Sunday, March 12, 2006

வலிகளும் சில நிவாரணிகளும்


இணையத்தில் எவ்வளவு பேருக்கு கராத்தே தெரியும் என்று எனக்குத் தெரியாது. தற்காப்புக் கலைதான் என்றாலும் உணர்ச்சி வசப்படும் ஆசாமிகளும் கற்றுக் கொள்ளத்தான் செல்கின்றார்கள். கராத்தே, குங்ப்பூ போன்ற கலைகளும் ஒரு விதத்தில் யோகா மாதிரிதான். மார்ஷியல் ஆர்ட்ஸ் என்று அழைக்கப்படும் இக்கலைகளின் பயிற்சிகள் கூட ஒருவருக்கு உணர்வுகளை கட்டுப்படுத்தும் ஆற்றலை வழங்கும்.

இக்கலையினைக் கற்றவரை, கலையினை அறிந்தோர் இனங்கண்டு கொள்தல் எளிது. ஒருவரின் ஸ்டான்ஸ் எனப்படும் நிற்கும் நிலை கூட ஒரு அறிவிப்பு சாதனமாகக்கூடும். அனுபவத்தில் அறிந்தவன் நான்.

இக்கலைகளில் சட்டதிட்டங்கள் நிறைய உண்டு. ஜப்பானில் இருமுறை பிளாக் பெல்ட் வாங்கிய எனது சன்சாய் பயிற்சிகளை விட, சட்ட திட்டங்களை விளக்கிய நேரமதிகம். குறிப்பாக எவ்விதமான போரிடும் முறைகளை தேர்ந்தெடுப்பது பற்றி அவர் மாய்ந்து மாய்ந்து விளக்கியிருக்கின்றார்.

சோலா(ர்)பிளெக்ஸ் (solarplex) என்பது நெஞ்சுக்கூடு கடைசி முறையாக இணையும் பகுதிக்கு (இறுதி நெஞ்செலும்பு கூடுமிடம்) மைக்ரான் அளவு இறங்கிய உடலின் பாகம். இங்கே கைமுஷ்டியின், பாம்பு விரல் மணிக்கட்டால் (பொதுவாக துருத்தியிருக்கும்) ஓங்கி ஒரு குத்து (punch) விட்டால் ஆள் காலியாகாவிட்டாலும், கோமாவிற்கு போவதுறுதி. இது "காட்டா" (Kata) எனப்படும் கராத்தே போர்முறைப் பயிற்சியில் இருக்கும். இருப்பினும் இவ்வகைத் தாக்குதல் ஒத்த பயிற்சியுடைய எதிராளியிடம்தான் பயன்படுத்தப்பட வேண்டும். பயிற்சி என்பது ஒருவர் பெற்ற டிகிரிப் பட்டம் போல அடைந்த பெல்ட். பிளாக் பெல்ட் வாங்கியவர் இன்னொரு பிளாக் பெல்ட் வாங்கியவரோடுதான் பொருதுவார். ஸ்பேரிங் எனப்படும் "நேருக்கு நேரான தாக்குதல் போட்டிகளில்" ஒத்த பெல்ட் உடையவரே சமர் செய்வர். தாக்கவும், தற்காக்கவும் ஒத்த பயிற்சியுடையவராலேயே முடியும் என்ற எழுதப்படாத சமநீதிக் கோட்பாட்டை காப்பாற்றுவது கராத்தே போன்ற கலைகளே.

அதே சமயம் இவ்விதமான விதிகளைக் கையாளாத குண்டர்களிடமிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ள சில முறைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக கால்பாதத்தை முறுக்கி (மணிக்கட்டு போல் உருவாக்கி) எதிராளியின் விரைகளில் (Groin kick) ஓங்கி உதைப்பது. எல்லோராலும் இது முடியுமென்றாலும் இம்முறையை பயன்படுத்தி அடித்தால் "குறி நான் ஏன் பிறந்தேன்?" என்று அழுமளவிற்கு சேதாரத்தை உண்டு பண்ணும். இவ்விதமான அடிகளை சாதாரணமாகக் கற்றுக்கொள்வோரிடம் எந்த ஆசானும் பயிற்றுவிப்பதில்லை. காரணம் நாமறிந்ததே.

கருத்து ரீதியாக இல்லாமல் போகிற போக்கில் கராத்தே அடி அடிக்கும் ஒருவரை இணையத்தில் பார்த்தேன். இவருக்கு பெரிதாக நான் விளம்பரம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர்தான் பெயரிலி என்கின்ற ராம்வோச்சர் என்கின்ற ரமணீதரன் கந்தையா என்கின்ற (இன்னமும் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் நீங்கள் அலுத்துப் போய் விடுவீர்கள்).

இனிமேல் நான் தேவைப்பட்டால் ஒழிய சுட்டிகள் கொடுக்கப் போவதில்லை. என்ன செய்வது புதிதாக என்னைப் படித்து அவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்ளும் கட்டாயத்தில் குசும்பனைத் தள்ளி விட்டீர்களே பெயரிலி! மனுஷ்யபுத்திரன் சுராவுக்கு இவ்வளவு கோபம் அவசியமா? என்கின்ற பதிவை எழுதினார். பின்னூட்ட பேழைக்குள் செல்க:

மேற்கூறிய காராத்தே அடிகளைப் பார்ப்போமா? முதலில் அநாமதேயம் என்று சோலா(ர்)பிளெக்ஸ் அடி. பின்னர் மனுஷ்யபுத்திரன் காறி உமிழ்ந்த பின்னே (குண்டரில்லாவிடிடும்) விரைகளில் உதை பெயரிலி பெயரில். நல்லவேளை மனுஷ்யபுத்திரன் சிற்றிலக்கிய சண்டைகளைப் பார்த்ததால் அசரவில்லை. தெளிவாகத் தன் அடுத்த பதிவில் கூறுகின்றார்:

//தெருச் சண்டையில் எதிராளியை நிலை குலையச் செய்ய தங்கள் துணியை தூக்கிக் காட்டுகிறவர்களுக்கு நிகராக கீழ்த்தரமான தாக்குதல்களைத் தொடுப்பவர்கள் எல்லா ஊடகங்களிலும் இருப்பதுபோல இணையத்திலும் இருக்கிறார்கள். //

இதுதான் பெயரிலி அடி என்பது !!! மனுஷ்யபுத்திரனுக்கும் பெயரிலிக்கும் பங்காளிச் சண்டையா என்ன? படிக்கும் வாசர்களே சொல்லட்டும் !!!

இன்னொரு பெயரிலிச் சண்டை. உங்களுக்கு எதிராகக் கருத்துகள் வைக்கப்படுமானால் கருத்தைப் பார்க்காதே. கருத்தாவை அடி என்கின்ற பெயரிலிப் பாணிச் சண்டை. பொறுமை இருந்தால் நேயர்கள் வாசித்துப் பார்க்கவும். தனது கருத்துக்கு ஒவ்வாமல், தனது கடிதங்கள் ராயர் காப்பி கிளப்பிலே மட்டுறுத்தப்பட்ட கோபத்தின் வெளிப்பாடு //இந்த கணேசன், பரமசிவம்பிள்ளை என்பவர்களின் அஞ்சல்கள் புறப்பட்ட முகவரிகளும் குறைந்த பட்சம் பா. ராகவன் & இரா. முருகனின் ஓரோர் அஞ்சல் புறப்பட்ட முகவரிகளும் ஒன்றாக இருந்ததே.//

பெயரிலிக்குத் தேவைப்பட்டால் மச்ச, கூர்ம, வராக இன்னபிற அவதாரங்கள் எடுக்கலாமென்பதை கோயிஞ்சாமி-8A கூட இன்றைக்கு ஒத்துக் கொள்ளலாம். ஆனால் ஐபீ எங்கிருந்து வேண்டுமானாலும் வந்திருக்கலாமென்ற தற்காப்பு வசனம் வைக்கத் தெரியாத, தெரிந்தாலும் சில பல காரணிகளால் வைக்க விரும்பாவருக்கு (இரா. முருகனுக்கும், பாராவுக்கும் நான் அடியாளல்ல :-)) மே 2003'ல் ஆப்படித்தவர் பெயரிலி. இது ஸ்பெஷல் அடி. கைமுஷ்டி சோலா(ர்)பிளெக்ஸ் பதம் பார்க்க, கால்கள் இருவரின் விரைகளை அடிப்பது. (டைரக்டர் ஷங்கர் பார்த்தால் பீட்டர் ஹெயின்ஸ் மூலம் அடுத்த படத்தில் சண்டைக்காட்சி அமைக்க முடியும்)

ஆமாம் இந்த கோயிஞ்சாமி-8A யார்? இவர் ஏன் தனியாக பெயரிலிக்கு மெயில் போட வேண்டும்? இவரும் சன்னாசி கூறியது போல் ஒரு மயில் ராவணரா? இது மற்ற கோயிஞ்சாமிகளுக்குப் புரியுமா? படிக்காமல் பெயரிலிப் பதிவில் பின்னூட்டமிட்டேன் என்று நீக்கியவருக்கும் இவருக்கும் தொடர்புண்டா? இருவரும் ஒருவரா? இவற்றை தனியாகப் பார்ப்போம்.

எனது ஒரே ஒரு கேள்வி:

1. ஆறு மணி செலவு செய்து போஸ்டு போட்ட பெயரிலியே. போலி டோண்டு = குசும்பன் = முகமூடி இதை இன்னமும் நிறுவவில்லையே? தெளிவாக புரியும் வண்ணம் எழுத முடியுமா?

இதை விடத் தெளிவாக நான் கேட்க முடியாது.

முத்தாய்ப்பாக:

ஒருவர்: டேய் சூப்பர்மேனுக்கும் மேனுக்கும் என்னடா வித்தியாசம்?
மற்றொருவர்: மண்டு. ஜட்டி போட்டு பேண்ட் போட்டா மனுஷன். பேண்ட் போட்டு ஜட்டி போட்டா சூப்பர் மனுஷன்

ஒருவர்: டேய் கராத்தே தெரிஞ்சவனுக்கும் தெரியாதவனுக்கும் என்னடா வித்தியாசம்?
மற்றொருவர்: மண்டூகம். அடி வாங்கி கத்துறவன் மனுஷன். அடிச்சிட்டு (Kiya'ன்னு) கத்துறவன் கராத்தே தெரிஞ்சவன்

பேண்டுக்கு மேல ஜட்டி போட்டு kiyaa'ன்னு சூப்பர் அடி அடிச்சிட்டு கத்துற சூப்பர் பெயரிலியே! சிம்பிளாச் சொல்லு.... என் கேள்விக்கென்ன பதில்?

பிகு.

1. நான் எந்த காசு கொடுக்கும் எந்த ப்ராக்ஸி சேவையையும் பயன்படுத்தவில்லை.
2. ஹிஹி தொடரும்...

No comments: