Wednesday, October 26, 2005

வில்மாவும் வேதனைகளும்

புயலடித்து ஓய்ந்தார் போலுள்ளது என்பதற்கான அர்த்தமே இப்போதுதான் விளங்கியது. கேட்டகரி ஒன்றிலிருந்து ஐந்தாக எகிறி பின்னர் இரண்டாகி தென் புளோரிடாவை குத்திய போது மூன்றானது. ப்ரோவோர்டு மற்றும் மயாமி (மியாமி) டேட் கவுண்டியையும் கதற அடித்தது வில்மா. சண்டமாருதத்தை பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம். சூறாவளியின் தீவிரத்தை ஒன்று முதல் ஐந்து வரை வகைப்படுத்துவார்கள். வரையறை ஒன்று என்றால் குறைத்து மதிப்பிட வேண்டாம். என்ன சூறாவளிக் காற்றின் வேகம் கொஞ்சம் குறைவு. ஆனால் ராகுல் திராவிட் போல நின்று விளையாடும். அப்புறமென்ன வெள்ளக்காடுதான். பள்ளப்பகுதியானால் கோவிந்தா கோவிந்தா!!! வரையறை ஐந்து என்றால் பழைய உலகக்கோப்பை நாயகனான ஜெயசூர்யா போல. விளாசிக் கடாசி விட்டுப் போய்விடும். நியூ ஆர்லியன்ஸ் போல் கடலைவிடத் தாழ்வான பகுதியில்லை என்பதாலும், வில்மா என்ன பெரிய கில்மாவென அசால்ட்டாக இருந்த பல மடையர்களில் அடியேன் பிரதானமானவன். வில்மா எங்களை கைமா செய்து விட்டது. இதோ ஒரு லேட்டஷ்ட்:

1. 16,00,000 மக்கள் மேற்கூறிய இரண்டு கவுண்டிகளில் மின்சாரமின்றி தவிக்கின்றனர். எங்களின் மின்சார வழங்கியான FPL (Florid Power & Lights வெறும் 7,500 ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் (ஹிஹி Contractors) படை கொண்டு சித்து வேலைகள் செய்கின்றார்கள். எங்கள் வீட்டை ஒளிரச் செய்ததற்கு டாங்ஸ் மாமே! ஆனா மத்தவா நெலமை :-(
2. நிறைய இடங்களில் குடிநீர் மற்றும் ஐஸ் வழங்குகின்றார்கள். நேற்றைய நிலையிலிருந்து நிறைய முன்னேற்றம்.
3. பப்ளிக்ஸ், விண்டிக்ஸி போன்ற பல்பொருள் அங்காடிகளில் மலைப்பாம்பு வரிசை இப்போது கிடையாது.
4. ஓரிரு கொள்ளைகள் தவிர சட்ட ஒழுங்கு பிரச்சினை இதுவரை இல்லை.
5. அலுவலகங்கள் மூடியுள்ளன. வீட்டிலிருந்துதான் மின்சாரமிருக்கும் வரை வலைப்பதிய வேண்டும்(!)
6. பெரிய பன்னாட்டு முனையமான போர்ட் லாடர்டேல் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. மியாமி நிலையத்தில் போக்குவரத்து தொடர்கின்றது.
7. எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
8. வெள்ள நிலை இல்லாததால் நினைத்த இடத்திற்கு வண்டியில் செல்ல முடிகின்றது.
9. வாடகைக்கார்கள் கிடைக்கவில்லை என்று தகவல்.
10. நுகர்பொருட்களுக்கு செயற்கை விலையேற்றம் செய்யப்பட்டதாய் இதுவரை புகாரில்லை. (நேற்று சைனீஸ் உணவகம்தான் பலருக்கு சோறிட்டது)
11. மின்சாரம் தொடர்ந்து கிட்டுமென்று நம்பிக்கையில்லை. நிலைமை சீர்பட(கெட) குறைந்தது 4 வாரங்களாகலாம்.
12. புழங்குவதற்கு நீர் தவணைமுறையில் தரப்படுகின்றது. நாடோடி நாதாரியான நானென்ன ஜெனரேட்டர், கிரில், பெட்ரோல் தொட்டி, தண்ணீர் டாங்க்கா வைத்துக் கொள்ள முடியும்? இன்னிக்கு செத்தா நாளைக்குப் பால் மாதிரி, பில்லிங் கட்டுன்னா மூட்டையைக் கட்டுன்னு வாழற அநேக கோடி அற்ப ஜீவன்களில் அடியேனும் ஒருவனல்லவா :-) கடந்த இரண்டு இரவுகளாக எதிர்த்த வூட்டு ஸ்பானிஷ் மக்கள் அடித்த லூட்டிஸ் இருக்கின்றதே? அட தேவுடா மூணு வேளை சூடு கூடப்பண்ணாம சைனீஸ் சாப்பிட்டு, மூன்று தடவை அடக்கி நான்காம் முறை மட்டுமெனில் பாத்ரூம் சென்று டங்குவார் கிழிந்து போன நிலையில் ஜே லோ பாட்டிற்கு லோ லோ வென்று குத்துப் போட்ட மக்களை (ம்கூம்... ஒண்ணும் பண்ண முடியல... நாக்கத் தொங்கப்போட்டு பார்க்கத்தான் முடிந்தது. அட "கிரில்லை" சொல்றேங்க. கோழிகள் சூப்பராய் வெக வைத்துக் கொண்டிருந்தன)
13. அதிவிரைவு சாலைகளில் தெருவிளக்குக் கம்பங்களில் 90 சதவீதம் மூளியாகி நிற்கின்றன (ப்ரோவோர்டு நிலை பரிதாபம்). நிறைய இடங்களில் டிராபிக் சிக்னல்கள் காலி.
14. அவன் காலி. இவன் காலி இல்லை. ஆனால் பல மரங்கள் காலி. நல்லவேளையாக முறிந்த கிளைகள் ஏவுகணையாகி வீட்டைத் தாக்கவில்லை.
15. பலரும் வீட்டினைப் பாதுகாக்க ஷட்டர்கள் போடவில்லை (நானும்தான்!). மெத்தையை திண்ணைக் கதவிற்கு முட்டுக் கொடுத்து ஹாலில் படுத்து இரவைக் கழித்தவர் பலர்.
16. கிழக்கிலிருந்தே அடிவாங்கிப் பழகிப்போன புளோரிடா வாசிகளுக்கு மேற்கிலிருந்து ஆப்படித்தது வில்மா. பல அறிவுக் கண்கள் திறந்திருக்கும் (நமக்குத்தான் அந்தப் பிரச்சினை இல்லையே :-)
17. இப்போ பவர் புட்டுக்கிட்டு விளக்குகள்(!) அணைந்து போனாலும் இரு நாட்களுக்குத் தாக்குப் பிடிக்கலாம். கட்டிசோறு கட்டிப்புட்டோம்ல. அப்புறம் என்ன செய்றதுன்னுதான் இல்லாத மூளையை கசக்கிக்கிட்டு பதிவு போட்டுக்கிட்டு இருக்கேன்.
18. ஹிஹி படம் போடலியேன்னு கோவிச்சுக்கிற ப்ரோக்களுக்கா மயாமி மாமி (வெறும் ரைமிங்காக... குண்டாந்தடி தூக்கிகிட்டு ஓடியாறாதீகப்பு)

5 comments:

Anonymous said...

Kusumban

Detailed report. Athu Sari, antha amma en ara guraiyaa oduraanga?Wilmaavak kandu payandu poi oduraangalo? Hope you are safe and comfortable.

Anbudan
Chola Otran

ஏஜண்ட் NJ said...

...நல்லவேளையாக முறிந்த கிளைகள் ஏவுகணையாகி வீட்டைத் தாக்கவில்லை...

...விளக்குகள்(!) அணைந்து போனாலும் ....


:-( :-( :-(

...மயாமி மாமி...

;-) :-) ;-)

rajkumar said...

Take care. Hope things are fine.

Rajkumar

Mahamaya said...

குசும்பரே,

அதான் உங்கள் பதிவு "ரெட் லைட்" ஏரியா-வாகி விட்டதே! :)

இன்னும் ஏன் தமிழ்மணத்தின் ஓட்டுப் பெட்டியை வைத்துள்ளீர்? அதில் குத்திப் பார்த்தேன் நீங்கள் ஆட்டத்தில் இல்லை என்கிறது.

In humour without offence!

குசும்பன் said...

நண்பர்களின் அன்புக்கு நன்றி. இன்னும் இங்கே இருட்டுத்தான். ஒரு வாரத்திற்குப் பிறகு இன்று அலுவலகம் வந்தேன்.

எனது வலைப்பூவில் நிறைய மாறுதல்கள் செய்ய ஆசைப்பட்டேன். வில்மா விடுவனா என்கின்றது.

அடுத்த ஜுகல் பந்தி விரைவில்...

:-)