Sunday, March 05, 2006
தமிழும் பொடிமட்டைகளும்
யோஜிம்போ, தகஜூம், துவஜஸ்தம்பம், அஜக்மஜக் என்ற இலக்கிய வார்த்தைகளை என் போன்ற ஆக்களுக்கு அறிமுகம் செய்து வைத்த சன்னாசி அண்ணாச்சிக்கு. வணக்கமுங்கோ. ரொம்ப நாளா அடக்கி வைச்சிருந்த ஆசையெல்லாம் அவுத்துப் போட்டு ஆட வுடறீங்க போலிருக்கு. தமிழக அரசியலுக்கு ராமதாஸ் தமிழ்த்குடிதாங்கி போல இணையத்தில் இலக்கியகுடிதாங்கியா வந்துட்டீங்க போலிருக்கு. அப்பிடியே சிலருக்கு இடிதாங்கியாவும் அமைஞ்சதுக்கு வாழ்த்துக்கள்!!! பொடி ஏகத்துக்குப் போக மூக்குக்கே பிடிச்சு போயிடுச்சு போலிருக்கே. இப்ப மொதல்ல பொடியைப் பிரிப்போம். அப்புறமா மூக்குக்கு வைத்தியம் பாப்போம். ஆஜ் ஸே பகுத் ஜோர்ஸே மாடி. (இன்னியிலேர்ந்து அடிச்சு ஆடப்போறேன்)
PKS, குசும்பன் பெயரை எடுத்தாலும் எடுத்தார். என் நிலைமை இப்படியாகுமென்று நான் எதிர்பார்த்ததுதான். என்ன PKS என்னைப் போயி
இலக்கியவாதிகளை வறுத்தெடுக்கின்றேன் அப்பிடி இப்பிடின்னு பெரிய ஆளா ஆக்கி வுடுறீங்க? பாருங்க சன்னாசிக்கு மூக்கு வேத்துடுச்சி. எத்தனை தீவிரவாதிகளை ஸாரி இலக்கியவாதிகளை குசும்பன் வறுத்தெடுத்தான் என்று நாக்கைப் பிடுங்கிக்கொள்ளும் ஒரு கேள்வி கேட்கின்றது தமிழ்ப்பாம்பு. என்ன சன்னாசி ஒரு நாளைக்கு எத்தனை தடவை என்னோட குசும்பன் பதிவுக்கு அட்டெண்டெண்ஸ் போடறீங்க? நான் வறுக்குறது என்னான்னு உங்களுக்குப் போயி நான் சொல்லியா தெரியணும்? :=))
இப்ப நம்ம விஷயத்துக்கு வரேன். உங்களோட மட்டுறுடுறுத்தல் பதிவையும் பின்னூட்டங்களையும் பார்த்தேன். உங்களோட அஜக் மஜக் பின்னூட்டத்தையும் http://dystocia.weblogs.us/archives/196#comment-1207 பார்த்தேன். போலியாக ஆபாசப் பின்னூட்டத்தால் பலரும் பாதிக்கப்பட்டதற்கு உண்மையான டோண்டுவே காரணம் என்று தீர்ப்பெழுதிய பெரும்பான்மை கூட்டத்தில் நீரும் ஒருவர்தானே? உம்முடைய IP' மற்றும் வேறு சில அடையாளங்களை யாரோ எடுத்துப் போட்டதற்காக அங்கே போய் ஒப்பாரி வைக்கலாம். ஏன் கேஸ் கூட போடலாம். அந்த இழவை எடுக்காமல் எதுக்காக அடுத்தவன் தாலி அறுக்க வேண்டும்? (இந்த வாக்கியம் உங்களைப் போல் இலக்கியமாக எழுத நானெடுத்த முதல் ஸ்டெப்).
உங்களுக்கு சுயப்புத்தி முழுவேலையாக என்ன செய்கின்றது என்று எனக்குத் தெரியாது. ஆனால் சொல்புத்தி கூட காயடிக்கப்பட்டதுதானா (உங்கள் பிரயோகமே)? நாந்தான் பெயரிலிக்கு பகிரங்கமாய் -/ச்சீய்த்த்தூதூஊஊஊஊ'விற்கு என்ற பதிவில் சவால்கள் வைத்தேனே? அப்பதிவினைப் படிக்கவில்லையா? படித்தும் புரியவில்லையா? எக்கச்சக்கமாக பொடிமட்டை பிரித்ததில் எல்லாமே மழுங்கி விட்டதா? அந்தக் கூட்டத்திலிருந்து நீங்க இப்ப புதுசா வந்த இடிதாங்கின்னா உங்களால அஜக் மஜக் படங்களை நிறுவ முடியுமா? ஓப்பனா சவாலை முடிஞ்சா ஏத்துக்கணும். இல்லாவிடில் மஹாநதியில் கமலுக்கு கூறப்படும் அறிவுரை போல வாயையும், அத்தையும் மூடிண்டு இருந்தா ஷேமம். சும்மா பின்னூட்டத்தில் லிங்க் போட்டு அவந்தான் இவன் என்று நான் உட்பட எல்லாரும் சொறிஞ்சுக்க முடியும். அடுத்தவன் கிட்ட போயி "உன் நேர்மையை சந்தேகிக்கின்றேன்", நிகழ்தகவின் விளையாட்டு, புடலங்காய், புண்ணாக்கு என்று உங்களைப் போல் பினாத்துவதுதான் பப்பட இலக்கியமோ?
சின்னவன் இவனோ? குசும்பன் இவனோ? முகமூடி இவனோ? என்ற ஹேஷ்யங்கள் கிளப்பி, போலியாகப் படம் காட்டுவதுதான் பெயரிலியின் ஸ்பெஷாலிட்டி. அதை உரித்துக் காயப் போட்டாகி விட்டது. அவரிடம் போய் அவரது நேர்மையை சந்தேகிக்க தமிழ்ப்பாம்பால் முடியுமா? இல்லை இந்தப் பாம்பு வேறு மகுடிக்கு ஆடுகின்றதா? இந்தப் பாம்பு எடுக்கும் படத்தை பின்னாலிலிருந்து (இந்த இயக்குநர் ஒரு Back Specialist :-) If you know what I mean :-)) இயக்குபவர் யார்? ராம் ஜானே !!! (கடவுளான ராமபிரானுக்கே வெளிச்சமென்று இந்தியில் கூறுவார்கள்)
ரொம்ப நாட்களாக அரித்துக் கொண்டிருக்கும் இன்னொரு விஷயத்தையும் இன்னிக்கே சொறிஞ்சுடலாம். தமிழ்மணம் குறித்து என்று ஒருமுறை பொடிமட்டை பிரித்தீர்கள். இது குறித்து பொதுவில் நான் பேசமாட்டேன் என்று நினைத்திருப்பினும் கொஞ்சம் எனக்கும் பொடி மட்டை பிரிக்க ஆசை வந்து விட்டது. கருத்து சுதந்திரம், சர்வாதிகாரம், நாய் கூடச் சீந்தாதென்ற உமது அபத்த, இடியாப்ப கருத்துகளைத் தாண்டிச் செல்கின்றேன். குடியரசுத் தலைவருக்கு ஏன்யா கடிதம் எழுதினீர் என்று காசியை நான் கேட்டதாக உருவகம் செய்து கொண்டீர்களா? அடப் போய்யா நீயும் உன் பொடிமட்டையும். அந்த இழவு (குசும்புத்தலைவருக்கு மடல்) பதிவைத் தேடியெடுத்து நல்லா திரும்பப் படிக்கவும். சுட்டிகள் போட அலுப்பா இருக்கு.
அப்புறம் இந்த சாவு விஷயம். செத்தது சுரா. படிச்சோ படிக்காமலோ சுரா தமிழ் கூறும் நல்லுலகில் அறியப்பட்ட பெயர். அவர் இறந்ததற்கு ஒருவர் அஞ்சலிப் பதிவு போடுகின்றார். ஏன்யா ஒருத்தன் செத்துப் போனா எந்த கலாச்சாரமா இருந்தாலும் அடப்பாவமே, அடக்கடவுளே, அய்யய்யோ அவரா, சே தெரியாதே இப்படித் தான் குரல்கள் வருமே தவிர "தகவலுக்கு நன்றி" என்று எந்த மனித ஜென்மமும் சொல்லாது. நீங்க எப்படியோ எனக்குத் தெரியாது. சாவு விஷயத்துல சங்கு சத்தம் கேக்கலாண்டா ஆனா ஜால்ரா அடிக்கிறீங்களேன்னு சொன்னா உமக்கு //இருப்பினும், சாவு குறித்த செய்தியைக் கூடக் கிண்டலடிக்குமளவு குசும்பின் தரம் இறங்கும் என்பது நானும் எதிர்பார்த்திராதது.//
அப்பாடி இப்போ கொஞ்சம் நிம்மதி. சாவு விஷயத்தில் நான் குசும்பு செஞ்ச பாவம் தீந்துடும். கார்த்திக் ரமாஸ் மன்னிக்கா விட்டாலும் சுரா'வின் ஆவி என்னை மன்னித்து விடும்.
சன்னாசி ஒரு நல்ல ஸ்போக்ஸ்மேன் ஆக பெர்பார்ம் பண்ண வாழ்த்துக்கள். ஆனால் சைடுகிக் வேலை, மயில் ராவணர்கள், பொடிமட்டை என்று மீண்டும் மீண்டும் சிரிப்பு என்ற சன் டிவி ப்ரோகிராமாகி விட்டால் மக்களுக்குப் போரடித்தாலும் அடிக்கலாம்.
மற்றபடி PKS உங்களுக்குப் பதிலாக தனது பின்னூட்டத்தில் கூறியது போல //திருமா மற்றும் வை.கோ.வைப் பற்றிய முகமூடியின் பதிவு இது. முடிந்தால் உங்கள் விமர்சனங்களை அதுகுறித்து வையுங்கள். நானும் படிக்கிறேன். திருமாவையும் வை.கோ.வையும் தலையில் கொள்கை வீரர்களாகத் தூக்கி வைத்து ஆடிக் கொண்டிருந்தவர்கள், எதிர்க்கருத்து உடையோரை பார்ப்பனியத்துக்கு விலைபோய் விட்டதாகக் குற்றம் சாட்டியவர்கள், திருமாவும் வை.கோ.வும் பிராமணரான அம்மாவிடம் இன்று சரணாகதி அடைந்ததை ராஜதந்திரம் என்று ஏன் பம்மாத்து செய்து கொண்டிருக்கிறார்கள்? ஆளுக்கு ஒரு நியாயமா? பேச வேண்டிய விஷயம் இதுதான். ஓட்டுப் பொறுக்குகிற, பதவியை, அதிகாரத்தை எதிர்பார்க்கிற அரசியல் சமரசங்கள் - ராஜதந்திரங்கள். ஆனால், ஒரு விஷயத்தில் எந்தப் பலனையும் எதிர்பாராமல் யாரும் கருத்துச் சொன்னால், அவர்கள் விலைபோனவர்களா?// இதற்கு உங்களிடம் அல்லது உங்கள் கூட்டத்தில் யாருக்கேனும் பதிலுண்டா?
பிகு. அதீத பொடி ஆஸ்த்துமாவில் கொண்டு போய் விட்டுவிடப் போகின்றது :-). அலெக்ஸாண்டர் போப் என்று நினைக்கின்றேன். எப்போதோ அவர் பொடிமட்டையை பற்றி ஒரு கவிதை எழுதியதாக ஞாபகம். முடிந்தால் எடுத்துப் போடுங்கள். நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
இதற்கு பதிலாக ஏதோ ஒரு நர்ஸரி ரைமோ, லயப்பர் லிங்கோ பாம்பு படமெடுத்து ஆடுமோ?? போடுமோ???
டிஸ்கி:
:-) ;-)
----------
புஸ் In Boots வானம்
atissu aadu raasaaa!!!
அலெக்ஸாண்டர் போப், இலக்கியக் குடிதாங்கி என்று கணக்கை சரி செய்ததற்கு நன்றி ;-). நான் கிறுக்குவதையும் கூட 'கழுத்தை உலுக்கும் கலவிமுலைகள்', வாத்துக்கவிதை என்று நட் போல்ட்டைக் கழற்றி மாட்டி பகடியாகப் போடுவதைக்கூட பெரும்பாலும் ஜாலியாக எடுத்துக்கொண்டுள்ளேனே தவிர எரிச்சலடைந்ததில்லை என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்? நீங்கள் இலக்கியவாதிகளை வறுத்தெடுக்கிறீர்கள் என்று நாக்கைப் பிடுங்கிக்கொள்ளுமாறு கேட்டேனா?!?!?
சண்டை போடுபவனைவிட கேடயம் தான் அதிக உதைபடும் என்று விளக்க முயல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் - அதுவேதான் நான் நினைப்பதும்கூட. நான் யாருக்கோ கேடயம் என்று நினைக்கிறீர்கள் - நீங்கள் யாருக்கோ கேடயம் என்று நான் நினைப்பதாக நினைக்கிறீர்களோ என்னவோ. இரண்டு குறித்தும் எனக்கு அக்கறை இல்லை.
//குடியரசுத் தலைவருக்கு ஏன்யா கடிதம் எழுதினீர் என்று காசியை நான் கேட்டதாக உருவகம் செய்து கொண்டீர்களா? அடப் போய்யா நீயும் உன் பொடிமட்டையும்.//
எவரும் தவறாய்ப் புரிந்துகொள்ளக்கூடும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். அதை நான் எழுதியது, அப்போது காசியின் பதிவில் எழுதப்பட்ட ஒரு பின்னூட்டத்தின் அடிப்படையில். உங்கள் பதிவின் அடிப்படையில் அல்ல.
சு.ரா சாவுச் செய்தி குறித்து: உங்களுக்கு இருக்கும் முதிர்ச்சி அனைவருக்கும் இல்லை என்பது துர்ப்பாக்கியமே. அதற்கு என்ன செய்வது? குசும்பனின் பதிவு தூக்கப்பட்டது வருத்தமே என்று அதே இழவு பதிவில் எழுதியிருந்தது கண்ணில் படவில்லையா?
//அந்தக் கூட்டத்திலிருந்து நீங்க இப்ப புதுசா வந்த இடிதாங்கின்னா உங்களால அஜக் மஜக் படங்களை நிறுவ முடியுமா? ஓப்பனா சவாலை முடிஞ்சா ஏத்துக்கணும். இல்லாவிடில் மஹாநதியில் கமலுக்கு கூறப்படும் அறிவுரை போல வாயையும், அத்தையும் மூடிண்டு இருந்தா ஷேமம்.//
அது நீங்கள் இல்லையென்று சொல்கிறீர்களென அர்த்தப்படுத்திக்கொள்கிறேன். அந்த இணைப்பை நீக்கிவிடுகிறேன். kusumban என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் எழுதியிருக்கலாமென்று நம்புகிறேன். க்ஷேமந்தானே?
//போலியாக ஆபாசப் பின்னூட்டத்தால் பலரும் பாதிக்கப்பட்டதற்கு உண்மையான டோண்டுவே காரணம் என்று தீர்ப்பெழுதிய பெரும்பான்மை கூட்டத்தில் நீரும் ஒருவர்தானே?//
நிஜமாகவா? தகவலுக்கு நன்றி. டோண்டுவைத் தாக்கி வந்த ஆபாசப் பின்னூட்டங்கள் கண்டிக்கப்படவேண்டியவை என்று அவரது வலைப்பதிவில் சொல்லியிருக்கிறேனென்பதை டோண்டுவிடமே கேட்டுக்கொள்ளவும். பின்னர் மஹாநதியில் கமலுக்குக் கூறப்படும்... என்ற உங்களது பொன்மொழியை உங்களுக்கே கேட்டுக்கொள்ளவும்.
சன்னாசி,
நேர்மையான உமது பதிலுக்கு நன்றி. எனது தாமதமான பதிலுக்கு பொறுத்தருளவும். சில விதயங்களை விவரமாகப் பிட்டு பிட்டு வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருவரும் இருப்பது காலத்தின் கட்டாயம் போல :-)
//நான் கிறுக்குவதையும் கூட 'கழுத்தை உலுக்கும் கலவிமுலைகள்', வாத்துக்கவிதை என்று நட் போல்ட்டைக் கழற்றி மாட்டி பகடியாகப் போடுவதைக்கூட பெரும்பாலும் ஜாலியாக எடுத்துக்கொண்டுள்ளேனே தவிர எரிச்சலடைந்ததில்லை என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?//
கண்டிப்பாக நீங்கள் எரிச்சல் அடைந்திருக்க மாட்டீர்கள் என்று நம்பினேன். அப்பதிவுகளுக்கான உங்களது பின்னூட்டங்கள் கூட அக்கருத்தையே வலியுறுத்தின. ஆனால் உங்களின் "சுரா சாவில் தரந்தாழ்ந்த அங்கதம்" அப்சர்வேஷன் அதனையடுத்த பெயரிலி லிங்க் போட்டு "அஜக் மஜக் பின்னூட்டம்" என்னை சன்னாசியா இப்படி? என்று ஆச்சரியப்பட வைத்தது உண்மைதான்.
மேலும் பெயரிலி நான் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் விடை தராமல் ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் போது நீங்களும் அதே படத்தைக் காண்பிப்பதற்கு என்ன எழவுய்யா அர்த்தம் என்று கேட்கத் தோன்றியது. இதுல "அழகா தோலை உரிச்சீங்க" பாம்பு என்று பின்னூட்டத்தில் ஒத்தூதும் கும்பல் வேறு. இந்த மாதிரி உசுப்பேத்தி விடும் கும்பலால் பாவம் எழுதுபவர்கள்தான் கைப்புள்ளையாய் ரணகளப் படுகின்றார்கள் என்று சொன்னால் இப்போதாவது நம்புவீர்கள்தானே? உடனே உங்களை யாரும் உசுப்பேத்தவில்லை. குசும்பனை யாரும் உசுப்பேத்தவில்லை யென்றாலும் அது குறித்து எனக்கு அக்கறையில்லை என்று அடுத்த பொடிமட்டையைப் பிரிக்க வேண்டாம். PERIOD.
//நீங்கள் இலக்கியவாதிகளை வறுத்தெடுக்கிறீர்கள் என்று நாக்கைப் பிடுங்கிக்கொள்ளுமாறு கேட்டேனா?!?!?//
முகமூடியின் பின்னூட்டத்தில் நீங்கள் அவ்வாறு கருதியதாகவே நினைத்தேன். அப்படி இல்லை என்றால் எனது புரிதலில் தவறு. அப்பீட்டு :-) அப்பாடி இனி எளக்கியவாதி பிரஷர் எனக்கில்லை ;-)
//சண்டை போடுபவனைவிட கேடயம் தான் அதிக உதைபடும் என்று விளக்க முயல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் - அதுவேதான் நான் நினைப்பதும்கூட. நான் யாருக்கோ கேடயம் என்று நினைக்கிறீர்கள் - நீங்கள் யாருக்கோ கேடயம் என்று நான் நினைப்பதாக நினைக்கிறீர்களோ என்னவோ. இரண்டு குறித்தும் எனக்கு அக்கறை இல்லை.//
சன்னாசி இங்கேயும் அஃதே. நீங்கள் கேடயமில்லை என்று கூற வருகின்றீர்கள் போல. வாழ்க! வளர்க!
//சு.ரா சாவுச் செய்தி குறித்து: உங்களுக்கு இருக்கும் முதிர்ச்சி அனைவருக்கும் இல்லை என்பது துர்ப்பாக்கியமே. அதற்கு என்ன செய்வது?//
இந்த ஸ்டேட்மெண்ட் கிண்டலில்லை என்று நம்புகின்றேன் :-)
//குசும்பனின் பதிவு தூக்கப்பட்டது வருத்தமே என்று அதே இழவு பதிவில் எழுதியிருந்தது கண்ணில் படவில்லையா?//
கண்டிப்பாகப் பார்த்தேன். ஆனால் அதே சன்னாசி, சாவு விஷயத்தில் குசும்பா என்றும் கூறியிருந்தாரே? அதுதான் உமது புரிதலைக் குறித்து எனக்கு கேள்வியெழுப்பியது. நீங்கள் சாவு விஷயத்தை இப்போதாவது புரிந்து கொண்டால் தன்யனாவேன்.
//எவரும் தவறாய்ப் புரிந்துகொள்ளக்கூடும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். அதை நான் எழுதியது, அப்போது காசியின் பதிவில் எழுதப்பட்ட ஒரு பின்னூட்டத்தின் அடிப்படையில். உங்கள் பதிவின் அடிப்படையில் அல்ல.//
விளக்கத்திற்கு நன்றி. இந்த மாதிரி காண்ட்ரோவர்சி பற்றிய பதிவில் "காசி பதிவின் பின்னூட்ட அடிப்படையில்" என்று சேர்த்திருக்கலாமே என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
//அது நீங்கள் இல்லையென்று சொல்கிறீர்களென அர்த்தப்படுத்திக்கொள்கிறேன். அந்த இணைப்பை நீக்கிவிடுகிறேன்.//
நேர்மைக்கு நன்றி. அகற்றுவீர்கள் என்று நம்புகின்றேன்.
//kusumban என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் எழுதியிருக்கலாமென்று நம்புகிறேன். க்ஷேமந்தானே?//
ஒரு கரெக்ஷன். குசும்பன் என்று பின்னூட்டம் விட்டது நான்தான் என்று தெளிவாகக் கூறியிருக்கின்றேன். "போலி டோண்டு" என்று வந்த பின்னூட்டம் என்னுடையதல்ல. எனவே "போலி டோண்டுவாக" யார் வேண்டுமானாலும் எழுதியிருக்கலாமென்று நம்புங்கள். க்ஷேமமாகும்.
//நிஜமாகவா? தகவலுக்கு நன்றி. டோண்டுவைத் தாக்கி வந்த ஆபாசப் பின்னூட்டங்கள் கண்டிக்கப்படவேண்டியவை என்று அவரது வலைப்பதிவில் சொல்லியிருக்கிறேனென்பதை டோண்டுவிடமே கேட்டுக்கொள்ளவும்.//
"பலரும் பாதிக்கப்பட்டதற்கு உண்மையான டோண்டுவே காரணம் என்று தீர்ப்பெழுதிய பெரும்பான்மை கூட்டத்தில் நீரும் ஒருவர்தானே?" என்பது அறியா வினா என்பதை அறிக. உமது நிலைப்பாட்டை வரவேற்கின்றேன். மேலும் இதை பிடித்துக் கொண்டு தொங்குவதற்கு இருவருக்குமே அவசியமில்லை என்று நம்புகின்றேன்.
//பின்னர் மஹாநதியில் கமலுக்குக் கூறப்படும்... என்ற உங்களது பொன்மொழியை உங்களுக்கே கேட்டுக்கொள்ளவும்.//
இங்கே நீங்கள் ஸ்மைலி போடாததால் ஸீரியஸாக நீங்கள் சொன்னதாய் கருத வேண்டியுள்ளது :-) அட பஞ்ச் பாம்பே :-) அந்தப் பொன்மொழி பெயரிலியின் படம் போட்டு நீங்கள் அஜக் மஜக் போட்டதற்குத்தான். அதான் இணைப்பை நீக்கி விடுவதாகச் சொல்லி விட்டீர்களே! அந்தப் பொன்மொழியின் அவசியமே இல்லாத போது எதுக்குப்பா என்னையவே கேட்டுக்கச் சொல்றேள்?
பி.கு. அலெக்ஸாண்டர் போப் கவிதை கைவசமுண்டா? முடிந்தால் தமிழ்ப்படுத்திப் போடுங்கள். நன்றி!
ஏதோ சைடுமேட்டரு கிளைச்சுத்தியோடுது, தனிஆவர்த்தன தவிலுக்கு ஒத்தடி போடவும் திறமை வேணுங்கோங்கிற ரீதியில் இங்கே குசும்பன் பதிவுல அங்கதம் படிச்சப்ப - என்னய்யா இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடற ரோதனையாப் போச்சுன்னு பிற தோலைத் தொங்கவிடுகையில் அதையும் தொங்கவிட்டேன் - அவ்வளவு தான். சப்பை சைடு டிஷ்ஷுக்கு எவ்வளவு மதிப்புள்ளதோ அவ்வளவு மதிப்புத்தான் அந்தப் படத்துக்கும். இல்லை இந்த சப்பை சைடு டிஷ், ஒத்தடி, சைடுமேட்டரு இதெல்லாம் வேறேதோ பட்டர்ஃபிளை எஃபக்டுன்னா, மன்னிக்க.
அப்புறம் ஒரு விஷயம், இந்த பட இழவையெல்லாம் போட்டுத் தொலைச்சுதான் நம்ம பொழப்பை சுவாரஸ்யமாக்கிக்கணுமின்னா நடந்தப்பவே போட்டு கொழுக்கட்டைமேல கொழுக்கட்டையாப் பிடிச்சிருக்கமுடியாதா? உள்ளதைச் சொன்னாலும் பொடிமட்டை பிரிக்கறதாகத் தோன்றினால் நான் என்ன செய்யமுடியும். பீரியட் வைக்குமளவெல்லாம் பொடியுமில்லை, மட்டையுமில்லை - இதே அறிவுரையை அனுபவஸ்தர் நீங்கள் பிற carpet rolling committeeகளுக்கும் சொல்லுங்கள். பூடக cut and bleed ரோதனை செய்யாமல் அவனவனை அவனவன் ஜோலியப் பார்க்கவிட்டால் சரி.
//நீங்கள் சாவு விஷயத்தை இப்போதாவது புரிந்து கொண்டால் தன்யனாவேன்.//
////சு.ரா சாவுச் செய்தி குறித்து: உங்களுக்கு இருக்கும் முதிர்ச்சி அனைவருக்கும் இல்லை என்பது துர்ப்பாக்கியமே. அதற்கு என்ன செய்வது?//
இந்த ஸ்டேட்மெண்ட் கிண்டலில்லை என்று நம்புகின்றேன் :-)//
சாவை நக்கலடித்ததாகச் சொல்லவில்லை; 'தகவலுக்கு நன்றி' என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டதாக (நானாவது புரிந்துகொள்ளும்) 'பதிவுக்கு நன்றி' என்ற பின்னூட்டங்களை முதுகுசொறிவதாக எப்படி அர்த்தம் செய்துகொள்ளமுடியுமென்று தெரியவில்லை. நான் அச்செய்தியை அறிந்துகொண்டது வலைப்பதிவுகள் மூலமாகத்தான். தகவல் சொல்லப்பட்ட காரணத்துக்காக நானும்கூட நன்றி சொல்லியிருப்பேனே தவிர, அதற்கு வேறேதும் அர்த்தமிருப்பதாகத் தெரியவில்லை. "உங்களுக்கோ வேறு யாருக்கோ இருப்பதாகக் கருதும் முதிர்ச்சி அனைவரிடமும் இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பது அபத்தம்" என்றிருக்கவேண்டும் - அதுதான் சொல்ல வந்தது. இது கிண்டலா வேறென்னவா என்று எனக்குத் தெரியவில்லை, நீங்கள் முடிவுசெய்துகொள்ளவும்.
பத்து வரிக்குள்ளே தொண்ணூற்றேழு உள்குத்தோ வெளிக்குத்தோ வைக்குமளவு திறமையை எந்தப் பூடகமுனியும் எனக்கு வரமாய்க் கொடுக்கவில்லை என்பதைச் சொல்லிக்கொள்கிறேன் - அவ்வளவுதான். Over and out. பதிலுக்கு நன்றி.
சன்னாசி,
உங்களது பதிலுக்கு நன்றி. உண்மையைக் கூற வேண்டுமென்றால் மேலே காணும் உங்கள் பின்னூட்டத்திலுள்ள குறைந்தபட்ச புரிதல் கூட பிற வலைப்பதிவரிடம் நான் எதிர்பார்த்தல் அபத்தம். அடுத்தவருக்கு அறிவுரை கூறுமளவிற்கு அனுபவஸ்தன் நானில்லை. மேலும் நீங்கள் கூறும் கார்பெட் ரோலிங் கமிட்டிகளில் நான் குறைந்தபட்ச மெம்பர் கூடக் கிடையாது. நீங்கள் இன்னமும் என்னை முகமூடியென்று நம்புவது போல் தோன்றுகின்றது. அதுதான் இன்னமும் அஜக்-மஜக் பின்னூட்டம் -2'ன் தொடுப்பு அவ்வாறாகவே உள்ளது போலும். பரவாயில்லை சப்பை பெறாத சைடு டிஷ் என்று நீங்களே கூறிவிட்டதால் கவலையில்லை. முன்னர் சுடுசொற்கள் ஏதேனும் நான் உங்களைக் குறித்து கூறியிருப்பின் தயவு செய்து மன்னிக்கவும். Gracias!
//அதுதான் இன்னமும் அஜக்-மஜக் பின்னூட்டம் -2'ன் தொடுப்பு அவ்வாறாகவே உள்ளது போலும்.//
அப்பின்னூட்டத்திலுள்ள இரண்டாவது இணைப்பு குசும்பனைக் குறித்ததல்ல, பதிவுக்குள்ளிருக்கும் படங்களுடன் தொடர்புள்ளது என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்களென்று நினைக்கிறேன். ஒன்றின்கீழ் ஒன்றாய்ப் போடப்பட்டிருப்பதால் ஒருவேளை அதுவும் உங்களைக் குறிக்கிறதென்று நினைத்தீர்களோ என்னவோ.
Post a Comment