(ரெண்டும் கெட்டானின் கதை. கில்மா. Blue Publications. போர்டில் தார் அடிக்காமல் இருக்க தமிழில் தென்மேற்கு ஓலச்சுவடு பதிப்பகம். முதல் பதிப்பிற்கு காசு திரட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சிங்கிள் சாயாவிற்கு சிங்கியடிப்பதாக இண்டர்நெட்டில் ஓலமிட்டு/காசு கேட்டு பைஸ்டார் ஓட்டலில் பிரெஞ்சு போத்தல் ஒயின் குடிக்கும் கைமா நிலையில் ஆசிரியர். புத்தகத்தின் மொத்த பக்கங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. விலை சுமார் ரூ. 250.99 அமெரிக்காவில் $99.99/- உள்ளூர் வரிகள் தனி)
சமீபத்தில் நாலைந்து நாட்களாக கடுமையாக முயன்று தமிழில் நான் படித்து முடித்த Draft நாவல் கில்மாவின் ரெண்டாம் கெட்டானின் கதை. சில கேள்விகள் எனக்குள்ளும் தவிர்க்க முடியாமல் எழுந்தன. ஆனால் "இந்தப் பொஸ்தகம் குறித்து எழக்கூடிய கேள்விகளுக்குப் பதில் எதையும் சொல்லக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்" (பக் 9/பத்தி 8/வரி 5) என்று 'மௌனம் கொலைதல்' என்று தலைப்பிடப்பட்ட தனது முன்னுரையில் கூறுகிறார் கில்மா. போகட்டும். அவர் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. எனது பொன்னான வாசகர்களுடன் கேள்விகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று அவர் தடை விதிக்கவில்லையே! எனவே அவற்றை இங்கே உங்களோடு உரிமையுடன் பகிர்ந்துகொள்கிறேன். இப்பதிவுக்குண்டான கேள்விகளை நீங்கள் என்னிடம் கேட்கக்கூடாதென்றும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
தொடக்க மற்றும் நடுநிலை ஆண்கள் மற்றும் அவரைச் சுற்றிய பெண்களால் நிரப்பப்பட்ட ஒரு ரெண்டும் கெட்டான் உலகத்தை கடை விரிக்கிறது நாவல். அவ்வப்போது கடைநிலை ஆண்களும் பெண்களும் வந்து போகிறார்கள். இவர்களை விட்டால் வேறு கதாபாத்திரங்களே இல்லையா என்ற கேள்விக்கு பதிலும் உண்டு. கதை நடப்பது ஒரு கிராமம் (என்பதாகத்தான் தெரிகிறது). எனவே எல்லைக்கல், அடிபட்ட நாய், நேர்ந்துவிடப்பட்ட காளை மற்றும் கிடா போன்ற உப-பாத்திரங்களும் உலா வருகின்றன. இந்நாவலில் நான் தேடியவரை ஆறு குடும்பங்கள், அக்குடும்பங்களின் அங்கத்தினர்களாக சில கணவர்கள், அவர்களின் மனைவிகள், சகோதர சகோதரிகள், குழந்தைகள் என கிட்டத்தட்ட 142 மெகா சீரியலாக பாத்திரங்களையும், உம்மாச்சி, கருப்பட்டி, சீயக்கா, மாசிலாக்கா, மசக்கை மருத்துவச்சி போன்ற நாயக அந்தஸ்து இல்லாத சில பாத்திரங்களையும் சுற்றி நடக்கிறது இந்த நாவலின் கதை.
நாவலென்றால் கதை என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒன்று இருக்கவேண்டுமல்லவா? அது கிஞ்சித்தும் இல்லை. ஒருவேளை இது பின்நவீனத்துவ எழுத்தின் தன்மையாக இருக்கலாம். முன்நவீனத்தில் கதை விடுவது எளிது. வயதுக்கு வராத அல்லது வயதுக்கு வந்து கொஞ்ச காலமே ஆன சின்னப் பெண்களை (தொடக்க மற்றும் நடுநிலை வயது கொண்ட மகளிரை) அடாவடித்தனமாக, மனைவிகளை ம(மி)திக்காத குடும்பத் தலைவர்களாக இருக்கும் ஆண்கள், அதாவது தகப்பன்மார்கள், மகளின் ஜீன்ஸ்/செல்போனுக்குத் தடை விதிப்பது, தேவையில்லாத இடத்தில் அ·தாவது உடல் உறுப்புகளில் அணிகலன்/ஆபரணம் அணிய (?) மறுப்பது, இதையொட்டி நிகழும் நிகழ்வுகள், பதிவுகள், நடப்புகள், ப்ளா ப்ளா வென்று பதிவு செய்கிறது இந்த நாவல்.
ஒரு உதாரணம் : அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பின்னரே ஜூலிக்கு ஜீன்ஸ் அணியும் ஆசையே வந்தது. (பக். 96'ல் வரலாம்).
இந்த கதையினூடே இரண்டு விதமான பதிவுகளைப் பார்க்க முடிகிறது. அவற்றை கில்மா ஸ்பெஷல் என்று சொல்லலாம்: 1. போலித்தனமான ரெண்டாம் கெட்டானின் முதல் குரல். பின்நவீனத்துவம் தந்த துணிச்சல் என்ற போர்வையில் வெளிப்படுத்தப்படும் போலிகளும் இதில் அடக்கம். எடுத்துக்காட்டாக கால் கழுவி வந்தான் என்று குழூஉக்குறியாகவோ இடக்கரடக்கலாகவோ இன்றி *ண்டி கழுவினான் (பக். 111) என்று எழுதும்போது பின்'நவீனத்துவத்தின் முற்போக்கை ஆசிரியர் வெளிப்படுத்தியதாய் மாஞ்சில் மாடன் புல்லரிக்கின்றார் (பக். ஆ) 2. போலித்தனமான ரெண்டாம் கெட்டானின் இரண்டாம் குரல். முன்நவீனத்துவம் தந்த துணிச்சல் என்ற ஜமுக்காளத்தில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதம் எனலாம். எடுத்துக்காட்டாக பக் 222'ல் ஒரு வசனம் வருகின்றது. "என்னடி உன் மாமா எப்பவும் விறைப்பாவே இருக்குதே. என்ன மிலிட்டரியிலே சேரப் போவுதா?" என்பதில் முன்'நவீனத்துவம் பிற்போக்காக கையாளப்படுகின்றது. 'ரெண்டும் கெட்டானின் கதை' என்பதால் இந்த இரண்டையும் ரெண்டுக்கு ஒன்றாக (Two in One) என்று வைத்துக்கொள்ளலாம்.
முதலில் பெண்களின் பாத்திரப்படைப்புக்கு வருவோம். ஜூலியா (கிராமத்துல ஜூலியாவா? ஏம்ப்பா ஆடு மேய்க்கும் பாரதிராஜா பையன் ஜீன்ஸ் போடலாமா?) என்ற சின்னப்பெண்ணின் செயற்கை ரசனையில் தொடங்கி நெயில் பாலீஷ் போடுவதாக முடிகின்றது. அவரை விட வயதில் மூத்தவளாக போலியா, ஜூலியாவின் உயிர்த்தோழி. இந்த இருவரும் ஸ்கிப்பிங் ஆடுகின்றார்கள். நொண்டி அடிக்கின்றார்கள். குலை குலையா மந்திரிக்கா பாடுகின்றார்கள். அப்பாவிற்கு தெரியாமல் இரண்டாம் ஆட்டம் பார்க்கின்றார்கள். சமீபத்தில் வெளியான அ..ஆ என்ற படத்தை ஆதிவேலன் என்ற தியேட்டரில் மணல் குமித்து பார்த்து பரவசம் அடைகின்றார்கள். 'அந்த 'அஆ' படத்துக்கா போயிட்டு வர்றே நாயே' என்று அவளை அவள் அம்மா கண்டிக்கவும் செய்கிறாள்.
ஆதிவேலன் என்ற டப்பா தியேட்டரில் அஆ புதுப்படமாம்.இது வலிந்து செய்யப்பட்ட ஒரு பதிவாகும்.
இதன் மூலம் கில்மா சொல்ல விரும்புவது என்ன? ஆண்கள் அஆ படம் முதல் ஆட்டத்தில் பார்க்கலாம் என்றால் பெண்கள் இரண்டாம் ஆட்டம் பார்க்கலாம் என்றா? பலான படங்களே பார்ப்பது எந்த வகையிலும் மன ஆரோக்கியத்தை பாதிக்காது, மாறாக வலுப்படுத்தவே செய்யும், எனவே அதை அனுமதிக்க வேண்டும் என்று லேகிய வைத்தியரிஸத்தை நியாயப்படுத்துகின்றாரா? எப்படி இருப்பினும் இது நடப்பு கற்பனைகளில் காணமுடியாத ஒரு நிஜ நிகழ்வு.
ஆனால் அஆ படம் என்று தெரியாமல்தான் ஜூலியா சென்றதாக ஒரு சின்ன சப்பைக் கட்டும் உள்ளது. ஆனால் எந்த இடத்திலும் அப்படிச் சென்றது தவறு என்பதான குறிப்பு கிடையாது. சரி, தெரியாமல் இரண்டாம் ஆட்டம் போனதாகவே வைத்துக்கொள்வோம். ஆனால் சின்னப் பெண்கள், காலம் புத்தி கெட்ட காலத்தில் இரண்டாம் ஆட்டம் படத்துக்குப் போவது நடக்காத ஒன்று. ஆனால் இந்த ஜூலியாவுக்கு திருட்டுத்தனமாக சினிமா பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே நியூ படம் பார்த்ததாகவும் கில்மா குறிப்பிடுகின்றார். பார்க்க அநெக்ஸ் A (பக். 981).
இதுமட்டுமா? ஜூலியாவிற்கு திருமணமானபோது சொந்தக்காரப் பெண்களில் சில விபரமானதுகள் ரகஸியமாக இண்டியா டுடே சர்வேயைக் காட்டுகின்றார்கள். மனப்பிறள்வை வெளிப்படுத்தும் இது போன்ற புத்தகங்களை ஜூலியாவிடம் கொடுத்து அனுப்புகிறார்கள். அதில் ஒன்றை 'சுட்டு' ஜீலியா போலியாவிடம் காண்பிக்கிறாள்(பக். 386). புது மணப்பெண் ஜூலியாவிற்கு இண்டியா டுடே தேவையா?
சரி, அந்தக் கிராமத்து பெண்கள் பொதுவாக எப்படிப்பட்டவர்கள்?
ஜூலியாவின் கணவன் நியோ (ஏம்ப்பா மேட்ரிக்ஸ் படத்தை டப் பண்ணீங்க?). ஆனால் அவளுக்கு அஜீத்தோடு தொடுப்பு. அஜீத் அம்மாவுக்கு ரெண்டு புருஷன். முறித்துக் கொண்ட முத்தம்மாவிற்கு யார் மூலமாகவோ குழந்தை. பெரியவூட்டம்மா ஒரு கிராமத்து மருத்துவச்சி மூலம் கருக்கலைப்புக்கு ஏற்பாடு செய்கிறாள். என்ன தலை சுற்றுகின்றதா?
நியோ பாண்டி ஆடுகின்றான். ஜூலியா சொப்பு வைத்து விளையாடுகின்றாள் (பக். 269). சபாஷ். கணவன் நியோ பாண்டியானால் ஜூலியா சொப்பு வைக்கின்றாள். தக்க பதிலடி. அடடா, மொடர்ன் பொண்ணு இவளன்றோ! ஓ இதுதான் நியோ'நார்ஸிஸமோ?
இன்னும் இதுபோல் பொருந்தாத முரண்நகைகள் ஏராளம்.
கதை முச்சூடும் பல பெண்கள் விளையாட்டுப் பிள்ளைகளாகவே இருப்பதை சரிக்கட்டும் ஒரு முயற்சியாகவே இதை நாம் பார்க்க முடிகிறது.
பெண்களைப் பற்றிய புக் இது. சப்பை மேட்டருக்கு மல்லுக் கட்டுகிறது ஸ்ரீனிவாசுலு அரங்கநல்லூராரின் முன்னுரை. அவர் சொல்கிறார். "திருமண அறிவு, குடும்ப கட்டமைப்பு ஆகியவை எந்த அளவு இறுக்கமானவையாக உள்ளனவோ அந்த அளவு வாயுப் பிரச்சினையை அதிகரிக்கச் செய்கின்றன" (பக் 5). குடும்பம் கட்டுக்கோப்பாக இல்லாவிட்டால் வாயுப் பிரச்சினை வருமென்ற இந்த 'தர்க்க முடிவை' ஒத்துக்கொள்வீர்களா?
இன்னும் எழுத இலக்கணப் பிழைகள் மலிந்த தமிழில் கரிபாவின் கடிதம், ஸேக்ஸ்BEER, அயோக்கிய ஆண்கள், வேஷ்டி/சட்டை/கோட்டு/சூட்டு, பச்சை வசனங்கள், மர்ம உறுப்பு கவிதைகள், மதம் ப்ளா ப்ளா எல்லாமுள்ளது. அடுத்த எபிசோடில் ம(க)ற்றவை...
பி.கு 1: எத்தனையோ பக்கங்களுக்கு இருக்கும் இந்நாவலில் எனது சொந்த அனுபவத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஓரெழுத்து கூட இல்லை எனலாம். இலக்கியத்தின் சுவை வேண்டுமானால் படிக்கலாம். சல்லியடித்தல், மட்டையடித்தல், கும்மியடித்தல், சம்முதல் விரவியிருக்கின்றன என்றால் மிகையில்லை. மற்றபடி எனது நோக்கம் இப்படி ஆழமான இலக்கியம் மட்டுமே. எவரெஸ்டின் உச்சியில் கில்மாவை வைக்க ஸ்ரீக்கென்ன காலத்தின் கட்டாயமோ? பிரியில...
பி.கு. 2: (மூச்சு வாங்கியபடி) பின்ன முக்கி'யமான பதிவில்லையா இது?
Wednesday, October 12, 2005
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
யப்பா..
குத்தம்மா குத்து. ஏகப்பட்ட நெல்குத்து போல இருக்கே.
ஏதோ இந்த மாடர்ன் கதை மேட்ரிக்ஸ் மாதிரி புரியலை என்றாலும், படிக்க ரொம்ப கில்மாவாதான் கீது.. படிச்சு நிறைய பேருக்கு வாயுத்தொல்லை வாராம இருந்தால் சரி !
அஜீத்துக்கும், மேட்ரிக்ஸ¤க்கும் கூட சம்பந்தம் இருக்கா ?
எந்த எலையில எந்த சாப்பாடுன்னு புரியறத்துக்குள்ள ஒரு வழி ஆயிடும்!
இக்கட சூடு கூமுட்டை வாசம்
குசும்பு கூடுதுடோய்...
Kusumban
Haa Haaaa Haaaa. Aranganalloor Raaman Srinivasulu Gaaruvin vaayup pirachinaiyai niceaa kondu sethuteengale!!! Padichittu erimalai theevil vayitruk kaduppu varappovuthu. You are now fit to write zero zero seven degree. Excellent satire. Arivum Azhagum Illathavanukku oru copy anuppunga.
//லேகிய வைத்தியரிஸத்தை//
பேடண்ட் பண்ணிடுங்கோ குஷூம்பரே... அதாவது கோபிரைட்
அக்காங்.
இது சம்பந்தமாக மிகவும் ஆழமாக படிக்க வேண்டி இருப்பதால் கருத்து சொல்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறேன்.
Original Kumutaiyai unga KUmuttai thUkkuthu Nania
படித்தேன், ரசித்தேன், சொடுக்கினேன் :)
முதலில் தமிழின் ஏகபோக 'பின்நவீனத்துவ' குத்தகைதாரரான சாருவை பற்றிய பகடியோன்னு நெனச்சேன். அப்புறம் கில்மா.... அ ஆ... முட்டை.. , ஓ அட இது அதுவா... ஜாமங்களின் லொள்ளுன்னு புடிபட்டது..
மேக்கொண்டு இங்கண பாருங்க....
http://www.tamiloviam.com/rumi/page.asp?ID=48&fldrID=1
Oy Anony,
U Above,
I had already given the link above
MukamUddaiyan.
கூகூர் குசும்பா,
ரசித்தேன்.
மிகவும் பொருத்தமான தலைப்பு. (நாவலுக்கு அல்ல, பதிவிற்கு.)
குசுமுட்டை
சின்னவரே, குத்தடி குத்தடி ஜைனக்கா குனிஞ்சு குத்தடி ஜைனக்கா கேள்விப்பட்டிருக்கீயளா? அடுத்து பந்தலிலே பாவக்காதான். வெயிட்டீஸ் பண்ணுங்கோ!
முகமூடி ஸார்: மேலோட்ட கூமுட்டைக்கே இப்பிடி கலங்கினா அடிமண்டிக்கு என்ன பண்ணுவேள்? :-)
வாய்சு,
கொரலுக்கு டாங்ஸுப்பா! இப்பிடி ஓப்பனா பின்னூட்டம் வுட்டா சில ர(ந)சிகர்கள் உங்க பதிவுக்கு பின்னூட்டம் வுடமாட்டாங்க ஸார்! அது யார் யாருன்னு உங்களுக்கே புரியணுமே :-)
அனானிகளுக்கு நன்றிகள்! சரி இனி அநானி பின்னூட்டங்களாகவே கொடுங்கள்... அதிக அநானி பின்னூட்டங்களுக்கு பரிசு கொடுத்திட்டாப் போச்சி!!!!
அண்ணே நானும் குத்திட்டேன்
pudinga namma kuthu
பயமாக்கீது சாமிகளா... பாத்துக் குத்துங்கப்பா... புஸ் புஸ்'ன்னு சவுண்ட் கேக்குது :-)
Hi,
This seems to be nice.
Massu.
hehehehe
கிண்டல்ரசிக்கும்படி இருந்தது
நாகூர் ரூமி
நன்றி ரூமி ஸாரே!
:-)
Post a Comment