இந்த ஆண்டு சித்திரைத் திங்களில் தமிழ் வலைப்பதிவுகளின் சூழ்நிலை பற்றியும், பண்பாளர், பகட்டில்லாதவர், ஏழைப்பங்காளன், தொடுப்புகளைப் பேணுவதில் ஆர்வம் காட்டுபவர், தமிழில் ஏதோ எழுதுபவர் என்ற வகையில், அவரையும் வலைப்பதிக்க அழைத்து ஒரு மடல் எழுதினேன். இன்றுவரை மடல் கிடைத்ததற்கான அக்நாலட்ஜ்மெண்ட்டோ, அவரின் பதிலோ கிடைக்கவில்லை. மடலில் கொஞ்சம் ஹோதாவும், கொஞ்சம் என் வலைபதிவைப் பற்றிய உதாரும், ஒருவரி விளம்பரவாசமும் தெரியலாம். இருப்பினும் தனது அழகான அந்தரங்க காரியதரிசியை (ஙௌக்கா மக்கா தமிழு) விட்டுப் பதில் எழுதச்சொல்லக்கூட முடியாமல் போகும் அளவுக்கு இது ஒதுக்கத்தக்கதா என்று தெரியவில்லை. என்னமோ போப்பா! ரிமைண்டர் போட்டாலும் அவர் கண்டுக்கின மாதிரி தெர்ல. அவரு பிஸியா இல்லை அந்தரங்க காரியதரிசியை பிஸியா இல்லை இருவரும் சேந்து பிஸியா (!) தெரியவில்லை. போனாப் போவுதுன்னு பொதுவுல போடுறேன். தயவு செஞ்சு நீங்களாவது படிச்சிட்டு பின்னூட்டமாவது போடுங்க !!! நான் அனுப்பிய முகவரி: podankho@gmail.com
எழுதிய மடலை இங்கே கொடுக்கிறேன் ( (நம்ம தலீவருக்கு இங்லிபீஸ¤ தெரியாத காரணத்தால் தமிழில் மட்டுமே மடல்)
----------------------------------------------------------------------------------------------
அன்புள்ள மேதகு குசும்புத்தலைவர் திரு. சின்னமூடி சிங்காரம் அவர்களுக்கு,
இந்திய ஹோகனேக்கல் நீர்விழ்ச்சி பகுதியில் தமிழ்நாடா இல்லை கர்நாடகமா என்று அனைவரும் அடித்துக் கொல்லும் பகுதியில் சேர்ந்த என் பெயர் கர்னாடிக் டமாசு. ஷெல்லமாய் டமாஸ். பணிநிமித்தமாக அமெரிக்காவில் தற்போழுது வசிக்கிறேன். 784க்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பதிவாளர்கள் (bloggers) சமுதாயத்தின் ஒரு கடைப்'பிரதிநிதியாக இந்த மடலை எழுதுகிறேன்.
'வலைப்பதிவுகள்'ன்னா இன்னா மாமேன்னு நீங்க Kக்குறது நேக்கு கேக்குது. ஒண்ணுமில்லை ஸாரே! ஆபீஸ¤ல போரடிச்சா வேலைங்ற போர்வையில உங்களோட கருத்தை நெட்லே போடலாம். அதுவும் தமிழ்ல. இதுல என்னா லாபம்ன்னு கேப்பீயளே? ஒண்ணு நமக்கு ஒரு வாசகர் வட்டம் உண்டாகும். ஆப்புறம் நம்மை மேரியே வேலை வெட்டி இல்லாத கஸ¤மாலங்கோ கண்ணுல விளக்கெண்ணை ஊத்தி, லென்ஸ் போட்டு பேனைப் பெருமாளாக்கி ஷங்கரு போல டகால்பாஜி வேலை காட்டும். ஆப்புறம் என்னா மாமே நீ பெர்ய ஆளாயிடுவ! (இப்பவும் நீ பெர்ய மன்ஷன் தான். ஆனா என் மெயிலுக்கென்ன பதில்?). கருத்துப் பரிமாற்றம் பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று இணையத்தில் புரட்சி நடாத்தி வருகின்றது. வா ராசா வந்து பாரு.
அப்புறம் இந்த கூகிள்'ன்னு ஒரு தேடுபொறி இருக்கு. பொறின்னா உடனே பயப்படவேண்டாம். அதோட ஆட்ஸ் அதாம்ப்பா விளம்பரம் போட்டா மாசத்துக்கு ஒரு பென்னியாவது உத்திரவாதம். பேங்க் பேலன்ஸ் சும்மா சுகுற்றா ஏறும் மாமே.
இன்னிக்கு 12 லட்சம் வலைப்பதிவுகள் ஆங்கிலத்தில் பீட்டர் வுடுறாங்கங்ணா. நம்ம இந்திய பாஷைகளில் கணிமை(Computing) இன்னும் வளர்ச்சி அடையாத நிலையில் ஹிந்தி உள்பட மற்ற இந்திய மொழிகளில் சும்மா வெரலை வுட்டு (உங்களால முடியாதுன்னாலும்) எண்ணக்கூடியவையாகவே வலைப்பதிவுகள் எழுதப்படுகின்றன. தமிழில் வியக்கத்தக்க வகையில் இன்றுவரை சுமார் 784 வலைப்பதிவுகள் தோன்றி சமூகவியல், அறிவியல், இலக்கியம், அரசியல், வணிகம், விளையாட்டு, கணினியியல், மனையியல், பொழுதுபோக்கு என்ற பலவகைக் கருத்துக்களங்களில் கலாய்த்து தினமும் 25 புது விஷயங்களாவது எழுதப்படுகின்றன. உங்க வேலை என்னா கேட்டகிரின்னு எமது நிர்வாகி முடி(!)வெடுப்பார்.
சரி... எங்கன போயி இன்னாத்த கண்டுக்கிடறதுன்னு கொயப்பம் வரத்தான் செய்யும். அதுக்கும் ஒரு வழி பண்ணிட்டோம்ணா. அதுதான் வழிவாசல் சேச்சே வலைவாசல் (web portal). செய்தியோடைன்னு ஒண்ணு இருக்கு நைனா. அதுல கூட பாலிடிக்ஸ்தாங்ணா. RSS இருக்குது. நம்ம விஜேய்காந்த் கூட தேமுதிக ஓடை கொடுக்கப் போவதா வதந்திங்ணா. இந்த ஓடையெல்லாம் புட்ச்சி இருபது மணித்துளிக்கொருமுறை புச்சா ஆராரு என்னா கீசியிருக்கான்னு நம்ம வலைவாசல் வழி காமிக்குதுங்ணா. அந்த தலத்தின் முகவரி: http://www.thamizkushboo.com/
இன்னிக்கு பெரும் சிந்தனையாளர்கள், அரசியல், சமூக, அறிவியலார்கள் தங்கள் சிந்தனைகளை நேரடியாக போட்டுத்தாக்க வலைப்பதிவுகளை திறன்மிக்க கருவியாகப் பயன்படுத்திவருகிறார்கள். சேம்பிளுக்கு நெட்ல தேடுங்ணா. நேக்கு டைம் இல்லே.
ஆங்கிலத்தோடு போட்டி போடமுடியாத இந்திய மொழிகளில் (ஆமாம் இங்லிபீஸ¤ம் இந்திய மொழிகளில் ஒன்றில்லையா?) கணிமை இன்னும் சும்மா ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. பயன்பாடு வளரவளரவே பாலிடிக்ஸ் வளரும். இப்பண்பாட்டினை ஒரு கட்சியோ, அரசோ/சில குசும்பர்களோ மட்டும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. அது ஒரு பரவலான பன்முகப்பட்ட கலாச்சார சார்பற்ற நிகழ்வாக இருக்கவேண்டும். இந்தக் குறையை நிவர்த்திக்க வலைப்பதிவுகள் ஒரு மிகமிக இன்றியமையாத சாதனம் என்றால் அது நகையில்லை.
சகலகலாவல்லரும், வெடி வித்தகரும், போட்டுத் தாக்கும் வலைஞரும், துண்டு போடாத கலைஞருமான தங்களுக்கு இந்த முயற்சிகளை எடுத்துக்காட்டவே இந்த மடல். கட்டாயம் நீங்களும் ஒரு நாள் ஒரு வலைப்பதிவைத் துவக்கி உங்களை வெடிவெள்ளியாகப் பார்க்கும் பலகோடி இளைஞர்களுடன் நேரடியான கருத்துப் பரிமாற்றம் செய்வீர்கள் என்று அசையாத நம்பிக்கை எனக்கு உண்டு. அத்தகைய தருணத்தில் தமிழிலும் ஒரு வலைப்பதிவைத் துவக்கி தமிழில் எங்களுடன் படங்காட்டாது தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டால் எங்கள் மகிழ்ச்சிக்கு அளவேது! பின்னூட்டங்களுக்கும், ஓட்டுக்கும் நான் கியாரண்டி. மீரு தொரகா ரண்டி பாபு என்று சுந்தரத் தெலுங்கினில் வரவழைத்து டாங்ஸ் மாமேன்னு சென்னைத் தமிழில் விடை பெறுகின்றேன்.
இந்த முயற்சிகளில் ஈடுபடும் வலைப்பதிவாளர்களுக்கு தாங்கள் ஏதேனும் பிளாஷாய் செய்தி கொடுத்தால் மிகவும் மகிழ்வோம்.
மிக்க அன்புடன்,
-கர்னாடிக் டமாஸ¤.
http://www.thamizkushboo.com/
Present address:
xxx (removed)
Web(!)ster, NY 14580
USA
Permanent address:
xxx (removed)
ஹோகனெக்கல் 6XXXXX.
பி.கு. கரீக்டான ஐபீ மற்றும் அற்றஸ் வேண்டுமெண்டால் மசக்கைசூசட்ஸ் செல்ல வேண்டாம். மோப்ப ஷக்தியில் ஏதோ பெரிய கோளாறாம் !!!
Sunday, October 16, 2005
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
நான் கூட podankho@gmail.com பலமுறை மயில் அனுப்பியும் பதில் வரவே இல்லை.
என் போலவே நீங்களும் பதில் வரரமல் ஏமாந்து இருப்பதைக்கண்டு மிக்க மகிழ்ச்சி.
http://www.thamizkushboo.com என்றென்றும் மணம் வீச வாழ்த்துக்கள்.
தமிழ் குஷ்பூவா? அட்றா அட்றா அட்றா!! இதுதான்யா ஆன்டி-கிளைமாக்ஸ். Aunty இல்லைங்க, anti-climax
முட்டை சைவமா? அசைமா?
கோழிமுட்டை சைவமா? அசைமா? என்ற சர்ச்சை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. உயிருள்ள கோழியின் வயிற்றில் இருந்து வருவதால் அசைவம் என்று சிலர் சொல்கின்றனர்.
சைவமாக இருந்து கொண்டு முட்டை சாப்பிடும் சிலர் அப்படியானால் பாலும் அசைவமாகத்தானே இருக்க வேண்டும். அதுவும் உயிருள்ள மாட்டின் மடியிலிருந்து தானே கறக்கப்படுகிறது. அதை யாரும் அசைவம் என்று சொல்வதில்லையே! அதைப்போல் தான் முட்டையும் சைவமே! என்று சொல்லி வந்தனர்.
இந்த சர்ச்சை வழக்காக மாறி சட்டீஸ்கர் மாநில உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதனை விசாரித்த ஆனந்த குமார் பட்நாயக், திலிப் ராங் சாகிப் தேஷ்முக் ஆகியோரைக் கொண்ட டிவிசன் பெஞ்ச் "'முட்டை அசைவமே"' என்று தீர்ப்பளித்து, பொது இடங்களில் முட்டை விற்கக் கூடாது. இறைச்சி விற்பதற்கு லைசென்ஸ் கொடுப்பது போல் முட்டை விற்பதற்கும் உரிய முறையில் லைசென்ஸ் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பொது இடங்களில் பீடி விற்கலாம், சிகரெட் விற்கலாம், பான்பராக் விற்கலாம், மூக்குப் பொடி விற்கலாம். என் மது வகைகளைக் கூட விற்கலாம். ஆனால், முட்டை மட்டும் விற்கக் கூடாது. முட்டை மனித உடலுக்குத் நல்லது. ஆனால், புகையிலை பொருட்களும், மது வகைகளும் மனித உடலுக்கு தீங்கானது.
இப்படி மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை பொது ஆடங்களில் தாராளமாக விற்க அனுமதித்து விட்டு முட்டைக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பதை விநோதம் என்று சொல்வதா? அல்லது விபரீதம் என்று சொல்வதா?
புலியின் வயிறு சைவத்தை ஏற்றுக் கொள்ளாது. முயலின் வயிறு அசைவத்தை ஏற்றுக் கொள்ளாது. ஆனால் மனிதனின் வயிறு இரண்டையும் ஏற்றுக் கொள்ளும். சைவத்தையும், அசைவத்தையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மனிதனின் வயிற்றை இறைவன் இயற்கையாய் படைத்திருக்க இயற்கைக்கு மாற்றமாய் முட்டையை உதாசீனப்படுத்துவது இறைவனின் அருளை உதாசீனப்படுத்துவதாகும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
அதுவும் இதை பொது இடங்களில் வைத்து விற்கக் கூடாது என்று சொல்பவர்கள் கண்டிப்பாக சிந்தித்தே ஆக வேண்டும்.
நன்றி: எப்படி முட்டை "சைவமாகும்"?
பண்ணை அறிவியல் துறையின் டாக்டர்.அஜீத் ரானடே அவர்கள் பண்ணைக் கோழி முட்டைகள் நிச்சயம் சைவம் என்றும் நாட்டுக் கோழி முட்டைகள் அசைவமாக இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்.மேலும் சொல்கிறார், "ஒரு பெட்டைக் கோழி முட்டையிட சேவலின் துணை தேவையில்லை. குறிப்பிட்ட பருவத்திற்குப் பின் சேவல் துணையின்றி முட்டை போட முடியும். இவ்வகையான முட்டைகள் சைவம். இவை உயிரற்ற முட்டைகள் (Non-fertile eggs.) என அறியப்படுகின்றன.இவை பண்ணைக் கோழிகளில் (English Hens) மிகப்பொதுவானவை.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் கமிட்டியின் சேர்மன் M.B.தேசாய் அவர்களுக்ம் இதை ஆமோதிக்கிறார். மேலும் வர்த்தகரீதியில் கோழிப்பண்ணைகள் இவற்றை அதிகம் உற்பத்தி செய்ய வேண்டும் என்கிறார்.அண்ணல் காந்தி அடிகளும் முட்டையை சைவம் என ஏற்றுக் கொண்டுள்ளார். " சுத்தமான பால் சைவமாக இருக்கும் போது நிச்சயம் முட்டையும் சைவம்தான் என்றார்.
என்ன வேறுபாடு?
நாட்டுக் கோழி பிறந்து 22-28 நாளிலிருந்து முட்டையிடும். இவை சேவலுடன் இணைந்த பிறகே முட்டையிடுகின்றன. இத்தகைய முட்டையின் வளர்ச்சியானது சேவலுன் இணைந்த மூன்றாவது நாள் முதல் தொடங்குகிறது. நாட்டுக் கோழி முட்டையை 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இருபத்து ஒரு நாட்களுக்கு வைத்தால் கோழிக்குஞ்சு உருவாகி விடும் இத்தகைய கருவுள்ள முட்டைகள் அசைவம். ஆனால் பண்ணைக் கோழிகள் பிறந்த 18 நாளிலிருந்தே முட்டையிடத் தொடங்கி விடுகின்றன. இதனால் இவை உயிரற்ற முட்டைகளாதலால் சைவம் என்கிறார். டாக்டர்.ராணடே.
முட்டையின் சிறப்புகள்
ஒரு 100 கிராம் எடையுள்ள முட்டையில் புரோட்டீன் 12.04 கிராம், கொழுப்பு 11.15 கிராம் மற்றும் 158 கலோரி தாதுச்சத்து மற்றும் கார்போஹைடிரேட் 1.2 கிராம். மேலும் 74.57 அளவுக்கு உயர் வளப்புத்தன்மையானது.
மேலும் டாக்டர்.ராணடே "இதனால்தான் மருத்துவர்கள் முட்டையை சிறந்த ஆகாரமாக பரிந்துரைகின்றனர்." என்கிறார்.
மருத்துவக் குறிப்பு
டாக்டர்.ராணடே, தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலின் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் என்ற கூற்றை ஆதாரங்களுடன் மறுத்துள்ளார். உடலுக்குத் தேவையான தாதுச்சத்தையும் விட்டமின்-சி தவிர்த்த அனனத்து விட்டமின்களையும் முட்டை வழங்குகிறது" என்கிறார்.
சைவமுட்டையை எப்படி அறிவது?
ஒரு முட்டையை மின்சார பல்பின் அருகில் வைத்துப்பார்த்தால் முட்டையின் உள்ளே வெள்ளைக் கோடுகள் படலமாக தெரிந்தால் அது அசைவம். தெரியாவிட்டால் சைவம்.
பி.இரயாகரன்
வாங்க சின்னவன்,
வான்கோழி அனுப்பும் மயில்களை குசும்பு தலைவர் படிப்பதில்லையாம்.
யப்பா அநானிகளா,
ரவுசு தாங்க முடியல... மொத்த பதிவையே பின்னூட்டமா கொடுத்து கலக்குறியளே !!!
இந்த ஆண்டு சித்திரைத் திங்களில் தமிழ் வலைப்பதிவுகளின் சூழ்நிலை பற்றியும், பண்பாளர், பகட்டில்லாதவர், ஏழைப்பங்காளன், தொடுப்புகளைப் பேணுவதில் ஆர்வம் காட்டுபவர், தமிழில் ஏதோ எழுதுபவர் என்ற வகையில், அவரையும் வலைப்பதிக்க அழைத்து ஒரு மடல் எழுதினேன். இன்றுவரை மடல் கிடைத்ததற்கான அக்நாலட்ஜ்மெண்ட்டோ, அவரின் பதிலோ கிடைக்கவில்லை. மடலில் கொஞ்சம் ஹோதாவும், கொஞ்சம் என் வலைபதிவைப் பற்றிய உதாரும், ஒருவரி விளம்பரவாசமும் தெரியலாம். இருப்பினும் தனது அழகான அந்தரங்க காரியதரிசியை (ஙௌக்கா மக்கா தமிழு) விட்டுப் பதில் எழுதச்சொல்லக்கூட முடியாமல் போகும் அளவுக்கு இது ஒதுக்கத்தக்கதா என்று தெரியவில்லை. என்னமோ போப்பா! ரிமைண்டர் போட்டாலும் அவர் கண்டுக்கின மாதிரி தெர்ல. அவரு பிஸியா இல்லை அந்தரங்க காரியதரிசியை பிஸியா இல்லை இருவரும் சேந்து பிஸியா (!) தெரியவில்லை. போனாப் போவுதுன்னு பொதுவுல போடுறேன். தயவு செஞ்சு நீங்களாவது படிச்சிட்டு பின்னூட்டமாவது போடுங்க !!! நான் அனுப்பிய முகவரி: podankho@gmail.com
எழுதிய மடலை இங்கே கொடுக்கிறேன் ( (நம்ம தலீவருக்கு இங்லிபீஸ¤ தெரியாத காரணத்தால் தமிழில் மட்டுமே மடல்)
----------------------------------------------------------------------------------------------
அன்புள்ள மேதகு குசும்புத்தலைவர் திரு. சின்னமூடி சிங்காரம் அவர்களுக்கு,
இந்திய ஹோகனேக்கல் நீர்விழ்ச்சி பகுதியில் தமிழ்நாடா இல்லை கர்நாடகமா என்று அனைவரும் அடித்துக் கொல்லும் பகுதியில் சேர்ந்த என் பெயர் கர்னாடிக் டமாசு. ஷெல்லமாய் டமாஸ். பணிநிமித்தமாக அமெரிக்காவில் தற்போழுது வசிக்கிறேன். 784க்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பதிவாளர்கள் (bloggers) சமுதாயத்தின் ஒரு கடைப்'பிரதிநிதியாக இந்த மடலை எழுதுகிறேன்.
'வலைப்பதிவுகள்'ன்னா இன்னா மாமேன்னு நீங்க Kக்குறது நேக்கு கேக்குது. ஒண்ணுமில்லை ஸாரே! ஆபீஸ¤ல போரடிச்சா வேலைங்ற போர்வையில உங்களோட கருத்தை நெட்லே போடலாம். அதுவும் தமிழ்ல. இதுல என்னா லாபம்ன்னு கேப்பீயளே? ஒண்ணு நமக்கு ஒரு வாசகர் வட்டம் உண்டாகும். ஆப்புறம் நம்மை மேரியே வேலை வெட்டி இல்லாத கஸ¤மாலங்கோ கண்ணுல விளக்கெண்ணை ஊத்தி, லென்ஸ் போட்டு பேனைப் பெருமாளாக்கி ஷங்கரு போல டகால்பாஜி வேலை காட்டும். ஆப்புறம் என்னா மாமே நீ பெர்ய ஆளாயிடுவ! (இப்பவும் நீ பெர்ய மன்ஷன் தான். ஆனா என் மெயிலுக்கென்ன பதில்?). கருத்துப் பரிமாற்றம் பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று இணையத்தில் புரட்சி நடாத்தி வருகின்றது. வா ராசா வந்து பாரு.
அப்புறம் இந்த கூகிள்'ன்னு ஒரு தேடுபொறி இருக்கு. பொறின்னா உடனே பயப்படவேண்டாம். அதோட ஆட்ஸ் அதாம்ப்பா விளம்பரம் போட்டா மாசத்துக்கு ஒரு பென்னியாவது உத்திரவாதம். பேங்க் பேலன்ஸ் சும்மா சுகுற்றா ஏறும் மாமே.
இன்னிக்கு 12 லட்சம் வலைப்பதிவுகள் ஆங்கிலத்தில் பீட்டர் வுடுறாங்கங்ணா. நம்ம இந்திய பாஷைகளில் கணிமை(Computing) இன்னும் வளர்ச்சி அடையாத நிலையில் ஹிந்தி உள்பட மற்ற இந்திய மொழிகளில் சும்மா வெரலை வுட்டு (உங்களால முடியாதுன்னாலும்) எண்ணக்கூடியவையாகவே வலைப்பதிவுகள் எழுதப்படுகின்றன. தமிழில் வியக்கத்தக்க வகையில் இன்றுவரை சுமார் 784 வலைப்பதிவுகள் தோன்றி சமூகவியல், அறிவியல், இலக்கியம், அரசியல், வணிகம், விளையாட்டு, கணினியியல், மனையியல், பொழுதுபோக்கு என்ற பலவகைக் கருத்துக்களங்களில் கலாய்த்து தினமும் 25 புது விஷயங்களாவது எழுதப்படுகின்றன. உங்க வேலை என்னா கேட்டகிரின்னு எமது நிர்வாகி முடி(!)வெடுப்பார்.
சரி... எங்கன போயி இன்னாத்த கண்டுக்கிடறதுன்னு கொயப்பம் வரத்தான் செய்யும். அதுக்கும் ஒரு வழி பண்ணிட்டோம்ணா. அதுதான் வழிவாசல் சேச்சே வலைவாசல் (web portal). செய்தியோடைன்னு ஒண்ணு இருக்கு நைனா. அதுல கூட பாலிடிக்ஸ்தாங்ணா. RSS இருக்குது. நம்ம விஜேய்காந்த் கூட தேமுதிக ஓடை கொடுக்கப் போவதா வதந்திங்ணா. இந்த ஓடையெல்லாம் புட்ச்சி இருபது மணித்துளிக்கொருமுறை புச்சா ஆராரு என்னா கீசியிருக்கான்னு நம்ம வலைவாசல் வழி காமிக்குதுங்ணா. அந்த தலத்தின் முகவரி: http://www.thamizkushboo.com/
இன்னிக்கு பெரும் சிந்தனையாளர்கள், அரசியல், சமூக, அறிவியலார்கள் தங்கள் சிந்தனைகளை நேரடியாக போட்டுத்தாக்க வலைப்பதிவுகளை திறன்மிக்க கருவியாகப் பயன்படுத்திவருகிறார்கள். சேம்பிளுக்கு நெட்ல தேடுங்ணா. நேக்கு டைம் இல்லே.
ஆங்கிலத்தோடு போட்டி போடமுடியாத இந்திய மொழிகளில் (ஆமாம் இங்லிபீஸ¤ம் இந்திய மொழிகளில் ஒன்றில்லையா?) கணிமை இன்னும் சும்மா ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. பயன்பாடு வளரவளரவே பாலிடிக்ஸ் வளரும். இப்பண்பாட்டினை ஒரு கட்சியோ, அரசோ/சில குசும்பர்களோ மட்டும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. அது ஒரு பரவலான பன்முகப்பட்ட கலாச்சார சார்பற்ற நிகழ்வாக இருக்கவேண்டும். இந்தக் குறையை நிவர்த்திக்க வலைப்பதிவுகள் ஒரு மிகமிக இன்றியமையாத சாதனம் என்றால் அது நகையில்லை.
சகலகலாவல்லரும், வெடி வித்தகரும், போட்டுத் தாக்கும் வலைஞரும், துண்டு போடாத கலைஞருமான தங்களுக்கு இந்த முயற்சிகளை எடுத்துக்காட்டவே இந்த மடல். கட்டாயம் நீங்களும் ஒரு நாள் ஒரு வலைப்பதிவைத் துவக்கி உங்களை வெடிவெள்ளியாகப் பார்க்கும் பலகோடி இளைஞர்களுடன் நேரடியான கருத்துப் பரிமாற்றம் செய்வீர்கள் என்று அசையாத நம்பிக்கை எனக்கு உண்டு. அத்தகைய தருணத்தில் தமிழிலும் ஒரு வலைப்பதிவைத் துவக்கி தமிழில் எங்களுடன் படங்காட்டாது தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டால் எங்கள் மகிழ்ச்சிக்கு அளவேது! பின்னூட்டங்களுக்கும், ஓட்டுக்கும் நான் கியாரண்டி. மீரு தொரகா ரண்டி பாபு என்று சுந்தரத் தெலுங்கினில் வரவழைத்து டாங்ஸ் மாமேன்னு சென்னைத் தமிழில் விடை பெறுகின்றேன்.
இந்த முயற்சிகளில் ஈடுபடும் வலைப்பதிவாளர்களுக்கு தாங்கள் ஏதேனும் பிளாஷாய் செய்தி கொடுத்தால் மிகவும் மகிழ்வோம்.
மிக்க அன்புடன்,
-கர்னாடிக் டமாஸ¤.
http://www.thamizkushboo.com/
Present address:
xxx (removed)
Web(!)ster, NY 14580
USA
Permanent address:
xxx (removed)
ஹோகனெக்கல் 6XXXXX.
பி.கு. கரீக்டான ஐபீ மற்றும் அற்றஸ் வேண்டுமெண்டால் மசக்கைசூசட்ஸ் செல்ல வேண்டாம். மோப்ப ஷக்தியில் ஏதோ பெரிய கோளாறாம் !!!
// அவரு பிஸியா இல்லை அந்தரங்க காரியதரிசியை பிஸியா இல்லை இருவரும் சேந்து பிஸியா (!) தெரியவில்லை. //
இதெல்லாம் நல்ல வக்கனையா பேசுங்கோ.. ஆனா மெயில் அனுப்பும் போது "send" பட்டன அமுக்க மறந்திடுங்கோ... உம் மெயில் எனக்கு வரவே யில்லையப்பா...
(சின்ன)மூடியாரே
எனக்கு கூடத்தான் வர்வே இல்லை !
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா !!
சின்ன(மூடி)
Post a Comment