Monday, March 13, 2006

**விழலுக்கு இறைத்த நீர்**


சரி தலைப்பு நன்றாக வைத்தாயிற்று. இனிமேல் வார() நடசத்திரமில்லாவிடினும், ஏதாவது, நன்றாக எழுத வேண்டுமே? எனது ரசிகர்கள், வாசகர்கள், பரியின் வினையூக்கி பின்னூட்டத்தில் கேட்டது இன்னும் பாபா ரஜினியின் ஷூ'ப்பொறி போல் கிளம்பி உசுப்பேத்துகின்றது. நானும் நன்றாக எழுத முயற்சிப்பேன் :-) 2006'ல சிறந்த தமிழ் பிளாக்கா...(உள்மனம்: டேய் குசும்பா அடங்குடா....)

பெரிய ஆளானாவே கல்லடி, சொல்லடி படத்தான் வேண்டும். எடுத்துக்காட்டா என்னையே எடுத்துக்குங்க...சரி வேண்டாங்றீங்களா? அப்ப சரி வால்மார்ட்டை எடுத்துக்குவோம். எல்லாருக்கும் தெரியும் வால்மார்ட் வருடத்திற்கு 286 பில்லியன் டாலருக்கு யாவாரம் செய்யும் பலசரக்கு அங்காடி. மொத்தம் 12 லட்சம் பேரு வேலை பாக்குறாங்க. இன்னும் நிறைய புள்ளி விவரத்த அவுத்து வுடலாம் (நன்றி: இணையம்). அமெரிக்கா வந்ததுலேர்ந்து நமக்கு வால்மார்ட்தான் எல்லாமே! Butter சிக்கன் பண்ண ஆசைப்பட்டு, "Thank God It's not Butter"ங்ற சரக்கை வாங்கியாந்து ஆவி பறக்கும் வாணலியில் போட்டு, என்னாடா சிக்கன்ல மக்கன் (ஹிந்தி: வெண்ணெய்) வாசனையே வரல்லைன்னு பேக்கேஜைப் படிச்சுப் பாத்தா... அது வேறயாம். நம்ம நொள்ளைக் கண்ணுக்கு பட்டர் மட்டுமே பட்டது விதி...ஆனாலும் சரக்கி'லிருந்து, பலசரக்கு வரை எல்லாமே எனக்கு வால்மார்ட்தான். ஏறக்குறைய நிறைய அமெரிக்கர்களுக்கும் கூட...

நெட்லே நீங்க பார்ப்பேளே ரியல் ஸ்மைலி :-) அந்தப் படத்தோட "Roll Back" அப்பிடின்னு போஸ்டர் போட்டு "சலுகை விலை"யில் சமர்த்தாய் விற்பனை செய்வதில் வல்லவர்கள் வார்மார்ட்டார். இந்து ராமை இணையத்தில் வோட்ச் பண்ணும் (அவரே வோட்ச் செய்யப்படுவதை அறியாத) ராம்வோச்சர் போல, வால்மார்ட்டிற்கும் வாச்சர் உண்டு.

சரி வால்மார்ட்டின் மீது அமெரிக்காவில் சாட்டப்படும் குற்றச்சாட்டுகளை பார்ப்போம்:

1. தனது ஊழியர்களின் நலனில் அக்கறை எடுக்காத நிறுவனம். வால்மார்ட் தனது ஊழியர்களுக்கு செய்து தராத நலக் காப்பீடு திட்டங்கள், வீட்டு வசதி, குழந்தை பராமரிப்பு போன்ற அம்சங்களுக்காக சராசரி அமெரிக்க குடிமக்கள் தமது வரிகள் மூலமாக ஈடு செய்கின்றார்கள். 2004'ல் 1.5 பில்லியன் டாலர்கள் பொதுமக்கள் வரியிலிருந்து மேற்கண்ட (வால்மார்ட் செய்ய வேண்டிய காரியங்களுக்காக) காரியங்களுக்காக செலவீனம் ஆனது. அப்படியென்றால் ஊழியர்களின் நலனை புறந் தள்ளி, மக்களின் வரிப்பணத்தில் 1.5 பில்லியன் டாலர்களை கொழுத்த லாபமாய் சாப்பிட்டது வால்மார்ட்.

2. Be Indian; Buy Indian போல வால்மார்ட் "The Buy America Program" ஒன்றை 1994'ல் அறிவித்தது. ஆனால் இன்றைய நிலைமை வேறு. மொத்தம் எழுபது சதவீதம் வால்மார்ட்டில் விற்கப்படும் பொருட்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. குறைந்த விலையில் தரமான பொருட்களை தருவதை குறிக்கோளாகக் கொண்ட வால்மார்ட் சீனாவிலிருந்து அமெரிக்கா செய்யும் மொத்த இறக்குமதியில் 10 சதவீதம் பங்களிப்பு செய்கின்றது. இதனால் மூடப்பட்ட அமெரிக்க தொழிற்சாலைகள், இழந்த அமெரிக்க வேலைவாய்ப்புகள் ஏராளம். வாஷிங்டன் போஸ்டும், நியூயார்க் டைம்ஸும் கதறுகின்றன.

3. அரக்கன்ஸாஸ் அசுரன்: ஒரு மணி நேர ஊதியமாய் அதிகுறைந்தபட்ச அளவான 9.68 டொலர்களே வழங்கி ஊழியர்களைப் பிழிந்து வேலை வாங்குகின்றது வால்மார்ட். கொசுறாக சட்டத்திற்கு புறம்பாய் ஊடுறுவிய (குறிப்பாய் மெக்ஸிகோ போன்ற நாடுகளிலிருந்து) ஆக்களுக்கு வேலை வழங்கியது; பெண் ஊழியர்களை பாகுபாடாய் நடத்துவது, சுற்றுப்புற சூழல் மாசு படுத்தப்படுவது இன்ன பிற விதயங்கள்...

4. காத்ரீனா சூறாவளி நிவாரணமாய் வால்மார்ட் மிகவும் தாராளமாய் நடந்து கொண்டது. 17 மில்லியன் டாலர் பணமாகவும், 3 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள பொருட்களும், தனது ஊழியர் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து 4 மில்லியன் டாலர்களும் பெற்றுத் தந்தது வால்மார்ட். இவ்வாறு உதவிகளை அள்ளித் தெளித்தாலும் வால்மார்ட் வாட்ச்'சின் டைரக்டர் வில்லியம் ஜார்விஸ் ஜான்சனோ, "வால்மார்ட் ஏழைகளை தாக்கி, ஏழையாகவே வைத்திருக்கும் தொடர்மையம் கொண்ட சூறாவளி என்று விளிக்கின்றார்".

5. இவர்கள் சமீபத்தில் நிறுவனத்துக்குள் பகிர்ந்து கொண்ட "இன்சூரன்ஸ் பாலிஸி" லீக்கானது. அதில் இதய நோய் ஏற்படும் காரணிகளில் முக்கியமானதான கூடுதல் உடல் பருமன் பற்றிய குறிப்புடன், வால்மார்ட் ஊழியர்களுக்கு நிறுவனம் எவ்வளவு அதிகமாக இக்காரணியால் இன்சூரன்ஸ் செலவு செய்கின்றது போன்ற விவரங்கள் இடம் பெற்றிருந்தன. இது ஊழியர்களின் உடல்நலத்தில் வால்மார்ட் கொண்ட அக்கறையா? இல்லை என்று பலர் அடித்துக் கூறுகின்றார்கள் எதிர்ப்பாளர்கள். கொழுத்த லாபம் காணூம் வால்மார்ட் இதன் மூலம் நாளை உடல் பருமன் அதிகமானவர்களை வேலைக்கெடுக்காது போன்ற கருத்துகளை அள்ளி வீசுகின்றார்கள்.

6. அடிப்படை சம்பளம், நியாயமான நலப்பராமரிப்புத் திட்டம், பாகுபாடில்லா அணுகுமுறை, குழந்தைத் தொழிலுக்கு தீவிர எதிர்ப்பு நிலைப்பாடு, அமெரிக்கப் பொருட்களை வாங்குவது மற்றும் சக-சமூகத்தை மதித்தல் போன்ற ஆறு அம்ச கோரிக்கைகளுடன் வால்மார்ட்டை எதிர்த்து களம் கண்டிருக்கின்றது வேக்கப்-வால்மார்ட்.காம் என்ற அமைப்பு.

7. ராபர்ட் க்ரீன்வால்ட் படமே எடுத்துட்டார் ''Wal-Mart: The High Cost of Low Price''. இன்னும் பார்க்கவில்லை. நியூயார்க் டைம்ஸ் விமர்சனத்தில் ஆஹா ஓஹோ என்கின்றது. அந்த சுட்டியில சைடுல சுட்டுனீங்கன்னா இன்னும் சில பல செய்திகள். படம் வாங்கோணுமின்னா.
8. அப்படத்துடன் கொசுறா Confessions of a Wal-Mart Hit Man

இப்பதிவிற்கு இன்ஸ்பிரேஷன் தமிழ் சசியின் பதிவு.

பினா.குனா.

1. (குசும்பன் மனதுக்குள்) இது உனக்கு தேவையா? தாவு கீதா? தீந்து போச்சா? (உடனே அந்நியன் எபெக்டில்) டேய் பாடு... உன்னால முடியும். எழுது. எக்ஸ்ட்றா ஸ்பைசி சிக்கனோட ( நீ சொன்ன மக்கனோட இல்லேடா மாக்கான்) வால்மார்ட் இந்தியாவின் பொருளாதாரத்தை விரிக்கும் விதைமண் வழியா? இல்லை கரிக்கும் புதைமண் குழியா?ன்னு ஒலகத்துக்கு தெளிவு படுத்து...
2. (அமெரிக்கனு வீட்டு டர்க்கியே என்ற பாடல் பேக்கிரௌண்டுடன், ஆனந்தன் ஸ்டைலில்) அவா ஷொன்னா இவா எழுதுவா. அப்பிடியில்ல தல. அது பாட்டுக்கு அது. இது பாட்டுக்கு இது. என்னா புர்யுதா?

No comments: