Friday, March 03, 2006

நாய்


காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள் நடவாத தெருவில் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன
ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?

ஞானக்கூத்தன் - ஞானக்கூத்தன் கவிதைகள், விருட்சம் வெளியீடு, ரூ80.00.

பட உதவி: நன்றி http://www.rotten.com/library/culture/dog-shit/
பட கருத்தாக்கம் நன்றி: பெயரிலி http://kusumban.blogspot.com/2006/02/blog-post_15.html
படம் நன்றி: http://www.rotten.com/library/culture/dog-shit/

8 comments:

Anonymous said...

நாயின் பின்புறத்தை பற்றி பேசுவது அதை பற்றி கவிதை வடிப்பது போன்றவற்றை செய்யும் எந்த யிலியும் என்று நான் சொல்ல மாட்டேன். சொல்லிட்டா அப்புறம் என் கடையில் யாரும் மிட்டாய் வாங்க மாட்டாங்க !

இந்த மாதிரி நாயின் சூ வை பற்றி எழுதுவதற்கு போலி டோண்டுவே மேல் என்றும் நான் சொல்ல மாட்டேன்.

பாட்டிக்கடை

Anonymous said...

நாயின் பின்புறத்தை பற்றி பேசுவது அதை பற்றி கவிதை வடிப்பது போன்றவற்றை செய்யும் எந்த யிலியும் Perverts என்று நான் சொல்ல மாட்டேன். சொல்லிட்டா அப்புறம் என் கடையில் யாரும் மிட்டாய் வாங்க மாட்டாங்க !

இந்த மாதிரி நாயின் சூ வை பற்றி எழுதுவதற்கு போலி டோண்டுவே மேல் என்றும் நான் சொல்ல மாட்டேன்.

பாட்டிக்கடை

PKS said...

எனக்குப் பிடித்த கவிஞர்களில் ஒருவரான ஞானக்கூத்தனின் கவிதையை எடுத்து இட்டமைக்கு நன்றி. ஞானக்கூத்தன் நாயை வைத்து இன்னும் சில கவிதைகளை எழுதியிருப்பதாக ஞாபகம். "பாடையின் பின்னே பதுங்கிப் போகிற" நாயைப் பற்றியும் ஒரு கவிதை இருக்கிறது. அவரது தவளைக் கவிதையும் பேசப்பட்ட ஒன்று. இது என்ன நாய்க் கவிதைகளின் சீசனா? சமீபத்தில் முகமூடி ஒரு "வெறிநாய்க் கவிதையை" மீள்பதிவு செய்தார். இப்போது நீங்கள். அடுத்து பசுவய்யாவின் நடுநிசி நாய்கள் கவிதை வருமோ?

உங்களையும் முகமூடியையும் ஞானபீடத்தையும் மேனகா காந்திக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன். விலங்குகளைப் பற்றி அடிக்கடி பேசுகிறீர்களே! :-) ஸ்மைலி போட்டுட்டேன் பாஸு. ஞானபீடம் என்னவென்றால், காக்கா கவிதை போட்டுக் கலக்குகிறார். நீங்கள் நாய்க் கவிதை போடுகிறீர்கள்.

நடத்துங்க! நீங்க மற்ற நேரங்களில் எழுதுவது பெரிதாகப் புரிவதில்லை. நானும் புரிந்துகொள்ள மெனக்கெடுவதில்லை. அப்படிப் புரியாமல் எழுதுவதற்கு இப்படிக் கவிதைகளை எடுத்துப்போடுவது எவ்வளவோ மேல். :-)

நீங்கள் போட்டிருக்கிற படத்துக்கும் கவிதைக்கும் என்னங்க தொடர்பு?

அன்புடன், பி.கே. சிவகுமார்

ஏஜண்ட் NJ said...

எனது காக்கா-crow பதிவைப் பார்த்த PKS-க்கு நன்றி

ஏஜண்ட் NJ said...

Thanks Kusumban, for allocating advertisement space!
;-)

Anonymous said...

Dear Kusumban

Was this dog's back is that of the same Veri Naai , Mad Dog's front that came in Mugamoodi's blog? If so was Peryarili wrote about this same dog's anal parts? I pity for the front and back portion of that dog. No wonder that dog gone mad.

Now a days it becomes a fashon for you guys to speak with a picture followed by a poem. A picture is worth thousand words. Keep it up.

N.B I liked the poem too. Here in TN lot of fun going on, a big competetion is going on between monkeys and politicians, it seems politicians won the competition as per the curret news bulletin. You will have more pictures to write in your blog tomorrow. Enjoy.

Chola Otran

குசும்பன் said...

பாட்டிக்கடை,

என்னாங்க சொல்ல வரீங்க?

அடடே பிகேஎஸ்ஸா? தன்யனானேன். ஏதேது குசும்பன் பக்கம் வ்ந்து பின்னூட்டமெல்லாம் வேறு? பலே பலே...

ஞானக்கூத்தனையும் மிகவும் பிடிக்கும். இப்போ இருக்குற சூ(சு)ழலுக்கு பொருத்தமா நாய்க் கவிதை இருப்பதாய் என்னோட சிற்றறிவிற்கு தோன்றியது. மேலும் ஞானக்கூத்தனின் "கரப்பான் பற்றி" கவிதை படிச்சிருக்கீங்களா? பசுவய்யா எழுதிய நடுநிசி நாய்கள் படிக்கவில்லை. ஆனால் "உன் கவிதையை நீயே எழுது" என்ற பொருள் தரும் கவிதை படித்திருக்கின்றேன். மனுஷன் செம குசும்புய்யா :-)

புரியாத பதிவுகள் என்று இலக்கிய வரிசையில் என்னைக் கொண்டு போய் சேர்த்து விட்டீரே? நானும் இலக்கியம் வளக்கத்தான் விரும்புறேன். ஆனா நல்ல சுழி நடுவுல இருந்தாலும் கோண சுழி குறுக்கே ஓடுதே...

நாய்களோட பிருஷ்ட கஷ்டம் பற்றி பெயரிலி அண்னை எழுதியது ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது. அம்புட்டுதேன்.

ஞான்ஸ்,

(நாயகன் குரலில்) நீ யாருப்பா? கலக்குறே மாம்ஸூ!!! நடத்தும் ஓய்! (உம்மோட விளம்பரத்துக்கு சார்ஜ் எல்லாம் கிடையாதுப்பா. என்ஞாய் மாடி!)

யப்பா சோழ ஒற்றா... ஆளை வுட்டுப்பா! எனக்குத் தெரியாத உள்குத்து ஏதாச்சும் இருக்கா?

முகமூடி said...

கவிதைக்கு நன்றி (அதுக்கு ஞானக்கூத்தனுக்கு இல்ல நன்றி சொல்லணும்.. சரி பரவாயில்ல, இணைய வழக்கப்படி உங்களுக்கு வரிக்கு வரி நன்றி)

*

ஏம்பா பின்னூட்டத்துல என் மண்டைய உருட்டறீங்க... மேனகா காந்திக்கு பிடித்தாலும் பிடிக்கலாம் அதுக்குள்ள கெடுத்துருவீங்க போலருக்கே

*

இதுல என்னோட குசும்பன கம்பேரிஷன் வேற.. நய (சொந்த) கவிதை எழுதும் நான் எங்கே... நாய் (காப்பி) கவிதை எழுதும் அவர் எங்கே?