Sunday, March 12, 2006

தம்பி - நையப்புடை



"உயிர்வலி எல்லாருக்கும் ஒண்ணுதான். அதை நீ உணரணும். தப்பு செஞ்சிட்டோம்னு நீ வருந்தி திருந்துறவரைக்கும் நான் உன்னை விடமாட்டேன். நீ எந்தப் பக்கம் திரும்பினாலும் உன்னை எதுத்து நிப்பண்டா" வில்லன் சங்கரபாண்டியனை நையப்புடைத்து தம்பி மாதவன் கூறும் வசனத்தில் படம் தொடங்குகின்றது.

"நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டுமென்பதை நம் எதிரிகளே தீர்மானிக்கின்றார்கள்" - மாவோ'வின் வரிகள் டைப்படிக்கும் ஸ்டைலில் கலக்குகின்றது.

"காசியின் ஆட்களை தம்பி அடித்துவிட்டான்" - சிங்கராயர் என்னும் சங்கரபாண்டியனின் அடியாள் உசுப்பேற்ற படம் சூடு பிடிக்கின்றது.

"வேடிக்கைப் பாத்தே வேட்டியில *ண்ணுக்குப் போயிட்டேன்" தம்பியின் அடியை சங்கரபாண்டியனுக்கு எடுத்தியம்பும் சிங்கராயரின் நகைச்சுவை கிச்சுகிச்சு மூட்டுகின்றது.

"உபதேசம் பண்ணா எவன் கேக்குறான். உதைச்சாத்தான் கேக்குறான்" - தம்பியின் நிதர்சனம் சுடுகின்றது.

"பாம்புகளுக்கு நடுவுல இருக்கேன். பாட்டெனக்கு வராது" - சாரா'ப் பாம்பான நாயகி அர்ச்சனாவிற்கு தம்பி விளக்கம் கொடுக்கின்றார்.

"சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் குடுத்துப்புட்டேன்" என்று பாடும் தம்பி வருத்தப்படுகின்றாரா இல்லை களிப்போடு சொல்கின்றாரே என்று குழப்பம்.

வீட்டு மாமரத்தை வெட்டுவதைக் கூட தம்பியால் தாளமுடியவில்லை. "மரம் தானே விடு வேலு (தம்பி)" என்னும் வசனமும் வருகின்றது. படம் தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் இராமதாஸ் அய்யாவிற்கு சமர்ப்பணம் செய்யப்படுகின்றது (Title Credit).

"நான் சங்கரபாண்டியன். என் தம்பி சரவண பாண்டியன். நான் தெருவுல கிடக்கிற அசிங்கம். என்னைத் தேடி வந்து மிதிக்காத. நீ யாரோ நான் யாரோ..."- வில்லன் தம்பியிடம் தன்னிலை விளக்கம்.

"இழந்தது நானா இருக்கட்டும். அதுவே கடைசின்னு முடிவு பண்ணிட்டேன்" - குடும்பத்தையே காலி செய்த வில்லனைத் திருந்தும்படி தம்பி உருக்கம்.

"புலி புலியை அடிச்சுக் கொல்றதில்ல (அப்படியா!). சிங்கம் சிங்கத்தை அடிச்சுக் கொல்றதில்ல. விட்றுன்னு எவ்வளவோ கெஞ்சினேன். கதறுனேன். கேக்கலியே" - கல்லூரி விழாவில் தம்பி தன்னிலை விளக்கம்.

"காந்தி சொல்லி, காமராஜ் சொல்லி, பெரியார் சொல்லி, அண்ணா சொல்லி கேக்காத நீங்க ஏன் நான் சொல்லியா கேக்கப் போறீங்க? நான் கேப்பேன். எல்லாத்தையும் பொறுத்துப் போறதுக்கு நான் காந்தியும் இல்லே. கர்த்தரும் இல்லே. புனிதமான புத்தரும் இல்ல. மனுசன். சாதாரண மனுசன்" அதே விழாவில் தம்பி ஆவேசம்.

"அடையறதுக்கு ஒரு லட்சியமிருக்கு. வன்முறைங்ற வார்த்தை ஒழியிற வரைக்கும் நான் ஓய மாட்டேன்" - தம்பியின் சூளுரை.

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே - தோழர் சே குவாரா

உடலினை உறுதி செய்
ஏறு போல் நட
நேர்ப்படப் பேசு
நையப்புடை
நினைப்பது முடியும்

பாரதியின் பாடல் வரிகளோடு - சுபம்.

2 comments:

ஏஜண்ட் NJ said...

த ம் பி --- த ங் க க் க ம் பி

Anonymous said...

Soooperma....