அண்மையில் வலைப்பதிவர்கள் பலர் வரிந்து கட்டிக் கொண்டு அந்நியன் மற்றும் காதல் படங்களை விமர்சனம் செய்திருந்தார்கள். சக வலைப்பதிவர் இன்னும் ஒரு படி மேலே சென்று மண்ணின் மைந்தனான இராம.நாராயணனை ஏன் யாரும் விமர்சனம் செய்ய முன் வருவதில்லை என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். இதைத்தான் திரை வர்ணம் என்பது. நான் அனைத்து திரைப்படங்களையும் ஒரே தராசில்தான் வைத்துப் பார்க்கின்றேன். சமீபத்தில் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 'சின்ன மாப்ளே' என்னும் திரைக் காவியத்தை கண்டு பூரித்த எண்ணம் நினைவிற்கு வந்தது. சின்னத்தம்பி, சின்னக்கவுண்டர், சின்னவர் என்ற வரிசையில் வந்தாலும் சிறந்த திரைக்கதையாலும், கூரிய வசனத்தாலும், இனிய பாடல்களாலும், உயரிய படப்பிடிப்பாலும் சின்ன மாப்ளே பலரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது என்றால் அது மிகையாகாது.
படத்தலைப்பில் உள்ள மாப்ளே என்னும் பதம் Mall Play என்னும் ஆங்கில சொற்களின் தாக்கத்தால் விளைந்தது. 'மால்' என்றால் சந்தை. இதுவே கல்லூரித் தமிழில் 'பெண்' என்றும் அர்த்தம் கொள்ளலாம். 'பிளே' என்றால் வழமை போல 'விளையாடு' அல்லது 'ஆடு' என்னும் பொருள் கொள்ளலாம். அதாவது பெண்ணைப் பெற்றவர் தனது மருமகனிடம் "இதோ என்னுடைய மால் (பெண்). இனி அவள் சொல்படி பிளே (ஆடு)", என்பதைக் குறிக்கும் விதமாகவே மால்+பிளே=மாப்ளே ஆக கிளர்ந்தது. சின்ன என்னும் சொல்லை ஒருங்கு நோக்கினால் அது சிறிய என்னும் அர்த்தம் கொடுக்கும். எனவே இப்படம் சிறிய மருமகனைப் பற்றியது என்று தெள்ளத் தெளிவாக முன்கூட்டியே உணர்த்தி விடுகின்றார் இயக்குநர் இமயம் திரு. சந்தான பாரதி.
முதல் காட்சியிலேயே ஏற்றிக் கட்டிய அழுக்கான லுங்கியையும், சிவப்பு முண்டாசையும், வெளிறிய சட்டையும், தெருவோர வாழ்க்கையும் என்று கதாநாயகனின் பின்புலத்தை வெளிப்படுத்துகின்றார். தாழ்குடி அல்லது தாழ்த்தப்பட்ட குடியென்பதை இதை விட அழகாக யாரும் திரைப்படங்களிலே காட்டியிருக்க முடியாது. வில்லனோ நிலக்கிழாரிய குமுகாயத்தில் ஒரு ஓவர். இவரது பின்புலத்தையும் வெள்ளையும், சொள்ளையும், நெற்றியில் பட்டையும், கழுத்தில் கொட்டையுமாய் உயர்குடிக்கான அத்துனை அடையாளங்களையும் கொண்டிருக்குமாறு இப்பாத்திரத்தைப் படைத்திருக்கின்றார்.
அந்நியன் படத்தில் அம்பி என்னும் உயர்குடி பாத்திரப் படைப்பு சோம்பேறி என்று வருணிக்கப்படும் தாழ்குடி பாத்திரத்திற்கு மரண தண்டனை தருகின்றது. இன்னும் ஒருபடி மேலே போய் 'காதல்' படத்தில் ஈனசாதி நாயே என்று கதாநாயகனை எட்டி உதைத்து, தாழ்குடி என்ற ஒரே காரணத்திற்காக 'முதலிரவு' கூட வைக்காமல் போகின்றது. ஆனால் சின்ன மாப்ளேயில் தாழ்குடி நாயகன் உயர்குடி வில்லனை எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெறுகின்றார் என்ற கருவை, புரட்சிக் கருத்தை, சமுதாய சிந்தனையை சந்தான பாரதி விதைக்கின்றார்.
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி போன்ற இலக்கிய சிந்தனை வளர்க்கும் இனிய பாடல்களுடன் வெள்ளித் திரையில் சொலித்ததுதான் சின்ன மாப்ளே. இத்தகைய உயர்ந்த இயக்குநரை பின்னாளில் பினாமியாய் மாற்றியவர் ஒரு உயர்குடி நாயகன் என்பதையும் உலகமறியும். இந்நிகழ்வால் இழப்பென்பது சராசரி ரசிகனுக்குத்தான். இத்திரைபடத்தினைப் பற்றிய எனது ஆராய்ச்சி நூல் விரைவில் பித்தளைப்பச்சான் தலைமையில் வெளியாகவுள்ளதென்பதையும் இத்தருணத்தில் அறியத் தருகின்றேன். மேலதிக விபரங்களை அப்புத்தகத்தில் தொகுத்துள்ளேன்.
பி.கு. சின்ன மாப்ளே: ச(கா)ப்தமா? ஆசிரியர்: குசும்பு கும்கி. வடகிழக்கு பதிப்பகம். (இணையத்தில் சாமதேனு தளத்தில் வாங்கலாம். எந்த இந்தியன் தளம் பக்கம் போக வேண்டாம் :-)
Tuesday, October 18, 2005
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
யோவ் இன்னாயா விமரிஜனம் இது சவ சவன்னு... விமரிசனம்னா அதுக்கு அளவுகோல் இன்னா, நச்னு சமகாலத்துக்கு ஏத்த ஒரு பஞ்ச் டயலாக், பொதுஜனத்துக்கு படத்துல இருந்து ஒரு கருத்து, நேம்ஸ் ட்ராப்பிங் இதெல்லாம் சொல்ல தேவல?
இந்த படத்தோட ஒரிஜினல் ஆங்கில படம் 1955 வந்ததே, அதற்கு விமர்சனம் எழுதமால் , இந்த புத்தம் புதிய தமிழ் படத்திற்கு விமர்சிப்பதில் இருந்தே உமது வீட்டில் கேபிள் டிவியும், உம்மிடம் TNT channel இல்லை என்பதும் தெரிகிறது.
வருந்தத்தக்க பதிவு !
( IMDB க்கு link எங்கப்பு ? )
ஆங்கில விமர்சன standard template இங்கே
அடிச்சு ஆடறீங்க... கங்குலி போல் என்றும் கப்தானாய் கலக்குங்க
Kusumban
Enna ore naallaa 100 padhivu pottu century adikka uthesama. Jamainga. Ungalla kusumban enru 20 ber sonnaa neenga kusumbanaathaan irukkanum. Ungale Moorkannu 100 ber sonnaa neenga Moorkanaaththaan irukkanum.
குசும்பரே,
சின்ன மாப்ளே - எனக்கு மிகவும் பிடித்த தமிழ் படங்களில் ஒன்று. இந்த பதிவிட்டு என் நினைவு சக்கரத்தை சுழல வைத்ததற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
ஆமாம் முகமூடியாரே ஒரு சந்தேகம். சவ சவ என்றால் என்ன? சிவ சிவ என்றால் ஆத்திகமெண்டு அறிவோம் ப்ரோ :-)
அடப்பாவி ஸிம்ஸா ! டெம்ப்ளேட் விமர்சகன் நானில்லை. நம்ம ஜின்ரம்மோட ஆம்ப்ளேட் போதும் ஸாரே!
என்ன பாபா உங்களோட அடிச்சு ஆட என்னால முடியுமா என்ன? இருப்பினும் முயற்சி திருவினையாக்காவிடினும் அயற்சி தராவிடின் போதும் :-)
வாங்க இரேசுநாதரே!
அப்பாடா நான் தனியனில்லை. தன்னியனானேன் (ஸிம்ஸா நோ பாலிடிக்ஸ் பிளீஸ்)
:-)
Post a Comment