்சுக் கொல்ல நினைக்கிற விஷமத்தனத்தைதான் திம்மித்துவம்", என்றார் வஜ்ரா ஷங்கர். அதற்கு ஆமாம் போட்ட கால்கரி சிவா இத்தகைய திம்மித்துவ திமிரை தான் அரேபியாவில்தான் அதிகம் பார்த்ததாகக் கூறினார்.

"பொல்லாத தேனியே போகுமிடம் போய்ச் சேர்ந்தாயே" என்று தேனிக்கலம்பகம் கவிதையை எடுத்து விட்டார் ஜயராமன். "நீங்களாவது ஒரிஜினல் கவிதையைப் போட்டீங்க. ஆனா என் நெலமயப் பாருங்க. என்னோட படம் போட்டு போலிப்பதிவுல உல்டா படப்பாடல்களை போடறாங்களே..." என்று உண்மையாய் வருத்தப்பட்ட சிவஞானம்ஜியை எவ்வாறு தேற்றுவதென்று தெரியவில்லை.

"ஒரு சின்ன தேன்கூட்டுல 50,000 தேனீக்களா? ஒவ்வொரு தேனியும் வெறும் ஸ்மைலியைப் பின்னூட்டமா போட்டாக் கூட பிச்சுக்கிட்டு போகுமே" என்று இலவசக் கொத்தனார் கணக்குப் போட ஆரம்பித்தார். "எழுதினேன் ஆறு வரிக்கதை; கிட்டியது ஐம்பது பின்னூட்டங்கள்" என்று கூவினார் பாபா. கொட்டக் கொட்ட இவரும் ஆனாரோ தேனீ என்றால் எனக்கும் தேன்கூட்டிற்கும் சம்பந்தமில்லை என்றார். விட்டால் இதற்கு ஐம்பது சுட்டிகள் தருவாரென்ற பயத்தில் எஸ்கேப் ஆனேன்.

'ராணியும் மத்த தேனீக்கள் மாதிரிதான் முட்டையிலேருந்து வரும். ஆனா புழுக்களைப் பாத்துக்கற வேலைக்காரத் தாதிமார் தேனீக்கள் சில புழுக்களை மட்டும் தேர்ந்தெடுத்து அதுக்குன்னு சிறப்பான சாப்பாடு (ராயல் ஜெல்லி) குடுத்து வளப்பாங்களாம். அதுதான் பின்னாடி ராணித்தேனீயா வருமாம்' என்ற செய்தியைக் கேள்விப்பட்ட செந்தழல் ரவி இதையே 'தேனீக்களுக்கு ஒரு கேள்வி' என்ற பதிவாய் 'ஒரு ராணியை மட்டும் ஊட்டி வளர்ப்பது ஏன்' என்று போ(கே)ட்டுவிடலாமா என்று யோசித்தார்.

'ஆண் தேனீக்குக் கொடுக்கு இல்லை. இவங்களுக்குத் தேனும் சேகரிக்கத் தெரியாது. சும்மா சுத்திக்கிட்டு இருப்பாங்க. கூட்டுக்கு ஏதாச்சும் ஆபத்து வந்துட்டா கத்துவாங்க. அட அவிங்களும் நம்மளப் போலன்னா அவிங்களயும் நம்மளோட வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல உறுப்பினராக்கி விடமாலா?' என்று கைப்புள்ள சின்னப்புள்ளத்தனமாக் கேட்டுக் கொண்டிருந்தார்.

"ஆண் தேனீக்களோட முக்கிய வேலை ராணியைப் புணருதல். ஆனா ஒரு தரந்தான். அந்தப் புணர்ச்சி முடிஞ்சதுமே ஆண் ஈயோட உறுப்பு ராணியோட உறுப்புல மாட்டி அறுந்து போகும், உறுப்பறுந்த ஆண் தேனீ கொஞ்ச நேரத்துல செத்துரும்", என்றவுடன் நமக்கு குறியறுக்கும் வேலையைக்கூட வைக்கவில்லையே என்று ரோஸாவஸந்த் குலுங்கி குலுங்கி அழுதபடியே கால்பந்தாட்டம் பார்க்க சென்று விட்டார். குமரனோ ஒருபடி மேலே சென்று "புணரவி ஜனனம், புணரவி மரணம்" என்ற பாடலைப் போட்டு ஐநூறு பின்னூட்டங்களை அள்ளிச் சென்றார்.

தேனீக்களைப் பற்றி அனைத்து செய்திகளையும் படித்த தருமி, கண்களில் நீர் கசிய இன்ஸ்டண்ட் பதிவு போட்டு "This dude Worker Bee..." என்று உணர்ச்சி வசப்பட்டார்.

தேன்கூட்டு அரசியலைக் கேட்ட பத்ரி, அதற்கு தேனீக்களே முழுப் பொறுப்பு என்று சுட்டிக் காட்டினார். உதாரணமாக இஸ்ரேல், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், அமெரிக்கா, அண்டார்டிகா போன்ற நாடுகளிலிருக்கும் தேன்கூடுகளைச் சுட்டிக் காட்டினார். இலங்கையில் தேன்கூடு பற்றி கருத்து தெரிவிப்பதைக் கவனமாகத் தவிர்த்தார்.

தேன் என்று வலைப்பூ வைத்திருக்கும் சிறில் அலெக்ஸை சந்தித்தேன். கட்டாயமாக எங்குமே, யாருக்குமே தேன் புகட்டப்படுவதில்லை என்று அவர்அடித்துக் கூறினார். நீங்கள் விரும்பினால் தேன் குடிக்கலாம். ஆனால் கட்டாய தேன் மாற்றம் நடந்ததே இல்லை என்றார்.

"தேனீக்களை நினைக்கும்போது எனக்கும் ஏதோ வருத்தமாக இருந்தது. புணர்ச்சியின் திளைப்பை அறிந்திராதவொரு வாழ்வினை அவை எப்படி வாழ்கின்றன? அல்லது புணர்ச்சியும் அதனைச் சார்ந்த விதிகளும், பிணக்குகளும் வேலையைக் கெடுக்கும் என்பதாலா அவர்களுக்கு இந்த முட்டையடிப்பு? பின் அவை எதனால் இன்புறுகின்றன? இந்தக் கடமையாலா? கர்ம யோகமா? யாரைக் காப்பாற்ற அந்த 4-5 வார ஓயா ஓட்டம்? புணர்ச்சியின்பம் உட்பட நிறையோ குறையோ வெளியிலிருந்து பார்க்கும் என் மனதின் கற்பிதங்களோ?" என்று சிந்தித்தபடி போலியார் அடுத்த கதைக்கு கருக் கிடைத்த மகிழ்ச்சியில் திளைப்பதாய் சிம்ரன் ஆப்பக்கடை ஏஜென்ஸியின் செய்தி கிட்டியது.

"என்னது ராணியா எங்க எங்க?" என்று முழுதாய் செய்தியைக் கூட உள்வாங்கிக் கொள்ளாமல் ஜொள்ளுப்பாண்டி நம்மை துரத்தினார். இவர் சீட்டுக்கட்டு ராணியைக் கூட விட மாட்டார் என்ற எண்ணம் வர ஓட ஆரம்பித்தேன்.

"ஓடினேன்...ஓடினேன்... வாழ்க்கையின் எல்லைவரை ஓடினேன்" என்று ஒருவர் கூட ஓடிவர ஆரம்பித்தார். "அட தேன்கூட்டுலயும் அரசியலா?" என்றவரை பரிதாபமாக ஏறிட்டுப் பார்த்து மெல்ல திடுக்கிட்டேன். "அட வாங்க காசி" என்றேன் மூச்சிரைத்தபடி...

(தேன்கூடு அரசியல் பற்றிய வாசகர் அனுபவங்கள் வரவேற்கப்படுகின்றன. அடுத்த பதிவில் தொடருவேன் :-)

Wednesday, July 26, 2006

பாப்பையா அரங்கம்

(விசு போயிட்டு சன் டிவி அரட்டை அரங்கத்துல பாப்பையா வந்தாருன்னு கேள்விப்பட்டேன். நிகழ்ச்சியை பாக்கத்தான் முடியல. ரோசிக்கக்கூடவா முடியாது? டைட்டிலு "சமூகநீதி காப்பவர்கள் அரசியல்வாதிகளா? வலைப்பதிவர்களா? சினிமாக்கலைஞர்களா?" இடம் காரைக்குடி செஞ்சி பொட்டல்.)

பாப்பையா (பாப்): ஹூம் வாங்கையா வாங்க. என்ன இப்பிடி குமிஞ்சிட்டீங்களே... ஆம்பளங்க கூட்டம் அதிகமா இருக்குதுன்னா வூட்டுக்கார அம்மாகிட்ட சண்டை போட்டு வந்தீகளான்னு கேக்கலாம். பொம்பளங்க கூட்டம் கூட அதிகமா இருக்குதேப்பா. இத்தனைக்கும் நான் சினிமாக்காரன் கூட இல்ல (ஹெஹ்ஹெஹ்ஹே) (கூட்டமும் சேர்ந்து சிரிக்கின்றது)

1: ராஜா ஸார் அந்த மைக்க இப்பிடி கொடுங்க. யாருங்க இப்பிடி கேனத்தனமா தலைப்பை வைச்சது? சமூகநீதின்னா என்னான்னு உங்க யாருக்காவது தெரியுமாய்யா?
பாப்: ஏன் நீங்க கொஞ்சம் சொல்லித்தாரது. தள்ளாத வயசுன்னுதான் இருக்கே, தவிர தெளியாத புத்தின்னு இல்லியே (சிரிப்பு)
1: இப்ப என்ன சொன்னீங்க? மக்களும் எதுக்கு சிரிச்சாங்க?
பாப்: அட என்னாப்பா நீ இந்த குதி குதிக்கிற? நம்ம ராஜா நல்லா புட்பால் ஆடுறவரு. அப்புறம் ஜிடானே மாதிரி முட்டிடுவாரு. அம்புடுதேன். ரெட் கார்டு கொடுக்க ரெப்ரி கூட கிடையாதப்பு.
1: என்ன மெரட்டுறீங்களா?
பாப்: அட யாரப்பா இந்த ஆளு. ஜோக்கு சொன்னா ரசிக்கணும்ப்பா. ராஜா மைக்க பாஸ் பண்ணுப்பா...
2: அய்யா வலைப்பூ படிச்சிருக்கீங்களா? சமூகநீதியை சும்மா பிச்சி உதற்றாங்கப்பு.
3: அட சும்மா ஒக்காருப்பா. எங்க தலைவரு ஒரு கொரலு உட்டாருன்னா போதும். நீதி தானா நெல நாட்டிக்கும்.
4. கஸ்மாலம் உன் தலீவரு என்னிக்கு கொரலு வுடுறது? சமூகநீதி என்னைக்கு கெடைக்கிறது? என் தலீவரைப் பாரு. கொரலு என்னா? எல்லாத்தையும் வுடுவாரு.
(ரவுசுப்பாண்டி கூட்டத்திலிருந்து சவுண்ட் கொடுக்கிறார். "யோவ் எல்லாத்தயும் உள்ள உடுறதுக்கு உன் தலீவரென்ன ரோஸா பூர்ஷ்வாவா? 'டேய் எவண்டா அந்த மலப்புழு'வென்று ஏகவசனத்தில் ஒருவர் தமிழில் தெகிரியமாய் எகிற கூட்டம் களை கட்டுகின்றது)
பாப்: ராசாக்களா (அட உன்¨னெய இல்ல ராஜா) நீங்க ரெண்டு பேரும் பூர்ஷ்வாவைப் பத்திப் பேசி அவரோட பூவாவுக்கு வேட்டு வைச்சிடாதீக. (சிரிப்பு)
2: தலைவர்களை நம்பிப் பிரயோஜனம் இல்லையென்றுதான் வலைப்பதிவாளர்கள் தனி இயக்கம் கண்டு சமூகநீதியை நிலை நாட்டுகின்றார்கள். அப்பேரியக்கம் 50 பேர்களை தன்னுடன் இணைத்து அசுர வேகத்தில் வளர்கின்றது. இதோ கிடைத்து விடும் நமது சமூக நீதி. கிடைத்து விடுமென்ன. கிட்ட வைப்பேன்.
பாப்: இதோ நீ கேட்ட சக்தி. திட சக்தின்னு இன்ஸ்டண்டா சமூகநீதி கெடைக்குதுன்னு நம்பர் -2 (என்று நிறுத்த கூட்டத்தில் சிரிப்பலை) அட அவரோட எண்ணைச் சொன்னேன்பா... சொல்லிட்டாரு. ஹீம்ம்ம் இப்ப மூணு என்ன சொல்றாரு?
1: ஏங்க சமூகநீதின்னா உங்களுக்கு என்னான்னு தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்க பாப்போம். அரட்டையாம்... அரங்கமாம்...
4: உன் தலீவருக்கு ஏது வாய்ஸ்? அத்தான் அடக்கிப்புட்டோம்ல. இப்ப எங்க தலீவரப் பாரு. சென்ட்ரலுக்கே மருத்துவம் பாக்குறாரு...
3. அதுதான் ஊரே சிரிப்பா சிரிக்குதே... லேட்டஸ்ட் ஹிட்டுப் பாட்டு பாடறேன் கேளு...
"கோபாலா
ஏன் ஸார்?
எங்க போற?
AIIMS போறேன்
என்னா செய்ய?
சேவை செய்ய
தூக்கியடிச்சா?
கேஸ் போடுவேன்
யாரைப் போல
ஹூம் உங்கைய்யாப் போல
"
பாப்: (ஆஹா கூட்டணி வேலைக்கு உலை வைச்சிடுவானுங்க போலருக்கே என்ற கடுப்புடன்) சந்த்ரு பாட்டு ப்ப்ரம்மாதம்'ன்னு சொல்ல முடியுமா? சொல்லத்தான் விடுவாய்ங்களா? சரி நம்பர் மூணு சம்சாரத்தோட சண்டை போலருக்கே... சரி 4 வாங்க வாங்க ஒரு கை ஓசையாப் போகக்கூடாதுல்ல...
4: ஓவரா ஆடாதீங்கடா... ஒரு படத்தை ஓட விட்டோம். பெருந்தன்மையா 'லக்கலக்க' வெற்றிக்கு உண்மையான காரணமான எங்கள வுட்டுட்டு யாராருக்கோ போஸ்டர் ஒட்டுனீங்களே... நாங்க அத மறந்துடல. மவனே எங்க பெல்ட்டுக்கு வாங்க வைச்சிக்கிறேன்
3: அப்பு எங்ககிட்டயே பயாஸ்கோப்பா? மவனே ஜெயங்கொண்டம் தேர்தல் மறந்து போச்சா? உங்க பெல்ட்டுக்கே வருவோம். ஆனாலும் பெல்ட்டுக்கு கீழ அடிக்க மாட்டோம்.
1: (அழாத குறையாய்) அய்யா சமூகநீதின்னா என்னான்னு தெரியுமா?
பாப்: பெல்ட்டுக்கே வருவோம். பெல்ட்டுக்கு கீழ அடிக்க மாட்டோம். அட்றா சக்கை அட்றா சக்கை. வேட்டிக்கே பெல்ட் போட்டு புரட்சி செஞ்சவன் தமிழனாச்சே. கட்டி அவுந்துடாம சட்டுன்னு கழட்டி நச்சுன்னு எங்கப்பா என்னைய அடிச்சது ஞாபகத்துக்கு வருதுப்பு. இப்ப அந்தா மாதிரியான அடிய 3 நம்ம நாலுக்குக் கொடுத்துட்டாரேப்பா... ஸ்ஸப்பா என்னா அடி என்னா வலி (சிரிப்பு) ஹூம் வாங்க நாலு
5: எங்கள் நம்பர் டூவை மதிக்காமல் இருந்ததற்காக எங்கள் இயக்கத்திடம் நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும். கோரிக்கை வைப்பேன்.
பாப்: (ஜெர்க்காகி...இந்த டயலாக்கை எங்கேயோ கேட்டிருக்கேனே என்று யோசித்தவாறு) வாய்யா வா இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி மாதிரி ரெண்டுக்கு சப்போர்ட்டா வந்திருக்கீக. வாங்க வாங்க. என்ன எப்பவுமே சப்போர்ட் ரோல்தானா? கொஞ்சம் மெயின் ரோலும் பண்றது?
5: ஹிஹி என்ன செய்வது பாப்ஸ். சட்டியில இருக்குறதுதான அகப்பையில வரும். வைச்சுக்கிட்டா வஞ்சனை பண்ணப் போறேன். ஒரு எழுத்தாளனா சமூகநீதியைப் பாக்குறப்போ...
பாப்: (ராஜா சீக்கிரம் மைக்கை வேறாள்கிட்ட கொடுப்பா...என்று சிக்னல் செய்கிறார்)
1. அடப்பாவிங்களா? சமூகநீதின்னா என்னான்னே சொல்லாமே வஞ்சனை பண்றீங்களே? நியாயமா? இந்தக்கூட்டத்துல எத்தினி பேரு இப்பிடி சத்தியப் பெரமாணம் எடுக்க முடியும்... ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யய்யோ...

(இனிமேல் தொடர்ந்தால் குழப்பம் மேலிடலாமென்பதாலும், முதலாவது முறையென்று முன்னோட்டமிட்டதாலும், பின்னூட்டமாய், படம் பார்த்து வெளிவந்த பாக்கியவான்களிடம் மைக் பிடித்து பேட்டியெடுக்கின்றார்கள் சம்பந்தப்பட்ட டிவிக்காரர்கள்)

குழலி: ஹிஹிஹிஹி யாராரு சமூகநீதி பேசறதுன்னு வெளங்காமப் பூடிச்சு. அந்தக்காலத்துல அபிமன்யுவிற்கு எதிரா அரவாணன் செய்யாததா? சாதியென்ற சட்டகத்தை உடைத்த எமது ஐய்யாவும், அவரது அறங்காவலரான சமூகநீதிக் காவலரான சின்னய்யாவை விடவா மற்றவர்கள் செய்து காட்டி விட்டார்கள்? ராஜா என்ற பெயரிலேயே கண்வாய் கடந்தது தெரியவில்லையா? எனக்கென்னவோ முதாலாமவர் அறிவுப்பசி அண்ணாசாமி போலவே தெரிகின்றது.

முகமூடி: அடப்போங்கய்யா... சமூகமாம் நீதியாம். இவிங்க இப்பிடி இருக்கிறவரைக்கும் இளிச்சாவாய்த்தனமாய் இங்கிதமின்றி அலையமுடியுமே தவிர நான் கேட்டதுக்கு சத்தியம் போடக் கூட ஆளில்லங்றதுதான் நிதர்சனம். எனக்கென்னமோ நம்பர் ரெண்டு குவாட்டர் கோவிந்தன் போலத்தான் தோணுது. மத்தபடி நிகழ்ச்சியப் பத்தி நூறு பின்னூட்டம் வந்தா என்னோட பங்களிப்பான எழுபதாவது பின்னூட்டங்களில் அறுபத்து ஒன்பதில் பதில் சொல்வேன். மத்தபடி இந்த ஸ்டேட்மெண்டும் ஒரு வெறும் டிஸ்கிதான். முன்னாடியே சொன்னாலும் சொல்வேன்.

சுந்தரமூர்த்தி: (பலதும் சுட்டிக்காட்டி, சைகையுடன் பேசுகின்றார்) அன்று அவ்வாறு பேசிய மொழிநடையிலேயே, இன்று இவ்வாறு ஒருவர் பேசினால் அதற்கு அவரும் இவரும் ஒன்றுதானே? இதை நான் பாப்பையாவைப் போலவே சொல்ல முடியாது. பேசினால் கோர்ட், கேஸ் என்பார்கள். இல்லாவிட்டால் சுனா.மூனா என்பார்கள். இதையேத்தான் இணையார்த்தி அஃதாவது இணைய+மெக்கார்த்தி என்பார்கள். சரிதானே?

(டிவி நிருபர் தனது மண்டையில் மைக்கால் தானே அடித்துக் கொண்டு மூர்ச்சையாகின்றார். யாரோ மூர்ச்சை தெளிவிக்க...)

மாயவரத்தான்: எல்லா இடத்திலும் போஸ்டர் ஒட்டினார்கள். அது அந்த வாரம். போஸ்டர் ஒட்டுவதற்குதானே இடமே இருக்கின்றது. அது இந்த வாரம்.
கார்த்திக்ரமாஸ்: இங்கே பேசியவர்களில் பலர் தெருப்பொறுக்கிகள். விபச்சாரம் செய்கின்றவர்கள். கூட்டிக் கொடுக்கின்றவர்கள்

(நிருபர் பதறுகின்றார்)

ரோஸாவஸந்த்: பாஸ்டர்ட். அவனுங்க குறி அறுக்க வேண்டும்.

(ஒரு கூட்டமே ரோஸாவையும், கார்த்திக்ரமாஸையும் உச்சி மோந்த்து அழைத்துச் செல்லுகின்றனர்)

கோஷம்:

முன்னாள் தமிழ்மண நட்சத்திரம் ரோஸா வாழ்க
இன்றைய தமிழ்மண நட்சத்திரம் ரமாஸ் வாழ்க

காசி: ஆம் இப்படித்தான் எல்லாம் நடந்தது என்பதை தெளிவாகப் புலப்படுத்தவே, எனது ஒரு டஜன் பதிவுகளில் கிசுகிசுவாய்க் கூறினேன். என்னை விட சேவை செய்து மௌனம் காத்தவர் பலரென்றாலும் 'கூந்தலிருப்பவள் அள்ளி முடிந்துக் கொள்வாளெ'ன்று நீங்கள் கூறுவதை நன்றியோடு ஏற்றுக் கொண்டு, 'போட்டதை எடுத்த தெம்புடனாவது இப்போதைக்குச் செல்கின்றேன். பின்னர் பிளாக்தேசமாய் ஆங்கிலத்தில் வருவேன். போய்வருகின்றேன் நன்றி'.

(நிருபர் மேலும் குழம்ப...)

இப்போதைக்கு திரை

Saturday, July 15, 2006

சில வரலாறுகள் சில திரிபுகள்

குசும்பன் பதிவுகளெல்லாம் டாவின்சி கோடு மாதிரி இருக்கு (என்னோட கழிவுகள் கூட வானவில் கலரில் இருக்கும்: நன்றி இளவஞ்சி, இணை நிர்வாகி, தமிழ்மணம்) கொஞ்சம் புரியிற மேரி எய்து நைனா'ன்னு வேண்டுகோள் வராத இடமேயில்ல பாசு... சரி புரியிறா மேரி எய்துவோம்னு லின்ங்ஸ் கொடுத்தா எவ்ளோ இடங்கள்ல சுட்டி சுட்டி மேட்டர கண்டுக்கிறது? ஸ்ட்றைட்டா பேரப் போடு நைனா'ங்றாங்க. பேரு போட்டாலும் போடாட்டியும் தொடர் தாக்குதல்'னு கூச்சல் போட இணையத்துல ஆளுங்களா இல்ல?

சந்தேகம்: பார்த்தால் பசி தீரும்'ங்றது சொலவடைங்க. நம்ம உபிச பெயரிலி அண்ணை இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் வழியாய் ரோஸா அண்ணை இப்போ வந்துள்ளார். அவரோட ஸ்டேட்மெண்ட் 'குசும்பனை நான் படிப்பதில்லை. ஆனால் மலத்தின் சுவை பார்த்தாலே தெரியுமென்று'. அட்றா சக்கை (அப்டிப்போடு' என்றுதான் சொல்ல வந்தேன்). பார்த்தால் சுவை எப்படித் தெரியும்? அது சரி... வசூல் ராஜா பாணியில் சொலவடையை அனுபவிக்கணும். அர்த்தம் கேக்கப்படாது'ங்றேளா? அதுவுஞ் சரி...

ஆமாம் ஹிஸ்டரின்னா என்னாங்கோ? ஒரு கோட் "...history is always written by the winners. When two cultures clash, the loser is obliterated, and the winner writes history books - books which glorify their own cause and disparage the conquered foe. As Napoleon once said, "What is history, but a fable agreed upon?"... "By its very nature, history is always a one sided account."

--- The Da Vinci code by Dan Brown (page: 276)

சைடுடிராக் 1: யுனிக்கோடு, தேனி தானியங்கி எழுத்துரு இப்பிடி எதுவுமே தெரியாத டெக்னிகல் முடம் நான். இதையெல்லாம் யாரு செஞ்சாங்க? ரொம்ப நாளாத் தெரியில. ஒரு 'வரலாறு' கூட இல்ல. இன்னிக்கு உமர்தம்பி என்பவர் பற்றிய மரணச் செய்தியில் பல செய்திகளை, நிகழ்வுகளைத் தெரிந்து கொண்டேன். இப்படியும் ஒரு மனிதரா என்று வியந்து கொண்டேன். புகழ் வெளிச்சம் கிட்டவில்லை என்று ஆதங்கப்படும் மனிதருள், மாணிக்கம் உமர்தம்பி அவர்கள். அன்னாரது மரணம் ஒரு நிறைவிக்க முடியாத வெற்றிடம். பொன்னுடல் நீத்தாலும் அன்னார் புகழுடம்பு எய்தினார். அன்னாரது குடும்பத்திற்கு குசும்பன் ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றான்.

இப்ப வரலாறுக்கு வர்றதுக்கு முன்னாடி ஒரு புவியியல் சமாச்சாரம். சில/பல மாற்றங்களில் நானும் கொஞ்சம் பிஸி. இதுவே செல்வராஜ் (தமிழ்மண இணை நிர்வாகி) சொன்னா நியூஸ். அதையே நான் சொன்னா தொடர் தாக்குதல். என்னப்பா நியாயமிது? சத்தியமா நௌப்ரானே புவியியல் மாற்றங்களில் நானும் பிஸி. உடனே தேசபக்தி அதிகமாகி இந்தியா போறேனா?'ன்னு கேள்வி கேக்காதீகப்பு. நம்ம தேசபக்திதான் இப்ப உலகமே (அதாங்க பெட்டி பூர்ஷ்வாவிற்கு தெரியும்) அறியுமே!

சைடுடிராக் 2: சொந்த செலவில் சூனியம் வைக்கிறது (நன்றி: இளவஞ்சிக்கு சொல்லிக் கொடுத்த 'யாரோ') அப்டீங்ற புது சொலவடையை கொஞ்ச நாளா மக்கள்ஸ் ப்ரீயா பயன்படுத்துறாங்க மாமே! 'அப்னே பேரோமே குலாட்டி (குத்துமதிப்பா சொந்த காலிலே குத்திக்கோ)' இப்பிடி ஆரிய மக்கள்ஸ் சொன்னதை திராவிடப்படுத்திய யாரோவிற்கு நன்றி!

இப்ப காலம் முந்தியமாதிரி இல்லை. உமர்தம்பி தன்னை, தனது சேவைகளை அடையாளப்படுத்த விரும்பாவிடினும் வரலாறு அன்னாரை அடையாளங்காணும். இனங்கண்டு கொள்ளும். பெருமிதத்தில் விம்மும். இதுவே வரலாறு தன்னை பெருமிதப்படுத்திக் கொள்ளும் பாங்கு.

ஆனால் நெப்போலியனின் வரலாறு குறித்த கூற்றை எடுத்துக் கொண்டு முன்செல்வோரும் இருக்கின்றார்கள் என்பதே வரலாற்று உண்மையும் கூட.

சைடுடிராக் 3: குசும்பனை தமிழ்மணத்தில் இருந்து நீக்கியதற்கு எதிராக தனது எதிர்ப்பை ரோஸாவசந்த் பதிவு செய்திருக்கிறாராம். அதாவது மாரல் சப்போர்ட்டாம். வேறெதுவும் செய்ய முடியாதாம். அது சரி... ரோஸாவிற்கு சிம்புவின் குறியறுக்க, பெட்டி பூர்ஷ்வா போர்வையில் பொங்க முடியும். ஈழத்தமிழர் அகதிகளாய் படும் அவஸ்தைளுக்கிடையே புட்பால் பார்த்தும் வயிறு எறிய முடியும். அவனவன் சுனாமிக்காக எல்லாம் செய்யும்போது வெறும் சுட்டிகளைத் தொகுத்து சேவை செய்ய முடியும்... அப்பப்பா என்ன ஒரு நியாயம்? மக்கள்ஸே எல்லா இடத்திலேயும் துண்டு போடுங்கள். யாரு கண்டா நாளைக்கு உங்களுக்கேக் கூட உதவலாம்...

பேக் டு ட்ராக்: ஏதோ புனைப் பெயருல ஒளிஞ்சிக்கிட்டு தன்னத்தாக்கிறதா காசி தன்னோட 'வரலாறு' பதிவில போட்டிருக்கார். யப்பாடி ஏதோ வரலாறுல ஒரு பகுதி (கேவலமாயிருந்தாலும்) எனக்கும் கெடைச்சிது மகிழ்ச்சியே! மகாபாரத சகுனி போல... இராமாயண கூனி போல...

இப்பதான் நெப்போலியனே மறுபடியும் ஞாபகத்துக்கு வராரு.

என்னை யாருன்னு காசிக்கு தெரியாதாம்? அப்பாடி... இப்பதான் தெரிஞ்சுதாம். அவரோட பழைய பின்னூட்டத்தை எடுத்துப் போடுவோமா?

ஓஓஓஓ ஒண்ணும் தெரியாத பாப்பா போட்டுக்கிச்சாம் தாப்பா...

இந்தாளு இன்னோரு ஆளை வலைப்பூ ஆசிரியரா கூப்புட்டாராம். அது சரி. என்னா மாசம்? என்னா ரிலேஷன்சிப் அப்போ? போடுவோமா பப்ளிக்ல? ஆனாலும் போற போக்கில அள்ளித் தெளிச்சிட்டு 'புனிதவான்' பிம்பம் தேடுற ஆளை இப்பத்தான்யா பாக்குறேன். என்னா பண்றது? வரலாறுக்கு மொத்த குத்தகை இன்னைக்கு காசி பக்கம். நடாத்துங்க ஸார்.

பாவம் உமர்தம்பி... இந்திய ஜனாதிபதிக்கு கடிதம் கூட எழுதத் தெரியாத ஆசாமி...தனது சேவைகளை சுயதம்பட்டம் செய்ய... தனது 'நம்பகத்திற்கு பா(கா)த்திரமான ஆக்களிடம் தனது சேவையை விற்கும் தயாள குணம்' மிடில் ஈஸ்டிலிருந்து பிடுங்கி நடப்பட்ட மரமான தேச பக்தி'... இவை எதுவுமே அறியாத விச்ராந்தியாய்...

தருமி ஸார் போல ஒணர்ச்சி வசப்பட்டு சொல்றேன் "KASI You De Man".

வாழ்க! வளர்க!

Friday, July 14, 2006

மதிப்பிற்குறிய மாமிக்கு

என்னாப்பா... யக்கோக்வ்வுன்னு கூவிக்கினினு இர்ந்த பார்ட்டி மாமிக்கு மாறிட்ச்சேன்னு வர்த்தமா கீதா? அட இப்ப இணையமே உங்களை மாமின்னு தானே முத்திரை குத்துது. அப்புறமென்ன? வலைப்பூக்களே (தமிழ்மணம்???) முடிவெடுத்தப்போ நாம்மட்டும் எம்மாத்திரம்? தருமி ஸார் மாதிரி ஒணர்ச்சி வசப்பட்டு "When You are in Rome do what Romans do!" அப்பிடின்னு சொல்லிக்கிறேன்.

"Salsa Verdae" அப்பிடின்னு சொல்லி ஜூட் வுட ஆசைதான். அட என்னான்னு சொல்வேனுங்க... கருத்து ஊறுதுங்கோ...

இப்போ என்னாகிப் போச்சி? இமேஜு டேமேஜாகிப் போச்சா? இமேஜுன்னா என்னாங்க? ஒரு சின்ன பேக்டிராக்...

இதே மேரி முன்னாடி ஜெயஸ்ரீ மாமி தங்கமணி பதிவுல பின்னூட்டத்துல கூவிச்சி. என்னாச்சி? அனாதை ஆனந்தன்'ங்ற சமூகநீதி கனவான் "உங்க ஊட்டு பொண்ணுங்க எங்கன சவரம் பண்ணிக்கிது"ன்னு சூப்பர் கேள்வி கேட்டிச்சி. திராவிட சமூகத்தின் ஏகபோக பிரதிநிதியான தங்கமணி அந்த பின்னூட்டத்தை அனுமதித்த ரகஸியம் என்ன?

அட இன்னிக்கு மாலடிமையின் மலவருடியாய் தன்னை அறிவிக்காது சொரிந்து கொண்டிருக்கும் சிங்கைக்காட்டான் குழலி அங்கன என்ன சொன்னார்? வெறும் கக்கூஸை கழுவினால் பாப்பாத்தி தலித் ஆக முடியுமான்னு? ஏன்னா செப்டிக் டாங்கிலேர்ந்து அள்ளுறது வேற ஆளுங்களாம். அட அட அடடா என்னா தத்துவம் என்னா தத்துவம்... எனக்கு அன்னிக்கே கேட்க தோணிச்சு. கொழலி வூட்டுல "எல்லாம்" முடிச்ச பின்னாடி "சமூகநீதி" நெலை நாட்ட அவரோட வூட்டு ஆளுங்களே "அத்த" "Dispose" செய்றாங்களான்னு... ஆனா இப்பிடியெல்லாம் கேக்க முடியுமா? சிங்கப்பூருல புருஷோத்தமன் குழலி எப்பிடி "டிஸ்போஸ்" செய்யிறாரு? சிங்கப்பூரு உடுங்க. ஆட்டோமேடிக்கா அள்ளலாம். கடலூர்ல என்ன நடக்குது? இவரோட காந்தான் (குலம் கோத்திர மக்கள்) "self Disposal" செய்கிறார்களா? யக்கோவ் இப்பிடித்தான் கேக்கோணும். இதக் கேக்க, இப்பிடிக் கேக்க தெம்பும் வேணும்.

இன்னிக்கு முத்து தமிழினிக்கு காவடி தூக்கிக்கிட்டு உங்க கிட்ட என்னா பின்னூட்டம் கொழலி உடுறாரு? ஏன் முத்து அணுகமுடியாதவரான்னு... இதையே அந்தக்காட்டான்கிட்ட உங்களால பதிலுக்கு கேக்க முடிஞ்துதா? "அட பண்ணாடையே... டெம்ப்ளேட்ல ஒரு நிரல்துண்டைப் போட்டா ரெபர் பண்ற லிங்க் தெரியும்ங்றத அறியாத டெக்னிகல் முடம் நான். சரி தெரியாம எழுதிட்டேன். அதுக்கு பின்னூட்டத்துல ரவுடி மாதிரிக் கத்தாம ஒரு மின்னஞ்சல் முத்து தமிழினி எனக்கு போடலாம் தானே. நான் என்ன அப்பிடி அணுக முடியதவளா?" அப்பிடின்னு நியாயமாக் கேட்டிருக்கலாம். ஆனா உங்களால அது முடியாது. வாங்கிக் கட்டிக்க மட்டுமே தெரியும்.

கூட்டிக் கொடுப்பது பார்ப்பான் குலமென்றதெற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் நீங்க போடறீங்களாம். அப்பிடி என்ன மோசமா சொல்லிட்டாங்கன்னு இந்த குதி? இதுக்கு தமிழ்மண நிர்வாகிகள் என்ன செய்ய முடியும்? ஏதோ இன்னிக்கு ஆளைத் தெரியும்னு நிர்வாகிகளை கேள்வி கேக்கறீங்க... நாளைக்கு யாரு "துட்டு" போட்டு "இலவச" சேவை செய்யப்போறாங்களோ? அப்போ யாரைக் கேள்வி கேப்பீக?

அது சரி தமிழ் மண நிர்வாகிகளைப் பத்தி நான் ஆபாச பதிவு போட்டதுக்கு மொதோ பின்னூட்டமே நீங்க உட்டீங்கன்னு சவுண்டு வுட்டுபோட்டீங்க. ஆனா ஏன் அந்த பதிவு? தமிழ்மணத்தின் இணை துணை நிர்வாகியான இளவஞ்சி குசு, பீ, மூதி'ன்னு தரமான பதிவு போட்டதுக்கு எதிர்வினைதானே அது. அங்கன போயி 'இளவஞ்சி உன் பதிவைத் தூக்கு'ன்னு நடுநிலைமையா உங்களால சொல்ல முடியாது. ஏன்னா குசும்பன்கிட்ட சொன்னா கேட்டாலும் கேப்பான்ங்றது உங்களோட நம்பிக்கை. உங்களை மாதிரி பலரும் சொல்லவும் செஞ்சாங்க. ஆனா இணையத்துல எல்லாரும் என்னைய மாதிரி ஏப்பை சாப்பையாவா இருப்பாக?

ராமன் ஸ்ரீநிவாசன் ஐயங்கார் என்பவரை நீங்கள் அறிவீர்களா? ரோஸாவசந்த் என்ற செந்தமிழ் நாமகரணத்துடன், பெட்டி பூர்ஷ்வா என்ற புரட்சிப் பெயரோடு இணையத்தில் வலம் வருகிறவரை விடவா பிராமணர்களைப் பற்றி தரக்குறைவாக மற்றவர் எழுதிவிட்டனர்? வாயைத் திறந்தாலே நாக்குப்பூச்சி நெளியும் மொழிநடையோடு இவர் செய்யும் "திராவிட சேவை"யை நீங்கள் அறிவீர்கள் தானே? இந்த லட்சணத்தில் அடுத்தவரை நோட்டம் அந்தாளு சொல்வார். தான் ஒரு பிராமணராய் இருந்தும் பிராமணீயத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லி விட்டு எழுத வந்தவரா ரோஸா? இந்தாளு மாதிரி 'போலியா' எழுதினாவது ஒரு ரெகக்னிஷன் நெட்டுல கிட்டும். அத்த வுட்டுப்போட்டு நீங்களும் கரடியா கத்துறீங்க மாமியாப் பொறந்தது தலை விதின்னு...

முதல் மரியாதை படம் பாத்தீங்களா? அதுல எல்லாரும் சிவாஜியை நெருக்கி ராதாவை நீங்க சின்ன வீடா வெச்சிருக்கீங்களான்னு கேப்பாய்ங்க. உண்மையில்லேன்னாலும் நம்புற கூட்டமில்ல அது. அதுனால "ஆமா. அவள நான் வெச்சிருக்கேன்"ன்னு சிம்பிளா பதில் சொல்லிட்டு துண்டை ஒதறி தோள்ல போட்டுக்கிட்டு போய்க்கினே இருப்பாரு. நம்ம பாலிஸியும் அதேதான்.

இப்ப பாருங்க... வர்ர பின்னூட்டத்துக்கு பதிலு. ஏன் பின்னூட்டத்தை வெளியிட முடியிலன்னு ஒரு விளக்கம். சப்பைக்கட்டுகளுக்கு பதில் வியாக்கியானம். அப்புறம் வழக்கம் போல வூட்டுக்காரர், குழந்தைகள், இந்தியா பயணம்'ன்னு ஏதோ நார்மலாயிட்ட மாதிரி ஒரு பதிவு. யக்கோவ் இது இண்டர்நெட். முடிஞ்சா துளசி அக்கா மாதிரி 'எல்லோருக்கும் நல்லவரா' இருங்க. நடுநிலைமையாத்தான் இருப்பேன்னா பாவம் இப்பிடித்தான் ஆகும். என்ன எதிர்காலத்துல இந்த மாதிரி நான் மடல் போடமாட்டேன்.

மத்தபடி குடும்பம், குட்டியப் பாருங்க. வீணா டென்ஷன் ஆக வேண்டாம். உங்களப் பத்தி தெரிஞ்சவங்களுக்கு உங்களப் புரியும். தெரியாதவங்களுக்கு 'குனிஞ்சு குத்தடி ஜைனக்கா' போட்டாலும் புரியாது. இத்த புரிஞ்சுக்கங்க.

பொடிப்பய அட்வைஸ் குடுக்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீக. இலவசமா என்னால கொடுக்க முடிஞ்ச சேவை அது மட்டும்தான்.

அன்புடன்,
குசும்பன்.

பி.கு. எனக்கும் இப்பிடி இலவசமா மூட்டை மூட்டையா எனக்கும் அட்வைஸ் வந்திருக்கு. பலசமயம் இந்தக்காத தொறந்து அந்தக் காது வழியா வுட்டுருக்கேன். ஒருவேளை இந்த அட்வைஸாவது பயன்படலாமோ? :-)

Monday, July 03, 2006

ஜோஸ்யம் ஹேஸ்யம் பாஷ்யம்

காட்சி - 1

ஜோஸ்யம்

(இம்முறை வாஸ்து ஸாஸ்திரம் படி வீட்டைத் திருத்தி அமைத்த சின்னக் கலைவாணர் அருமை அண்ணன் விவேக் நமது வெற்றிக் கூட்டணியான பார்த்திபன், வடிவேலு, கருணாஸோடு சேர்கின்றார். இனி உங்கள் பாடு...)

வடி: என்னாடா தெறிச்சிக்கிட்டு ஓடி வர? நாயி கீயி விரட்டுச்சா?
கரு: (வழக்கமான பாணியில்) ஏன் கேக்க மாட்டே... மறைவிடங்களில் உள்காயம்பட்டிருந்தா உனக்குத் தெரியும் அதோட வலி
விவேக்: என்ன நாயி கடிச்சு உள்காயமா? அடப்பாவி தமிழனுங்களா... நாயி கடிச்சா வெளிக்காயம்தானடா வரும். எப்படா திருந்தப் போறீங்க?
கரு: அண்ணே சும்மா இருண்ணே. இது வேற நாயி
விவேக்: வேற நாயா... நான் வெறி நாய் கேள்விப்பட்டிருக்கேன். ஏன் சொறி நாய் கூட கேள்விப்பட்டிருக்கேன். ஆனா வேற நாயா? இப்பத்தாண்டா கேள்விப்படுறேன். அய்யா கெஞ்சிக் கேட்டுக்கிறேன். கொஞ்சம் கூட புரியும்படியா சொல்லவே மாட்டியா? பாரு ரெண்டு வார்த்தை நீ சொன்னதுக்கு அவனவன் பத்தி பத்தியா பொலம்புறானுங்களே...
வடி: எல்லாம் கெரகம் அவன சுத்துது. அனுபவிக்கிறான்
விவேக்: டேய் கெரகமெல்லாம் விண்வெளியில அது பாட்டுக்கு தானாச் சுத்துதுடா. நீங்க என்னடான்னா ஒருத்தனைச் சுத்துறதா ரீல் ஓட்டுறிங்களேடா. இப்பிடி கெரகம் ஒவ்வொருத்தனையும் சுத்த ஆரம்பிச்சா உலக மக்கள்ஸ் தொகைக்கு எவ்வளவு கெரகங்கள் தேவைப்படும்னு தெரியுமா? போங்கடா உங்கள நூறு கலாம் வந்தாலும் திருத்த முடியாதுடா
கரு: வடிவேலு அண்ணே... நாடி ஜோஸ்யம் பாத்தா எல்லாம் சரியாயிடுமா?
விவேக்: டேய் நாடியைப் நல்லதுக்கும் புடிப்பாங்க. டெட் பாடி ஆயிடுச்சான்னு கன்பர்ம் பண்ணவும் புடிப்பாங்க. சில நாட்டுக்கட்டை ஓல்டு லேடிஸ் சினிமாப் படத்துல மட்டும் மயங்கி விழுந்த ஹீரோயின் நாடி புடிச்சி பிரக்னெண்ட் மேட்டர சொல்வாங்க. ஆனா அதயே நீங்க மிஞ்சிட்டீங்களேடா. இப்ப நாடி ஜோஸியமா? ஆஹா உங்கள மில்லியன் பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாது
பார்: ஸார் மில்லியன்'ன்னா என்ன?
விவேக்: (குழைகிறார்) ஹிஹிஹி நம்ம மொத மொறையா சந்திக்கிறோம். கொஞ்சம் ஓவரா பேசிட்டேனா? அப்பப்ப கொஞ்சம் சவுண்ட் உடலேன்னா மக்கள்ஸ் மதிக்கமாட்டாங்க. கொஞ்சம் புரிஞ்சுக்கங்க. ப்ளீஸ்.
பார்: ஓகே. Identity Crisis'ஸா? அட்ஸீஸ் பண்ணிக்கிறேன்.
விவேக்: சரி சரி நான் சொன்னதையெல்லாம் மறந்திடுங்க. நம்ம எல்லாரும் இன்னைக்கு சரக்கடிக்கிறோம். நான்தான் ஸ்பான்ஸர். ஓகேவா?
(ஓசியில கொடுத்தா பினாயிலையும் குடிக்கும் கூட்டமொன்று கிளம்பத்தயாராகின்றது. போகின்ற வழியில் எந்த இந்தியன் புத்தகக்கடை வர... பார்த்திபனுக்கு இலக்கிய தாகமெடுக்கின்றது. அனைவரும் கடைக்குள் நுழைகின்றனர்)
பார்: (வடிவேலுவைப் பார்த்து) இது படிச்சவங்க வந்து போற இடம். பாத்து பிஹேவ் பண்ணு புரியுதா?
வடி: அண்ணே எல்லாரும் ஏற்கெனவே படிச்சவங்கன்னா மறுபடி எதுக்கு புத்தகம் வாங்க இங்க வரணும்?
பார்: என்ன என்கிட்டயே நக்கலா?
வடி: (கை மெய் பொத்தி) ஹ்ம்ப்ப்
பார்: அது...
விவேக்: (படு ஸ்டைலாக ஒரு புத்தகத்தை எடுக்கின்றார்) ஹூம் "30 நாட்களில் ஹிந்தி கற்கலாம்". இப்பிடித்தானா நரசிம்ம ராவ்காரு 10 பாஷை பேசினாரா? (ஹூம்...அப்புத்தகத்தை பின்னர் வேறொரு அடுக்கில் வைக்கின்றார். பார்த்துக் கொண்டிருந்த பார்த்திபன் ஜெர்க்காகி)
பார்: டேய் இப்ப நீ என்ன பண்ணின?
விவேக்: (ஹ்ம்ம்ம்ம்) ஒண்ணுமில்லியேப்பா. ஒரு பொஸ்தகத்தை எடுத்தேன். அப்புறம் வைச்சிட்டேன். இது தப்புங்களா?
பார்: டேய் அந்த பொஸ்தகம் எடுத்த இடமென்ன? திருப்பி அந்த பொஸ்தகத்தை எடுடா. எடுத்தியா? இப்ப அந்த புஸ்தகத்துக்கு பின்னாடி இருக்கிற பொஸ்தகமென்ன?
விவேக்: ஆஹா... செம்மொழி தமிழ் புஸ்தகமா? பிரதர் ரேக் மாத்தி வைச்சிட்டேன். ஐ யாம் ஸாரி. உடனே சரியான இடத்துல வைச்சுடறேன்
பார்: ஹை இப்பிடி சிம்பிளாச் சொல்லிட்டா நாங்க விட்டுடுவோமா? நீ ஹிந்தியை வைச்சி தமிழை மறைக்கப் பாத்தே?
விவேக்: அண்ணே உங்க கற்பனைக்கு அளவே இல்லீங்களா?
பார்: அது மட்டுமா? அந்த தமிழின் பின்னாலிருக்கும் இனமான உணர்வுகளைக் கூடத்தான்
விவேக்: (அடப்பாவிங்களா ஒரு பொஸ்தகத்தை ரேக்கு மாதிரி வைச்சதுக்கு உலகப் போர் ரேஞ்சுக்கு பேசுறானே. அடடா கூட்டமும் கூடுதே. கூட்டத்தில் கைமா ஆக விரும்பாமல் பார்த்திபனின் கையை உயர்த்தி) தமிழுக்கு வாழும் அண்ணன் வாழ்க என்ற கோஷமிடுகின்றார்
வடி: (தமிழால் வாழும் அண்ணன்னு கோஷம் போடுகின்றார்)

காட்சி - 2

ஜோஸ்யம்+ஹேஸ்யம்

(ஒரு வழியாய் அனைவரும் சரக்'கடிக்கச் செல்கின்றார்கள். சைடு டிஷ்ஷை 'கடிக்கின்றார்கள்.)

விவேக்: டேய் இப்ப நான் சொல்றேண்டா சூப்பர் ஜோஸியம். அம்மா கிட்ட சீறிக்கிட்டு போன சிறுத்தை அறிவாலயத்துல கூடிய சீக்கிரமே சரண்டர் ஆகப் போகுது. தனக்காக எதையும் வெட்டுபவர் "தமிழோடு தமிழிணைந்தது'ன்னு அறிக்கை வுடுவாரு. தமிழா இது நிதர்சனம்டா... நீயே பாரு இது நடக்கலேன்னா தமிழுக்குத்தான் அவமானம்..."
வடி: (என்னது இவன் மறுபடியும் 'போகஸ்'ல வரான்னே என்ற 'பொச்சுக்காப்புடன்') சரி சரி வந்துட்டா...?
விவேக்: ரொம்ப ஸிம்பிள். தமிழை கட்டாய பாடமாக்கிய கலைஞரை ஆரத்தழுவுவதில் ஆச்சரியமில்லை என்று இணையத்தில் திராவிடர்கள் கூவுவார்கள்
கரு: எனக்கு ஒண்ணுமே புரியலியே. கொஞ்ச நாளைக்கு முன்னாடிதானே எச்சில் இலை அப்பிடி இப்பிடின்னு பேசினாங்களே?
விவேக்: அட நாதாரிகளா இதுகூட உங்களுக்கு புரியாதா? 'இருத்தலியம்' (நன்றி: குழலி) முக்கியமானதுடா. அப்பிடி இப்பிடி செஞ்சாவது இருத்தலே முக்கியம். இல்லேன்னா என்னாடா அவனுங்களைச் சாவச் சொல்றீங்களா அப்பிடீன்னு சிங்கப்பூர் வரை கேப்பானுங்க...
கரு: ஓ... அப்பிடின்னா கடந்த காலத்துல ஒரு புலியை ஆந்திராவுல பலி கொடுத்தாங்களாமே? ஏதோ மேகஜின்ல படிச்சேன். அதுக்குன்னு இப்பிடியா கால்ல வுழுறது?
விவேக்: மடத் தமிழனுக்கு புலிக்கும், சிறுத்தைக்கும் வித்தியாசம் தெரியலியே... அப்புறம் சிறுத்தை காலுல வுழலை. ஏண்டா கற்பனை இப்பிடியெல்லாம் கற்பனை பண்றீங்க. சிறுத்தை பசித்தாலும் எச்சிலிலை தின்னாது.
வடி:
அதெல்லாம் சரி என் வென்று. வேறென்னா செய்யும்?
விவேக்: ஏன் பொக்கே கூடக் கொடுக்கும்.
வடி: அட இதப் பாருடா... அப்புறம்
விவேக்: ஆனா சிறுத்தையோட கதைய 'டார்டார்'னு கிழிச்சுப்போட்டாய்ங்க. ஒரு வாட்டி கூட மேடையிலயோ, தனியாவோ எலீக்ஷன்ல ஏத்தலையாமே? மட்டு மருவாதையில்ல?
வடி: ஹலோ ஹலோ இது என் ஸ்டைலு. அதான் இப்போ ஒண்ணாக் கூடி கைகளை உயர்த்திட்டோம்'ல
விவேக்: ஓ ஸாரி ஸாரி மப்புல ஸ்டைலு மாறிடிச்சு... மரத்தமிழர்களே நன்றாகக் கேளுங்கள். 'பிரிவோம் சந்திப்போம்'ங்ற முறையில திரும்பி எல்லாரும் ஒண்ணு சேருங்க...
கரு: ஏங்க மரத்தமிழர்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக்
விவேக்: சரியாத்தாண்டா சொன்னேன் என் மரத்தமிழா. மரத்திற்கும் மறத்திற்கும் வித்தியாசம் அறியாதவனா நான்? உங்களை எத்தனை உ.வே.சா. வந்தாலும் திருத்த முடியாது
வடி: எனக்கு 'உவ்வேக்' தெரியும். ஆனா உவேசா யாருப்பா?
விவேக்: அட தானைத் தமிழா... தமிழுக்கு தொண்டு செய்தவனை சாதியால் மறந்தாயோ? சாதிகள் இல்லையடி பாப்பா என்று முழங்கினானே முண்டாசுக்கவிஞன்.
வடி: (மனதிற்குள் விவேக்கை நோக்கி) அப்புறம் என்னாத்துக்கு சாதி பேருல நடத்துன வெளாவில கலந்துக்கிட்டு உஞ்சாதி ஆளுகளுக்கு பிரைஸ் கொடுத்தே?
விவேக்: (ரஜினி ஸ்டைலில்) ஹஹ்ஹஹா.. இதெல்லாம் ஜுஜூப்பீ எனக்கு என் ரூட்டே தெரியாது. ச்சும்மா விளாவுல களந்துக்கிட்டேன். சிவாஜி ஸீன்ஸ ஸ்பெயின்ல சுட்ட்டுட்டாங்க. ஷங்கரோட எப்பவோ வொர்க் பண்ணியிருக்கணும். ஜஸ்ட் மிஸ்ஸாயிடுச்சி.
பார்: டேய் ஸ்பான்ஸர் ஸார். ஓவரா மப்பாயிடுச்சு போலருக்கு. வாய்ஸ் குழறுகின்றது மாம்ஸ்.
விவேக்: இப்ப ஸ்டெடியா பாடறேன் கேளும் வோய்.

"நாண்டா உங்கப்பண்டா நல்லமுத்துப் பேரண்டா
வலைப்பூ எழுதி பாடஞ் சொல்ல வாரேண்டா வாரேண்டா"


வடி: என்னாது பாடம் கத்துக் கொடுக்க வாரியா? சைக்கிள் கேப்புல சைத்தன்ய ரதம் வுடுறானே...
கரு: அண்ணே இப்ப நீங்க பாடுன பாட்டு கபடி ஆட்டத்துலதானே பாடுவாங்க?
விவேக்: டேய் சொல்லி அடிக்கிறதுல நான் கில்லிடா
வடி: ஹூம் சொல்லாம நான் அடிச்சா அது ஜல்லியா?
(பாரில் இவர்களது அடாவடி தாங்க முடியாது ஒருவர் வெகுண்டு எழுகின்றார்)
ஒருவர்: அட தரங்கெட்ட பயலுகளா... உங்களுக்கு நல்ல மனமே கெடையாதா?
வடி: பெர்சே கொஞ்சம் அடங்குறது... ISO மாதிரி உங்கிட்ட முத்திரை வாங்கித்தான் நாங்க பேசணுமோ?
கரு: ஹேய் யூ ஓல்டுமேன். கிளாட் டு மீட் யூ. நீங்கதான் இந்தியன் தா(த்)தாவா?
ஒருவர்: யூ யூ யூ... நான் தமிழ் தா(த்)தாடா தரங் கெட்டவனே
கரு: ஹேய் ஹேய் ஹேய் தமிழ்நாடு இந்தியாவுலதானே இருக்கு. பாத்தா மெத்த படிச்ச மேதாவி மாதிரி தெரியுற. இப்பிடி சில்லறையா பேசுறியே. கமான் கமான் டெல் மி. இ...ண்...டி...யா... (நன்னன் போல் ஆங்கில வகுப்பெடுக்கின்றார்)
ஒருவர்: ஆஹா நீ மேல்ஜாதியான அந்த குறிப்பிட்ட ஜாதிதானே? எனக்குத் தெரியும். எல்லாமே புரிந்து விட்டது.
பார்: ஹலோ பெருசு ஸார். இப்ப என்ன நடந்துச்சுன்னு இப்பிடி "டிங்கிரி டிய்யாலே" போடறீங்க? யார் சார் நீங்க?
ஒருவர்: உங்களை நான் இரண்டு வயதில் பார்த்த ஞாபகம் வருகின்றது
பார்: என்னாது ரெண்டு வயசுல நடந்தது ஞாபகம் வருதா? இது கொஞ்சம் ஓவராத் தெரியில?
ஒருவர்: (பிளட் பிரஷர் எகிற) ஆஹா நீதான் அந்த 'மனிதனா'?
விவேக்: இங்க எல்லாரும் மனிதங்க தானேப்பா. மனிதன்ல "அதென்னப்பா அந்த மனிதன்"? கொழப்பமா இருக்கேப்பா. ஒருவேளை சரக்கு டூப்ளிகேட்டா? இந்த சுத்து சுத்துதே
தமிழ் பசி: இந்தியாவில் தமிழ்நாடு ஒரு அங்கமாக இருப்பதையே விரும்புகின்றேன்
விவேக்: ஆஹா இந்தாளு தொல்லை தாங்க முடியலேப்பா. ஏதோ கான்ட்ராக்டர் மாதிரியே அனாலிசிஸ் பண்றாருப்பா

== CUT & FREEZE ==

(காட்சி மாற்றம். இந்தியாவின் ஒரு தென்கோடியில் பிரௌசிங் சென்டர். பேச்சிலர் டிகிரியைத் தொலைக்கும் வயதில், அச்சு ஊடகத்தில் வளரும் இளந்தாரி ஒருவர் வலை மேய்கின்றார்)

இளந்தாரி (இள): (தனக்குள்) ஆஹா ரொம்ப நாளைக்கப்புறம் குசும்பன் பதிவு. அட என்னாத்த எழுதியிருக்காருன்னு ரெண்டு மணி நேரமா மண்டையப் பிச்சிக்கிறேன். ஒண்ணுமே பிரியலியே. நம்ம தலீவரோட மௌனத்தக் கூட புரிஞ்சுக்கலாம். ஆனா குசும்பன் ரைட்டிங் ஒ(ம)ண்ணுமே புரியலியே. புரியணுமின்னா ஒரு 'கட்டிங்' போடணுமா? இல்லே சதுரமேசையில சக வலைப்பதிவரோட 'சிட்டிங்' போடணுமா? தல சுத்துதே... (சப்தமாக) அர்ரே பாபா ஜல்தி ஆவ். இப்படிச் சூடு...
அருகிலிருந்தவர் (அரு): என்னங்க சாமியார் பேரச் சொல்றீங்க?
இளந்தாரி: அடப்போய்யா இவரு இணைய சாமியார்யா
அரு: ஓஹோ அந்த போலிச் சாமியாரா?
இள: அதெப்பிடி உங்களுக்கும் தெரியும் அவரு போலின்னு?
அரு: "எல்லார்க்கும் நல்லவர்" அப்பிடின்னு பட்டம் வாங்கணுமின்னா கஷ்டம் ஸாரே. அந்த மேரி நடந்துக்கிட்டு வந்தாரு இவரு. இப்போ என்ன ஆச்சி? நெட்டுல ஒரு பிளாட் வாங்க பிட்ட (Bid) போட்டாரு. உங்களுக்கு இந்த பிளாட் ஒத்து வராதுன்னு முகத்துல அடிச்ச மேரி சொல்லிப்போட்டாங்களாம். நான் அப்பவே சொன்னேன். மனுசன்னா ஒரு நெலைப்பாடு வேணுமின்னு. கேட்டாத்தானே?
இள: (ஆச்சரியத்துடன்) இப்பிடி வெலாவரியா தாக்கல் (தகவல்) சொல்றீங்களே... நீங்க யாருங்க?
அரு: (உணர்ச்சிவயப்பட்டு) ஆமாம் தாக்கல்தான். அதுவும் தொடர் தாக்கல். தனியஞ்சல் செய்தேன். காரியம் கை மீற பொதுவில் பின்னூட்டினேன்.
இள: தாக்கலா? தாக்குதலா? என்னங்க கில்லி மாதிரி அடிக்கிறீங்க?
அரு: பொறுக்கி
இள: யேய்யேய் மருவாதையாப் பேசு. சிரிச்சுப் பேசுற பொம்பளையும், அழுது பொழைக்கும் ஆம்பளையையும் நான் மட்டும் இல்ல என் தலைவர் கூட நம்பமாட்டார்
அரு: அட அது இல்லைப்பா... நம்ம விஜய் கில்லிக்கு அடுத்தபடி 'பொறுக்கி' படத்துக்கு பூஜை போட்டுருக்காரு
இள: எனக்கென்னமோ 'கில்லி'க்கு பேசாம 'பொறுக்கி'ன்னே பேரு வைச்சுருக்கலாம். அதத்தானே சின்ஸியரா நீங்க பண்றீங்க. ஹிஹிஹிஹிஹி
அரு: (தெறிக்கின்றார்)

== CUT & FREEZE ==

காட்சி - 3

ஜோஸ்யம்+பாஷ்யம்

(பேக் கிரௌண்ட் பாடல். பாரில் காட்சி தொடர்கின்றது)

ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்?


(மக்கள் கூட்டம் ஏன் ஏன் ஏன் என்று எக்கோ செய்கின்றது. பாட்டை மாத்து என்று குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றது. அப்போது கூட்டத்தில் ஒரு சிறிய சலசலப்பு. பார்த்திபன் & கோ பஞ்சாயத்து பண்ண விரைகின்றது)

பார்: யேய் நிறுத்துங்கப்பா. மப்பு தலைக்கேறியவுடனே அடிதடியை ஆரம்பிச்சுட வேண்டியதுதானா? இப்ப என்னா நடந்திச்சு
சண்டைக்கோழி 1 (ச 1 குழறலுடன்): உங்களுக்கு அடிப்படை பிரச்சினை புரியாது
வடி: ஏம்ப்பா புரியாட்டி சொல்லிக்குடுப்பா. புரிஞ்சுக்குவோம்ல
ச 1: மறுபடியும் சொல்றேன். உங்களுக்கு அடிப்படை பிரச்னை புரியாது. ஒரு பிரச்சினைனா 360 டிகிரி சுத்தி மாறுகட்டோட பாக்கணும்.
சண்டைக்கோழி 2: ஏய் எனக்கு திட்டவும் தெரியும். திட்டு வாங்கவும் தெரியும். உனக்குப் பிரச்னை பத்தி என்னா தெரியும்? நேத்துக் கூட ஹுவர் டேம் பிரச்சினைல மோதா பட்கர் உண்ணாவிரதம் இருந்ததை அருந்ததி கவரேஜ் பண்ணியதை எடிட் செய்யாமல் இணையத்தில் வந்ததைப் பார்த்து குழம்பி, புட் பால் முடிந்ததும் எழுதுவதாய் உத்தேசித்துள்ளேன். ஹூம் இவனுங்க எல்லாம் சமூகச் சேவை பண்றவங்களாம்...
ச 1: எப்பிடித்தான் இப்பிடி பொறுமையா இந்தாளால பேச முடியுதோ?
வடி: இப்ப இந்தாளு என்ன பேசினாருன்னு அவருக்குப் புரிஞ்சி பஞ்ச் டயலாக் பேசுறாரு?
ச 1:
யேய் நாந்தான் மொதலிலேயே சொன்னேல்ல. உங்களுக்கு அடிப்படை பிரச்னை தெரியாது. (நடுவிரலை உயர்த்திக் காட்டுகின்றார்) எங்க பக்கத்துல இதுக்குத்தான் வாசுவை மூடிட்டு வேலையப் பாருங்க
விவேக்: அடப்பாவிங்களா... வாஸ்து கேட்டிருக்கேன். வாசுவா? எப்பிடிப்பா மூடிறது? (ஆங் அப்பிடின்னா அப்படியா?)
பார்: யேய் இங்க வா. நடு விரலு உசந்து இருக்கு. அப்புறம் எங்களைப் பாத்து வாசுவை மூடச் சொன்னே. இப்ப நாங்க வாசுவை மூடிக்கிட்டோம்னா அப்புறம் எப்பிடி வேலை பாக்க முடியும்?
வடி: அடப் புடிச்சார் பாரு அண்ணாச்சி பாயிண்ட...
ச 1: அப்புறம் அதென்ன ஒங்கிட்ட மட்டும் தான் வெரலு இருக்கா இப்பிடி காமிக்க. அதென்ன அடிப்படை பிரச்சினைதானே. இப்ப நான் தீத்து வைக்கிறேன் பாரு (என்றபடி நீண்டிருந்த விரலை நறுக்கென்று கடிக்க ச -1 துள்ளுகின்றது). இப்ப என்ன பண்ற கட்டை விரலை நீட்டு
ச -1: (தலையாட்டி மறுக்கின்றது) மறுபடியும் கடிக்கலேன்னா நீட்டுறேன்
பார்: ஹூம் நீட்டினாயா? இப்போது அதை லேசாம மடக்கு. இந்த "சைன்" தான் உனக்கு லாயக்கு. சூ(ஃ)ப்பிக்கிட்டே போ. அடியென்னடா அடி... கடி உதவுறது மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான்