Tuesday, October 18, 2005

நன்றி பொறுக்குதிலையே

அம்மாவிற்கு பின்னால் அரோகரா போடும் கும்பல் வெறும் அரசியலில் மட்டும் இல்லை. எங்கே பார்த்தாலும் காணக் கிடைக்கும். எடுத்துக்காட்டாக:

பதிவு: இலந்தையின் இன்றைய நிலை என்ற புத்தகம் முனியாண்டி விலாஸில் கிடைக்கின்றது. அதன் முதற்பாகத்தின் ஆங்கிலப் பதிப்பை இதோ இங்கு வெளியிடுகின்றேன்.
கொமண்ட்: தகவலுக்கு நன்றி தமக்கையாரே. கட்டாயம் வாங்க வேண்டும்.

பதிவு: இன்றைக்கு நவம்பர் 1 தீபாவளி. மாரியாத்தா கோயிலில் கஞ்சி காய்ச்சி ஊத்தினோம்.
கொமண்ட்: தகவலுக்கு நன்றி தமக்கையாரே. கஞ்சி டேஸ்டாக வந்ததா? படமிருந்தால் போடுங்கள்.

பதிவு: போன வெகேஷனுக்கு எங்கு போனோமெண்டு நினைக்கிறியள். எல்லாம் மரக்கறி புடுங்கத்தான்.
கொமண்ட்: தகவலுக்கு நன்றி தமக்கையாரே. கவிச்சிக்கறியோட சாப்பிட்டேளா?

இதெல்லாம் சரி. அவங்க பதியறாங்க. இவங்க பாராட்டுறாங்க. ஆனா இதைப் பாருங்க:

பதிவு: ஸோ அண்ட் ஸோ இன்று மறைந்து விட்டார். அன்னாருக்கு அநேக நமஸ்காரங்கள்.
கொமண்ட்: தகவலுக்கு நன்றி தமக்கையாரே. ப்ளா ப்ளா ப்ளா

அடப்பாவிங்களா இதுக்கும் நன்றியா? நிர்மலா பெரியசாமி டிராஜிக் நியூஸ் வாசிக்கிற மாதிரில்ல இருக்கு... நன்றியை இடம் பாத்து காமிங்ணா(கா). புண்ணியமாப் போகும்.

15 comments:

Anonymous said...

Thompson refuses to keep 10k promise
Ellie Gibson 12:56 18/10/2005 Anti-videogames critic claims charity offer was merely 'satire' As another group of developers brings Jack Thompson's infamous game concept to life, the notorious anti-videogames ...
Find out how to buy and sell anything, like things related to private road construction on interest free credit and pay back whenever you want! Exchange FREE ads on any topic, like private road construction!

Anonymous said...

தகவலுக்கு நன்றி குசும்பன் :-)

சின்னவன் said...

கடவுளே , கடவுளே.

எந்த அம்மாகிட்ட இருந்து இதுக்கு "ஆட்டோ" வரப்போகுது தெரியல !

சரி , பரிசு இன்னா ஆச்சு ?

Anonymous said...

பின்னிப் பெடலெடுக்குறீரேய்யா குசும்பரே!

முகமூடி said...

பதிவுக்கு நன்றி குஷும்பர்..

சாப்பிட்டீரா

முகமூடி said...

;-))))

சின்னவன் said...

இந்த பதிவுக்கு நன்றி !!

என்பது நான் கொப்பிரைட் வாங்கி வைத்து இருக்கும் பின்னூட்டம்.

( கேஸ் போட வேண்டி இருக்கும் என்பதை நான் இங்கு நினைவுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் ! )

குசும்பன் said...

சின்ன மாப்ளே!

பாடல் 2
You must studiously learn it by staying awake all night
What's the fee for it?
You must only say it

பாடல் 3
I am just a beginner
You are my salted meat
When I see you, hunger strikes

பாக்கியிருக்கே?

குசும்பன் said...

நன்றி முகமூடியாரே! (ஆமாம் சின்னவர் முகத்திரையை கிழிக்கப் போகின்றாராம். ஷாக்கிரதையாய் இருங்கோ :-)

சின்னவன் said...

ஜிம்ரனை தவிர்த்து வேற க்ளுலி குடுங்க அண்ணாச்சி..
என்க்கிட்ட இருக்கிற அம்புட்டு பாட்டையும் கேட்டு புட்டேன். சிக்க மாட்டேங்குது !

குசும்பன் said...

வந்தது கோபலம். பிடி சாபம்.

க்ளூ 1: பாட்டுல மூணு எழுத்துகூட தெரியாத கெட்ட பையனா கீறியே? ராத்திரி பூரா ஆந்தையா கெடந்தாலும் பதிலோ பரவசமோ கிட்டாது.

க்ளூ 2: ஏழுகொண்டலவாடா... சப்புக்கொட்டிக்கொண்டே கிடக்கும் சின்னவனை கருவாடாகாமல் காப்பாற்றுவாயாக!!!

போதுமா ஸிம்ஸா? (மடிப்பு அம்ஸா மாதிரி கும்முன்னு இல்லே நம்ம க்ளூக்கள்)

:-)

சின்னவன் said...

தல கலக்குறீங்க..

இந்த "சிஷ்யனுக்கு" நல்ல க்ளூலினீர்.
நிந்திரை கெட்டு தேடினாலும் உமக்கு குரு தட்சணை கொடுத்தே ஆக வேண்டும்..



உப்பு கண்டத்தை பார்த்து பசி ஏறுவதைப் பற்றி
எனக்குத் தெரியாதா ...

அப்பாடா.. 5 முடித்தாகிவிட்டது. க்ளுக்கு ஏற்றவாறு குறைத்துக்கொண்டு மீதி பரிசு எனக்கே !

துளசி கோபால் said...

குசும்ப்ஸ்,

தகவலுக்கு நன்றி

குசும்பன் said...

கிவியக்கா,

உங்க குசும்பு பலே ஜோர் :-)

ஆமா ஸ்மைலி போடலியே? கோவிக்காத பின்னூட்டம்தன்னே?

துளசி கோபால் said...

ஸ்மைலி போட மறந்துட்டேன்.
அதுசரி, என்னமோ உங்களைத் தூக்கிட்டாங்கன்னு பேச்சு நடக்குது. என்ன விஷயம்?