
(மழை விட்டாலும் விடாது தூவானம்பாங்க. பாருங்க கெளம்பிடாய்ங்க சினிமாக்காரங்க. நெறைய லின்க்குகள். அட Week எண்டு வருதுல்ல. என்ஞாய் மாடி)
வடிவேலு: அண்ணே நம்ம பொழப்ப பாத்தீங்களா? என்னைய மாதிரி ஒரு டூப்ளிகேட்டு விஜெய் டிவியில செயிக்கப்போவது யாருன்னு ஆக்டிங் கொடுக்கிறானாமே? ஒரே சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு.
பார்த்திபன்: டேய் அன்பே சிவம் பாத்தியா?
வடி: ஆமாம்
காசு குடுத்து தியேட்டர்ல பாத்தேன் அதுக்கென்ன இப்போ?
பா: ஆத்திகனுக்கு சிவம்தான் அன்பு. நாத்திகனுக்கு அன்புதான் சிவம். அப்பிடின்னா அன்புக்கு சிவம் டூப்ளிகேட்டா?
வடி: ஹூம்...(அடிஆத்தீ. கொழப்புறானே லுக்) எனக்கு மந்திரி
அன்புமணி அப்புறம் டிரம்ஸ்
சிவமணி தெரியும் (கடவுளே உள்குத்தா?)
பா: கேள்விக்கு பதில் தெரியல்லீன்னா
கொழப்பிடணும். அதுதான் இப்போதைய இணைய டிரெண்ட்.
வடி: அப்பிடியாப்பா?
பா: அப்பிடின்னா எனக்குப் பதில் தெரியலேன்னு சொல்றியா?
வடி: அது இல்லப்பா
பா: அப்ப நான் உன்னைக் கொழப்பினேனா?
வடி: யப்பா மவராசா முன்னாடி வந்தா கடிக்கிற பின்னாடி போனா ஒதக்கிறியேப்பா...
பா: இப்ப முன்னாடி நிக்கிற. அப்ப நான்
நாயா?
வடி: என்னாப்பா ஒரு பேச்சுக்கு சொன்னா
பா: இப்ப ஏன் பின்னாடி போனே? என்னை
கழுதைங்கிறியா?
வடி: யப்பா சாமி ஆளை வுடு. உங்கிட்ட மல்லுக்கட்ட நான் தயாராயில்லப்பா.
பா: அப்பிடின்னா
பயந்துட்டேன்னு சொல்றியா?
வடி: என்னப்பா இப்பிடி வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் கேட்டா நான் என்னாப்பா பண்ணுவேன்?
பா: ஏன் பேசாம இருக்கலாம்ல. (இரண்டு கைகளாலும் அடங்கெனும் சைகை காட்டுகின்றார்)
வடி: (கெஞ்சும் குரலில்) அண்ணே இந்த முட்டாப்பயலுக்கு
ஐபீ அட்ரஸ்ன்னா என்னான்னு சொல்லுங்களேன்?
பா: ஏண்டா பேச்சை மாத்துறியா? (
கர்ஜிக்கும் குரலில்)
முதல்ல உன்னோட அட்ரசை சொல்லு.வடி: (ஆஹா
ஜெயக்காந்தன் டயலாக்க வுட்டு திமுக'காரன்கிட்ட தேர்தல் நேரத்துல அடி வாங்க வைச்சிடுவானோ என்ற பயத்தில் அட்ரஸ் சொல்லுகின்றார்)
பா: டேய் அதென்ன பழைய டோர் நம்பர். புதுசா யாரு மாத்தினது?
வடி: கார்ப்பரேஷன் ஆளுதான்
பா: அப்டிப்போடு. உன்கிட்டயே கேக்காம உன்னோட டோர் நம்பர மாத்துற மாதிரி ஐபீ நம்பர மாத்துனா அது
டைனமிக் ஐபீ. சரி வெள்ளை மாளிகை நம்பர மாத்த முடியாதில்ல. அது மாதிரி ஒரே ஐபீ நம்பரா இருந்தா அதுதாண்டா
ஸ்டேடிக் ஐபீ.
வடி: (காலில் விழுகின்றார்) அண்ணே எங்கியோ போயிட்டீங்கண்ணே! ஐபீ பத்தி கேட்டா அதோட
அட்ரஸையும் சேத்து சொல்றீங்கண்ணே.
பா: அப்பிடின்னா என்ன என்னைய அதிகப்பிரசங்கின்னு சொல்றியா?
வடி: அட விடுப்பா. ஏதோ என்
சிறு மூளைக்கு எட்டியது.
பா: ஏன் அப்ப உனக்கு
மெயின் மூளை இல்லியா?
வடி: இப்படியெல்லாம் பேசப்படாது. என்னோட மூளையோட சைசு
சிறுசு'ங்றேன்.
பா: என்னது
சிறுசா? ஏண்டா எல்லா அதான் பிராப்ளத்துக்கும் நீ காரணங்றாங்களா?
வடி: அண்ணே அப்பிடி நான் என்னா தப்பு பண்ணிட்டேன்?
சின்னதா கேள்வி சிலபல கேட்டேன். அது தப்பா?
பா: அத "
நீ"யே கேட்டியா?
வடி: (தலையை சொறிகின்றார்)
ஹிஹிஹிபா: அட
பா(?)டு. நல்ல கேள்விகள்தானேப்பா? நறுக்குன்னு
நேரா'வே கேட்கலாமுல்ல. சரி அத்த வுடு. ஆமாம் ஐபீ பத்தி எதுக்கு கேள்வி கேட்ட?
வடி: நம்ம வூட்டுக்குப் பக்கத்துல ஒரு கம்ப்யூட்டர் கைபுள்ள இணையத்துல ஏதோ ஐபீ புடிக்கறாங்கோ'ன்னு சொல்லிச்சு. அதான் என்னமோ ஏதோன்னு கேட்டேன்.
பா: ஆமா ஐபீ என்ன
நாயா புடிக்கிறதுக்கு?
வடி: அடப்போப்பா வெவரம் இல்லாம பேசிகிட்டு. அதான்
மோப்பம் புடிச்சு ஐபீ சொல்றாய்ங்களாம்
பா: அப்டிப்போடு மோடி வித்தை காட்றாங்களா? சரி இந்த
ரெட்டை ஐபீ முறை பத்தி தெரியுமா?
வடி: (ஆஹா ரெட்டை டம்ளர் வெவகாரத்தை கெளர்றானே) என்னாது?
பா: அட ஸ்டேடிக் ஐபீ வெச்சிக்க முடியல்லேன்னா அவனவன் டைனமிக் ஐபீ வெச்சிக்கணும். புரியுதா?வடி: அப்பாடி. இம்புட்டுதானா?
பா: என்ன இம்புட்டுதானா?
டைனமிக் தெரியாத
டான்ஸர் ஸ்டேடியம் கோணல்ன்னு சொன்னாளாம்.
வடி: டான்ஸரா? எங்க ஊர்ல வேற மாதிரியில்ல சொல்வாய்ங்க.
பா: வேண்டாம் என் வாயைக் கிளறாதே. அப்புறம்
போலியா ஏதாவது பேசிடப் போறேன்
வடி: க்கும். குப்புற விழுந்தாலும்
குறுந்தாடியில மண்ணு ஒட்டாதே ஒனக்கு
பா: டேய் அது "மீசை"ன்னுல்ல சொல்லுவாங்க. ஏன் சொலவைடைய மாத்துற?
வடி: நீ மட்டும் டான்ஸர்'ன்னு மாத்துவ நான் குறுந்தாடி'ன்னு சொல்லப்படாதா?
பா: நீயும் நானும் ஒண்ணா? நான் சொன்னா அது நகைச்சுவை. நீ சொன்னா அது
குரூர நகைச்சுவை.
வடி: என்னமோ போப்பா. அநேகமா நீ
இணைய உலாவு மையத்திலேயே குடியிருக்க போலிருக்கு. நடத்து. நடத்து. (கையை வீசும் போது அருகிலிருந்த பொம்மை கீழே விழுந்து உடைகின்றது)
கவுண்ட
மணி: (சூரியன் பட அரசியல்வாதி போல உணர்ச்சிவசப்பட்டு) ஆஹா
பொம்மைகள் உடைபடும் நேரம்பா: என்னங்க சொன்னீங்க?
மணி: பொம்மைகள் உடைபடும் நேரம்
வடி: அது சரி. ஏன் நான் உடைச்சா மட்டும் சொல்றீங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கமண்ட்டு பொட்டியில ஏகத்துக்கு
பொம்மைங்க உடைஞ்சதே அப்ப எங்க போயிருந்தீங்க?
போட்டா புடிக்கவா?
மணி: நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்.
பா: அது சரி
மணிக்கு(ம்) வாயடைச்சுப் போச்சா?
மணி: முதல்முறை பல்முளைத்த காலத்தே பால்ய நண்பன் வடிவேலுக்கு நானெழுதிய கட்டுடைக்கும் கரங்கள் என்ற கடிதத்தில் நடந்த நெடுங்கதையாடலை மீள்பதிவு செய்கின்றேன்.
வடி: சரியாப்போச்சி. போய்யா போய்
கமர்கட்டை கடிச்சிட்டு ஆளை வுடு. உன் கையை
காலா நெனைச்சு
பா: அப்ப காலை என்னன்னு நெனைப்பே?
வடி: நீயென்னப்பா நொச்சு நொச்சுன்னு.
கண்ணைத் திறப்பா காலும் தெரியும்.
மணி: நீங்கள் சொல்வதற்கான காரணிகள் அரசியல் சார்பு கொண்டவையானாலும் திரிப்பற்ற...
செந்தில்: டேய் மணி. தெகிரியமிருந்தா ஒண்டிக்கொண்டி வாடா. என்ன பயந்துட்டியா?
ஹா ஹா ஹா ஹாபா: ஆமாம். இந்தாளு அரசியல்ல அம்மாகிட்ட சேந்தாலும் சேந்தாரு. அப்பிடி ஷோ காட்டுறதே வேலையாப் போச்சி
வடி: யப்பா செந்திலு. யாரு பயந்தா? எப்பிடி பயந்தா? பயந்து என்ன பண்ணாரு? வெவரமாப் புட்டு புட்டு வெச்சாதானப்பா புரியும்
செ:
சூச்சூ. இது போதுமா?
அரிசிமா. இது போதுமா. டேய் என்னோட ஐபீ தருவேன்.
பா: (என்ன தொந்தரவாப் போச்சே. ஆளாளுக்கு ஐபீ தரேங்கிறான்) சரி ஐபீ குடு.
செந்தில்: ஐபீ எனக்கு அம்மா தந்த முகவரிடா.
வடி: வெளங்கிரும்.
அம்மா கொடுத்த ஐபீயா? கண்டிப்பா அது டைனமிக்தான். எப்ப வேணாலும் மாறும்.பா: அம்மாவே கொடுத்தாலும் மாறுவது மாறத்தானே செய்யும்?
வடி: (அடப்பாவி ஞானபீடம் மாதிரி பேசுறானே)
செந்தில்: என்னிடத்தில்
சொல் சுயமைதுனம் செய்யும் மணியே அங்கே செய்ய முடியுமா?
பா: என்னப்பா இது உயிர்மை புத்தக விழாவுல குட்டி இலக்கிய குறிக்கீடு செய்யிற மாதிரி செந்தில் பேசுறாரே?
வடி: என்னிக்கோ ஒருதபா சொப்பனஸ்கலிதம்'ன்னு சொன்னியே இதுதானா அது?
பா: அட வர வர நீயும்
தேறிட்ட போலருக்கு. எல்லாம் அண்ணனோட சகவாசமா?
விவேக்: டேய் அவனவன் வூட்டுல
தட்டுமுட்டு சாமான் இல்லேன்னு ஸ்டோருக்கு ஓடியாடி வரான்னா உங்களுக்கு வேலை வெட்டி இல்லாம வீதி நியாயம் பேசித் திரியரீங்களேடா?
வடி: வந்துட்டான்யா வந்துட்டான்யா இனி கடா வெட்டிப் பூசைதான் போ
பா: விவேகமில்லாம பேசாதீங்க. அவருதான் ஸ்டோர் பில்லு, பஸ் ரிக்கெட்,
கழிவறைத்தாள்'ன்னு அலிபி வெச்சுருக்காருல்ல
வடி: கழிவறைத்தாளா? அடப்பாவி அதக்கூட விடலியா?
விவேக்: முடியாதுடா. என்னால விடவே முடியாதுடா. அப்பளத்தை பொரிச்சும் திங்கலாம். சுட்டும் திங்கலாம். ஏன் அப்பிடியேயும் சாப்பிடலாம்.
பா: மொத்தத்துல இப்ப என்ன சொல்ல வர்ரீங்க?
விவேக்: இருங்க
பக்கத்து ஊர்ல ஒரு கோலி சோடா குடிச்சிட்டு வந்து சொல்ரேன்
வடி: யப்பு பில்ல மறக்காம கொண்டாந்துடுப்பு. குழந்தை ஸ்கேன் மாதிரி படம் காமிக்க வசதியா இருக்கும்
டூப் வடிவேல்: அட
அழகாகத் தோலுரிக்கின்றீர்களே பா: டேய் டூப்பு நீ அடங்கவே மாட்டியா? மணி பேசாம நீங்க இவருக்கு ஒரு ஜெயமோகன் சுராவுக்கு அனுப்பின மாதிரி ஒரு முன்னூறு பக்க கடிதம் அனுப்புங்க. அப்பத்தான் அடங்குவாரு
பாரதிராஜா: (கரகர குரலில்) செல்வராஜ். எனக்கு கதை தருவதில் கில்லாடி. என்னை விட பிரமாதமாகக்
கதை விடுவார். எனக்குப் பல படங்களுக்கு கதை கர்த்தாவே இவர்தான்.
நன்றி.
நன்றி நன்றிவடி: நன்றியா? ஆஹா இப்பிடி எத்தினி பேருடா கெளப்பியிருக்கீங்க? எதுக்குடா நன்றி? சொன்னா "
De Nada"ன்னு ஸ்பானிஷ்ல கலக்குவோம்ல.
(தொடரும்)