Wednesday, October 19, 2005

காசி/தமிழ்மண நிர்வாகிகளுக்கு

எனது இணைய குசும்பன் பதிவு தமிழ்மணத் திரட்டியில் கடந்த 7 நாட்களில் எழுதப்பட்டவற்றில் சிறந்த 25 - வாசகர் பரிந்துரை- பகுதி, மறுமொழியப்பட்ட முந்தைய நாள் ஆக்கங்கள் பகுதி மற்றும் இன்று புதிதாய் எழுதப்பட்டவை 20 நிமிடத்துக்கு ஒருமுறை திரட்டப்படுகிறது பகுதிகளிலிருந்து திடீரென்று காணாமல் போய்விட்டது. முகமூடி என்பவர் மன்றத்தில் காணவில்லை : குசும்பன் என்று எழுப்பிய கேள்விக்கு தற்சமயம் வரை காசி & கோ'விடமிருந்து பொறுப்பான பதிலில்லை. எனது பதிவில் பின்னூட்டமாக திருமிகு. துளசிகோபால் "உங்களைத் தூக்கிட்டாங்களாமே உண்மையா?" என்று வினவினார். அப்போதுதான் காசியின் "ஒரு அறிவிப்பு" பதிவினைப் பார்த்தேன். அதன் பின்னூட்டங்களையும் படித்தேன். யாருடய பதிவாவது கவனக்குறைவாக நீக்கப்பட்டிருப்பதாக எண்ணினால் அதை இங்கேயே அல்லது மன்றத்திலோ தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று காசி அறிவிப்பு செய்துள்ளார். தமிழ்மண மன்றத்திலே குசும்பனைக் காணோமென்று முகமூடி என்ற பதிவில் எழுதுபவர் ஏற்கெனவே பதிந்து விட்டார். எனவே எனது கருத்துகளை எனது வலைப்பூவிலேயே பதிகின்றேன் (தமிழ்மணத்தால் திரட்டப்படாவிடினும்). இப்பதிவே பின்னூட்டமாய் தொடுப்புடன் காசியின் ஓர் அறிவிப்பு பதிவிலும் வைக்கப்படும்.

முகமூடியின் கேள்வி பதிந்து 14 மணி நேரமாகிவிட்டது. இன்னும் 10 மணி நேரம் காசி & குழுவினர்க்கு அவகாசம் தருகின்றேன். எனது பதிவு நீக்கப்பட்டுவிட்டதா என்பதையும், அதற்கான காரணிகளையும் தெரியப்படுத்துமாறு வேண்டிக்கொள்கின்றேன். இன்றிரவு 19 Oct 05 10:30 EST (8:00 PM IST) வரை எனக்கு பதில் கிட்டாவிடில் (மின்னஞ்சல் முகவரி: podankho@yahoo.com) எனது அடுத்த நடவடிக்கை இருக்குமென்பதையும் அறியத்தருகின்றேன்.

நன்றி,
இணையகுசும்பன்.

9 comments:

Anonymous said...

I totally disagree with Kasi's inclination to not reveal the reasons for removal and yet call ThamizManam as the representative of all Tamil blogs.

The step you have taken is in the right direction. Readers like me would still come to your blog, be it collected by Thamizmanam or not.

Good luck and keep blogging!

Anonymous said...

why do ou say it is removed. I can access it even now an dcomment.

Anonymous said...

you were creating a nuisance to bloggers.so u were kicked out.your sense of humor was sickening and you tried to spread rumors, false information about other bloggers.
So they kicked you out.Cry baby cry.

Anonymous said...

what can you do against Kasi or tamilmananam. you better hehave properly in future.

குசும்பன் said...

//you were creating a nuisance to bloggers.so u were kicked out.your sense of humor was sickening and you tried to spread rumors, false information about other bloggers.
So they kicked you out.Cry baby cry. //

Dear Anony,

1. What nuisance I created? Elaborate.
2. Speard rumors/false information... Please prove it
3. Cry Baby Cry You're pathetic. Look who cries OR will CRY.

Dude, I welcome anonymous comments and do not collect IP address. Try to justify yours if you CAN.

OtherWISE keep COOL :-)

Ooooh by the way is it U BRO?

Anonymous said...

தமிழ்மணத்திலிருந்து தூக்கப்பட்டது ஒரு சர்வாதிகார முடிவு. காரணம் இதுவோ
http://kusumban.blogspot.com/2005/10/blog-post_16.html

Anonymous said...

அன்புள்ள குசும்பன்

உங்களது வெகு நாளைய வாசகன். உங்களது புத்தி கூர்மையான அங்கதம் ரசிக்கத் தகுந்தவை பாராட்டுக்குரியவை. சுய அறிவுள்ள எவரும், புத்திசுவாதீனமுள்ள யாரும் இதை ஒரு சட்டயராக மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். நீங்கள் காசி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தை கிண்டல் செய்து எழுதிய கிண்டலே காசியின் இந்த முடிவுக்குக் காரணம் என்று தெரிகிறது. நீங்கள் எழுதிய கிண்டலுடன் நான் முற்றிலும் உடன் படுகிறேன். அவர் தன்னை தமிழில் எழுதும் அனைத்து ப்ளாகர்கள் சார்ப்பாக அறிமுகப் படுத்திக் கொண்டது ஃப்ராடுத்தனமான ஒரு காரியமாகும். யார் இவருக்கு அந்த தகுதியைக் கொடுத்தது? இங்கு பதிந்து கொள்ளாத தமிழ் வலைப்பதிவர்கள் இருக்கலாம் அல்லவா? அப்படியே இங்கு பதிந்தவர்கள் எல்லோரும் இவருடன் உடன் படுகிறவர்களா? அல்லது இங்கு பதிந்துள்ளவர்கள் எல்லோருக்கும் இவர் தலைவரா? யார் இவர்? என்ன தகுதி இருக்கிறது? ரவுடிகளையும், இந்திய இறையாண்மைக்கு எதிராக எழுதும் தேசத்துரோகிகளையும், தீவிரவாதத்தை ஆதரிக்கும் சக்திகளையும், ஜாதி துவேஷத்தைப் பரப்பும் சமூக விரோதிகளையும், ஜட்டிக்குள் கையை விட்டுப் பாரு என்று எழுதுபவனையும், ஆபாச பதிவுகளைப் போடுபவனையும் துணைக்கு வைத்துக் கொண்டு இவர் ஜனாதிபதிக்கு எழுதுவாராம் அதைக் கிண்டல் செய்தால் நீக்குவாராம், என்னவொரு அயோக்கியத்தனம்? காசியை ஒரு ஜென்டில் மேன் என்று பலரும் நினைத்து அமைதி காக்கின்றனர். அவர் எடுத்த முடிவு சகிப்புத் தன்மையில்லாததும், அநியாயமானதும், சர்வாதிகாரமானதும் ஆகும். அது நிச்சயமாக ஒரு ஜென்டில்மானின் செயல் அல்ல. காழ்ப்புணர்வுடன் கூடிய ஒரு செயல். அவரது உண்மையான முகத்தை இந்த நடவடிக்கைத் துகிலுரித்துக் காட்டி விட்டது.

உங்கள் பதிவு தமிழ்க் கோமணத்தில் இல்லையென்றாலும் எனது ஃபேவரைட்டில் வைத்துத் தொடர்ந்து படிப்பேன், துணிவுடன் எழுதுங்கள்.

Anonymous said...

அன்புள்ள குசும்பன்,

பணம் செலவழித்த ஒரே காரணத்தினாலேயே காசி தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவினை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பின் எதற்கு அன்பு, பத்ரி, மதி, மீனாக்ஸ் போன்றோரை உதவியாளர்களாக வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

தளம் நடத்த காசு வேண்டும் என்று கேட்டால் நிறையபேர் குச்சியில் கட்டி நீட்டத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் கேட்கவும் முடியாமல் கேட்கமுடியாமல் இருக்கவும் மனதில்லாமல் தன் பதிவில் காசி வலைப்பதிவர்களைக் கிண்டல் செய்திருக்கிறார். காசு கொடுத்தவர்கள் மட்டுமெ திர்க் கேள்விகள் கேளுங்கள் என்பது போல இருக்கிறது அந்த பதிவு.

உங்கள் பதிவு மற்றவர்களைக் கிண்டல் செய்தாலும் ஆப்பு அளவுக்கு ஓவர் கிண்டல் இல்லை. மென்மையாக ரசிக்கும்படி சிரிக்கும்படி இருந்தது என்றால் அது மிகையன்று.

சித்தூர்க்காரன் காசு வேண்டுமானால் இனிமேல் உண்டியல் குலுக்கட்டும். நீங்கள் கவலைப் படாதீர்கள். அவன் கிடக்கிறான் கேணப்பயல்; விரைவில் நானொறு திரட்டி ஆரம்பித்து உங்களை அங்கு சேர்க்கிறேன்.

இது உண்மை.

Anonymous said...

Dear Kusumban

Since Kaasi announced that it was his prerogative and decision to decide what to allow and what not to allow in Tamil Komanam, it was made clear that he allows the blogs that he is approval of or in agreement with only. So henceforth any anti Indian posts that will appear in Tamil Komanam will be duely reported to Indian central and state intelligence agencies including the president of India (these information mails will be certainly read by him) that work on anti-indian stooges. Let him answer for their questions in future. As a patriotic Indian you know what I mean here.

Jai Hind