Friday, March 31, 2006

நிழற்படங்களும் ஓவர்களும்

இது ஒரு ஜாலியான போட்டி. முகமுள்ளவர்கள் நிழற்படங்களை தமது பதிவில் போட்டுக் கொள்கின்றார்கள். ஏன் முகமில்லாதவர்கள் கூட ஓவர்களை (icons) போட்டுக் கொள்கின்றார்கள். சரி இதப் பார்த்தவுடன் மனதில் பட்டதை உடனே சொல்லி விடலாமென்ற குசும்பு தோன்ற (யப்பா சாமிங்களா இது ச்ச்ச்சும்மாதான்)...

சரி முடிஞ்சா பாயிண்ட் பை பாயிண்ட் யாருன்னு கண்டுபிடிங்களேன்.

1. என்னங்க லேப்டாப் வைச்சி போட்ட அனாலிஸிஸ் இது. அதிகமா குத்தம் குறை இருக்குங்களா?
2. ஹீம். பதிவு போட்டு பத்து நிமிஷம் ஆச்சி. இன்னும் ஒரு பின்னூட்டம் கூட வரலியே? எல்லாரும் "பிஸி"யா இருப்பாங்களோ?
3. எவ்வளவுதான் நான் கரடியாக் கத்தினாலும் என் மேல போட்ட பிராக்கெட்ட நீங்க எடுக்கப்போறதில்ல. சரி நான் அப்படித்தான் வைச்சுக்குங்க.
4. (மியூசிக் ஆன்லைனில் டெக்னோ இசை அதிர்கின்றது) ஒரு கண்ணை உருட்டி மிரட்டினால் இன்னும் மக்கள் அதிகமா பயப்படுற மாதிரி இருக்கே
5. (குழைவு கலந்த குரலில்) என்னப்பா கல்லெறியும் கும்பல் இன்னும் கலைந்து போகவில்லையா? ஒரே ரோதனையாப் போச்சிப்பா.
6. பேரு இப்பிடி வெச்சாலும் வைச்சேன். பிளேபாயைப் போல் மக்கள் பாக்குறாங்கப்பா.
7. நான் ஒண்ணு நெனச்சு எழுதுறேன். இவனுங்க என்னடான்னா இலக்கிய மீனிங் கொடுக்குறானுங்களே. உள்குத்து ஏதாச்சும் இருக்குமோ?
8. நல்லவேளை தலையை மட்டும் போட்டேன். அதுக்கே கர்புர் சத்தம் கொடுக்க வைக்க முடியும்னா, முழுசாப் போட்டிருந்தா?
9. (ஹாலோவீன் மியூசிக்) உண்மையான கருவிழியான்'னா சும்மாவா?
10. என்னாது "சின்னப்புள்ள"த்தனமா இருக்கு?
11. என்னைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ளவும். மறுபடியும் சொல்கின்றேன். நன்றாக அறிந்து கொள்ளவும்.
12. என்ன இழவுடா இது. எம்மாம் நேரமா காத்துக்கிட்டு இருக்கேன். கோழி முட்டை இன்னும் போடவேயில்லியே?
13. (கட்டபொம்மன் சிரிப்பு) ஹ்ஹஹ்ஹா... எடுத்த பிறவியை ஏழாம் கண் கொண்டு பாரடா மானிடனே
14. (டிஷ்யூம்) என்ன நடக்குது இங்க?
15. என்னடா இது? வெளிறிப் போன பில்ட்டப்ப கொடுத்துட்டேனா?
16. செண்பகமே கற்பகமே... தென்பொதிகை சந்தனமே...
17. (பெருமூச்சு) ஹீம் இந்த போஸுல கண்டிப்பா ஐஸ்வர்யா ராய் அவுட்டு மச்சி
18. கண்டதை போடுவது போல எனக்கு பெருசு மாதிரி படம் போட்டு இளமையா இனங்காட்டுறது பிடிக்கும்ங்க
19. மீசையோட சைடுகளை சரியாக் கத்தரிச்சேனா தெரியலியே. சரி பரவாயில்லை. பாத்துக்கலாம்.
20. போ போ போ கணேசா... Go Get'em all
21. மலையாளக் கரையோரம் கவி பாடும் அருவி (என்ன தலவகிடு சரியாக்கீதா?)
22. பனைமரங்களும் மலர்வதுண்டு
23. பப்புல கொடுத்த பீருல ஷாக்காயிட்டேண்டா மாமு
24. (Smelling Sound) ஏங்கோ மணம் வீசுதே...
25. மீன் பிடிக்க வாரீகளா... ஹலோ மீன் பிடிக்க வாரீயளா?

அதிகம் கண்டுபிடிப்பவர்க்கு பரிசு கட்டாயம் உண்டு. போட்டி தொடரும் !!!

8 comments:

Anonymous said...

1.தமிழ்ச்சசி

4. பெயரிலி

6. விடாது கருப்பு

10. முத்து தமிழினி

14. கார்த்திக் இராமாஸ்
17. உஷா
18 தருமி/டோண்டு
19 ஞானவெட்டியான்
20. துளசி
22. ஈழநாதன்

Anonymous said...

2. தருமி
4. பெயரிலி
5. சின்னவன்
6. விடாது கருப்பு
7. முத்துகுமரன்
8. முகமூடி
9. கல்வெட்டு
10. கோபி
11. பிகேசிவகுமார்
12. காகாப்ரியன்
15. குழலி
16. மரம்
18. டோண்டு
20. பாலசந்தர் கணேசன்
21. ரசிகவ் ஞானியார்
22. ஈழநாதன்
23. பிருந்தன்

குசும்பன் said...

சிவப்பு பூரி:

5/25.

சரி: 1,4,6,10,14
தவறு: 17,18,19,20,22

குசும்பன் said...

handicapped_dragon

9/25

தவறு: 9,10,11,12,18,20,21,23

Keep Trying!

குசும்பன் said...

சதீஷ்,

13, 20 : சரி. கூர்மையான கவனிப்பு. விட்டுப்போனவற்றை முயற்சிக்கவும். :-)

ஜெ. ராம்கி said...

மண்டை காயுது! :-)

குசும்பன் said...

ரரா,

//மண்டை காயுது! :-) //

முன்னாடி நம்பர் 21 போட மறந்துட்டீயளே ;-)

1/25.

பெயில் :-)

குசும்பன் said...

சதீஷ்,

3. தவறு.

ஒரு சின்ன க்ளூ. அந்த வலைபதிவர் சமீபத்தில் வெகு சந்தோஷமாக இருக்கின்றார். கண்டுபிடியுங்கள்.